என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் என்ஜினீயர்"
- அஸ்வதி துரிதமாக செயல்பட்டு அந்த நபரின் சட்டையையும், கழுத்தையும் உறுதியாக பிடித்துக்கொண்டார்.
- இந்த சம்பவத்தில் நகையை பறித்த நபருக்கும், அஸ்வதிக்கும் காயம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாயிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜேஷ். இவருடைய மனைவி அஸ்வதி (வயது30), ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலையில் சேங்கோட்டு கோணம் பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் மருந்து வாங்கிவிட்டு கணவருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் அஸ்வதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பறித்த வேகத்தில் தங்க சங்கிலி பல துண்டுகளாக அறுந்தது.
உடனே அஸ்வதி துரிதமாக செயல்பட்டு அந்த நபரின் சட்டையையும், கழுத்தையும் உறுதியாக பிடித்துக்கொண்டார். அந்த நபர் அஸ்வதியை இழுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றார். ஆனால் அஸ்வதி தனது பிடியை விடாமல் அந்த நபரை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இழுத்து போட்டார்.
இதைப்பார்த்து அக்கம்பக்கத்தில் நின்ற பொதுமக்கள் விரைந்து வந்து அந்த நபரை பிடித்தனர். இதற்கிடையே அந்த நபர் கையில் கிடைத்த தங்க சங்கிலி துண்டை வாயில் போட்டு விழுங்க முயன்றார். ஆனால் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அவரது வாயில் இருந்து நகையை வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தில் நகையை பறித்த நபருக்கும், அஸ்வதிக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து கழக்கூட்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்ததும் அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாயிக்கோணம் பகுதியை சேர்ந்த அனில்குமார் (40) என்பதும், அவர் வந்த மோட்டார் சைக்கிள் திருவனந்தபுரம் வஞ்சியூரில் இருந்து திருடி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நகை பறித்த நபரை பெண் என்ஜினீயர் மோட்டார் சைக்கிளில் இருந்து பிடித்து கீழே தள்ளிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
- விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:
பெங்களூரை சேர்ந்தவர் ஜன்னபாவா (வயது 30). அவரது மனைவி பிரியா (23). இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜன்னபாஷ்வா தனது மனைவியுடன் பணிபுரியும் தினேஷ், புபாலன், நிஷ்த்தா ஆகியோருடன் சேர்ந்து புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டனர்.காரை ஜன்னபாஷ்வா ஓட்டினார். கோயமுத்தூர் வழியே வந்த கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேரும் காயங்களுடன் உயிர்த்தப்பினர் பின்னர் அடிபட்டவர்களை சின்ன சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரத்தினபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன்
- மத்திய கோ-ஆப்ரட்டிவ் வங்கியில் வேலை காலியாக உள்ளது என தெரிவித்தார்.
கோவை
கோவை ஜோதிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மாலதி (வயது 30). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் ரத்தினபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன். அப்போது ஜெய்கணேஷ் என்பவர் வந்து அறிமுகமானார். அவர் என்னிடம் பிரதம மந்திரி யோஜன திட்டத்திற்காக வந்துள்ளேன் இங்கு எனக்கு அலுவலம் உள்ளது என்றார்.
மேலும் அவருக்கு அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் பழக்கம் உள்ளது. அரசு வேலை வேண்டும் என்றால் வாங்கி தருகிறேன் மத்திய கோ-ஆப்ரட்டிவ் வங்கியில் வேலை காலியாக உள்ளது. அதற்கு ரூ. 5 லட்சம் செலுத்தினால் வேலை வாங்கிவிடலாம் என்றார்.
இதனை நான் உண்மை என நினைத்து கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 5 லட்சத்தை கொடுத்தேன். அதன்பின்னர் அவர் வேலையில் சேருவதற்காக ஆடரை கொரியர் மூலம் அனுப்பி வைத்தார். அந்த ஆடரை பார்த்தபோது அது போலி என்பது தெரியவந்தது.உடனே நான் அவரது அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை. போன் செய்த போது அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை.
