search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Achievements"

    • தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளது.
    • தமிழ்நாட்டு மக்களால் போற்றிப் பாராட்டப்படுகின்றன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று 3 ஆண்டு நிறைவு பெற்று 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலத்துடன் பி.ஜே.பி., பணபலத்துடன் அ.தி.மு.க. வந்த போதிலும், அஞ்சாத சிங்கமாய்ச் சீறி எழுந்து, மக்களைச் சந்தித்து தமிழ்நாடு முழுவதும் சென்றார். வென்றார்.

    தமிழ்நாட்டு, மக்கள் நம் தளபதியின் தலைமையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டார்கள்.

    2021 சட்டமன்றத் தேர்தலில் கழகத்திற்கு 165 இடங்களைத் தந்து ஆட்சியை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்கள்.

    7.5.2021 அன்று காலை, கவர்னர் மாளிகையில் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" எனக்கூறி நிமிர்ந்த தலையுடன் உறுதி மொழிகள் ஏற்றுத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்றாம் முதலமைச்சராக-பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருக்குப் பின் முதல் முறையாகத் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

    முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், நேரே கோட்டைக்குச் சென்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவுடன் தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கி, "விடியல் பயணத் திட்டம்" கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.4,000/-வழங்கும் திட்டம், முதல்வரின் முகவரித்துறை உருவாக்கும் திட்டம், பால்விலை லிட்டருக்கு 3 குறைப்புத் திட்டம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 குறைப்புத் திட்டம் ஆகிய 5 கோப்புகளில் முதன் முதல் ஆணைகள் பிறப்பித்து, நிறைவேற்றி, "சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்" என்பதுடன், "சொல்லாததையும் செய்வோம்" எனக் கூறி மக்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய சாதனைகள் எல்லாம் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளது. இதனை ஒன்றிய அரசின் ஆய்வு நிறுவனங்களே உறுதிப்படுத்தியுள்ளன.

    உற்பத்தி பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்து தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளது.

    அதில் 80 முதல் 100 விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி செய்து தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்று கூறிப் பாராட்டியது.

    அதேபோல, கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் மற்றும் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையில்; கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று கூறியது.

    கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம்.

    அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு அரசை வெகுவாகப் பாராட்டியுள்ளது.

    குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது.

    ஜவுளித்துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், எலக்ட்ரானிக் துறை மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

    இப்படி ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே தமிழ்நாடு பெரும்பாலான முக்கியத் துறைகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, கோவை , தூத்துக்குடி ஆகிய இடங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் வாயிலாக மொத்தம் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஏறத்தாழ 30 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நடைபெற்று இதுவரை தொழில் வளர்ச்சி வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.

    ஆட்சிப்பொறுப்பேற்ற பின், 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள்திறந்துவைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

    இவைகள் அல்லாமல், கடந்த மூன்றாண்டுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிறைவேற்றியுள்ள திட்டங்கள் படைத்துள்ள சாதனைகள் எண்ணிலடங்காதவை.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடைமுறை படுத்தியுள்ள காலை உணவுத்திட்டத்தின் சிறப்புகளை, தெலுங்கானா மாநில அரசு அறிந்து நேரில் பார்வையிட்டு தெலுங்கானா மாநிலத்திலும் இந்த காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக கனடா நாட்டில் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் 2.4.2024 அன்று "கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

    இதே போல இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்ற மாநில அரசுகளையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாட்டை பின்பற்றி இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. வேறு பல மாநிலங்களில் இத்திட்டத்தினை நடைமுறை படுத்திட பரிசீலித்து வருகின்றன.

    இப்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாண்டுகளாகப் படைத்துவரும் சாதனைகள் தமிழ்நாட்டு மக்களால் போற்றிப் பாராட்டப்படுகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்களின் தலைவர்களும் முதல்-அமைச்சரின் திட்டங்களை அறிந்து வியந்து அவற்றைத் தத்தம் மாநிலங்களில் செயல்படுத்திடவும் முனைப்புடன் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இவையெல்லாம் சாதனைச் சிகரங்கள் பல படைத்த சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகழை இந்த புவி என்றும் பாராட்டிக்கொண்டே இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.
    • ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஊழல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திரமாநிலம் ராஜமகேந்திர வரம் அனக்கா பள்ளி ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.

    இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.

    நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலக அளவில் இந்தியாவின் புகழ் உயர்ந்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளக்கூடிய சாதனைகள்.

    நாங்கள் கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை கூறிதான் வாக்கு கேட்கிறோம். இந்திய மக்களுக்காக 10 வருடங்கள் உழைத்தோம். ஆந்திர மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றியுள்ளோம்.

    4 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமே கடந்த 2014-ம் ஆண்டு வரை இருந்தன. தற்போது அந்த நீளம் 8000 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை திட்டம் நிறைவடைந்துள்ளது. இது இரு மாநில மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் நடந்த மோசடிகள் தான் நம் நினைவுக்கு வருகின்றன. அவர்கள் 10 வருடங்களில் பல்வேறு மோசடிகளை செய்தார்கள். எந்திரங்களால் கூட எண்ண முடியாத அளவிற்கு பணத்தை குவித்து வைத்துக்கொண்டு அலறுகிறார்கள்.

    தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பண மலை ஒன்று சிக்கி உள்ளது. இதற்கு காங்கிரஸ் இளவரசர் பதில் சொல்ல வேண்டும். ஆந்திர மாநிலத்தில் என்.டி ராமராவ் ராமர் கதாபாத்திரத்தின் மூலம் வீடு வீடாக ராமரின் புகழை கொண்டு சென்றார்.

    அயோத்தியில் 400 ஆண்டுகால கனவை தற்போது நிறைவேற்றி உள்ளோம். காங்கிரஸ் தலைவர்கள் பக்தியுடன் கோவிலுக்கு சென்றால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

    ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஊழல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    சந்திரபாபு நாயுடு மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். ஆந்திர மக்களுக்கு மோடியின் உத்தரவாதம் சந்திரபாபு நாயுடுவின் தலைமை பவன் கல்யாணின் நம்பிக்கை இருக்கிறது.

    மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை எந்திர ஆட்சி அமைந்தால் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பணிகளும் விரைந்து முடிவடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.
    • கண்களை கட்டிக்கொண்டு கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வுகளை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன்- தேவிப் பிரியா தம்பதியின் மகள் பிரிஷா(வயது 14). இவர் 9- ம் வகுப்பு படித்து வரு கிறார்.

    இந்த மாணவி 2 வயதில் இருந்தே யோகாசனங்கள் கற்று இதுவரை 70 உலக சாதனைகளை படைத் துள்ளார். மேலும் 200-க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், விருதுகளையும் பெற்றுள்ளார்.

    உலகிலேயே இளம் வயதில் அதிக உலக சாதனை கள், யோகாசனங்கள், நீச்சல் மற்றும் கண்களைக் கட்டிக் கொண்டு பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.

    மேலும் இளம் வயதி லேயே 3 முனைவர் பட்டங் களையும் முதன் முறையாக இவர் பெற்றார். இளம் வயது யோகா ஆசிரியர் என்ற சான்றிதழை மத்திய அரசு இந்த மாணவிக்கு வழங்கி கவுரவித்துள்ளது .

    இந்த நிலையில் 70-வது உலக சாதனைகள் செய்துள்ள பிரிஷா தனது 100-வது சாதனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு இன்று கண்களை கட்டிக்கொண்டு 30 நிகழ்வுகளை செய்து தனது 100-வது உலக சாதனையை நிறைவு செய்துள்ளார்.

    30 சாதனைகள்

    பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி யில் நோபல் வேர்ல்டு ரெகார்ட் நிறுவனம் முன்பு மாணவ மாணவிகள் முன்னிலையில் 20 நொடிகளில் கண்களை கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட் களை அடையாளம் காணுதல், கண்களைக் கட்டிக் கொண்டு திரையில் தெரியும் ஆசனங்களை மிக வேகமாக செய்வது, கண்களை கட்டிக் கொண்டு மனித உடலில் கட்டப் பட்டுள்ள பலூன்களை உடைத்தல், மேலும் கண் களை கட்டிக்கொண்டு 20 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தில் காட்டும் சைகை களை அதிக எண்ணிக்கை யில் அடையாளம் காட்டுதல், கண்களைக் கட்டிக் கொண்டு அதிக தூரம் சைக்கிள் ஓட்டுதல், கண் களை கட்டிக்கொண்டு ஒரு கையால் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வு களை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

    • டாக்டர் பிரவீன் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார்.
    • பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தி.மு.க. திராவிட மாடல் அரசின் சாதனைகளின் முழக்கங்களுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிரின் மாபெரும் எழுச்சி பேரணி கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. இப் பேரணிக்கு லீமா அய்யப்பன் தலைமை தாங்கினார். டாக்டர் பிரவீன் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார்.

