என் மலர்
நீங்கள் தேடியது "affair"
- திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
போச்சம்பள்ளியில் அரசு பள்ளி வளாகத்தில் மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், கள்ளக்காதலி வேறுநபருடன் பழகியதால் அவர் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் இருமத்தூரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் வெற்றிவேல் (வயது32).
கட்டிட மேஸ்திரியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் வேலைக்காக தனது உறவினரான தருமபுரியைச் சேர்ந்த இளம்பெண்ணை சேர்த்து கொண்டார்.
அவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் வெற்றிவேலும், அவரது உறவினர் பெண்ணும் ஒன்றாக வேலைக்கு செல்வதால் அடிக்கடி பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளாடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதன்காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஜம்புக்குட்டப்பட்டி பகுதியில் பழனியாண்டவர் கோவில் நகரில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த இளம்பெண் அடிக்கடி செல்போனில் வேறு வாலிபருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வெற்றிவேல் அந்த பெண்ணிடம் சென்று எதற்காக வேறுநபருடன் செல்போனில் பேசி வருகிறாய் என்று தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட வெற்றிவேல் இன்று அதிகாலை தான் வசித்து வந்த பகுதியின் அருகே அரசு தொடக்க பள்ளி வளாகத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து இன்று காலை விடிந்ததும் அந்த வழியாக சென்றவர்கள் மரத்தில் வெற்றிவேல் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொது மக்கள் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த வெற்றிவேலின் உடலை மீட்க முயன்றனர். அப்போது வெற்றிவேல் உயரமான மரத்தில் தூக்குப்போட்டு கொண்டதால் உடலை மீட்க சிக்கல் ஏற்பட்டதால் போலீசார் உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தில் பிணமாக கிடந்த வெற்றிவேலின் உடலை கயிறு மூலம் கீழே இறக்கினர். பின்னர் போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தற்கொலை சம்பவம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலி வேறு நபருடன் பழகியதால் கட்டிட மேஸ்திரியான வெற்றிவேல் அரசு பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புல்லட் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.
- மனைவிக்கும் சின்னராசுவுக்கும் இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு சின்னராசுவின் மனைவி கலைச்செல்வி நோய் வாய்ப்பட்டு இறந்தார்.
இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த புல்லட் ராஜா என்கிற நளராஜா (41) என்பவரின் மனைவி கிருஷ்ணவேனியுடன் சின்னராசுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நளராஜா கடந்த ஜனவரி மாதம் காந்தி நகரைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சதீஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இவர் ஜெயிலில் இருந்ததால் சின்னராசுவும், கிருஷ்ணவேணியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். கண்டிக்கவோ, கேள்வி கேட்கவோ யாரும் இல்லை என்ற தைரியத்தில் கள்ளக்காதல் ஜோடி கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் புல்லட் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் மனைவிக்கும் சின்னராசுவுக்கும் இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்தார்.
இருந்தபோதிலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சின்னராசு, கிருஷ்ணவேணியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இதை அடுத்து புல்லட் ராஜாவும் அவர்களை பின்தொடர்ந்து சமயபுரம் சென்றார். பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவில் முடி காணிக்கை மண்டபம் அருகே அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சின்னராசுவை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றார். இதில் பலத்த காயம் அடைந்த சின்னராசு துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய புல்லட் ராஜாவை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகாமையில் வைத்து அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் புல்லட் ராஜா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், நான் ஜெயிலில் இருக்கும்போதே என் மனைவியுடன் சின்னராசு கள்ளத்தொடர்பு வைத்திருந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் ஜாமினில் வந்த பின்னர் இருவரையும் கண்டித்து பார்த்தேன். ஆனால் என்னை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
இது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் கோவில் அருகாமையில் வைத்தும் அவர்களை கண்டித்தேன். அப்போதும் சின்னராசு என் பேச்சைக் கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை குத்தி கொலை செய்தேன் எனக் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள புல்லட் ராஜாவை இன்று மாலைக்குள் திருச்சி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் கைதாகி உள்ள புல்லட் ராஜா மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார்.
கோவை:
கோவை மலுமச்சம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 29 வயது தேங்காய் வியாபாரி. இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன் தேங்காய் வியாபாரிக்கு அவரது மனைவியின் தங்கையான திருமணமாகாத இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக தேங்காய் வியாபாரியின் மனைவிக்கு தெரியவந்தது.
அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார். எனவே அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷத்தை கொடுத்து தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி ஆன்லைன் மூலமாக தனது மனைவியை கொல்வதற்கு விஷத்தை வாங்கி உள்ளார். பின்னர் அதனை வீட்டில் மறைத்து வைத்தார்.
இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து அவரது மனைவி மாயமான தனது கணவர் மற்றும் தங்கையை கண்டுபிடித்து தரும்படி செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியின் தங்கையுடன் ஓட்டம் பிடித்த தேங்காய் வியாபாரியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் 2 பேரும் மதுரை ஜெய்ஹிந்புரத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போது போலீசார் மனைவியின் தங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த தேங்காய் வியாபாரியை பிடித்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
- நள்ளிரவு ஆகியும் பாண்டியம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மதுரை:
மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலையார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அவருக்கும், அதே மில்லில் வேலை பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. வீட்டினுள் பார்த்தபோது பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த செல்வத்தை காணவில்லை.
அவர் தான் பாண்டியம்மாளை கொன்றுவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் பாண்டியம்மாளை கொன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்டபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொன்று விட்டதாகவும் செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜேக்கப் ஆனந்தராஜ் சொந்தமாக வீடுகள் கட்டி பின்னர் அதனை விற்கும் தொழில் செய்து வந்தார். டவுனிலும் வீடு கட்டி வந்தார்.
- ஜான்சி அளித்த புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேக்கப் ஆனந்தராஜை தேடி வந்தனர்.
நெல்லை:
நெல்லை பழைய பேட்டையை அடுத்த அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்தராஜ்(வயது 63). கட்டிட காண்டிராக்டர்.
கடந்த 22-ந்தேதி காலை ஜேக்கப் ஆனந்தராஜ் டவுன் பகுதியில் நடைபெற்று வந்த கட்டிட பணிகளை பார்வையிடுவதற்காக காரில் புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரது செல்போன் 'சுவிட்ச்-ஆப்' ஆகியிருந்தது.
இதுகுறித்து அவரது மகள் ஜான்சி அளித்த புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேக்கப் ஆனந்தராஜை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் குளக்கரையில் அவர் கொலை செய்யப்பட்டு, உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி நடத்திய விசாரணையில், பேட்டை நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த தேவி(32) என்பவரும், அவரது கள்ளக்காதலனான சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் ஜேக்கப்பும் சேர்ந்து ஜேக்கப் ஆனந்தராஜை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தேவியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலைக்கான காரணம் குறித்து தேவி போலீசாரிடம் கூறியதாவது:-
ஜேக்கப் ஆனந்தராஜ் சொந்தமாக வீடுகள் கட்டி பின்னர் அதனை விற்கும் தொழில் செய்து வந்தார். டவுனிலும் வீடு கட்டி வந்தார். அப்போது அவருக்கு எனது தாயுடன் பழக்கம் ஏற்பட்டது. எனது தாய் மூலம் கிடைத்த அறிமுகத்தால் ஜேக்கப் ஆனந்தராஜ் என்னிடம் நெருங்கி பழகினார்.
நான் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஜேக்கப் ஆனந்தராஜின் அறிமுகம் கிடைத்ததால் 2 பேரும் நெருக்கமாக பழகி வந்தோம். நாங்கள் 2 பேரும் அடிக்கடி காரில் வெளியூர்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தோம்.
எனக்கு ஏற்கனவே சங்கரன்கோவில் அருகே சம்சிகாபுரத்தை சேர்ந்த பிரின்ஸ் ஜேக்கப்புடன் தொடர்பு இருந்தது. அவரும் அடிக்கடி எனது வீட்டுக்கு வந்து செல்வார். இந்த விஷயம் ஜேக்கப் ஆனந்தராஜிக்கு தெரியாது.
