என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர் கைது"
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல், அரசு பஸ் டிரைவர். விருத்தாசலம் அருகே புதுக்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர்.
மனைவி இறந்த பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஏழுமலையின் மகள் ஆனந்தவள்ளிக்கும், குமரவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த 18.9.18 அன்று குமரவேலும் ஆனந்த வள்ளியும் இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் ஆனந்தவள்ளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகள் தற்கொலைக்கு காரணமான குமரவேல் மீது ஏழுமலைக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்றிரவு விருத்தாசலத்தில் குமரவேலுவை சந்தித்த ஏழுமலை, அவருடன் நைசாக பேச்சு கொடுத்து மது அருந்த அழைத்து சென்றார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் அங்கு இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
குமரவேலுக்கு போதை தலைக்கேறியதும், ஆத்திரமடைந்த ஏழுமலை, தான் கொண்டு வந்த கத்தியால் குமரவேல் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் உடலை ஆட்டோவில் ஏற்றி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சிக்கு சென்றார். அங்கு தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுரங்கத்திற்கு எதிரே உடலை போட்டு விட்டு ஊர் திரும்பினார். விருத்தாசலத்தில் போலீசார் மறித்து வாகன சோதனை செய்த போது ஆட்டோவில் உள்ள ரத்தக்கறையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஏழுமலையிடம் விசாரித்த போது அவர் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கொலை தொடர்பாக ஏழுமலையிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய மாணவி. எலவனாசூர்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் புத்தாடை வாங்குவதற்காக மாணவி ஒரு ஆட்டோவில் எலவனாசூர்கோட்டையில் உள்ள துணிக்கடைக்கு சென்றார். பின்னர் புத்தாடை வாங்கிவிட்டு அதே ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் மாணவியின் வீட்டுக்கு செல்லும் வழியில் செல்லாமல் மாற்றுப்பாதையில் ஆட்டோ டிரைவர் சென்றதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம்போட்டார். ஆனால் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக அந்த மாணவியை ஆட்டோ டிரைவர் மிரட்டி, அவரை கடத்தி சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த மாணவி ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அந்த மாணவி எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாணவியை கடத்தி சென்றதாக புகைப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஆட்டோ டிரைவர் மணிகண்டன்(வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட மாணவி கீழே குதித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
குள்ளனம்பட்டி:
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நாகல்நகர் பகுதியில் தங்கி 2 மகள்களுடன் அந்த பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேக் பரீத், தங்கராஜ் ஆகியோர் பாண்டியின் 16 வயது கொண்ட மகளை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் ஒவ்வொரு நாளும் தனித்தனியாக 2 பேரும் சேர்ந்து மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக பாண்டி திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குபதிவு செய்து ஆட்டோ டிரைவர் சேக் பரீத், தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் லாரி டிரைவர். இவரது 17 வயது மகள் தூத்துக்குடி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் மாணவியை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இது குறித்து மகளிடம் கேட்டார்.
அப்போது மாணவி கூறும் போது, பள்ளியில் படிக்கும் போது ஆட்டோவில் அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவரான புதுக்கோட்டை மேல கூட்டுடன்காடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (33) என்பவர் என்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினார். மேலும் செல்போன் படத்தை காட்டி மிரட்டி கடந்த 5. 4. 2018 அன்று தன்னை கற்பழித்தார். இதனை வெளியில் கூறினால் செல்போன் படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாகவும், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி பல முறை கற்பழித்ததாகவும் கூறினார்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்ததாக ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுப்பிரமணியனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பகோணம்:
டெல்லியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த 2-ந்தேதி வங்கி பணி பயிற்சிக்காக கும்பகோணத்துக்கு ரெயில் மூலம் வந்தார்.
ஓட்டலுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறினார். அந்த ஆட்டோ டிரைவர், இளம்பெண் செல்ல வேண்டிய ஓட்டலுக்கு செல்லாமல் நகர் முழுவதும் சுற்றி வந்தார். சந்தேகம் அடைந்த இளம்பெண், ஆட்டோ டிரைவரிடம் கேட்டதற்கு வாக்குவாதம் செய்து செட்டிமண்டபம் பைபாஸ் ரோட்டில் நள்ளிரவில் இறக்கி விட்டு சென்று விட்டார்.