    இப்பேரணி கடலூர் ஜவான்பவன் சாலையில் இருந்து தொடங்கப்பட்டு தமிழக அரசின் சாதனைகளை முழக்கங்களோடு அண்ணா மேம்பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயன், ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பேரணியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வி.எஸ்.எல். குணசேகரன், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் கே.ஜி.எஸ் தினகரன், வக்கீல் சுந்தர், தொழிலதிபர் சித்ராலயா ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், தொழிலதிபர் உமா சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர்,மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், பாருக் அலி, கர்ணன் மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
    • விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார் வெண்கலப் பதக்கமும், மாணவிகள் பிரிவில் 6-ம் வகுப்பு மாணவி வேணுகா ஸ்ரீ வெங்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளனர்.

    நெல்லை:

    சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு பாளை அரசு அருங்காட்சி யகத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டியில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி மஹன்யா, 3-ம் வகுப்பு மாணவன் பிரணவ் கார்த்திகேயன் மற்றும் மஹிந்தேவ் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    நெல்லை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார் வெண்கலப் பதக்கமும், மாணவிகள் பிரிவில் 6-ம் வகுப்பு மாணவி வேணுகா ஸ்ரீ வெங்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளனர். நெல்லை பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் நடத்திய பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டியில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 11-ம் வகுப்பு மாணவி பெமினா ஷர்மி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன், தாளாளர் திருமாறன், முதல்வல் முருகவேல், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முக ராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • தமிழகம் விளையாட்டுத்துறையில் வியத்தகு சாதனைகளை புரிகிறது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கையில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி (காரைக்குடி), தமிழரசி(மானாமதுரை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் பெரிய கருப்பன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற 1638 விளை யாட்டு வீரர்-வீராங்கனை களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை களை வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில், அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடையும் வகையில், தமிழகத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணையர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, விளையாட்டுத்துறையில் வியத்தகு சாதனைகளை மேற்கொண்டு, 60 ஆண்டுகளாக செய்ய வேண்டிய வேலையை ஆறே மாதங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இத்துறையை மேம்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பணியில் மகத்தான சாதனை படைத்து வருகிறார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரத்தில் ரூ.9 லட்சம் மதிப்பில் சாத்தான்குளம் - உடன்குடி இணைப்பு சாலையில் அலங்கார தளக்கல் பதிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

    வெங்கட்ராமாமானு ஜபுரம் ஊராட்சி உதிரமாடன்குடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் கூடைப்பந்து விளையாட்டு மைதானம், மற்றும் ரூ.1.25 லட்சத்தில் புதிய சிறுமின்விசை நீர்த்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.நேசபுரத்தில் ரூ.4.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.

    நிறைவுற்ற இப்பணிகளை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். மேலும் உதிரமாடன்குடி யிருப்பில் ரூ.11.55 லட்சத்தில் புதிய அங்கன்வாடிக் கட்டிடம், கந்தபுரத்தில் ரூ. 5.50 லட்சத்தில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கான அடிக்கல்லையும் அமைச்சர் நட்டினார். 
    பின்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்கள் பணி செய்வதில் மகத்தான சாதனை படைத்து வருகிறார். எங்களை  போன்றவர்களிடம்குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு போன்ற அத்தியாவசிய பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று நாங்களும் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம், 