கடந்த 22-ந்தேதி பிரின்ஸ் ஜேக்கப்பும், நானும் எனது வீட்டில் உல்லாசமாக இருந்தோம். அப்போது அங்கு ஜேக்கப் ஆனந்தராஜ் திடீரென வந்தார். அவர் என்னை உல்லாசத்திற்கு அழைத்ததால், பிரின்ஸ் ஜேக்கப்புக்கு கோபம் வந்தது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே பிரின்ஸ் ஜேக்கப் ஆத்திரத்தில் ஜேக்கப் ஆனந்தராஜை மிதித்து கீழே தள்ளினார். நான் அவரது கைகளை பிடித்து கொண்டேன். பின்னர் பிரின்ஸ் ஜேக்கப் அங்கு கிடந்த நைலான் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி கட்டிலுக்கு அடியில் வைத்தோம். மறுநாள் அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் பேட்டை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள குளக்கரையில் அவரது உடலை மொபட்டில் எடுத்து சென்று வீசினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து தேவி கூறியவற்றை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கடந்த 19-ந்தேதி 2 வயதான குழந்தை தினேஷ் அங்குள்ள அண்டா தண்ணீரில் திடீரென்று பிணமாக மிதந்தான்.
- தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரித்தபோது, தினேஷ் அண்டாவுக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாக அனிதா கூறியுள்ளார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தை அடுத்த முண்டுவேலம்பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 22). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அனிதா (20) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதனால் அனிதா கர்ப்பமானார்.
அதன்பின்னர் அனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது அனிதாவுக்கு வயது 17 என்பதால் போலீசார் விசாரித்து மோகன்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தை பிறந்த பின்னர் அந்த குழந்தைக்கு தினேஷ் என்று பெயர் வைத்து அனிதா வளர்த்து வந்தார்.
கடந்த 19-ந்தேதி 2 வயதான குழந்தை தினேஷ் அங்குள்ள அண்டா தண்ணீரில் திடீரென்று பிணமாக மிதந்தான். தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரித்தபோது, தினேஷ் அண்டாவுக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாக அனிதா கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் குழந்தை தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அனிதா குடியிருந்த வீட்டின் அருகில் வசித்த ஒருவர், குழந்தை தினேஷ் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அனிதாவுக்கும், அவளுடைய கள்ளக்காதலன் மோகன்ராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் புகார் கொடுத்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது (பொறுப்பு) அனிதாவையும், கள்ளக்காதலன் மோகன்ராஜையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தார். விசாரணையில் 2பேரும் சேர்ந்து குழந்தை தினேசை கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் குழந்தையை கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-
மோகன்ராஜூடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அனிதா கர்ப்பமான நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தினேஷ் என்று பெயர் வைத்து அனிதா வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் தனது குழந்தையுடன் அடிக்கடி அனிதா உடுமலை பகுதிக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவருடன் அனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. அதன்பின்னர் அனிதா, அவரிடம் தனக்கு குழந்தை இருப்பதை கூறி அவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் அனிதா தனது குழந்தை தினேசுடன் உடுமலையில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அனிதா 2-வதாக கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து பிரவசத்திற்காக முண்டுவேலம்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் அவர் உடுமலை போகாமல் முண்டுவேலம்பட்டியில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போது மறுபடியும் தனது காதலன் மோகன்ராஜூடன் அனிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டு ஒன்றாக இருந்துள்ளனர்.
இந்தநிலையில் மோகன்ராஜ் மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் அனிதாவும், மோகன்ராஜூம் அச்சத்தில் இருந்துள்ளனர். குழந்தை தினேசிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து, குழந்தையை கொல்ல அனிதாவும், மோகன்ராஜூம் முடிவு செய்துள்ளனர். அந்த திட்டத்தை நிறைவேற்ற கள்ளக்காதலன் மோகன்ராஜை தான் தங்கி இருந்த வீட்டிற்கு அனிதா வரவழைத்துள்ளார். அங்கு அவர் வந்ததும் குழந்தை தினேசை கழுத்தை நெரித்து கொன்று, உடலை அண்டாவுக்குள் போட்டு விட்டு, குழந்தை அண்டாவில் தவறி விழுந்து இறந்ததாக நாடகம் ஆடியது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அனிதா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்ததுடன், தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சந்தேகத்தின் பேரில் ஜோதியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதியையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், தகராபு வலசை, எம்.பி.டி காலனியை சேர்ந்தவர் ஜோதி. இவருக்கும் பீமிலி மண்டலம், வேலந்த பேட்டையை சேர்ந்த பைடி ராஜு (வயது 35) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. பைடி ராஜு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.
