என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புகைப்படக் கண்காட்சி"
- கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம்,
- நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது
நாகர்கோவில் :
குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்களான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப் பட்டதை நேரில் பார்வை யிட்டது உள்ளிட்டவை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் காட்சிப்ப டுத்தப்பட்டது.
மேலும், முதல்-அமைச்ச ரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்ற ஸ்ரீதர் நேரில் சந்தித்தது, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட் டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி யது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்திமக்கள் தொடர்பு துறையின் சார்பாக அமைக் கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங் கள் குறித்து தெரிந்து கொண்டு பயன் பெற்றனர்.
- தமிழ்நாடு நாள் விழா வருகின்ற ஜூலை 23 வரை நடைபெறுகிறது.
- மாணவ-மாணவிகள் பார்வையிடுவதற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில், செய்தி மக்கள் தொடர் புத்துறை சார்பில், தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு, அமைக்கப் பட்டிருந்த தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா, மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜுலை 18-ஆம் நாளை "தமிழ்நாடு நாள் விழா" குறித்து பொது மக்கள் மற்றும் மாண வர்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், "தமிழ்நாடு நாள் விழா" வருகின்ற ஜூலை 23 வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற வுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், "தமிழ்நாடு நாள் விழா" சிறப்பு புகைப்படக் கண்காட்சி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிடுவதற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு உருவான வரலாறு, தமிழ்நாட்டின் சிறப்புகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க செயல் திட்டங்கள், தமிழ்மொழியின் தனித் தன்மை போன்ற பல்வேறு அரிய புகைப் படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவி கள் அனைவரும் தமிழ்நாடு நாள் விழா குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை பார்வை யிட்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு நாள் விழா சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை அரசு மற்றும் தனியார் பள்ளி களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் காலை முதல் வருகை புரிந்து ஆர்வமுடன் பார்வையிட்டு, தமிழ்நாடு நாள் பற்றி தாங்கள் அறிந்து கொண்டதாக கருத்து தெரி வித்தனர். இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரவீனா குமாரி உட்பட பலர் உள்ளனர்.
- பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.
- அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
தருமபுரி,
"தமிழ்நாடு நாள்" விழாவை முன்னிட்டு இன்று பேரணி மற்றும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.
இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு நாள் ஜூலை 18 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டார். விழாவில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் ஜுலை 18-ம் தேதி இன்று தருமபுரி மாவட்டத்தில் "தமிழ்நாடு நாள்" குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச் செல்வார்கள்.
அதேபோன்று "தமிழ்நாடு நாள்" முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையிலும், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புகளை பொதுமக்கள் அறியும் வகையிலும், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
எனவே, மாணவ மாணவியர்கள். பொதுமக்கள் அனைவரும் "தமிழ்நாடு நாள்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டிற்கு “தமிழ் நாடு ” என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி, தமிழ் நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார்.
- இந்த தினம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் நாளை 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக் டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு " என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி, தமிழ் நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார்.
இந்த தினம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் நாளை 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, நாளை காலை 9.30 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் பேரணி நடைபெறகிறது.
பெரியார் சிலை அருகே பேரணி தொடங்கி, திரு வள்ளுவர் சிலை வழியாக சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரணி முடிவடைய வுள்ளது.
தொடர்ந்து கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறை மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
அதேபோன்று, சேலம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புப் புகைப்படக்கண் காட்சி அரங்கினை பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையிடும் வகையில் நாளை முதல் 23-ந் தேதி வரை அமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர், நாடா ளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள உள்ளார்கள். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்ட பத்தில் இன்று முதல் வருகிற 16- ந் தேதி வரை 4 நாட்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.
- கண்காட்சியை பொது மக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிட லாம் என கூறினார்.
கள்ளக்குறிச்சி:
சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்ப கத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டல அலுவலகம் சார்பில் கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்ட பத்தில் இன்று முதல் வருகிற 16- ந் தேதி வரை 4 நாட்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச யோகாதினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை ஆகிய மையக்கருத்துக்களில் இந்த ஒருங்கிணைந்த கண்காட்சி நடைபெறுகின்றது. இன்று நடைபெறும் கண்காட்சி தொடக்க விழாவில் நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் கவுதம சிகாமணி, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ, நகர மன்ற தலைவர் சுப்பராயுலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மேலும் 14- ந் தேதி காலை ஊராட்சி மன்றத் தலைவர் களுக்கான சிறப்பு கருத்தரங் கமும், மாலை நகராட்சி தூய்மைப் பணியாளர் களுக்கான சிறப்பு கருத் தரங்கமும் நடைபெறு கின்றது. 15- ந் தேதி தேதி முற்பகல் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கான சிறப்பு அமர்வும், மாலை அங்கன்வாடி பணியா ளர்கள், வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு அமர்வும் நடைபெறுகின்றது. 16- ந் தேதி காலை கல்லூரி மாணவர்களுக்கு பூமியைக் காப்போம் மனிதம் வளர்ப்போம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி யும், மாலை பள்ளி மாண வர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஓவியப்போட்டி யும் நடைபெறுகின்றது. கண்காட்சியில், ஊட்டச் சத்து அரங்கு, ஆதார் திருத்த அரங்கு, காசநோய் அரங்கு, சுகாதாரத் துறை அரங்கு, மகளிர் திட்ட அரங்கு, சமூக நலத்துறை அரங்கு, மருத்துவ மூலிகை அரங்கு ஆகிய வைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த கண்காட்சியை பொது மக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிட லாம் என கூறினார். அப்போது மத்திய மக்கள் தொடர்பாக புதுச்சேரி கள அலுவலக துணை இயக்கு னர் முனைவர் சிவக்குமார், கள விளம்பர உதவி அலுவலர்கள் வீரமணி (புதுச்சேரி), போஸ்வெல் ஆசீர் (மதுரை), தியாகராஜன் (தருமபுரி) ஆகியோர் உடன் இருந்தனர்.
