என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mothers day"
- இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- அன்னையர் தினத்தை முன்னிட்டு 'நிறம் மாறும் உலகில்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. படத்தின் கில்ம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது
அன்னையர் தினத்தை முன்னிட்டு 'நிறம் மாறும் உலகில்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மேற்கத்திய நாடுகள் இன்று அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன.
- பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் படேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில், அன்னையர் தின பரிசாக பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடியுடன் இருக்கும் உருவப்படத்தை தொண்டர்கள் பரிசாக வழங்கியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த தாய் ஹீராபென் மோடியின் உருவப்படத்தை பரிசாகப் பெற்றார்.
பரிசுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, "மேற்கத்திய நாடுகள் இன்று அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன, ஆனால் இந்தியாவில் நாங்கள் ஆண்டு முழுவதும் தாய், காளி, துர்கா மற்றும் தாய் இந்தியாவுக்காக பிரார்த்தனை செய்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டில் டிசம்பர் 30ம் தேதி அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் படேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமீபத்தில், 3ம்கட்ட தேர்தலில் அகமதாபாத் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்த பின்னர், தனது மறைந்த தாயை நினைவு கூர்ந்தபோது உணர்ச்சிவசப்பட்டார்.
2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் தனது தாயார் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
- பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம்கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், காங்கிரஸ் தலைவர் தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது தனது தாய் சோனியா காந்தி மற்றும் பல பெண்களுடன் தனது உரையாடல்கள் கொண்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில்," அன்னை என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வு -- பாசம், தியாகம், பொறுமை மற்றும் வலிமை. அன்னையர் தினமான இன்று, அனைத்து தாய் சக்திக்கும் வணக்கம் செலுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஆண்டுதோறும் ரூ. ஒரு லட்சம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மகாலக்ஷ்மி திட்டம் மற்றும் மத்திய அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு போன்றவற்றை காங்கிரஸ் தனது மக்களவை தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
- 'என் உலகமே நீங்கள் தான்' என்று தனது தாயை ரிங்கு சிங் புகழ்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் அன்னையர் தினத்தை ஒட்டி, தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரின்கு சிங் பகிர்ந்துள்ளார்.
அதில் 'என் உலகமே நீங்கள் தான்' என்று தனது தாயை அவர் புகழ்ந்துள்ளார்.
- உலகில் மெழுகுவர்த்திகளே வெட்கப்படும் அளவுக்கு ஈகங்களைச் செய்பவர்கள் அன்னையர் தான்.
- உலக அன்னையர் நாளில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
உலகில் மெழுகுவர்த்திகளே வெட்கப்படும் அளவுக்கு ஈகங்களைச் செய்பவர்கள் அன்னையர் தான். உயிர் கொடுத்தது மட்டுமின்றி உண்டி கொடுத்தது, ஊக்கம் கொடுத்தது, உயர்வு கொடுத்தது எல்லாமே அன்னையர் தான். தாம் பெற்ற வலிகளையும், வேதனைகளையும் தமது குழந்தைகள் பெறக்கூடாது, தாம் பெறாத பெருமைகளையும், உயர்வுகளையும், சிறப்புகளையும் தமது பிள்ளைகள் பெற வேண்டும் என்ற சிந்தனை அன்னையைத் தவிர எவருக்கும் வராது.
எப்படிப் பார்த்தாலும் தியாகத்தின் திருவிளக்கு அவர்கள் தான். உலக அன்னையர் நாளில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம். அவர்களை மனதில் குடியமர்த்தி எந்நாளும் வணங்குவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தாய்மை என்பது எல்லா பெண்களுக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை.
- தற்போது மருத்துவத்தில் டெக்னாலஜி ரொம்பவே முன்னேறி உள்ளது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் அழகான மற்றும் அற்புதமான விஷயம் என்னவென்றால் தாய்மை தான். அந்த தாய்மையை போற்றும் விதமாகத்தான் ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 12-ந்தேதி (இன்று) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனாலும் தாய்மை என்பது எல்லா பெண்களுக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை. அதிலும் பெண்களுக்கு சிக்கல்கள் பல உள்ளன. இருப்பினும் முன்பு உள்ள காலம்போல் இல்லாமல் தற்போது மருத்துவத்தில் டெக்னாலஜி ரொம்பவே முன்னேறி உள்ளது. அதனை சிலர் அறியாமை அல்லது விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் அறியாமல் உள்ளனர். அதிலும் சில பெண்கள் பயத்தின் காரணமாக தாமதமாக டாக்டரிடம் செல்கின்றனர். அடுத்து தவறான புரிதல்களினாலும் குழப்பத்தில் டாக்டரிடம் செல்வதையும் தவிர்த்துவிடுகின்றனர்.