அப்போது தான் அவர் என்னை ஏமாற்றியது தெரியவந்தது. எனவே என்னிடம் வங்கியில் வேலை வாங்கி வருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த ஜெய்கணேஷ் என்பரை கண்டு படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது 32), சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
ராஜேஷ் சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் மனைவியிடம் சம்பளத்தை கேட்டு தொல்லை செய்த தோடு, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் ராஜேஷ், தனது மனைவி சிவரஞ்சனியிடம் திருச்சி சென்று கோவில்களில் வழிபாடு செய்து வரலாம் என கூறியுள்ளார். அதனை நம்பிய சிவரஞ்சனியும் தனது குழந்தை, கம்பெனி லேப்-டாப், ரூ.50 ஆயிரம் பணத்துடன் பெங்களூரில் இருந்து கணவருடன் திருச்சிக்கு புறப்பட்டார்.
திருச்சி வந்ததும் ராஜேஷ் சிவரஞ்சனியை அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மேலும் ராஜேஷ் செல்லும் போது, சிவரஞ்சனியின் கார் மற்றும் லேப்-டாப், ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றுடன் குழந்தையையும் தூக்கி சென்று விட்டார். இதனால் ராஜேஷ் தன்னை ஏமாற்றியது தெரிய வரவே, சிவரஞ்சனி இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், குழந்தையுடன் எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையுடன் மாயமான ராஜேசை போலீசார் தேடி வருகிறார்கள்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுனில். இவரும், 25 வயதான ஒரு பெண் என்ஜினீயரும் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் ஆவர்.
இவர்களின் காதல் விவகாரம், அப்பெண்ணின் பெற்றோருக்கும் தெரியும். அந்த பெண், திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் சுனில் கோபம் அடைந்தார்.
இதற்கிடையே, கடந்த 4-ந் தேதி, வளைகுடாவில் உள்ள மஸ்கட்டில் ஒரு வேலைக்கு நேர்முக தேர்வுக்கு கூட்டிச் செல்வதாக பெண் என்ஜினீயரின் பெற்றோரை நம்ப வைத்து அந்த பெண்ணை சுனில் அழைத்துச் சென்றார். 7-ந் தேதி திரும்பி வந்துவிடுவதாக தனது பெற்றோரிடம் அந்த பெண் கூறியிருந்தார்.
ஆனால், சொன்னபடி 7-ந் தேதி திரும்பி வரவில்லை. இதையடுத்து, சந்தேகம் அடைந்த பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார், பெண் என்ஜினீயரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை கண்டறிந்து விசாரணை நடத்தினர். சுனிலையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், பெண் என்ஜினீயரை கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவல்படி, நேற்று முன்தினம் ஐதராபாத் அருகே ஒரு கால்வாயில் பெண் என்ஜினீயரின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. சுனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இருவரும் 4-ந் தேதி ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து ஒரு லாட்ஜ்க்கு சென்றுள்ளனர்.
அங்கு மறுநாள், பெண் என்ஜினீயரை சுனில் கொலை செய்தார். உடலை ஒரு சூட்கேசுக்குள் அடைத்து, ஒரு டவுன் பஸ்சிலும், ஒரு டாக்சியிலும் சூட்கேசுடன் பயணம் செய்தார். பின்னர், புறநகரில் உள்ள ஒரு கால்வாயில், உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை போட்டு விட்டு சென்றுவிட்டார்.
திருமணத்துக்கு வற்புறுத்தியதால், காதலியை கொலை செய்ததாக சுனில் போலீசில் தெரிவித்தார். #Suitcase #Hyderabed #EngineerKilled
மதுரவாயல் ராஜீவ் காந்தி நகர் 2-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற ஞான பிரகாஷ் மெக்கானிக்கல் என்ஜினீயர்.