    இப்படிப்பட்ட முதல்வருக்கு நாம் எப்போதும் என்றும் ஆதரவாக இருக்கவேண்டும் என்று அமைச்சர் பேசினார். 
    இந்நிகழ்ச்சிக்கு உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவி பாலசரஸ்வதி, துணைத்தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. மாநில மாணவரணி துணைசெயலர் உமரிசங்கர், உடன்குடி பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், உடன் குடி கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியா பத்து ஊராட்சித் தலைவர் பாலமுருகன் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ராமஜெயம், ரவிராஜா, இளங்கோ, அலாவுதீன், ஜெயப்பிரகாஷ் உடன்குடி ஒன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் பாய்ஸ், அஜய், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.சிவசுப்பிரமணியன், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொருளாளர் நடராஜன், மாவட்ட காங்கிரஸ் கலை, இலக்கியப் பிரிவு தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    • சிவகங்கை அருகே தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன் நன்றி கூறினார்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் நாகனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காட்டுப்புலி சவுந்தர்ராஜன் வரவேற்று பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. தலைமை கழக பேச்சாளர் வி.பி. ராஜன் சிறப்புரை ஆற்றினார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் வனிதா கண்ணதாசன், சாந்தா கருப்பசாமி, அஜித்குமார், இலக்கிய அணி அரசு, முத்து, தொண்டரணி பிரபு, முருகேசன் குழந்தைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள். ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ்அரசு நன்றி கூறினார்.

    கொல்லங்குடி

    காளையார்கோயில் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் கொல்லங்குடியில் அவைத்தலைவர் சுப. தமிழரசன் தலைமையில் ஒன்றிய செயலாளர் ஆர்.எம். கென்னடி முன்னி லையில் அரசின் அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், தலைமைக்கழக பேச்சாளர் வி.பி.ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    இதில் நிர்வாகிகள் முத்தூர் கருப்பையா, கண்ணாத்தாள், தென்னரசு, செல்லப் பாண்டி, சுப.கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி சுசீந்திரன் சந்திரன், நேரு, சதீஷ்குமார், அசோக், ஜெயராஜ், மிலிட்டரி பிரபு, ஆகாஷ், சீனிவாசன், பாலமுருகன், முருகன், முக்கையா, முருகன், நைனா, நாட்டரசன்கோட்டை பேருர் செயலாளர் ஜெயரா மன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன் நன்றி கூறினார்.

    • இளைஞர்களின் சாதனை நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமையும் என ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் பேசினார்.
    • போட்டித் தேர்வு, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சி என பல்வேறு போட்டிகள் நடந்தன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் தொழில்நுட்ப கல்லூரியில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் மாவட்ட நேரு யுவ கேந்திரா, செய்யது அம்மாள் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து இளையோர் திருவிழாவை நடத்தியது.

    கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார் தலைமை தாங்கி இளையோர்களுக்கான பல்வேறு போட்டிகளை ெதாடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    கல்லூரியில் படிக்கும் போது சந்தோஷமாக இருக்கும். அதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் இருக்கும் என்று நினைத்து விடக்கூடாது. படித்து முடித்து வெளியே வந்து ஒரு இலக்கை பெறுவதற்கு நாம் படும் சிரமத்தை அளவிட முடியாது. அதனால் தான் படிக்கும்போேத ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் லட்சியம் என்ன? என்று திட்டமிட்டு செயல்பட்டு படித்தால் அந்த வெற்றி எளிதாக கிடைத்துவிடும்.

    இதே போல் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு செயல்பட வேண்டும். இளைஞர்களாகிய நீங்கள் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. வெற்றி என்னும் இலக்கு உங்கள் அருகாமையில் உள்ளது.

    படிக்கும் காலத்தில் எதிர்காலத்தின் திட்டத்தை நினைத்து அதற்கேற்ப படித்து சாதனை படைக்க வேண்டும். உங்களுடைய ஒவ்வொருவரின் சாதனை தான் நாட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இளைஞர்களுக்கான போட்டித் தேர்வு, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சி என பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்று, நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் நேரு யுவகேந்திர ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், முகமது சதக் தஸ்தகீர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம், செய்யது அம்மாள் கல்லூரி வள்ளி விநாயகம், பரமேசுவரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 29 பதக்கங்களை வென்று மேலூர் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் ஜூடோ சங்கம் சார்பில் காரியாபட்டி தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் மினி சப் ஜூனியர் சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் மினி ஜூனியர் பிரிவில் மேலூர் ஜாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் ருகினா, லத்யஸ்ரீ, சந்தோஷ், ரஞ்சன், தயாநிதி ஆகியோர் தங்கப்பதக்கமும், ரோஹித், நிஷா, சோபியா ஆகியோர் வெள்ளி பதக்கமும் பெற்றனர். யோசினி ஸ்ரீ, கிருத்திகா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    சப் ஜூனியர் பிரிவில் கோபிகாஸ்ரீ, ஜனனி, நிஷா, நகுல், கஜேஸ்வரன், ஹரிஷ், மதுரேஸ், நிதிஷ்குமார் ஆகியோர் தங்கம் வென்றனர். கேடட் பிரிவில் அர்ச்சனாதேவி, பவித்ரன் ஆகியோர் தங்கம் வென்றனர்.

