search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth died"

    • முருகானந்தம் நேற்று இரவில் வேலை முடிந்ததும், மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
    • நாங்குநேரி- மூலைக்கரைப்பட்டி சாலையில் தென்னிமலை அருகே சென்ற போது, எதிரே வந்த கார் முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    களக்காடு:

    சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம் பாட்டை சேர்ந்த வர் முருகானந்தம் (வயது 36). இவர் வள்ளியூரில் உள்ள ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவில் வேலை முடிந்ததும், மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். நாங்கு நேரி-மூலைக்கரைப்பட்டி சாலையில் தென்னிமலை அருகே சென்ற போது, எதிரே வந்த கார் முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முருகானந்தம் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசா ரணை நடத்தினர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கலந்தபனையை சேர்ந்த ஸ்டான்லி (30) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் மாலையில் பாலமுருகன் குண்டாறு அணையில் குளிக்க சென்றார்.
    • அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சகதியில் அவரது கால் சிக்கிக்கொண்டது.

    நெல்லை:

    செங்கோட்டையை அடுத்த கண்ணுப்புளி மெட்டு பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் சேலம் மாவட்டம் காட்டு வளவு பகுதியை சேர்ந்த பாலமுருகன்(வயது 35) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் தனது மனைவி பிரியாவுடன் அங்கு தங்கியிருந்து தோட்டத்தை பராமரித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பாலமுருகன் குண்டாறு அணையில் குளிக்க சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சகதியில் அவரது கால் சிக்கிக்கொண்டது. உடனே அவர் காப்பாற்றும்படி கத்தி கூச்சலிட்டார். ஆனால் அவரால் சகதியில் இருந்து வெளியே மீள முடியாமல் பரிதாபமாக மூழ்கி இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று பாலமுருகன் உடலை போராடி மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்ேகாட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூலி தொழிலாளியான இசக்கிமுருகனுக்கு திருமணம் ஆகவில்லை.
    • இவர் தனிமையில் வாடியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் புலம்பி வந்துள்ளார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோவில் தெரு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இசக்கிமுத்து சென்னையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். தனது பெற்றோர் இறந்து விட்டதால் இசக்கிமுருகன் (33) வீட்டில் தனியே வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவர் தனிமையில் வாடியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் புலம்பி வந்துள்ளார்.

    இதனால் அதே பகுதியை சேர்ந்த இவரது பெரியப்பா மகனான முருகன் (44) என்பவர் இசக்கி முருகனை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இசக்கி முருகன் பின்னர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் நேற்று வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் முருகன் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு இசக்கி முருகன் பிணமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாரா யணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இசக்கிமுருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹமீது கான் தனது அக்காளுக்கு குழந்தை பிறந்ததை பார்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளார்.
    • மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் தூக்கி வீசப்பட்ட ஹமீது கான் தலையில் பலத்த காயமடைந்தார்

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுல்தான். கூலித்தொழிலாளி. இவரது மகன் ஹமீது கான் (வயது 21).

    இவர் தெலுங்கானா மாநிலத்தில் ஓட்டல் நடத்தி வரும் உறவினரிடம் வேலை பார்த்து வந்தார். இதையடுத்து அவரது அக்காளுக்கு குழந்தை பிறந்ததை பார்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளார். அதன் பின்னர் ஆலங்குளம் சென்று மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று தெற்குபட்டியை அடுத்த அருணாசலபேரி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹமீது கான் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் அகஸ்டின். இவர் நான்கு வழிச்சாலையில் பேரின்பபுரம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
    • வள்ளியூரை சேர்ந்தவர் ஜெகன். இவர் அப்பகுதியில் உள்ள தனது சகோதரரின் மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    வள்ளியூர்:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் அகஸ்டின்(வயது 22). இவர் நான்கு வழிச்சாலையில் பேரின்பபுரம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு செங்குளம்-தமிழாக்குறிச்சி சாலையில் ேமாட்டார் சைக்கிளில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அகஸ்டின் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டார்.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நள்ளிரவில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வள்ளியூர்

    வள்ளியூரை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகன் ஜெகன்(வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள தனது சகோதரரின் மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்றுக்கொண்டிருந்தார்.

