search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold smuggling"

    • ரூ.61 லட்சம் மதிப்பிலான 918 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது.
    • முபீனா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் வழியாக வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அடிக்கடி பலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இவர்களை சுங்கத்துறையினர் பிடித்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை.

    இந்த நிலையில் குவைத்தில் இருந்து கொச்சி நெடும்பசேரி விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் கண்காணித்தனர்.

    இதில் ஒரு பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது பையில் செயற்கை பூக்கள் மற்றும் ஸ்குரு டிரைவர்கள் இருந்துள்ளது. அதனை சோதனை செய்தபோது நூதன முறையில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    செயற்கை பூக்களின் கைப்பிடியை தங்ககம்பிகளாக்கி அதனை இரும்பு நிற பொருட்களால் பூசியும், ஸ்குரு டிரைவர்களின் கைப்பிடிக்குள் வைத்தும் ரூ.61 லட்சம் மதிப்பிலான 918 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.

    அதனை கடத்தி வந்த பெங்களூரைச் சேர்ந்த முபீனா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது.
    • 700.400 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திருச்சி

    திருச்சி விமான நிலை யத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் , இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் பல்வேறு முறைகளில் மறைத்து கடத்தி வரும் பயணிகளிடமிருந்து தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் இருக்கை ஒன்றில் பார்சல் இருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த விமான நிறுவன ஊழியர்கள் உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக விமானத்தில் ஏறி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது இருக்கையின் அடியில் மறைத்து 6 பார்களாக எடுத்து வரப்பட்ட 700.400 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.47.50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அந்த இருக்கையில் அமர்ந்து வந்த பயணியின் ஆவணங்களை சோதனை செய்தபோது அந்த பயணி விமான நிலைய வளாகத்திற்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் தான் கொண்டு வந்த தங்கத்தை இருக்கையில் வைத்து விட்டு வந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விசாரணை நடைபெற்று வருகிறது.
    • தங்கம் கடத்தலுக்கு குடியுரிமை அதிகாரி உடந்தை.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில், வெளிநாடு செல்லும் விமான பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து அனுப்புவதற்காக, குடியுரிமை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு பணியாற்றிய அதிகாரி சரவணன் வெளிநாடுகளுக்கு செல்ல வரும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதிக்கும் போது, முறைகேடுகளில் ஈடுபடுவதும், தங்கம் கடத்தி வருபவர்களுக்கு உதவி செய்வதும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உறுதியானது.

    இதையடுத்து குடியுரிமை அதிகாரி சரவணன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில் கடத்தல் காரர்களிடம் இருந்து தங்கத்தை, சரவணன் வாங்கி வைத்துக் கொண்டு, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் செல்வதற்கு உதவி புரிந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 267 கிலோ தங்கம் கடத்தலுக்கும் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சரவணனுக்கும் சம்பந்தம் இல்லை.

    அவர் யார்-யாருக்கு உதவினார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். தங்கம் கடத்தலுக்கு குடியுரிமை அதிகாரி உடந்தையாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமானங்களில் வரும் பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட தங்கம் பிடிபட்டது. இதுபோன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது.

    கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலை முடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்சம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.

    இப்படி தங்கம் கடத்தி வருபவர்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பது தொடர்கதையாகவே உள்ளது.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது காலில் அணிந்திருந்த மூட்டு வலி பட்டையில் ரூ. 1.16 கோடி மதிப்பிலான1605 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
    • பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயங்கி வருகிறது. இதனால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதனிடையே விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவர் 960 கிராம் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.62 லட்சம் ஆகும். இதையடுத்து அந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 9 பேரை கைது செய்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பிடிபட்டது.
    • தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பிடிபட்டது. இதுபோன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது. கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலை முடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்ச ம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.

    இவர்கள் "ரூம் போட்டு யோசிப்பாங்களோ?"னு வடிவேலு பாணியில்தான் கேட்கத் தோன்றுகிறது.

    இப்படி யோசித்து தங்கம் கடத்தி வருபவர்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பது தொடர்கதையாகவே உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் கம்பி அறுக்கும் எந்திரத்தில் மறைத்து ஒரு கோடியே 19 லட்சம் மதிப்பிலான 1666 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ 1.20 மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.
    • சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவில் கடத்தல் தங்கம் கடத்தப்பட்டு வருவது, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஜூஸ் மிக்சருக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி (தோராயமாக) மதிப்பிலான 2.579 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை.
    • பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 390 கிராம்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் சில பயணிகள் தங்கத்தை கடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தினமும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கடத்தி வரப்படும் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது 3 பயணிகள் தங்களது லேப்டாப்பில் தங்க தகடுகள், தங்க கட்டி, தங்க செயின் ஆகியவற்றை மறைத்து எடுத்து வந்ததை கண்டுபிடித்தனர்.

    அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 390 கிராம். அவற்றின் இந்திய ரூபாய் மதிப்பு 26 லட்சம் ஆகும். இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தங்கம் கடத்தல் விவகாரத்தில் பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விமான பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது
    • சுரபி காதுன், கண்ணூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு மஸ்கட் நாட்டில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக விமான பணிப்பெண் கொல்கத்தாவை சேர்ந்த சுரபி காதுன் கைது செய்யப்பட்டார். அவர் ரூ.60 லட்சம் மதிப்பிலான 960 கிராம் தங்கத்தை மலக்குடலில் மறைத்து கடத்தி வந்தது வருவாய் புலனாய்வு இயக்குனரக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    தங்கம் கடத்தல் விவகாரத்தில் பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விமான பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது இது தான் முதல்முறை என கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர் தங்கம் கடத்தி வருவது இது முதல்முறை அல்ல என தெரியவந்தது. கேரளாவைச் சேர்ந்த தங்கம் கடத்தல் கும்பலுக்காக அவர் கடத்தல் செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து சுரபி காதுன், கண்ணூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் மேலும் ஒரு விமான ஊழியருக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவரையும் நேற்று கைது செய்தனர். அவரது பெயர் சுகைல் தனலோட் (வயது 33). கேரள மாநிலம் கண்ணூர் தில்லங்கேரியை சேர்ந்த அவர், சுமார் 10 ஆண்டுகளாக ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் மூத்த கேபின் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தான் சுரபி காதுனை, கடத்தல் கும்பலில் சேர்த்து விட்ட தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தங்கம் கடத்தல் விவகாரத்தில் விமான ஊழியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுரபி காதுன் தனது மலக்குடலில் 960 கிராம் தங்கத்தை கலவை வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
    • சுரபி காதுன் பலமுறை தங்கம் கடத்தில் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து பலரும் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி வருகின்றனர். அவர்களை விமான நிலையத்தில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் மற்றும் போலீசார் பிடித்து கைது செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சம்பவம் அடிக்கடி நடந்து வரும் நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக விமான பணிப்பெண் ஒருவர், தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மலக்குடலில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பெயர் சுரபி காதுன்.

    கொல்கத்தாவை சேர்ந்த இவர், மஸ்கட்டில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று விமானம் கண்ணூர் விமான நிலையத்ததை வந்தடைந்ததும் பயணிகள் அனைவரும் சோதனை செய்யப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் சுரபு காதுனையும் வருவாய் புலனாய்வு இயக்குனரக பணியாளர்கள் சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், சுரபி காதுன் தனது மலக்குடலில் 960 கிராம் தங்கத்தை கலவை வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு சுரபி காதுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் கண்ணூர் பெண்கள் சிறையில் சுரபி காதுன் அடைக்கப்பட்டார்.

    இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவில் மலக்குடலில் தங்கத்தை மறைத்து கடத்தியதற்காக விமானக் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் வழக்கு இது தான். சுரபி காதுன் பலமுறை தங்கம் கடத்தில் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கடத்தல் கும்பலில் கேரளாவைச் சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

    • ரஜினி- 171 புதிய படம் குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தங்கக் கடத்தல் மாபியா தாதாவாக நடிக்கிறார்.
    • இணைய தளத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துகள் பதிவு செய்து வருகின்றனர்.

    தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களாக 'ஹிட்ஸ்' குறைந்து உள்ளது.சமீபத்தில் வெளியான ஜெயிலர், லால்சலாம் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு அமைய வில்லை. தற்போது ரஜினிகாந்த் வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் ரஜினி- 171 புதிய படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரைவில் இயக்க உள்ளார். வருகிற ஏப்ரல் 22- ந்தேதி இந்த படத்திற்கான "டைட்டில்" அறிவிக்கப்பட உள்ளது. சில தினங்களுக்கு. முன் வெளியான ரஜினியின் 'ப்ரீ-லுக்' ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.



    இந்நிலையில் ரஜினி- 171 புதிய படம் குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தங்கக் கடத்தல் மாபியா தாதாவாக நடிக்கிறார்.

    40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தங்கக் கடத்தல் அதிகமாக இருந்தது. சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து ரகசியமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம் இந்தியாவுக்கு புழக்கத்திற்கு வந்தது.

    அந்தநேரத்தில் விமான நிலைய பாதுகாப்பு , சோதனை முறையில் நவீன வசதிகள் இல்லாததால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தங்கம் கடத்தல் அதிகரித்தது. பஸ், ரெயில்கள் வழியாகவும் கடத்தல் நடந்தது.




    இந்த சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் ரஜினி தங்க கடத்தல் 'தாதா' வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான 'ஸ்கிரிப்' தயார் செய்யும் பணியில் இயக்குனர் லோகேஷ்கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த படத்தில் விரைவில் ரஜினி உள்ளதை யொட்டி தற்போது இணைய தளத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துகள் பதிவு செய்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    • விமான பயணிகளிடமும், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
    • சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனையில் 160 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிப்பட்டது.

    மதுரை:

    மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணிகளிடமும், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.

    அப்போது மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மண்டையன் மகன் பாக்கியம் என்பவரிடம் நடைபெற்ற சோதனையில் அவர் கொண்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் அந்த பொருட்களை அதிநவீன ஸ்கேனர் மூலம் சோதனை செய்ததில் அதில் மறைத்து தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

    அதனையடுத்து சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனையில் 160 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிப்பட்டது. அதன் மதிப்பு ரூ.10 லட்சத்து 88 ஆயிரத்து 320 ஆகும். இதனைத் தொடர்ந்து சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினர் பாக்கியத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×