- ரஜினியுடன் நடிகர் யோகி பாபுவும், கண்காட்சியை பார்வையிட வந்திருந்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை தினமும் ஏராளமானோர் பார்த்து வருகிறார்கள்.
கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் என்று பலரும் பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலையில் ரஜினிகாந்த் இந்த புகைப்படக் கண்காட்சியைப் பார்த்து ரசித்தார். ரஜினிக்கு கண்காட்சியை சுற்றிக் காண்பித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் புகைப்படங்கள் குறித்து விளக்கம் கேட்டுக் கொண்டே வந்தார் ரஜினிகாந்த்.
இந்த கண்காட்சி பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கைப் பயணம் கிட்டதட்ட 54 வருடங்கள் கட்சியில் உழைத்து படிப்படியாக முன்னேறி பல பதவிகளை வகித்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார் என்று சொன்னால் அது மக்கள் அவரது உழைப்புக்குக் கொடுத்த அங்கீகாரம். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
முதலமைச்சருடனான நினைவுகள் நிறைய இருக்கிறது. அதை நேரம் வரும்போது சொல்கிறேன் என்றார் ரஜினிகாந்த்.
ரஜினியுடன் நடிகர் யோகி பாபுவும், கண்காட்சியை பார்வையிட வந்திருந்தார். அப்போது பூச்சி முருகன் உடன் இருந்தார்.
- புகைப்படம் உணர்த்தும் வரலாற்றை ரஜினியிடம் அமைச்சர் சேகர்பாபு எடுத்துரைத்தார்.
- படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை:
சென்னை, பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலினின் எழுபது ஆண்டுகால பயணம் குறித்தான புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகர்கள் ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் இன்று பார்வையிட்டனர். புகைப்படம் உணர்த்தும் வரலாற்றை ரஜினியிடம் அமைச்சர் சேகர்பாபு எடுத்துரைத்தார்.
புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பின் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்றுதான்.
* படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு அவர் கூறினார்.
புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் தனது கருத்தை எழுத்து மூலம் நடிகர் ரஜினிகாந்த் பதிவு செய்தார்.
- தமிழியக்கம் - விஐடி பல்கலைக்கழகம் சார்பில் நடக்கிறது
- வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைக்கிறார்
வேலூர்:
தமிழியக்கம் - விஐடி பல்கலைக்கழகம் இணைந்து பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் புகைப்படக்கண்காட்சி வேலூர் வி.ஐ.டி. அண்ணா அரங்கில் நாளை மறுதினம் சனிக்கிழமை நடக்கிறது. வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைக்கிறார்.
11-ந் தேதி மற்றும் 12-ந் தேதி ஆகிய 2 நாட்களும் காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியினை பார்வையிடலாம். அன்பழகனின் நூற்றாண்டு விழாவை நினைவு கூறும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், பேராசிரியர் அன்பழகனின் இளமைக்கால புகைப்படங்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனான புகைப்படங்கள், பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உள்ள புகைப்படங்கள், பேராசிரியர் அன்பழகன் அமைச்சராக பதவியேற்ற நிகழ்வுகள், பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் பேராசிரியரின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
பேராசிரியரின் வாழ்க்கை முழுவதும் மேற்கொண்ட லட்சியப் பயணத்தின் பதிவுகளாகவும் 75 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாறுகளை காட்சிப்படுத்தும் விதமாகவும் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.
11-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு விழாவிற்கு விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தலைமை தாங்குகிறார், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருத்தினராக பங்கேற்கிறார்.
கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி முதன்மை விருத்தினராக பங்கேற்கிறார். மாநிலங்களவை உறுப்பினரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர், வைகோ விழாப் பேருரையாற்றுகிறார்.
வாழ்த்துரை—சட்டமன்ற உறுப்பினர்கள் அ. பெ. நந்தகுமார் (அணைக்கட்டு), ப. கார்த்திகேயன் (வேலூர்), அ. வெற்றியழகன் (வில்லிவாக்கம்), மேயர் சுஜாதா, ஜெயரஞ்சன் ஆகியோர் வாழ்த்தி ேபசுகின்றனர்.
- மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
- இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், குன்னமலை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
இப்புகைப்படக் கண்காட்சியில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.
- அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.
- மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்டது
நாகர்கோவில்:
நாகர் கோவில் மாநக ராட்சிக்குட் பட்ட வடசேரி பஸ் நிலை யத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண் காட்சி நேற்று நடைபெற் றது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரி வித்ததாவது:-
தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக் காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல் மைச்சர் தொடங்கிவைத்த திட்டங்களான, முதல மைச்சரின் விரிவான மருத் துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட் டம், மக்களை தேடி மருத்து வம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி யது, கன்னியாகுமரிமாவட் டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட் டம், விவசாயிகளுக்குபுதிய மின் இணைப்புகள் வழங் கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட் டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது. மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலை யங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவி னர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது. முதலமைச்ச ரின் ஊட்டம் தரும் காய்க றித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம்,
மின் சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி யின்போது காலமானவர்க ளின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட் டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அமைக் கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டு அர சின் திட்டங்களை தெரிந் துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்ப டும் அரசு நலத்திட்ட உத விகளை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவி த்தார்.
- மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம்,
- இன்னுயிர் காப்போம்- நம்மைக்காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம்
நாகர்கோவில் :
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட காஞ்சிரவிளை பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்-அமைச் சர் தொடங்கி வைத்த திட்டங்களான முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக் கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கி களில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குற வர்கள் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி யது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.
இன்னுயிர் காப்போம்- நம்மைக்காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், நமக்கு நாேம திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், காணி பழங்குடியி னர்களுக்கு நில உரிமை ஆணை வழங்கியது. மீனவர் களின் நலன் கருதி பனிக் கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவிகள் வழங்கியது.
முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், பதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களில் பணியின்போது காலமானவர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ-மாணவியருக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
- இந்திய சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகே உள்ள பழைய பேரூராட்சி அலுவலக மைதானத்தில் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.
- நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, கீல்தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவைவஸ்தியான்உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி,
இந்தியாவின்75-வது சுதந்திர திருவிழாவையொட்டி இந்திய சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகே உள்ள பழைய பேரூராட்சி அலுவலக மைதானத்தில் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் தென்மண்டல இயக்குநர் ஜெனரல் எஸ்.வெங்கடேஸ்வர் தலைமை தாங்கினார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் இயக்குனர் ஜெனரல் எம். அண்ணாதுரை வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே, நிலக்கரி, மற்றும் சுரங்க அமைச்சகத்தின் இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய சுதந்திர போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பிறகு மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே குத்துவிளக்குஏற்றி 5 நாள் புகைப்படகண்காட்சியை தொடங்கி வைத்துபேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இன்னும் 25 ஆண்டு களுக்குப் பின்னர் நம்நாடு எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி நிதிநிலை அறிக்கையை தயாரித்துள்ளார். 2014-ம்ஆண்டில் நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றபோது ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த 8 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி அடுத்த 25 ஆண்டுகளை கணக்கில் கொண்டு தயாரித்திருக்கிறார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று அடிப்படையில் மோடியின் தொலை நோக்கு பார்வையில் அந்த திட்டங்களை தொடர்ந்துசெயல்படுத்தி வருகிறார். 130 கோடி மக்களில் 80 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேம்படுத்த வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள், கழிப்பறைகள், மின்சார வசதி, எரிவாயு இணைப்புகள் என்று மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து சிறந்த முறையில் பிரதமர்மோடி செயலாற்றி வருகிறார். கொரோனா காலகட்டத்தி ல் மக்களுக்கு தடுப்பூசி, மாத்திரை, மருந்துகளை உலகத்திலேயே இலவசமாக வழங்கிய ஒரே பிரதமர் மோடி மட்டும்தான். இந்தியா முழுதும் 130 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி போடவைத்தபெருமை பிரதமர் மோடியை சேரும்.
ஜன்தன் திட்டத்தின் மூலம் 45 கோடி மக்கள் வங்கிக்கணக்கு தொடங்கும் திட்டத்தை செயல்படுத்திஉள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் உலகத் தலைவர்களை திரும்பிப் பார்க்க வைத்த பிரதமராக மோடி திகழ்கிறார். 8 ஆண்டுகளில் பிரதமர்மோடி செய்த சாதனைகளை ஒரு நாளில் சொல்ல முடியாது.
இவ்வாறு மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே பேசினார்.
இந்தநிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, கீல்தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவைவஸ்தியான்உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வங்கிகள் மூலம் ஏழைகளுக்கு கடன் உதவியாக ரூ.15 கோடியே 60 லட்சத்துக்கான காசோலையை மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே வழங்கினார். மகளிர் சுய உதவி குழுவைச்சேர்ந்த பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். முடிவில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் காமராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கள விளம்பர துணை இயக்குனர் சிவகுமார் தொகுத்து வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்