நள்ளிரவில் தனியாக நடந்து வந்த இளம் பெண்ணை பார்த்ததும் அங்கு நின்ற 2 வாலிபர்களுக்கு சபலம் ஏற்பட்டது. இளம்பெண்ணிடம் நைசாக பேசி, மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு அழைத்து செல்கிறோம் என்று கூறினர். இதை நம்பி இளம்பெண்ணும் அவர்களுடன் சென்றார்.
2 வாலிபர்களும், இளம்பெண்ணை ஆள்நட மாட்டமில்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். தனது நண்பர்கள் 2 பேருக்கும் செல்போன் மூலம் பேசி அழைத்தனர். 4 வாலிபர்களும் அந்த இளம் பெண்ணை கற்பழித்தனர்.
பிறகு 4 பேரும், ஆட்டோவில் இளம்பெண்ணை ஓட்டல் அருகே கொண்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.
இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வசந்த், தினேஷ், புருசோத்த மன், அன்பரசன் ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது காலில் காயம் அடைந்த வசந்த், தினேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கற்பழிப்பு வழக்கில் கைதான 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனை நடந்தது.
இந்த வழக்கில் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி இளம்பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் யார்? அவர் எதற்காக ஒரு மணி நேரம் ஆட்டோவில் வைத்து சுற்றினார் என்பது புரியாத புதிராக இருந்து வந்தது.
ஆட்டோ டிரைவர் ஒரு வாரமாக தலைமறைவாக இருந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து கொண்டு இருந்தார். போலீசார், ஆட்டோ டிரைவரை பிடிக்க தீவிரம் காட்டினர்.
ரெயில் நிலைய பகுதியில் காமராஜர் சாலை, புதிய பஸ் நிலைய பகுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
கும்பகோணத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
அப்போது ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ டிரைவர் மட்டும் வித்தியாசமாக தனது ஆட்டோவின் முன் பக்கத்தில் இருந்த பம்பர், ஹாரன், மற்றும் கண்ணாடியை மாற்றி பழைய ஆட்டோவைப் போல் டிசைன் செய்து இருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அந்த ஆட்டோ யாருடையது என்று போலீசார் விசாரித்தனர். பக்கத்து ஊர்களிலும் சென்று ஆட்டோவை தேடினர்.
அப்போது திருவிடைமருதூர் திருப்பணிபேட்டை யில் அந்த ஆட்டோ நின்று இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். அதன் டிரைவர் குருமூர்த்தி (வயது25) என்பவரை நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கும்பகோணம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அவர் போலீசாரிடம் கூறுகையில், “சம்பவத்தன்று ரெயில் நிலையத்தில் சவாரியை இறக்கி விட்டு திரும்பியபோது இளம்பெண் ஆட்டோவை நிறுத்தி ஓட்டலில் விடுமாறு ஆங்கிலத்தில் கூறினார். நானும் அவர் சொன்னபடி ஆட்டோவில் ஏற்றிச் சென்றேன். வழியில் தகராறு ஏற்பட்டதால் நடுவழியில் இறக்கி விட்டதாக ஒப்புக் கொண்டார்.
கண்காணிப்பு கேமிரா மூலம் ஆட்டோவை போலீசார் தேடுவதை அறிந்து தனது ஆட்டோவின் முன் பகுதியை மாற்றினேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இவருக்கு வாலிபர்களுடன் தொடர்பு உள்ளதா? தன்னை நம்பி ஆட்டோவில் ஏறிய பெண்ணை நடுரோட்டில் ஏன் இறக்கி விட்டார்? என்பது குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. #delhiwomanmolestation #autodriverarrested
நெல்லை:
செங்கோட்டையில் இருந்து கடையநல்லூருக்கு நேற்று ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. பஸ்சை சங்கரன் கோவில் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த டிரைவர் சாமிநாதன் (வயது 46) ஓட்டினார். அந்த பஸ் அச்சன்புதூர் அருகே உள்ள பொய்கை ஊரணி அருகே வந்த போது, ஆட்டோவில் ஏற முயன்ற பயணிகள் பஸ்சில் ஏறிவிட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வடகரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மைதீன் அப்துல் காதர் (30), அரசு பஸ் டிரைவரை அவதூறாக பேசி சரமாரி அடித்து உதைத்தார்.
