என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாமி தரிசனம்"
- திருமாவளவனுக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார்.
- கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சி நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்தார்.
அப்போது அவர் அங்குள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதைதொடர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் தரிசனம் மேற்கொண்டார்.
கோவிலுக்கு வருகை தந்த திருமாவளவனுக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர்.
அவர்களின் குறைகளை திருமாவளவன் கேட்டறிந்தார். பொது மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
- வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டதாகவும் கருதி பிடித்து செல்கின்றனர்.
- புனித நீராக வழங்கப்பட்டுsam வரும் நிலையில் நோய் தீர்க்கும் மருந்தாக இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்காம்பட்டியில் ஸ்ரீவாஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. அதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 20 அடி ஆழத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சிவலிங்கத்திற்கு அடியில் நீரூற்று தோன்றி சிவலிங்கம் வழியாக வழிய தொடங்கியது. அந்த நீரானது பாதாள சிவலிங்கத்தை சுற்றி சுமார் 1 அடியிலிருந்து 2 அடி வரை நீரூற்றிலிருந்து வெளியேறி தண்ணீர் அறை முழுவதும் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்கு ஊற்று பெருக்கெடுக்க தொடங்கியது.
இதனைக் கண்ட பக்தர்கள் அந்த தண்ணீரை புனித நீராக கருதி பிடித்து செல்கின்றனர். இந்த தண்ணீர் கும்பாபிஷேகத்திற்கு புனித நீராகவும், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளை போக்குவதாகவும், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டதாகவும் கருதி பிடித்து செல்கின்றனர்.
இந்த தகவல் பரவியதும் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து பாதாள சிவலிங்கத்தை வழிபட்டு புனித நீர் பெற்றுச் செல்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 20 அடி ஆழத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும்போது 2 அடி ஆழத்திற்கு கான்கிரீட் போடப்பட்டு பின்னர் அதன் மேல் டைல்ஸ் கல் பதிக்கப்பட்டு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆறு போல் ஊற்று பெருக்கெடுத்து வருவது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாகவும் தற்போது புனித நீராக வழங்கப்பட்டு வரும் நிலையில் நோய் தீர்க்கும் மருந்தாக இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சுக்காம் பட்டி சித்தர்ஸ்ரீலஸ்ரீ துரை ஆதித்தன் சுவாமிகள் அருளாசி வழங்கி புனித நீர் மற்றும் காணிக்கை பூக்களை பிரசாதமாக அளித்து வருகிறார்.
- திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது.
- நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.
நகைச்சுவை நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர். இவரது படங்கள் இல்லாத வெள்ளிக்கிழமையே இல்லை எனக் கூறலாம். அத்தனை படங்களிலும் பிசியாக நடித்து வருபவர், யோகி பாபு. நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் யோகிபாபு நடிக்கும் 'கான்ஸ்டபிள் நந்தன்' திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது. இதில் நடிகர்கள் யோகி பாபு, ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பிரியா ஆனந்த் நடித்து வரும் 'அந்தகன்' படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார்.
- பிரியா ஆனந்துடன், ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். 'வாமனன்' படம் மூலம் தமிழிலும், 'லீடர்' படம் மூலம் தெலுங்கிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதேபோல், பாலிவுட் திரைப்படமான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, 'அந்தகன்' படத்தில் நடித்து வரும் பிரியா ஆனந்த், பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார்.
நடிகை பிரியா ஆனந்த் சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
விஐபி சாமி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்த பிரியா ஆனந்திற்கு ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்களுடன் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பின்னர், கோவிலில் இருந்து வெளியேறிய பிரியா ஆனந்துடன், ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
- தமிழக கோயில்களில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்
- அமித்ஷாவுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார்.
அங்கிருந்து வாரணாசியில் இருந்து திருச்சி வந்த அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் வந்தடைந்தார்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்றனர்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
அமித்ஷாவுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக ராஜராஜேஸ்வரி சத்யகிரீஸ்வரர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
இதைதொடர்ந்து, அமித்ஷா நாளை காலை ஏழுமலையானை வழிபடுவதற்காக திருப்பதி செல்கிறார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு, அவர் செல்லும் வழித்தடங்கள் மற்றும் கோயில்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாளபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
- 5 நாட்களும் காலை முதல் மதியம் வரையிலும், மாலை முதல் இரவு வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும் நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். இந்த சீசன் காலத்தில் 2 மாதங்களுக்கு மேலாக கோவில் நடை திறந்திருக்கும்.
அப்போது ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும்.
அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
அதன் பிறகு பதினெட்டாம் படிக்கு அருகே உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். இன்று மாலை நடை திறந்த பிறகு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவில் அரிவராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்படும். பின்பு நாளை (15-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.
நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாளபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும். அது மட்டுமின்றி நாளை முதல் வருகிற 19-ந்தேதி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இந்த 5 நாட்களும் காலை முதல் மதியம் வரையிலும், மாலை முதல் இரவு வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும் நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி இரவில் அத்தாள பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப் படுவதை முன்னிட்டு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பம்பைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட் டுள்ளன.
