search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abduction"

    • மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
    • தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 34). கணவரை பிரிந்த இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

    சமீபத்தில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டி ருந்த சந்தியா அந்த பகுதியில் இரவில் குழந்தையுடன் தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி தன் பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தையை திருடிய மர்ம நபர்கள் யார் என்பதை அறிய 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப்படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீ சார் வெளியிட்டுள்ளனர்.

    போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணியன் பாலச்சந்தர் தலைமையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை யினர் புகைப் படத்தை அடிப்படையாகக் கொண்டு 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    மேலும் புகைப்படத்தில் உள்ள நபர்களை யாரேனும் பார்த்தால் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • வழிப்பறியில் ஈடுபட ஆயுதங்களுடன் பதுங்கிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • திவாகரன், மாரிமுத்து, விஜய், சோலைசாமி, சக்தி முகேஷ், கார்த்திக் ராஜா என தெரிய வந்தது.

    மதுரை

    திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராணி மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். அப்போது வெயில் உகந்த அம்மன் கோவில் பின்புறம் பதுங்கியிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றது.

    உடனே போலீசார் விரட்டி சென்று 6 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது கத்தி, அரிவாள், மிளகாய்பொடி உள்ளிட்டவை வைத்தி ருந்தது தெரியவந்தது.

    அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் ருப்பரங்குன்றத்தை சேர்ந்த முருகன் மகன் திவாகரன், பரத் என்ற மாரிமுத்து, விஜய் (28), அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சோலைசாமி (19), பந்தல்குடி நிறைகுளத்தான் மகன் சக்தி முகேஷ் (21), கார்த்திக் ராஜா (25) என தெரிய வந்தது.

    6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தனியாக செல்லும் நபர்களை மிரட்டி இந்த கும்பல் பணம் பறிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    அதேபோல் விளாச்சேரி சுடுகாட்டு பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி யிருந்த சிவபிரியன், மதன், கார்த்திக், பாலாஜி, பாண்டீஸ்வரன் ஆகிய 5 பேரை திருநகர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம் தலைமை யிலான போலீசார் கைது செய்தனர்.

    கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது46). இவரது மகள் சித்ரா லட்சுமி (21). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். 

    சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த சித்ரா லட்சுமி திடீரென மாயமா னார். இதனால் பதட்டமடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் பலனில்லை. இதுகுறித்தும் முத்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.அதில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த எனது மகளை இந்த கிராமத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கடத்திச் சென்றதாக தெரிகிறது. 

    எனவே அவரிடம் இருந்து மகளை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.  இதன் அடிப்படையில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியையும், அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.
    சேலம் சின்னக்கடை வீதியில் மளிகைக் கடைக்காரர் மகன் கடத்தலில் சி.சி.டி.வி. காமிரா பதிவை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்  மூலாராம் .இவர் சேலம் சின்னக்கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (வயது 21). இவர் நேற்று கடையில் இருந்தபோது 6 பேர் கும்பல் இவரை காரில் தூக்கிப் போட்டு கடத்தி சென்றது.

    இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் மற்றும் அம்மாபேட்டை போலீசார், ஜயராமை கடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
    போதைப்பொருட்கள் கடத்தல் பிரச்சனையில் ஜெயராம் கடத்தப்பட்டதும்,  அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக  மர்ம கும்பல் ஜெயராமை கடத்தி சென்றுள்ளதும் தெரியவந்தது.

    இதற்கிடையே ஜெயராமை கடத்திச் சென்ற கும்பல் உருவம் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பதிவை  வைத்து தனிப்படை  போலீசார் தீவிரமாக அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    மேலும் தர்மபுரி, ஓசூர் பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
    • மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரை வரை தேடி வருகின்றனர்.

    கீழக்கரை

    திருப்புல்லாணி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து திருப்புல்லாணி கடற்கரை சோதனைச்சா வடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட னர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தினர். லாரி நிற்காமல் சென்றதால் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் லாரியை விரட்டினர். போலீசார் பின் தொடர்வதை அறிந்த டிரைவர் திருப்புல்லாணி நாடக மேடை அருகே லாரியை நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.

    லாரியை போலீசார் ஆய்வு செய்த போது 3யூனிட் மணல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லாரியை திருப்புல்லாணி போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி வந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்

    • மாணவி தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • குருமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த மாணவி பிளஸ்ப-1 படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி மாணவிக்கும், வாலிபருக்கும் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசி பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி மாணவி தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது வாலிபர் ஒருவர் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்பட்டது. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் புதுவைைய சேர்ந்த குருமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கரிமேடு போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் நூர் முகமது (வயது 18). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நூர் முகமது ரம்ஜான் விடு முறைக்காக, மதுரை பழங்காநத்தத்தில் வசிக்கும் மாமா-சித்திக் வீட்டுக்கு வந்திருந்தார். அதன் பிறகு அவர் பைபாஸ் ரோடு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் 2 பேர் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி நூர் முகமது வைத்திருந்த 'செல்போனை கொடு' என்று கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் அவரை கத்தியால் குத்தி காயப்படுத்தினர்.