திருமணத்திற்கு முன்பு ஜோதிக்கும், வாச வாணி பாலம் பகுதியை சேர்ந்த சுரு ராஜு என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் ஜோதி தனது காதலனுடன் பழகி வந்துள்ளார்.
இருவரும் தினமும் சந்தித்துக் கொள்வதற்காக விசா நகரில் வாடகைக்கு வீடு எடுத்தனர். ஜோதி விசாகப்பட்டினத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தூய்மை பணியாளர் பணி கிடைத்துள்ளதாக கூறி தினமும் காலை காதலன் வீட்டிற்கு சென்று இரவு வீடு திரும்புவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்.
கடந்த 6 மாத காலமாக ஜோதி தன்னுடைய காதலனுடன் இருந்து வந்தார். இவர்களது விவகாரம் கணவர் பைடி ராஜுக்கு தெரியவந்தது. அவர் கள்ளக்காதலை கண்டித்தார்.
இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு நடந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட ஜோதி முடிவு செய்தார். உணவில் அதிக அளவு தூக்க மாத்திரையை கலந்து கணவருக்கு கொடுத்தார்.
தூக்க மாத்திரை கலந்த உணவை சாப்பிட்ட பைடி ராஜு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது தனது கள்ளக்காதலனுக்கு போன் செய்த ஜோதி அவரை வரவழைத்தார். இருவரும் சேர்ந்து பைடிராஜுவை கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து கணவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பைடி ராஜு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரும் சேர்ந்து பைடி ராஜுவின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
இந்த நிலையில் கணவர் திடீரென காணாமல் போனதாக கூறி பீமிலி போலீசில் ஜோதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஜோதி சிபிஐ அலுவலகத்தில் வேலை செய்யவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.
சந்தேகத்தின் பேரில் ஜோதியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதியையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.
- குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார்.
- ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆலூரைச் சேர்ந்தவர் சக்தி (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கட்டிட பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார். இவரது மனைவி நந்தினி (25).
இவர்களுக்கு பிரவீன் (6), ஜெகநாதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் பிரவீனை ஓசூர் அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நந்தினி சேர்த்து விட்டு குழந்தை ஜெகநாதனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார். ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது பேரன் சாவில் சந்தேகம் உள்ளதாக நந்தினியின் தாயார் வள்ளி அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நந்தினியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலன் தனது மகனை கொன்றதை நந்தினி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து நந்தினியின் கள்ளக்காதலனான ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
கணவர் இறந்த பிறகு நந்தினி 2 குழந்தைகளுடன் ஓசூர் தேர்பேட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவளுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி நந்தினியுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். கடந்த மாதம் 6-ந் தேதி நந்தினி வீட்டிற்கு சென்று அவளுடன் உல்லாசமாக இருந்தேன்.
குழந்தை எங்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்தது. அதனால் ஆத்திரத்தில் நான் பீர்பாட்டிலால் குழந்தையின் தலையில் தாக்கினேன். இதில் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஒரு நாள் கழித்து குழந்தையை ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நந்தினி சேர்த்தாள். அங்கு குழந்தை படியில் இருந்து விழுந்ததில் காயம் அடைந்ததாக கூறி நாடகமாடினார். பின்னர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை 22-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆனது. அங்கிருந்து வீட்டிற்கு வந்த குழந்தை கடந்த 25-ந் தேதி காலை திடீரென இறந்து விட்டது. பின்னர் உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் நாங்கள் 2 பேரும் புதைத்து விட்டோம். நந்தினியின் தாய் கொடுத்த புகாரால் நான் சிக்கி கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
- போலீசார் விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக்காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து கொல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார்.
- சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மந்தாரக்குப்பம்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.
அவரது மனைவி சங்கீதா (வயது 34). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். லாரி டிரைவராக உள்ள வெங்கடேசன் மாதத்துக்கு 3 முறை மட்டும் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
எனவே சங்கீதா குள்ளஞ்சாவடி அருகே தனது தாயார் ஊரான தோப்புக்கொள்ளை கிராமத்துக்கு கூலிவேலைக்கு தினமும் பஸ்சில் சென்றுவருவார். அப்போது சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
எனவே 2 பேரும் ஆட்டோவில் அடிக்கடி சென்று தனிமையில் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்த விவகாரம் சங்கீதாவின் கணவர் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார்.