    அப்போது வள்ளியூர் சந்தை எதிரே சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி சின்ராசு இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை சென்று விட்டு கடங்கநேரி வந்துள்ளனர்.
    • ஆய்க்குடி சுடலை என்பவர் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி சின்ராசு (வயது 27). இவர் தனது நண்பரான தென்காசி ஆய்க்குடி சாரதி (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை சென்று விட்டு கடங்கநேரி வந்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து ஆய்க்குடி செல்வதற்காக வி.கே.புதூர் சாலையில் சென்றபோது எதிரே ஆய்க்குடி சுடலை என்பவர் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் சின்ராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாரதி படுகாயம் அடைந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாரதி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஊத்துமலை போலீசார் வேன் டிரைவர் சுடலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    கோவை,

    நாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ராஜ் பெரிய நாயகம் (வயது 21). இவர் கோவை தென்னம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெசின் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார்.மேலும் பகுதி நேரமாக பிளம்மிங் மற்றும் எலக்ட்ரிசீயன் வேலையும் செய்து வந்தார்.சம்பவத்தன்று இவர் சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வாட்டர் ஹீட்டர் பொருத்துவதற்காக சென்றார். அப்போது திடீரென வெந்நீர் சென்ற குழாய் உடைந்து ராஜ் பெரிய நாயகத்தின் மீது வெந்நீர் கொட்டியது. இதில் அவரது முதுகு மார்பு போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராஜ் பெரிய நாயகம் பரிதாபமாக இறந்தார். 

    • விஷம் குடித்த வாலிபர் உயிரிழந்தார்
    • குடும்ப தகராறில் நடந்த விபரீதம்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள வடகாடு வடக்குபட்டியைச்சேர்ந்த ராஜேந்திரன் மகன் இந்திராஜி (வயது 27). சம்பவத்தன்று குடும்பத்தில் தாயாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவிரக்தியில் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையி ல் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இந்திரஜி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் வழக் குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயங்கி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • தற்கொலைக்கு முயன்றவர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி திருப்பதி நகரைச்சேர்ந்த நல்லையா மகன் அய்யப்பன் (வயது 35). இவர் ஜடிஐ முடித்து கடந்த நான்கு ஆண்டுகளாக. ஹைதராபாத்தில் உள்ள மத்திய அரசு துப்பாக்கி தொழிற்சாலை கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் நடைபெறவில்லை.கடந்த 9-ந் தேதி வீட்டிற்கு வந்த அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சிறு காயத்தடன் உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்கு பிறகு அய்யப்பனை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்கு பதிவு ெசய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நீலாங்கரை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரை அருகே உள்ள அக்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜின்னா (வயது 31). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று முகமது ஜின்னா மோட்டார் சைக்கிளில் அக்கரையில் இருந்து ஈஞ்சம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள தடுப் புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த முகமது ஜின்னா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து நீலாங்கரை போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முசிறி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    முசிறி:

    ஈரோடு மாவட்டம், வீரப்ப சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் கார்த்திக் (23). கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சமயபுரம் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். 

    அப்போது திருச்சி- நாமக்கல் சாலையில் முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தைகைப் பற்றி முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து காரைக்குடியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் வெங்கடாசலம் (51) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை அருகே பஸ்சில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் ராஜவீதி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34) இவர் டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்தார். சரவணன் தனது தந்தையாருமான குணசேகரன் என்பருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்டு ரெயில் மூலம் விழுப்புரம் வந்தார்.

    பின்னர் அங்கிருந்து. அரசு பஸ் ஒன்றில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே பஸ்ஸில் இருந்து இறங்க முயற்சி செய்த சரவணன் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறித்த சென்ற எடைக்கல் போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இது குறித்து எடைக்கல் போலீசார் அரசு பஸ் டிரைவர் கீழ்தனியாளம்பட்டு பகுதியை சேர்ந்த அசுவத்தாமன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றன.
    ×