    இதனை தொடர்ந்து அந்த கும்பல் நூர் முகமது விடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுபற்றி நூர் முகமது கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரது உருவங்கள் பதிவாகி இருந்தன. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட அருள்தாஸ்புரம் தவளை என்ற சரவணன் (22), கரிமேடு யோகானந்த சாமி மடம் தெரு, ஹனிபா மகன் சல்மான் அகமது (19) ஆகியோரை கைது செய்தனர்.

    • கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    ஆரப்பாளையம், மோதிலால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (48). இவர் சம்பவத்தன்று அந்தப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.2 ஆயிரம் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக நாகராஜ், கரிமேடு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறி செய்தது அருள்தாஸ்புரம் பழனிகுமார் மகன் சரவணன் என்ற தவளை சரவணன் (22), கரிமேடு அனிபா மகன் சல்மான் (19), தத்தனேரி களத்துப்பொட்டல் கேசவகுமார் மகன் பிரவீன்குமார் (22) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை ஆட்டப்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 63). இவர் ஆடு- மாடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது 2 ஆடுகள் திருடு போனது. இது தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் மேலூர், பனங்காடி கதிர வன் மகன் காசி விஸ்வநாதன் (23), ஜாபர் மகன் விகாஸ் (21) ஆகிய 2 பேர் ஆடு திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சசிகலா (வயது 35). இவருடைய மகள் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார்.
    • இவரை கடந்த 10-ந்தேதி முதல் காணவில்லை.

    கள்ளக்குறச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா (வயது 35). இவருடைய மகள் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கு தினமும் ஆத்தூர் சென்று வந்த நிலையில், இவரை கடந்த 10-ந்தேதி முதல் காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் இளவரசன் (19) என்பவர் மாணவியை கடத்திச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் மாணவியை கடத்தி சென்று தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவன் இளவரசனை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.  பின்னர் இளவரசன் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த மா ணவியை கள்ளக்குறிச்சி யில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    • போலீசார் மூலக்காடு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவர் பிடிபட்டார்

    கள்ளக்குறிச்சி:

       கள்ளக்குறிச்சி  மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் மற்றும் போலீசார் மூலக்காடு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவர் பிடிபட்டார். பின்னர் அவர் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது 2 லாரி டியூப்களில் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    விசாரனையில் தும்பராம்பட்டு பகுதியை சேர்ந்த தம்பிதுரை (வயது 22) என்பதும், தப்பி ஓடியவர் செல்வராஜ் என்பதும், 2 பேரும் விற்பனைக்காக சாராயத்தை கடத்தி வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து தம்பிதுரையை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும், 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செல்வராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள சிதம்பரப்பட்டியை சேர்ந்தவர் எபினேஸ்வர் (வயது 30). இவர் கடந்த மாதம் வேலை முடிந்து அவருடைய மோட்டார் சைக்கிளில் சிதம்பரப்பட்டி நோக்கி சென்றாா். ‌ புதுக்குடி அருகே சென்ற போது அவருக்கு பின் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் எபினேஸ்வரை வழிமறித்து கத்தியால் குத்தி அவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றனர். இதில் எபினேஸ்வர் குடல் சரிந்து படுகாயமடைந்தார்.

    இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் செங்கிப்பட்டி போலீசார் தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை கொண்டனர். பின்னர் அவர்களை செங்கிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை யில் அவர்கள் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதியை சேர்ந்த சுதாகரன் (21), தஞ்சை சேப்பன நாயக்கன்வாரியை சேர்ந்த இளம்பாரதி (22), தஞ்சையை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது.

    மேலும் இவர்கள் கடந்த மாதம் எபினேஸ்வரை கத்தியால் குத்தி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்ட்டனர்.
    • சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கொள்ளை கும்பலை அதிரடியாக பிடித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புகையிலை உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது வழிப்பறிக் கொள்ளை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் அதிகாலை முதலே மீன் வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மீன் வியாபாரிகள் அதிகளவில் விழுப்புரத்திற்கு வந்து மீன்களை வாங்கி விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது அதிகாலையில் மீன்களை வாங்க வரும் மீன் வியாபாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்களை மர்ம கும்பல் ஒன்று தாக்கி அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.

    மேலும் இந்த வழிப்பறி கொள்ளை கடந்த ஒரு மாதமாக விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள செஞ்சி அனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அரங்கேறியுள்ளது. இதனால் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் இரவில் அத்தியாவசிய பொருள் வாங்க வெளியில் வர பயந்து போய் வீட்டில் முடங்கியுள்ளனர். தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் இரவு முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் முக்கியமான பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் இந்த மர்ம கொள்ளை கும்பல் பதிவு எண் இல்லாத திருட்டு மோட்டார் சைக்கிளில் பொதுமக்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை எடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கொள்ளை கும்பலை அதிரடியாக பிடித்தனர்.

    இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் திருவண்ணாமலை மாவட்டம் சோமாட்சிபாடி பகுதியைச் சேர்ந்த சிவா என்கிற ராஜி (வயது 25), கலையரசன் (22), வீரமணி (20), செயின்ஷா (22), அருணாச்சலம் (25) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் திருவண்ணாமலை ஆரணி செஞ்சி போளூர் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×