அதை விடுத்து ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கு இருக்கும் பிரச்சினையை டாக்டரிடம் எடுத்துக்கூறினால் ஆரம்பத்திலேயே அவர்களின் பிரச்சினையை சரிசெய்ய ஏதுவாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு பெண்களுக்கும் அவர்களின் வயதுவரம்பை பொறுத்துதான், கர்பப்பையில் கருமுட்டை வளர்ச்சி அடையும். வயது அதிகமாகும் போது பெண்களுக்கு கருமுட்டையின் வளர்ச்சியும் குறையத் தொடங்கும். இதன் காரணமாகவும் தாய்மையும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
எனவே, டெக்னாலஜி அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் இனியும் தாமதிக்காமல் டாக்டரை அணுகுவதே சிறந்தது. ஏனென்றால் கருமுட்டை வளர்ச்சி அடையாத பெண்களுக்கு கூட தற்போது ஐவிஎப் (IVF)முறையில் கருமுட்டை செலுத்தி தாய்மை அடையச்செய்யும் வசதிகள் உள்ளன.
தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு மிக முக்கியமான கால கட்டம். பெருமைமிக்க பெற்றோராக மாறி இந்த உலகத்திற்கு புதிய வாழ்க்கையை அறிமுகப்படுத்துவது அவசியம். எனவே திருமணமான பெண்கள் ஒருவருடம் மட்டுமே தாய்மைக்காக காத்திருந்து பார்க்கலாம். இல்லையென்றால் தாமதிக்காமல் டாக்டரை அணுகுவதே சிறந்தது.
- தந்தை தொடங்கி, கணவன், மகன் என பலரின் வெற்றிக்கு பின்னிருக்கும் சக்தி.
- நம் ஒவ்வொருவரையும் தீராக்கடனாளியாக்கிய அன்னையரை உலக அன்னையர் நாளில் வணங்குவோம்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
உலகின் ஈடு இணையற்ற உறவு, ஒப்பீடற்ற தியாகத்தின் திருவுருவம், மனிதர்களுக்கு மாதா, பிதா, குருவாக இருந்து வளர்த்தெடுக்கும் தெய்வம், தந்தை தொடங்கி, கணவன், மகன் என பலரின் வெற்றிக்கு பின்னிருக்கும் சக்தி.
மனிதவாழ்வின் அனைத்துக்கும் ஆதாரமாக திகழ்பவர்கள் அன்னையர்களே. நீங்கள் இன்றி நாங்கள் இல்லை என்ற உண்மை அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நம் ஒவ்வொருவரையும் தீராக்கடனாளியாக்கிய அன்னையரை உலக அன்னையர் நாளில் வணங்குவோம்; அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அன்னையர்களே அனைத்துக்கும் ஆதாரம்...
— Dr S RAMADOSS (@drramadoss) May 12, 2024
அவர்களை நாம் எந்நாளும் வணங்குவோம் !
உலகின் ஈடு இணையற்ற உறவு, ஒப்பீடற்ற தியாகத்தின் திருவுருவம்,
மனிதர்களுக்கு மாதா, பிதா, குருவாக இருந்து வளர்த்தெடுக்கும் தெய்வம்,
தந்தை தொடங்கி, கணவன், மகன் என பலரின் வெற்றிக்கு பின்னிருக்கும் சக்தி…
- மு க ஸ்டாலின் சமூக வலைதளத்தில் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்.
சென்னை:
தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தினத்தையொட்டி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா.
தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்.
ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு #அம்மா!
— M.K.Stalin (@mkstalin) May 12, 2024
தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் #அன்னையர்_நாள் வாழ்த்துகள்!
ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!…
- மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- தாய்மையின் குணம் அன்று தொட்டு இன்று வரை மாறியதே இல்லை.
சென்னை:
வருடந்தோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் என்பது உலகின் அனைத்து தாய்மார்களையும் போற்றி வணங்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.
குழந்தையை பெற்றெடுக்கும்போது எதிர்கொள்ளும் பிரசவ வலியையும், வேதனையையும் பொறுத்துக்கொள்ள அவளால் மட்டுமே முடியும். குழந்தை பிறந்த பிறகு அதன் வளர்ச்சிக்காக தன் ஒட்டுமொத்த விருப்பு, வெறுப்புகளையும் ஒதுக்கிவைத்துவிடுவாள். காலங்கள் உருண்டோடிக்கொண்டே இருக்கலாம். நாகரிகம் என்ற போர்வையில் வாழ்வியல் முறை மாறிக்கொண்டிருக்கலாம். ஆனால் தாய்மையின் குணம் அன்று தொட்டு இன்று வரை மாறியதே இல்லை.
இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னையரை இன்று மட்டுமல்ல எந்நாளும் போற்றி வணங்குவோம்! என்று தெரிவித்துள்ளார்.