வருகிற 19-ந்தேதி அன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிலை பிரதிஷ்டை தின விழாவும் நடைபெற உள்ளது குறிப்பிட த்தக்கது.
- நடிகர் லாரன்சை கோவில் வாயிலில் நின்று சோபா வரவேற்றார்.
- கோவிலில் இருந்தபடி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுக்காக சென்னை கொரட்டூரில் புதிதாக சாய் பாபா கோவில் கட்டியுள்ளார்.
இந்த கோவிலுக்கு சென்ற நடிகர் விஜய் மற்றும் ஷோபா சாமி தரிசனம் செய்யும் புகைப்படமும், கும்பாபிஷேகம் செய்யும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், நடிகர் விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் நடிகர் லாரன்ஸ் இன்று வருகை தந்துள்ளார். நடிகர் லாரன்சை கோவில் வாயிலில் வரவேற்ற சோபாவின் காலி விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
பிறகு, நடிகர் ராகவா லாரன்ஸ் கோவில் முழுக்க சுற்றி சாமி தரிசனம் செய்தார்.
அப்போது, ஷோபா உடன் இருந்தார். கோவிலில் இருந்தபடி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சாமி தரிசனம் செய்த நடிகர் லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " அனைவருக்கும் வணக்கம், இன்று நண்பன் விஜயின் சாய்பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் சென்றேன். நான் என் ராகவேந்திரர் சுவாமி கோவிலை கட்டியபோது, எங்கள் கோவிலில் ஒரு பாடலை பாடி, தன் இருப்பை எங்களுக்கு அருளினார்.
இன்று அவளுடன் அவர்களின் கோவிலுக்கு சென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கோவிலை கட்டிய நண்பன் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நான் தூய்மையான தெய்வீக மற்றும் இனிமையான அதிர்வுகளை உணர்ந்தேன். அனைவரும் கோவிலு" என்றார்.
- மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது.
- டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் பாண்ட்யா சாமி தரிசனம் செய்திருந்தார்.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் போட்டிக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் இஷான் கிஷன், பியூஸ் சாவ்லா மற்றும் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதனால் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏனென்றால் இந்த சீசனை மோசமாக தொடங்கிய மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது. இந்த தோல்விக்கு பிறகு 4-வது போட்டியில் டெல்லி அணியை மும்பை சந்தித்தது. அந்த போட்டிக்கு முன்னர் ஹர்திக் பாண்டியா குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து நடந்து போட்டியில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து மும்பை வெற்றிக்கணக்கை தொடங்கியது.
இந்த நிலையில் இப்போதும் அவர் கோவிலுக்கு சென்றுள்ளதை வைத்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சித்தேரி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் ரத உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.
மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது இந்நிலையில் இன்று பங்குனி ஐந்தாம் நாள் ரத உற்சவ தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட பூங்காவனத்தம்மன் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்நிகழ்வை காண போளூர், கேளூர், துறிஞ்சிகுப்பம், சந்தவாசல், தேப்பனந்தல் அணைப்பேட்டை விளக்கனந்தல், கஸ்தம்பாடி, சமத்துவபுரம், கட்டிப்பூண்டி, ஆத்துவம்பாடி பால்வார்த்து வென்றான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
- இன்று இரவு அம்மன் ஆண் பூதவாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.
விழாவின் 2-ம் நாளான இன்று காலை மயானக் கொள்ளைவிழா நடை பெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் மேள தாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்பு பூஜைகள் நடை பெற்றவுடன் காலை 10.45 மணிக்கு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் உற்சவ அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக வந்து சிம்ம வாகனத்தில் அமர்ந்தார். 11 மணிக்கு பிரம்ம கபாலம் (கப்பரை முகம்) அம்மனுக்கு முன்பாக பூசாரிகள் ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். தொடர்ந்து அம்மனும் மயானத்தில் எழுந்தருளினார். பின்பு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் பக்தர்கள் மயானத்தில் குவித்திருந்த சுண்டல் , நவதானியங்கள், காய்கறிகள் பழங்கள்,சில்லறை நாணயங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை என்று அழைக்கப்படுகிறது.
- தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பகிர்வு.
- புகைப்படங்களுடன் "ஹர ஹர மகாதேவ்" என அவர் பதிவு.
உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.
இதுதொடர்பான புகைப்படங்களை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுடன் "ஹர ஹர மகாதேவ்" என அவர் பதிவிட்டுள்ளார்.
தமன்னாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் ஹர ஹர மகாதேவ் என பதிவிட்டு வருகின்றனர்.
- வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.
- சுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை புரிந்தார்.
முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் கட்டளை தந்திரம் ஸ்ரீமத் திருநாவுக்கரசு சுவாமிகள், சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து கற்பக விநாயகர், வைத்தியநாதர்சுவாமி, செல்வ முத்துக்குமார சுவாமி, தையல்நாயகி அம்மன், அங்காரகன் ஆகிய சுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல். ஏ, அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ்மற்றும் ஏராளமான அதிமுகவினர்கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்