search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவியல் கண்காட்சி"

    • ஹச்.என்.யூ.பி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • அறிவியல் கருவிகள் மற்றும் அறிவியல் செய்முறைகள் குறித்து மற்ற பள்ளிகளில் இருந்து வந்த மாணவ- மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஹச்.என்.யூ.பி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பு முகாம் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவரும், பள்ளி தலைவருமான சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    பள்ளி தாளாளர் உதயசூரியன் ,பள்ளி முதல்வர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முகாமில் பள்ளி மாணவர்கள் சார்பாக வைக்கப்பட்டிருந்த அறிவியல் கருவிகள் மற்றும் அறிவியல் செய்முறைகள் குறித்து மற்ற பள்ளிகளில் இருந்து வந்த மாணவ- மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. கண்காட்சியில் நிலக்கோட்டை, நிலக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான கிராம பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • போட்டிகளில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

    தென்காசி:

    நெல்லை பிரான்சிஸ் சேவியர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி, வினாடி வினா, செயல்திட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி, பாரத் வித்யா மந்திர், ரோஸ்மேரி, பிரான்சிஸ் சேவியர், டான்பாஸ்கோ உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர்கள் நித்திஸ், ஜெயதர்ஷன், ஸ்ரீஜித் ஆகியோர் கழிவறை தொட்டியை சுத்திகரிக்கும் வேளையில் ஏற்படுகின்ற உயிரிழப்பைத் தடுக்கும் விதமான செயல்திட்டத்தை வடிவமைத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரான்சிஸ் சேவியர்ஸ் கல்லூரி சார்பாக பாராட்டு சான்றிதழும், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டது.

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

    • அய்யநாடார்-ஜெயலட்சுமி அம்மாள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகளின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரையில் உள்ள எம்.கே.ஆர். அய்யநாடார்-ஜெயலட்சுமி அம்மாள் ஆங்கிலப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இஸ்ரோ முன்னாள் இயக்குநர் அதிபகவான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிர மணியன் சிறப்புரையாற்றி னார். அறிவியல் கண்காட்சியில் இதயம் ராஜேந்திரன் ரெசிடென்சியல் பள்ளி முதலிடத்தை வென்று பரிசு பெற்றது. 2ம் இடத்தை வி.எம்.ஜே. பள்ளி பிடித்தது.

    இந்த கண்காட்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த விழாவுக்கு பள்ளி தலைவர் ஜெமினி பால்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சோமசுந்தரம், செயலாளர்-தாளாளர் காசிமணி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி துணைச்செயலாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இல்லம் தேடி கல்வி சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    • இதில் 27 வகையான அறிவியல் படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வருகை புரியும் மாணவ-மாணவிகள் அறிவியல் கண்காட்சியை அமைத்திருந்தனர். இதனை 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி பகுதியில் உள்ள தன்னார்வலர் ஈஸ்வரி, தனது உயர் தொடக்க நிலை மையத்திற்கு வருகை புரியும் மாணவ-மாணவிகளை கொண்டு இந்த கல்வியாண்டு முழுவதும் கற்றுக்கொண்ட அறிவியல் பாடத்தின் அடிப்படையில் இந்த கண்காட்சியை அமைத்திருந்தார்.

    இதை இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், திறந்து வைத்து பேசினார். இதில் 27 வகையான அறிவியல் படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர். இதனை தன்னார்வலர்கள் சிவரஞ்சினி, சிவமதி, பாண்டிச்செல்வி, பெற்றோர்கள் மற்றும் பிற பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

    • தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
    • விளையாட்டு போட்டிகள் நடந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர், தென்னம்பா ளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மகளிர் தின விழா, அறிவியல் கண்காட்சி, சிறுதானிய உணவுத்திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி வரவேற்றார். தெற்கு வட்டார கல்வி அலுவலர் ஐஸ்டின்ராஜ் தலைமை வகித்தார். தானியங்களால் தயாரி க்கப்பட்ட உணவுகளை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் வீடுகளில் தயார் செய்து உணவுத்திருவிழாவுக்கு எடுத்து வந்திருந்தனர். அறிவியல் கண்காட்சியில் பெட்ரோல் பங்க் செயல்பாடு, வேக்குவம் கிளீனர், கடற்கரை லைட்ஹவுஸ், எரிமலை, நீர்சுத்திகரிப்பான், சிறுநீரகம், இதயம் செயல்பாடு, வீடுகளின் வகைகள், காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளை ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியைகள் பங்கேற்று மகளிர் தின விழா, விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாவட்ட அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    • பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மாணவர்க ளின் பல்வேறு படைப்புகளை பார்வையிட்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கினார்.
    • பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் கண்காட்சியினை தொடங்கி வைத்தனர்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் திறமை களை வெளிப்படுத்தும் வகையில் "ஸ்ரீராம் பிரவியூரா -3.0" என்னும் பெயரில் 6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.

    பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் கண்காட்சியினை தொடங்கி வைத்தனர்.

    பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மாணவர்க ளின் பல்வேறு படைப்புகளை பார்வையிட்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கினார்.

    கண்காட்சியில் பள்ளியின் முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், ஒருங்கிணை ப்பாளர்கள் புவனேஷ்வரி, மணிமேகலை, பிரவீனா மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்துக்கொண்டனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கி ணைப்பாளர் குருமூர்த்தி செய்திருந்தார்.

    • செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சி விழாவில் கலந்துகொண்டனர்.
    • பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி பரிசுகளை வழங்கினார்

    திருப்பூர் :

    திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சி விழாவில் கலந்துகொண்டு தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்தனர். இதில் விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றனர். பரிசு பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி பரிசுகளை வழங்கினார்.

