என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கணவருடன் தகராறு"
என்.ஜிஓ. காலனி:
சுசீந்திரம் புத்தளம் உசர விளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், தொழிலாளி. இவரது மனைவி நாகமணி முத்துசங்கு (வயது 39). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று வீட்டின் அருகே உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவிற்கு கண்ணன், தனது மனைவியை வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் திருவிழாவிற்கு செல்ல மறுத்துள்ளார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கண்ணன் மட்டும் திருவிழாவிற்கு சென்றிருந்தார். பின்னர் இரவு கோவிலில் இருந்து வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த மனைவி மாயமாகி இருந்தது தெரியவந்தது. மனைவியை தேடிப்பார்த்தார்.
அப்போது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி இறந்து விட்டதாக கூறியதை கேட்டதும், கண்ணன் கதறி அழுதார்.
இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்தவர் இளையராஜா. கோட்டக்குப்பத்தை அடுத்த அனுமந்தை குப்பத்தை சேர்ந்தவர் சவுமியா (வயது 20). இருவரும் நேரு வீதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தனர்.
இளையராஜாவும், சவுமியாவும் ஒரே கடையில் வேலை செய்து வந்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்பு இருவரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு செல்லாமல் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு புது தென்றல் வீதியில் வசித்து வந்தனர்.
இளையராஜா லோடு லாரி வாங்கி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு நியா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதே போல் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், மனவேதனை அடைந்த சவுமியா இரவு இளையராஜா தூங்கிய பின்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் எழுந்து பார்த்த இளையராஜா மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி ஆரோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து சவுமியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி சவுமியாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். சவுமியாவின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
பின்னர் சவுமியாவின் தாய் சுமதி ஆரோவில் போலீசில் இளையராஜா மீது புகார் கொடுத்தார். அதில், இளையராஜா வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாகவும், எனவே, அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று கூறி இருந்தார்.
இந்த புகார் குறித்தும் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா இதை சந்தேகத்துக்கிடமான மரணமாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது.
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை சேடபட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது27). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முத்துலாபுரத்தை சேர்ந்த லதா(22) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. சிறிதுகாலம் சந்தோசமாக இருந்த கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த லதா வாழ்வதை விட சாவதே மேல் என தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 6 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னிவாடி:
கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி கருப்பாயி (45). இவர்களுக்கு கார்த்திக் ராஜா என்ற மகன் உள்ளார். இவர் ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள சுக்காம் பட்டியில் தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தார். கருப்பாயிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருப்பாயி தனது கணவருடன் கோபித்துக் கொண்டு சுக்காம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அதன் பின் கணவர் பல முறை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் வரவில்லை.
நேற்று இரவு மனைவியை பார்ப்பதற்காக முருகன் சுக்காம்பட்டிக்கு வந்தார். அப்போது அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இன்று காலை கருப்பாயிகுளத்து வேலைக்கு செல்வதற்காக அங்கிருந்த பெண்களுடன் சென்றார்.
அப்போது மறைந்திருந்த முருகன் மனைவியை அரிவாளால் வெட்ட முயன்றார். உயிருக்கு பயந்து அவர் ஓட முயன்றும் முருகன் விடாமல் விரட்டிச் சென்று வெட்டி சாய்த்தார். இதில் சம்பவ இடத்திலேயே கருப்பாயி உயிரிழந்தார். இது குறித்து ரெட்டியார் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் ரெட்டியார் சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட கருப்பாயி உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
ஈரோடு:
ஈரோடு வளையகார வீதி, குப்பிபாலம் அருகே காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு பெண் உள்பட 3 பேரின் சடலங்கள் மிதந்து வந்ததாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் தனது இரண்டு குழந்தைகளையும் துணியால் உடலில் கட்டியபடி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது தற்கொலை செய்து கொண்டவர்களின் அடையாளம் மற்றும் அவர்களின் பற்றி விவரம் தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கள்ளக்குறிச்சி சாலையைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி தமிழ்செல்வி (வயது 30) இவர்களது மகள்கள் துர்கா ஸ்ரீ, தானுஸ்ரீ என தெரியவந்தது.
மணிகண்டன் எலக்ட்ரீ‘ஷியனாக வேலை பார்த்து வருகிறார்.
தமிழ்செல்வியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஆகும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனும் தமிழ்ச்செல்வியும் திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றிய போது பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று கடந்த 26-ஆம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ் செல்வி தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதற்தாக ஈரோடு வந்தார்.
அப்போது கருங்கல் பாளையம் வண்டியூரான் கோவில் பஸ் நிறுத்தத்தில் தனது குழந்தைகளுடன் இறங்கியுள்ளார் பின்னர் அப்பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று மாலை தமிழ்ச்செல்வியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈரோடு வந்தனர்.
அவர்களிடம் ஈரோடு டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மணிகண்டனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கோணாப்பட்டை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 39). இவரது மனைவி நீலா (33). இந்த தம்பதிக்கு பவதாரணி (5). என்ற மகள் இருந்தார்.
உதயகுமார் பெங்களூருவில் சில ஆண்டாக கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த உதயகுமார் மீண்டும் வேலைக்கு செல்லாமல் ஊரைச் சுற்றி வந்தார். இதனால் தம்பதியடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனிடையே உதயகுமார் தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறேன் அதற்கு ரூ. 5 லட்சம் தேவைப்படுகிறது என நீலாவிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய நீலா தனது பெயரில் இருந்த நிலத்தை அடகு வைத்தும் வட்டிக்கு வாங்கியும் ரூ.5 லட்சம் பணத்தை கணவரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட உதயகுமார் வெளிநாடு செல்வதாக கூறி பெங்களூருவுக்கு சென்று தங்கி விட்டார்.
பெங்களூருவில் இருந்து உதயகுமார் தான் நல்ல வேலையில் இருப்பதாகவும் நல்ல சம்பவம் கிடைக்கிறது என்று கூறி அவ்வபோது நீலாவிடம் போன் செய்து பேசியுள்ளார். இனியும் கஷ்டபட தேவையில்லை என்று நிலா எண்ணி வந்தார்.
இந்நிலையில் கணவர் வெளிநாடு செல்லவில்லை பெங்களூருவில் தான் உள்ளார் என்பது நீலாவிற்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நீலா தனது கணவரிடம் இது குறித்து கேட்டார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நீலா நேற்று முன்தினம் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதை கண்ட உறவினர்கள் 2 பேரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பவதாரணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நீலாவிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு நீலா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:
கொடுமுடி அடுத்த கொளத்துப்பாளையம் புது காலனியை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சரண்யா (வயது 23). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். பின்னர் பூபதி வெளியே சென்று விட்டார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த சரண்யா மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பூபதி வீட்டு வந்து கதவை திறந்தார். அப்போது அவரது மனைவி சரண்யா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
ஏர்வாடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 33). இவர்களுக்கு வரதன் (8), வாசன் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த முருகேஸ்வரி 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு ஏர்வாடியில் உள்ள தந்தை வீட்டருகே தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அவரது மகன்களும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகூடத்தில் 3-ம் வகுப்பு மற்றும் 1-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முருகேஸ்வரியையும் அவரது 2 மகன்களையும் காணவில்லை. கணவர் செல்வம் வீட்டுக்கோ, உறவினர் வீட்டுக்கோ செல்லவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அவரைப்பற்றிய விபரங்கள் தெரியாததால், சித்தப்பா கண்ணன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரியையும், 2 மகன்களையும் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்