search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு கைது"

    மீனம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    மீனம்பாக்கம் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுபற்றி விசாரிக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் மீனம்பாக்கம் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பதும் மீனம்பாக்கம், திரிசூலம் பகுதிகளில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 
    பொள்ளாச்சி அருகே செல்போன் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் தண்டபானி (வயது 63). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது இவருடைய ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாலிபர் ஒருவர் ஜன்னல் வழியாக கையை விட்டு திருடி தப்பிச் செல்ல முயன்றார்.

    இதனை பார்த்த தண்டபானி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து கோட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் திண்டுக்கல் மாவட்டம் மரியநாதபுரத்தை சேர்ந்த ஆலன்ஜேம்ஸ் (20) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருவோணம் அருகே பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவோணம்:

    திருவோணத்தை அடுத்த ஊரணிபுரத்தை சேர்ந்த உத்தமநாதன் மகன் ராஜா (வயது 35). இவர் 4 மாதத்துக்கு முன்பு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கினார். அதனை அவர் ஊரணிபுரம் கடை வீதியில் நிறுத்தி இருந்தபோது மர்ம நபர் திருடி சென்று விட்டான்.

    இதுபற்றி அவர் ஊரணிபுரம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை திருடிய நபரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று ஊரணிபுரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் அருகில் சந்தேகத்துக்கிடமான நிலையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தததில் அவர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து திருட்டு போன ராஜாவின் மோட்டார் சைக்கிளை மீட்டனர். மேலும் அவர் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள்களை திருடியதாகவும், வீடுகளுக்கு வேலைக்கு சென்று நோட்டமிட்டு நகை, பணத்தை திருடி வந்ததாகவும் கூறினார்.

    விசாரணையில் அவர் பட்டுகோட்டை லட்சதோப்பு பகுதியை சேர்ந்த காளிதாஸ் மகன் மணிவண்ணன் (22) என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருவாரூர் மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெருந்தரக்குடி ஊராட்சி குளிக்கரை சேகர் என்பவர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் விக்ரமன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் திருடர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தர்மபுரியில் ஒரு திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சேலத்தை சேர்ந்த பிரம்மமூர்த்தி (27), நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்த வினோத்குமார் (வயது 25) ஆகிய இருவரும் விசாரணையின்போது குளிக்கரை சேகர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனடிப்படையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் கொரடாச்சேரி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் குளிக்கரை சேகர் வீட்டில் திருடிய கார் மற்றும் நகைகளையும், திருவாரூர் ஒன்றியம் கீழப்படுகையில் சத்துணவு அமைப்பாளர் வீட்டில் திருடிய 8 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பாத்திரங்களையும் இருவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். திருட்டு பொருட்களை மீட்ட திருவாரூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், சப் -இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், கொரடாச்சேரி சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் தைமை காவலர் ரவிக்குமார் ஆகியோரை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டன்ட் விக்ரமன் பாராட்டினார்.

    திருப்பதியில் நிறுத்தியிருக்கும் பக்தர்களின் கார்களை உடைத்து பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery #arrest

    திருப்பதி:

    திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதியில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் திருட்டு, வழிப்பறி நடப்பதாகவும், பக்தர்களின் கார் கண்ணாடிகளை உடைத்து, அதில் வைத்திருக்கும் செல்போன்கள், கேமராக்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் செல்வதாகவும் போலீசாருக்குப் புகார்கள் வந்தன.

    திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்மொகந்தி, திருடர்களை பிடிக்க உத்தரவிட்டார். திருப்பதி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.பாஸ்கர்ரெட்டி தலைமையில் போலீசார் திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் திருப்பதி பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக ஊற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    இருவரும், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தொண்டமநாதம் கிராமத்தைச் சேர்ந்த ஜி.சிவாவேலுபிள்ளை (வயது 40) என்றும், ஒரு தனியார் பஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மற்றொருவர் தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் யாதவள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனு என்கிற ருத்ர‌ஷசீனு (23) எனத் தெரிய வந்தது.

    இருவரும் கூட்டாக சேர்ந்து திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் செல்போன்களை திருடியதாக கூறினர். பக்தர்களின் கார் கண்ணாடிகளை உடைத்து, அதில் வைத்திருக்கும் விலை உயர்ந்த செல்போன்கள், கேமராக்கள், வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை திருடி வந்துள்ளனர். கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது இருவரும் கூட்டாக சேர்ந்து 40-க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த 30 செல்போன்கள், 3 கேமராக்கள், 93 கிராம் எடையிலான வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேர் மீதும் திருப்பதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery #arrest

    திருச்செங்கோடு அருகே வடமாநில வாலிபரிடம் பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு உள்ள தனியார் போல்வெல் லாரி நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ஏம்ஸ்சந்த் வேலைபார்த்து வருகிறார். இவர் ஊருக்கு செல்வதற்காக தனது சம்பள பணத்தை ரூ. 40 ஆயிரத்தை வாங்கி கொண்டு அங்குள்ள தினசரி மார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு ஓடினர். அவர் சத்தம் போடவே பொதுமக்கள் அவரை விரட்டினர். அதில் ஒரு வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்ற 2 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திருச்செங்கோடு மெயின் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது. மற்ற 2 வாலிபர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில வாலிபரிடம் பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    தேவதானப்பட்டி அருகே தோட்டத்தில் மின் மோட்டார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியில் நிஜாம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இருந்த மின் மோட்டாரை சிலர் திருடிச் சென்றனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் வத்தலக்குண்டு பகுதியில் மோட்டாருடன் 2 வாலிபர்கள் சுற்றித் திரிந்துள்ளனர். போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தபோது முண்ணுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துருவி துருவி விசாரித்தனர்.

    அதில் அவர்கள் மோட்டார் திருடியதை ஒப்புக் கொண்டனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசுக்கு வத்தலக்குண்டு போலீசார் தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சாகுல் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தேவதானப்பட்டி போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன், முத்துராஜா என தெரிய வந்தது. மோட்டார் திருடி வத்தலக்குண்டு பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்றுள்ளனர். அப்போது வத்தலக்குண்டு போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.

    வேறு ஏதும் கொள்ளை களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூரில் செல்போன் கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் கடற்கரை சாலையில் கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் பக்கிரிசாமி நின்றார். அவர் தனது செல்போனை லாரியில் சார்ஜரில் போட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்போனை திருடி தப்பி செல்ல முயன்றனர்.

    அவர்களில் ஒருவனை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவன் திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரிந்தது. அவனை திருவொற்றியூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×