இதுகுறித்து பஸ் டிரைவர் சாமிநாதன், அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மைதீன் அப்துல் காதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஷார்மி (வயது 32).
இவர் வெளியில் செல்லும்போது காஞ்சாம்புறம் தேனாம்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (36) என்பவரது ஆட்டோவை பயன்படுத்தி வந்தார். சமீபகாலமாக ராஜனின் ஆட்டோவில் செல்லாமல் வேறு ஒரு ஆட்டோவில் சென்றார்.
இதனால் ராஜன், ஆத்திரத்தில் ஷார்மியுடன் தகராறில் ஈடுபட்டார். நேற்று ஷார்மி பாலாமடம் பகுதியில் சென்றபோது அவரை தடுத்து நிறுத்தி ராஜன் தாக்கினார். இதில் காயம் அடைந்த ஷார்மி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுபற்றி ஷார்மி நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் அருகே உள்ள சொக்கம்புதூரை சேர்ந்தவர் சேகர் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுகன்யா (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் சேகருக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த சுகன்யா கணவரை பிரிந்து கடந்த 10 நாட்களாக பக்கத்து தெருவில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று சேகர் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக சுகன்யாவின் தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது சுகன்யா உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த சேகர் அங்கு இருந்த எல்.இ.டி. டி.வி.யை எடுத்து சுகன்யாவின் தலையில் அடித்தார். பின்னர் தரதரவென வெளியே இழுத்து சென்று அங்கு கிடந்த கல்லால் 2 கால்களில் தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சுகன்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து செல்வபுரம் போலீசார் மனைவியை தாக்கிய சேகர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
முகப்பேர், பாடிபுதுநகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். தாய் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பெருமாள் (33) என்பவர் மாணவியிடம் அடிக்கடி பேசினார். அவரது கொடூர பார்வையை அறியாத மாணவியும் நட்பாக பேசி வந்தார்.
மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது அவரது தாய் பெரும்பாலான நாட்களில் வேலைக்கு சென்று விடுவது வழக்கம். இதனால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இதனை சாதகமாக பயன்படுத்திய பெருமாள் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது அவர் மாணவியை மிரட்டி பலமுறை கற்பழித்தார். இதுபற்றி வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டினார்.
இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் தெரிவிக்கவில்லை. இதனை பயன்படுத்தி பெருமாள், பல மாதங்களாக மாணவியிடம் உல்லாசமாக இருந்து உள்ளார்.
இதற்கிடையே மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அவரை தாயார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த தாய் இதுபற்றி திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் மாணவியை கற்பழித்த ஆட்டோ டிரைவர் பெருமாளை கைது செய்தனர்.
மாணவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
கோவை:
இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதி திட்டத்துடன் ரெயிலில் கோவை வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கைதான திண்டிவனம் இஸ்மாயில் ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, பல்லாவரம் சம்சுதீன், ஒட்டேரி சலாவுதீன் மற்றும் கோவை என்.எச்.ரோடு ஆசிக் ஆகிய 4 பேரும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். சதி திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த பைசல் (28), குனியமுத்தூரை சேர்ந்த அன்வர்(29) என்ற 2 ஆட்டோ டிரைவர்கள் உதவி செய்வார்கள் என ஆசிக் தன்னிடம் கூறியதாக இஸ்மாயில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து பைசல், அன்வர் ஆகியோரை பிடிக்க வெரைட்டிஹால் போலீசார் தீவிரம் காட்டினர்.
இது தொடர்பாக நேற்று பைசல் என்பவரை போலீசார் பிடித்தனர். அவர் எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுத்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில் வழக்கில் தொடர்புடைய பைசல் இவர் இல்லை என்பது தெரியவந்தது. பெயர் குழப்பத்தால் அவரை பிடித்து வந்தது உறுதியானதை தொடர்ந்து அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பினர்.
தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் பைசலை தேடினர். இன்று அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து போலீசார் கூறும்போது, சதிதிட்டத்துக்கு உதவி செய்வதாக கூறிய பைசல் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள அன்வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்