இவரது மனைவி காயத்ரி (25) ஒரகடத்தில் என்பீல்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஞானபிரகாஷ் மற்றும் காயத்ரி இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு இரண்டு பேர் வீட்டிலும் சேர்க்கவில்லை. இருவரும் தனியாக வசித்து வந்தனர். இதனால் காயத்ரி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கணவர் ஞான பிரகாஷ் அலுவலக வேலை காரணமாக புனே சென்று இருந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் படுக்கை அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும், மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
உடல் மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. திருமணம் நடந்து ஒரு வருடமே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார். #WomanSuicide
சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்தவர் நிவேதிதா. என்ஜினீயர். இவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் எனது தோழிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அங்குள்ள ஒரு லாட்ஜில் நாங்கள் தங்கி இருந்தோம்.
நள்ளிரவு 1 மணிக்கு லாட்ஜுக்கு வந்த அப்போதைய கொடைக்கானல் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் ஆபாச நடனம் ஆடியதாக கூறி எங்களை கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணை என்ற பெயரில் அவதூறாக பேசி அத்துமீறி நடந்து கொண்டனர். பெண்களிடம் விசாரணை நடத்தும்போது பெண் போலீசார் உடன் இருக்க வேண்டும் என்று விதி உள்ளது.
ஆனால், அதுபோன்று பெண் போலீசார் யாரும் இல்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த போதும் அதை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர். ரூ.7 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் விடுவித்து விடுவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். நாங்கள் பணம் கொடுக்க மறுத்ததால் எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். எனவே, போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவர்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்தில் வழங்கி விட்டு போலீஸ் அதிகாரிகள் இருவரின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.1 லட்சம் பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் பிருந்தாஸ்ரீ (வயது 26). எம்.இ. பட்டதாரியான இவருக்கும், சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் துணை மேலாளராக பணிபுரியும் ஒருவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் பிருந்தாஸ்ரீ மாமானார் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும், பெற்றோரிடம் இருந்து கூடுதலாக நகை, வீடு வாங்கிவா என்று கூறி தொடர்ந்து அவர் மிரட்டுவதாகவும், அதற்கு கணவர் உடந்தையாக இருப்பதாகவும் பிருந்தாஸ்ரீ ஓமலூர் மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் சேலம் மாவட்ட எஸ்.பி., டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது, எங்களுக்கு திருமணமாகி 4 மாதங்கள் சந்தோசமாக வாழ்ந்தோம். எனது மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததுடன் வேறு நபர்களுக்கு என்னை பாலியலுக்கு உட்படுத்த முயற்சித்து வருகிறார். மேலும் என்னிடம் ரூ.50 லட்சம் பெருமான நகை, பணம், கார் ஆகியவை வரதட்சணையாக பெற்று கொண்டு கொடுமை படுத்திய எனது மாமனார் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் எனது கணவர் மீது ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யாததால் உயர் நீதிமன்றத்தை அணுகினேன். உயர் நீதிமன்ற உத்தரவு படி வழக்குபதிவு செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,
எனது கணவர் தொடர்ந்து ரவுடிகளை அனுப்பி கொலை செய்ய முயற்சிக்கிறார். மேலும் என்னிடம் பண பலம், ஆள் பலம் உள்ளது நீ எங்கு சென்று புகார் கொடுத்தாலும் நான் பார்த்து கொள்கிறேன், உள்ளே சென்றாலும் ஜாமீனில் வெளியே வந்து உன்னையும் உனது குடும்பத்தையும் கொல்லாமல் விட மாட்டேன் என மிரட்டுகிறார்.
எனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் பல முறை புகார் கொடுத்தும், இதுவரை அவரை அழைத்து விசாரணை கூட செய்யவில்லை. எனது கணவர் மற்றும் மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவருடன் என்னை வாழ வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார். ஓமலூர் பகுதியில் இளம்பெண் வங்கி மேலாளரான கணவர் மீது பல அடுக்கடுக்கான புகார் தெரிவித்து டி.எஸ்.பி அலுவலகம், எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்