என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவசாயி தற்கொலை"
விழுப்புரம் அருகே கிளியனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கோவடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 46) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தார்.
கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இந்த தொடர் மழையின் காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. தொடர்ந்து விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிர்கள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாஸ்கரன் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் பிணமாக தொங்கிய பாஸ்கரனை பார்த்து அவரது மனைவி செல்வி கதறி அழுதார்.
இதுகுறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் பாஸ்கரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா அருகே உள்ள பூண்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 55) விவசாயி. இவருக்கும் ஊர்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சந்திரன் நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் டிரஸ்சரி காலனியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் பாலமுருகன் (வயது 36). இவர்களுக்கு பாச்சலூர் பகுதியில் காபி தோட்டம் உள்ளது. பாலமுருகனுக்கும் திண்டுக்கல் அருகே உள்ள அம்மா பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (25) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுபாஷ் கிருஷ்ணன் என்ற 2½ வயது மகன் உள்ளான்.
கிருஷ்ணவேணிக்கும் அம்மா பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக் காதலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். கண்ணன் பெங்களூரில் சொந்தமாக கால்டாக்சி வைத்து ஓட்டி வருகிறார்.கிருஷ்ணவேணி கணவனுடன் கோபித்துக் கொண்டு அடிக்கடி கண்ணனை பார்க்க சென்றுள்ளார்.
3 முறை கண்ணனுடன் தான் வாழ்வேன் என்று கூறி அவருடன் சென்றுள்ளார். பெரியவர்கள் கிருஷ்ணவேணியை அழைத்து பேசி அறிவுரை கூறி கணவனுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பாலமுருகன் பாச்சலூர் தோட்டத்துக்கு சென்று விட்டார். கிருஷ்ணவேணி தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அங்கு மகனை விட்டு விட்டு கள்ளக்காதலன் கண்ணனுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து அறிந்ததும் பாலமுருகன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
தனது குடும்ப மானம் கெட்டு விட்டதே என்று புலம்பி வந்துள்ளார். மேலும் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்துள்ளார். அதன்படி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் அவரது பெற்றோர் பாலமுருகனின் அறையை தட்டிய போது திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் இறந்த விஷயம் தெரிய வந்தது. இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள பால்பண்ணை தெரு தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜூ. (வயது 31). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து விட்டனர். இதனால் ராஜூ கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் சோகத்தில் இருந்து வந்துள்ளார்.
மேலும் ராஜூவின் மனைவி ராமபிரியா மற்றும் குழந்தைகள் இறந்தது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராஜூவின் பெற்றோர் உள்பட 3 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது.
இதனால் ராஜூ மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜூவின் தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அழகப்ப சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பெரியநாயகம் (வயது 38), விவசாயி. இவரது மனைவி அருள்ஜெயா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மாலை பெரியநாயகம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பெரியநாயகம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பெரியநாயகம் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்