- தாய்மையின் குணம் அன்று தொட்டு இன்று வரை மாறியதே இல்லை.
- துன்பமோ, இன்பமோ எந்தவொரு தருணமாக இருந்தாலும் ஆறுதலோடு, அரவணைத்து துணை நிற்பாள்.
அன்பையும், அரவணைப்பையும் அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரம் போல் தன்னலமின்றி அளிக்கும் தியாக உருவின் பிறப்பிடம் தாய்மை. கருவில் குழந்தையை சுமக்க தொடங்கிய நொடி முதலே தன் ஆசைகளுக்கு கட்டுப்பாடு விதித்துக்கொள்வாள். அவளின் ஒவ்வொரு செயலுமே கருவில் வளரும் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே அமையும்.
தனக்கு பிடித்தமான, விருப்பமான உணவாக இருந்தாலும் சரி அது குழந்தையின் வளர்ச்சிக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதினாலே அந்த உணவையே வெறுத்து ஒதுக்கிவிடுவாள். கருவில் வளரும் குழந்தை நலமாக இருப்பதற்காக தன்னுடைய ஆசைகளை மட்டுமல்ல, ஒவ்வொரு தேவைகளையும் புறந்தள்ளிவிடுவாள். குழந்தையின் நலனை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து அதன் தேவையை நிறைவேற்ற முழுமூச்சாக இயங்குவாள்.
குழந்தையை பெற்றெடுக்கும்போது எதிர்கொள்ளும் பிரசவ வலியையும், வேதனையையும் பொறுத்துக்கொள்ள அவளால் மட்டுமே முடியும். சிறு வயிற்று வலிக்கே துடித்து போகும் ஆண்கள் அதனை உணர்ந்தாலே தாய்மையின் தியாகம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். குழந்தை பிறந்த பிறகு அதன் வளர்ச்சிக்காக தன் ஒட்டுமொத்த விருப்பு, வெறுப்புகளையும் ஒதுக்கிவைத்துவிடுவாள். காலங்கள் உருண்டோடிக்கொண்டே இருக்கலாம். நாகரிகம் என்ற போர்வையில் வாழ்வியல் முறை மாறிக்கொண்டிருக்கலாம். ஆனால் தாய்மையின் குணம் அன்று தொட்டு இன்று வரை மாறியதே இல்லை.
மழலை பருவம் முதலே தாய் தன்னை எப்படி வளர்த்து ஆளாக்கி இருப்பாள் என்பதை பலரும் அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் தங்களுடைய பிள்ளைகளை மனைவி எப்படி வளர்த்து ஆளாக்குகிறாள் என்பதை பார்த்தே தாய்மையின் தியாக வாழ்க்கையை தெரிந்து கொள்ளலாம். குடிசை வீட்டில் ஏழ்மையிலும், பணக்கார வீட்டில் சொகுசு வசதியுடனும் என வாழ்வியல் முறையில் வித்தியாசங்கள் இருக்கலாம்.
ஆனால் ஏழைத்தாய் தன்னுடைய பிள்ளை மீது காட்டும் பாசமும், பணக்கார தாய் தன் குழந்தை மீது காண்பிக்கும் அன்பும் ஒரே அளவுகோலாகத்தான் இருக்கும். எந்தவொரு சூழலிலும் பிள்ளையின் பசியை போக்காமல் தான் உண்பதற்கு விரும்பமாட்டாள். பிள்ளைகள் சாப்பிடாமல் அடம் பிடித்தால் அதன் விருப்பம் என்னவோ அதனை நிறைவேற்றி வைப்பாள். விளையாட்டு காட்டியே சாப்பிடவும் வைத்துவிடுவாள். குழந்தை வயிறாற சாப்பிட்டதை உறுதி செய்த பிறகே நிம்மதி பெருமூச்சு விடுவாள். தன் பசியை போக்க முன் வருவாள்.
மனதுக்கு கஷ்டமாக இருக்கும் சமயத்தில் ஆறுதல் தரும் வார்த்தைகளை எத்தனை பேர் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் ஆழ் மனதில் இருந்து வெளிப்படும் அன்பு கலந்த வார்த்தை தாயிடம் மட்டுமே உணர்வுப்பூர்வமாக வெளிப்படும். துன்பமோ, இன்பமோ எந்தவொரு தருணமாக இருந்தாலும் ஆறுதலோடு, அரவணைத்து துணை நிற்பாள். வசதி, வாய்ப்புகள் வாழ்க்கை முறையை மாற்றிவிடலாம். ஆனால் தாய் வெளிப்படுத்தும் பாசம் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மாறாது. ஒரே மாதிரித்தான் வெளிப்படும்.