அதன் பின்னர் சங்கீதா ஆட்டோ டிரைவர் சண்முகத்துடன் செல்வதை நிறுத்திவிட்டார். என்றாலும் செல்போனில் அடிக்கடி பேசிவந்துள்ளனர். இந்த விசயமும் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. இதனை அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கணவன் வெங்கடேசன் வீட்டில் இருக்கும் நேரத்தில் சங்கீதா தனது கள்ளக்காதலன் சண்முகத்திடம் மதுவாங்கிவர கூறியுள்ளார். அதன்படி அவர் மதுவாங்கி வந்தார்.
அப்போது சண்முகம் மறைந்திருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து மதுவில் சங்கீதா கலந்தார். இந்த மதுவை தனது கணவர் வெங்கடேசனுக்கு கொடுத்தார். பாசத்துடன் மனைவி கொடுத்த மதுவை வெங்கடேசன் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெங்கடேசனை தூக்கிகொண்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வெங்கடேசன் நிலைமை மோசமானது. எனவே உடனடியாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சங்கீதா மீது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் உறவினர் கந்தன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சங்கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் சண்முகம் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக்காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து கொல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- திருமணமான பிறகு கைக்குழந்தையுடன் ராகிணி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வாழ்ந்து வந்ததை அவரது வீட்டார் கவுரவ பிரச்சினையாக கருதியுள்ளனர்.
- கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் மேற்பார்வையில் புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
செங்குன்றம்:
புழல் விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுதா சந்தர். 22 வயதான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராகிணி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.
ஆனால் ராகிணியின் வீட்டினர் சுதாசந்தருக்கு அவரை திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்ற வாலிபருக்கும் ராகிணிக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது.
இதன் பின்னர் ராகிணிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு ராகிணியின் காதல் விவகாரம் வசந்துக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனைவி ராகிணியிடம் குழந்தையின் பிறப்பில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ராகிணி, கணவர் வசந்தை பிரிந்து காதலன் சுதாசந்தருடன் சென்று விட்டார். போகும் போது கைக் குழந்தையையும் தூக்கிச் சென்று விட்டார்.
இது தொடர்பாக ராகிணியிடம் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் கணவர் வசந்துடன் வாழ பிடிக்கவில்லை என்றும், காதலன் சுதாசந்தருடனேயே சென்று விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். இதன் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இருப்பினும் சுதாசந்தர், மனைவியை அபகரித்துச் சென்று விட்டதாக வசந்த் கருதினார்.
இந்த நிலையில் நேற்று இரவு புழல் விநாயகபுரம் கல்பாளையம் அருகே சுதா சந்தரும், ராகிணியும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த கும்பல் இவர்களை வழி மறித்து மோட்டார் சைக்கிளை கீழே இடித்து தள்ளியது. இதில் கீழே விழுந்த சுதாசந்தரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சுதாசந்தர் துடிதுடித்து பலியானார்.
கண் இமைக்கும் நேரத்தில் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு சுதாசந்தரை தீர்த்துக் கட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது காதலன் சுதாசந்தரின் உடலை பார்த்து ராகிணி கதறி அழுது கொண்டிருந்தார்.
அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ராகிணி, கண்ணீர் மல்க, காதலன் சுதா சந்தரை தனது குடும்பத்தினரும், கணவரும் சேர்ந்தே தீர்த்துக் கட்டியதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
திருமணமான பிறகு கைக்குழந்தையுடன் ராகிணி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வாழ்ந்து வந்ததை அவரது வீட்டார் கவுரவ பிரச்சினையாக கருதியுள்ளனர். அதே நேரத்தில் கணவர் வசந்துக்கும் இது மானப் பிரச்சினையாக மாறி உள்ளது. இதனால் வசந்த் மாமியார் வீட்டினருடன் சேர்ந்து சுதாசந்தரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினர். இதன்படி சுதாசந்தரும் ராகிணியும் வெளியில் செல்லும் இடங்களை இவர்கள் கூட்டாக கண்காணித்து உள்ளனர்.