    விழாவில் செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், பள்ளியின் முதல்வர் அனிதா ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திருப்பூர் தி பிரண்ட்லைன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரசின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. ஈஸ்வரன் , தி பிரண்ட்லைன் பள்ளி தாளாளர் டாக்டர் கே.சிவசாமி மற்றும் இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்து மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கண்காட்சியில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி அசத்தினர். கண்காட்சியில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியிலிருந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பங்கேற்று ட்ரோன் மற்றும் ரோபோடிக்ஸ் காட்சிப்படுத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் பரிசளிப்பு விழாவில் பள்ளியின் இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அறிவியல் கண்காட்சியை தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • அறிவியல் ஆசிரியர் திருமலை கொழுந்து இதற்கானஏற்பாடுகளை செய்திருந்தார்.

    தென்காசி:

    தென்காசி ஒன்றியம் சுவாமி சன்னதி தெருவில் அமைந்துள்ள 7-வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளிகள் அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்புகளை காட்டி பரிசுகளை பெற்றனர். தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி கல்வி அலுவலர் ஆலோசியஸ் கிறிஸ்டோபர், தென்காசி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

    ஏற்பாடுகளை பள்ளியின் அறிவியல் ஆசிரியர் திருமலை கொழுந்து செய்திருந்தார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேனட் பொற்செல்வி வரவேற்று பேசினார். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் 170 பேர் தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    • இளையான்குடி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    • சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இயற்பியல்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கம் 2 நாட்கள் நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இயற்பியல்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கம் 2 நாட்கள் நடந்தது. கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இயற்பியல் துறை மாணவ-மாணவிகள் அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தி விளக்கினர். இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், அல்ஹாஜ், நசீர் கான், அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் 

    • 25-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து மா ணவர்கள் இக்கண்கா ட்சியைப் பார்வையிட்டு பயனடைந்தனர்.
    • கல்லூரி சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    மத்தூர், 

    தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் (தன்னாட்சி) கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையமும் ஒருங்கிணைந்து 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    அறிவியல் மற்றும் கலைக் கண்காட்சியினை ஸ்ரீ வித்யா மந்திர் கல்விக் குழுமங்களின் நிறுவனர் சந்திரசேகரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு பெரியார் பல்கலைகழக இயற்பியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் குமாரதாஸ், தலைவர் ஜலஜா மதன் மோகன், கல்லூரியின் செயலர் அருண்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்வாணையர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து மா ணவர்கள் இக்கண்கா ட்சியைப் பார்வையிட்டு பயனடைந்தனர்.

    கல்லூரி சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு பள்ளிக்கும் கல்லூரி பேருந்து மூலம் மாணவர்களை அழைத்து வந்து மீண்டும் கண்காட்சி முடிந்தவுடன் பாதுகாப்பாக அப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இவ்விழாவினைக் கல்லூரி கணினி துறைத் தலைவர்கவிதா, கணிதத் துறைத் தலைவர் ராகவன், இயற்பியல் துறைத் தலைவர்அறிவுச்செல்வி, வேதியியல் துறைத் தலைவர்கார்த்திகேயன் மற்றும் அறிவியல் அதிகாரி பார்த்திபன், மூத்த தொழில் நுட்பவியலாளர்உதயகுமார் மற்றும் மூத்த அறிவியல் உதவியாளர் ராமு ஆகியோர் இக்கண்காட்சியினை ஒருங்கிணைந்து நடத்தினர். 

    • முதல் பரிசு பெறும் மாணவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து செல்ல உள்ளனர்
    • ஏராளமானோர் கலந்து கொணடனர்

    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள யுனிவர்சல் மெட்ரிகுசன் பள்ளி சார்பில் அறிவியல் கண் காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி சேர்மன் டாக்டர் எம்.. சிவப்பிரகாசம் தலைமை வகித்தார்.

    தாளாளர் தீபா சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கிரிநாத் வரவேற்றார். கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் (இஸ்ரோ) எச்.போஜ்ராஜ். பி.சோமா. எம்.வி. கண் ணன், டி.கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் தனியார் பள்ளி மாணவர்களின் அனைத்து கண்டுபிடிப் புகள் அடங்கிய 4 அரங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    இதில் மங்கள்யான், இன்சாட், உப்பு நீரில் இயங்கும் இரு சக்கர வாகனம், உப்பு நீரில் இயங்கும் வெல்டிங் மெஷின், இருதய துடிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை உணர்வு பூர்வமாக செய்து இருந்தனர்.

    அந்த அரங்குகளை பார்வையிட்டு 4 அரங்குகளில் சிறந்த அரங்கு என்று தேர்ந்தெடுத்து முதல் பரிசு பெறும் அரங்கு மாண வர்களை இஸ்ரோவுக் கும், இரண்டாம் பரிசு பெறும் மாணவர்களை ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் அழைத்து செல்ல உள்ளனர்.

    ஒவ்வொரு மாணவர்களுக்குள் அடங்கிய திறமைகளுக்கு ஏற்ப பயிற்சி அளித்து அவர்களை வரும் காலத்தில் சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர்.

    இந்த நிகழ்வில் பெற்றோர்கள், பொதுமக்கள் மாணவர்களின் கண்டு பிடிப்பை ஆச்சர்யத்து டன் பார்த்து சென்றனர்.

    இந்த நிகழ்வில், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் 'கலந்து கொண்டனர். இதில் பள்ளி துணை முதல்வர் இளங்கோவன் நன்றி கூறினார்.

    ×