    ஜூனியர் பிரிவில் முரளி கிருஷ்ணன் தங்கப் பதக்கமும், சந்துரு வெள்ளி பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்றனர்.சீனியர் பிரிவில் தமிழ் தேவா தங்கப்பதக்கமும்,

    மினி சப் ஜூனியர் பிரிவில் மேலூர் சுப்பிரமணிய பாரதி பள்ளி மாணவர் போதிஸ்வரன் தங்கம் பெற்றார். கேடட் பிரிவில் மதுரை சேதுபதி பள்ளி மாணவன் சுதேசன் தங்கம் வென்றான். கேடட் பிரிவில் தனியாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் ராகுல் வெண்கல பதக்கமும், கேடட் பிரிவில் மேலூர் சி.இ.ஒ.ஏ.பள்ளி மாணவன் அகிலா வெள்ளி பதக்கம் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை மதுரை மாவட்ட ஜூடோ சங்கத் தலைவர் சாலுமான், செயலாளர் புஷ்பநாதன், பயிற்சியாளர் பிரசன்னா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

    • இந்த தேர்வில் மாணவிகள் எந்திரா, ஷிவானி கிருத்திகாவும் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
    • சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன், முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் சி.பி.எஸ்.இ.

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ெதாடர்ந்து 11-வது ஆண்டாக மாணவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இந்த தேர்வில் மாணவிகள் எந்திரா, ஷிவானி கிருத்திகாவும் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

    இதில் எந்திரா தமிழ், கணிதம், அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், ஷிவானி கிருத்திகா தமிழ், கணித பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதேபோல் மாணவி ஸ்ரேயா மதுபாலா 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    பர்ஹின், நித்யஸ்ரீ, ஸ்ருதி ஜெனி, ஜீனஸ் ஜெயந்தி ஆகிய 4 பேரும் 492 மதிப்பெண்கள் பெற்றுள்ள னர். இவர்கள் 4 பேரும் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், சமூக அறிவியலில் நித்ய ஸ்ரீ 100க்கு 100-ம், அறிவியல் பாடத்தில் ஸ்ருதி ஜெனியும், கணிதத்தில் பர்ஹின் 100 மதிப்பெண்களும், பெற்றுள்ளனர்.

    பள்ளி அளவில் தமிழில் 36 மாணவர்களும், கணித பாடத்தில் 9 மாணவர்களும், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 2 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    ஆங்கிலத்தில் 15 மாணவர்களும், இந்தியில் ஒரு மாணவனும் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 120 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

    பாடவாரியாக தமிழில் 67 பேரும், ஆங்கிலத்தில் 102 பேரும், கணிதத்தில் 103 பேரும், அறிவியலில் 108 பேரும், சமூக அறிவியலில் 62 பேரும், இந்தியில் 12 பேரும் ஏ1 தரத்தை பெற்றுள்ளனர்.

    சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன், முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    • புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால் சாதனை படைக்கலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    • லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள நகர்மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வரும் 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 5-வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ள இந்த புத்தகத் திருவிழாவில் 80 அரங்ககளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.

    இந்த புத்தகத் திருவிழா குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நேற்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை புத்தக வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 1976 பள்ளிகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட கலை அறிவியல், பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரிகளிலும், 92 நுலகங்களிலும் நேற்று காலை 11.30 மணியிலிருந்து 12.30 வரை ஒரு மணி நேரம் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் தனக்குப் பிடித்த புத்தகங்களை வாசித்தனர்.

    புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, பொது அறிவு வளர வேண்டுமானால் மாணவர்கள் பாடத்திட்டத்தைத் தாண்டிய புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். நீங்கள் உங்களுக்குப் பிடித்த எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் வாசிக்கலாம். சிறிய வயதில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக வளராலம். என்றார்.

    ×