நேற்று இரவும் இருவரையும் பின் தொடர்ந்து சென்றனர். அப்போதுதான் புழல் விநாயகபுரம் பகுதியில் வைத்து சுதாசுந்தரை வெட்டிக்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
கணவர் வசந்த், தனது தாய், அண்ணன் மற்றும் உறவினர்கள் என 5 பேர் சேர்ந்து சுதாசந்தரை தீர்த்துக் கட்டியதாக ராகிணி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் மேற்பார்வையில் புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
- கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புகாரின் பேரில் ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகர்கோவில்:
அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் நிலப்பாறை திருமூலநகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 45). இவரது மனைவி மேரிசைலஜா 40 இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
ஜார்ஜ் கொத்தனார் வேலை செய்து வந்தார். அவருடன் வேலை செய்து வரும் பெண் ஒருவருக்கும் ஜார்ஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் மேரிசைலஜாவிற்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கணவரை கண்டித்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மேரி சைலஜா வீட்டில் இருந்தார்.
அப்போது வீட்டிற்கு வந்த ஜார்ஜிடம் இனி அந்த பெண்ணுடன் தொடர்பு வைக்கக்கூடாது என்று கூறி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ் மனைவி மேரி சைலஜாவை சரமாரியாக தாக்கினார். இதில் மேரி சைலஜா படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மேரிசைலஜாவின் தாயார் ராஜம் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த மேரி சைலஜா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது. போலீசார் ஜார்ஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேரி சைலஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுரேசின் நண்பரான மணிமாறனை தனது வலையில் விழவைத்த கருப்புச்சாமி மதுபாட்டிலில் ஊசிமூலம் விஷம் ஏற்றியுள்ளார்.
- விஷம் ஏற்றிய மதுபாட்டில் ஒன்றையும், விஷம் இல்லாத மதுபாட்டில் ஒன்றையும் மணிமாறனிடம் கொடுத்துள்ளார்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள பூலாம்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மகேஸ்வரி (44). கணவர் இறந்துவிட்ட நிலையில் மகேஸ்வரி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சுரேஷ் (39) என்பவருடன் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.
இவர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் மகேஸ்வரியின் தம்பி கருப்புச்சாமி (36) என்பவர் தனது சகோதரியிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். சுரேஷையும் தனியாக அழைத்து இனிமேல் தனது அக்காவை பார்க்க வரவேண்டாம் என கண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர்கள் கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது.
இதனையடுத்து சுரேஷை கொலை செய்ய கருப்புச்சாமி முடிவு செய்தார். மது பழக்கம் கொண்ட சுரேசுக்கு விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்ய முடிவு செய்தார். ஆனால் தான் அழைத்தால் சுரேஷ் வரமாட்டார் என நினைத்து அவரது நண்பரான மணிமாறன் (25) என்பவரை உதவிக்கு அழைத்தார்.
சுரேசுக்கு விஷம் கலந்த மதுவை கொடுக்குமாறு மணிமாறனிடம் கருப்புச்சாமி கூறினார். அதன்படி கடந்த 3ம் தேதி மதுகுடித்து பின்னர் வாந்தி எடுத்த சுரேஷ் பழனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மதுவில் விஷம் கலந்திருந்தது குறித்து டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த மகேஸ்வரி தனது காதலன் இறப்பில் மர்மம் இருப்பதாக கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சுரேசின் நண்பரான மணிமாறனை தனது வலையில் விழவைத்த கருப்புச்சாமி மதுபாட்டிலில் ஊசிமூலம் விஷம் ஏற்றியுள்ளார். விஷம் ஏற்றிய மதுபாட்டில் ஒன்றையும், விஷம் இல்லாத மதுபாட்டில் ஒன்றையும் மணிமாறனிடம் கொடுத்துள்ளார். விஷம் கலந்த மதுபாட்டிலை சுரேசுக்கு கொடுத்துவிட்டு விஷம் இல்லாத மதுவை தான் குடித்துள்ளார். சற்று நேரத்தில் அவர் வாந்தி எடுத்து மயக்கமடையவே அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனையடுத்து போலீசார் விசாரணையில் அவர்கள் கொலை செய்தது உறுதியானது.
இதனை தொடர்ந்து கருப்புச்சாமி மற்றும் அவரது நண்பர் மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.