என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீசார் வழக்குபதிவு"
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராமசந்திரன் (30). அதே பகுதியை சேர்ந்த அந்தோனி முத்து மகன்கள் கண்ணன், விஜய், உறவினர் அந்தோனி ராஜ் மகன் வல்லரசு. ராமசந்திரன்- கண்ணன் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அவ்வப்போது ஜாடையாக பேசி ராமசந்திரனை வம்புக்கு இழுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராமச்சந்திரன் அதே பகுதியை ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது கண்ணன், விஜய், வல்லரசு ஆகியோர் சேர்ந்து ராமசந்திரனை அவதூறாக பேசினர்.
இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே கண்ணன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கல் மற்றும் கம்பால் அடித்து ராமசந்திரனை தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனை அறிந்த ராமசந்திரனின் தாய் மூவரையும் தட்டி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ராமசந்திரன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் அந்தோணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நேசமணி நகர் பெஞ்சமின் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(வயது29). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நானும், விக்ரம் பிள்ளை என்பவரும் கடந்த டிசம்பர் மாதம் 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தின் போது வரதட்சணை வேண்டாம் என கூறினார்கள்.
பின்னர் எனது கணவர் விக்ரம்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் சிலர் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள்.
நான் கருவுற்று இருந்த போது அந்த கருவை கலைத்து விடுமாறு கூறினார்கள். அவர்கள் என்னை அடித்ததில் கருசிதைவு ஏற்பட்டு விட்டது. எனது கணவரும், அவரது நண்பரும், உறவினர்கள் சிலரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர்.
எனது கணவர் நிலம் ஒன்றை விற்று ரூ.15 லட்சம் பணத்தை உறவினர்களுக்கு கொடுத்தார். அப்போது அவரது வீட்டையும் அடகு வைத்து பணம் தருமாறு கேட்டு வருகிறார்கள். இது தொடர்பாக நான் கேட்டால் என்னை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள்.
எனவே எனது கணவர் உள்பட அனைவரும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த நாகர்கோவில் மகளிர் போலீசுக்கு உத்தர விடப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாந்தா குமாரி விசாரணை நடத்தினார்.
அந்த புகார் மனு மீது வழக்குபதிவும் செய்யப்பட்டுள்ளது. விக்ரம்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் 7 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 498(ஏ), 294(பி), 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள பெரிய மறவன்குளம் சோனைகோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி நாகஜோதி. இவர்களது 2 வயது குழந்தை ஜெய்ஹரீஷ்.
இவனது பாட்டி பானுமதி, டி.புதுப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினரை பார்க்கச் சென்றார். அப்போது ஜெய்ஹரீசையும் அழைத்துச் சென்றார்.
ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஜெய்ஹரீஷ் விளையாடியபோது, தேள் கொட்டியது. உடனடியாக அவனை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஜெய்ஹரீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் மகாலட்சுமி நகர் 6-வது வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). இவர் பல்லடம்- திருப்பூர் இடையே உள்ள குன்னாங்கல்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் எந்திர ஆபரேட்டராக இருந்தார். நேற்று மாலை வேலை செய்தபோது எந்திரத்தில் சிக்கினார்.
காயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
பூதப்பாண்டியை அடுத்த கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது55). கட்டிடத் தொழிலாளி. நேற்று மாலை பூதப்பாண்டி காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஞானதாஸ் மற்றும் அவரது நண்பர் அஜித்(20) ஆகியோர் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர். முதல் மாடியில் அவர்கள் இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் இருந்து ஞானதாஸ் தவறி விழுந்தார்.
உடனே பதறிப்போன அவரது நண்பர் அஜித் கூச்சலிட்டு அலறினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
இதையடுத்து தலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஞானதாசை அவர்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் காதர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் கோட்டார் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் நாகராஜன் (வயது 30) அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவன், தனது பெற்றோரிடம் கூறினார்.
இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆசிரியர் நாகராஜன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து ஆசிரியர் நாகராஜன் தலைமறைவாகி உள்ளார்.
கோட்டார் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை மகளிர் போலீசார் விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மகளிர் போலீசார் இது தொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளனர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் மேல தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. சீர்காழி அரசு போக்குவரத்து பணி மனையில் தற்காலிக கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவரது தங்கைக்கு திருமணம் நடந்தது. அப்போது அவரது உறவினர் , மணிகண்டனை குறித்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மணிகண்டன், நேற்று திரு குளம்பியம் என்ற இடத்துக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்