எல்லா பிள்ளைகளையும் அரவணைத்து அன்பை பொழிவாள். மனித உயிருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக உயிர்கள் அனைத்துக்கும் தாய்மையே பிரதானம். தாய் இல்லாவிட்டால் உலக உயிர்கள் எதுவும் இல்லை. உலக ஜீவராசிகள் அனைத்திடமும் தாய்மை வெளிப்படுத்தும் பாசத்தில் பாகுபாட்டுக்கு ஒருபோதும் இடமில்லை என்பதே நிதர்சனம்.
வருடந்தோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள் தாய்மையின் தியாக வாழ்க்கையை நினைவுகூரும் தினமாக மட்டுமே அமைந்துவிடக்கூடாது. என்னென்றும் தாய்மையின் தன்னலமற்ற தியாகத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவர் உங்களை பெற்றெடுத்த பொழுது மகிழ்ந்ததை காட்டிலும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அவருக்கு அளிப்பதாக உங்களுடைய செயல்பாடு அமையட்டும். தாய்மைக்கு தலை வணங்குவோம்!
- பிரதான கோபுரம் 51 அடியும், கலசங்கள் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளன.
- கல்தூண்களில் பழங்கால வேலைப்பாடுகளுடன் கோவில் கட்டப்பட்டு உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், அமடல வலசையை சேர்ந்தவர் கிருஷ்ணா ராவ். இவரது மனைவி அனுசுயா தேவி. மகன் சரவணகுமார். இவர் ஐதராபாத்தில் தொழில் செய்து வருகிறார்.
அனுசுயா தேவி தனது மகனை பாசத்துடன் வளர்த்தார். மேலும் தனது மகன் படிக்க கடுமையாக உழைத்தார். சரவணகுமாருக்கு தாய் அனுசுயா தேவி மீது அளவு கடந்த பாசம் உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு அனுசுயாதேவி உடல்நல குறைவு காரணமாக இறந்தார். தாய் இறந்தது முதல் சோகத்தில் ஆழ்ந்த சரவணகுமார் தன் தாயின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினார். அதன்படி தாய்க்கு சொந்த ஊரில் கோவில் கட்ட முடிவு செய்தார்.
கட்டிட கலை நிபுணர் பாலகம் சஞ்சீவி, தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாண்டிதுரை, ஒடிசாவை சேர்ந்த கைவினைக் கலைஞர் சுரேஷ் ஆகியோருடன் தாய்க்கு ரூ.10 கோடி செலவில் பிரமாண்ட அளவில் கோவில் கட்டினார்.
பிரதான கோபுரம் 51 அடியும், கலசங்கள் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளன. கல்தூண்களில் பழங்கால வேலைப்பாடுகளுடன் கோவில் கட்டப்பட்டு உள்ளது.
அம்மாவின் அன்பின் மகத்துவத்தை விளக்கும் வகையில் கோவிலில் படங்களுடன் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.
அன்னையர் தினமான நேற்று கோவில் கருவறையில் தனது தாயின் சிலையை பிரதிஷ்டை செய்து கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்தார்.
சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானவர் கோவிலுக்கு சென்றனர்.
தாய்க்கு ரூ.10 கோடியில் கோவில் கட்டிய சரவணக்குமாரை பாராட்டி சென்றனர்.
- இண்டிகோ விமான பணிப்பெண் தன்னை நபிரா சம்சி என்று அறிமுகப்படுத்தி கொண்டு தொடங்குகிறார்.
- விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் தனது தாய் ராம் சம்சியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக கூறி அவரை அழைக்கிறார்.
அன்னையர் தினத்தையொட்டி இண்டிகோ விமான நிறுவனத்தால் பகிரப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதில், இண்டிகோ விமான பணிப்பெண் தன்னை நபிரா சம்சி என்று அறிமுகப்படுத்தி கொண்டு தொடங்குகிறார். பின்னர் அதே விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் தனது தாய் ராம் சம்சியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக கூறி அவரை அழைக்கிறார். தொடர்ந்து, தனது தாயார் 6 வருடங்கள் கேபின் குழுவினராக வேலை செய்வதை பார்த்து வருவதாகவும், அவர் எனக்கு ஒரு உத்வேகமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
அவருக்கு முன்னால் நானும் ஒரு விமான பணிப்பெண்ணாக நிற்பதில் பெருமை கொள்வதாக கூறி தனது அன்னைக்கு அன்பு முத்தம் கொடுக்கிறார். அப்போது அவரது தாயின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தோடுகிறது. நபிரா இந்த அறிவிப்பை முடித்ததும் பயணிகள் இருவரையும் ஆரவாரம் செய்து, கை தட்டி பாராட்டுகின்றனர். இந்த வீடியோ அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது. ஏராளமானோர் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்