search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bad road"

    • மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.
    • சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டான்தோப்பு நடுத்தெரு பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் பெரு நாட்டான் தோப்பு நடுத்தெருவை இணைக்கும் சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக பெருநாட்டான் தோப்பு வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருக்கண்ணபுரம், கங்களாஞ்சேரி, திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சாலை சேதம் அடைந்து மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளனர்.

    மேலும் மழையில் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேரும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணலுக்கு பதிலாக எம்சாண்டை பயன்படுத்தி சிமெண்ட் கலவையை மட்டும் போட்டு தெருக்களில் 2 மணி நேரத்தில் பணியை முடித்து விட்டனர்.
    • அரைகுறையாக போடப்பட்ட இந்த தரமற்ற சிமெண்ட் சாலையால் அரசுக்கு பணம் ரூ.5 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார்

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பச்சமலையான்கோட்டை ஊராட்சி, செம்பட்டி பாண்டியன் நகரில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.5 லட்சம் செலவில் தெருக்களுக்கு புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதில், முதல் நாள் சாலையை ஜே.சி.பி. வாகனம் மூலம் கிளறிவிட்டு, மறுநாள் ஜல்லி இல்லாமல் புதிய யுக்தியை கையாண்டு மணலுக்கு பதிலாக எம்சாண்டை பயன்படுத்தி சிமெண்ட் கலவையை மட்டும் போட்டு தெருக்களில் 2 மணி நேரத்தில் பணியை முடித்து விட்டனர்.

    அரைகுறையாக போடப்பட்ட இந்த தரமற்ற சிமெண்ட் சாலையால் அரசுக்கு பணம் ரூ.5 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், நிலக்கோட்டை யூனியன் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் துணையுடன் தரமற்ற சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அதனை மாவட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அரசு அதிகாரிகள் கண்காணிப்பில் ஜல்லி, மணல் ஆகியவற்றை பயன்படுத்தி தரமான சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது.
    • சாலை வழியாக செல்லும் போது வாகனங்கள் பழுதடைந்து இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அருகே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை உள்ளது. இங்கு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது.

    இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் தில்லைவிளாகம், வடகாடு முத்துப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு செல்ல இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை திருவாரூர் போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது.

    தற்போது தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் மக்கள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

    குறிப்பாக பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த சாலை வழியாக செல்லும் போது வாகனங்கள் பழுதடைந்து இடையூறுகளை சந்திக்கிறார்கள். எனவே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சியில் சாலையை சீரமைக்ககோரி ஆர்ப்பா–ட்டம் நடை பெற்றது.
    • சாலைக்கு15 நாட்களுக்குள் உரிய‌ தீர்வு காணாவிட்டால் திண்டுக்கல் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி

    திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு ராம்ஜிநகரிலிருந்து மலைப்பட்டி புங்கனூர் வழியாக அல்லித்துறை செல்லும் பிரதான சாலை பழுதடைந்துள்ளது. அந்த சாலையை சீரமைக்க கோரி மணிகண்டம் ஒன்றிய தெற்கு மற்றும் வடக்கு மண்டலம் சார்பில் பாரதி ஜனதா கட்சியினர்‌ மாவட்டத் துணைத் தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக‌ மாவட்டத் தலைவர் ராஜசேகரன், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாவட்ட பொதுச்செயலாளர் ஒண்டிமுத்து, சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா கூறியதாவது-

    இந்த ஆர்ப்பாட்டம் இத்துடன் முடியப்போவதில்லை. இந்த சாலைக்கு15 நாட்களுக்குள் உரிய‌ தீர்வு காணாவிட்டால் திண்டுக்கல் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

    • மாணவர்கள்- சுற்றுலா பயணிகள் அவதி
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஜவ்வாதுமலை அடிவாரத்தில் கமண்டல நதியில் குறுக்கே கட்டப்பட்டுள்ள செண்பகத்தோப்பு அணைக்குசெல்லும் சாலை ராமநாதபுரம் கிராமம் வழியாக செல்கிறது.

    ராமநாதபுரம் கிராமத்திலிருந்து தொடங்கும் சுமார் 4 கிலோமீட்டர் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சாலையை ஒன்றியம் அல்லது ஊராட்சி சார்பில் சீரமைக்க முடியவில்லை.

    இதனால் இச்சாலை முழுவதும் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சேறும் சகதியுமாக அவல நிலையாக உள்ளது. சீரமைக்க வனத்துறையினர் ஒப்புதல் பெற வேண்டிய நிலை உள்ளதால், கிட்டத்தட்ட போக்குவரத்துக்கு இடையூறு தரும் சாலையாக உள்ளது.

    விடுமுறை தினங்களில் செண்பகத்தோப்பு அணைக்கு ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் அணையை பார்த்து ரசித்து செல்கின்றனர். ஆனால் அணைக்கு வரும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என தற்போது செண்பகத்தோப்பு அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வது குறைந்து வருகிறது.

    இந்த சாலையில் ஜவ்வாதுமலை வாழ் மக்கள், பெருமாள்பேட்டை துரிஞ்சாபுரம் பகுதி பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.

    பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோவும் போகமுடியாத சூழல் நிலவுகிறது.

    வனத்துறை, ஊராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், இளைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • பல்வேறு இடங்களில் பெரிய பள்ள ங்கள் உருவாகி உள்ளது. இந்த வழியாகத்தான் பண்ருட்டியில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் வருகின்றன.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதன்படி பல்வேறு இடங்களில் தற்போது சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் நகர் பகுதி பளிச்–சென காணப்படுகிறது. ஆனால் நத்தவெளி-சரவணாநகர் விரிவு பகுதி சாலை தற்போது போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த பகுதியில் அரசு ஊழியர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் மற்றும் நடுத்தர மக்கள் ஏராள மானோர் வசித்து வருகி றார்கள்.

    வளர்ந்து வரும் நகர் பகுதியான இங்கு நாளுக்கு நாள் மக்கள் பெருக்கம் அதி கரித்து வருகிறது. ஆனால் இந்த நகரின் பிரதான சாலையாக உள்ள நத்த வெளி-சரவணாநகர் விரிவு பகுதியில் உள்ள ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் பெரிய பள்ள ங்கள் உருவாகி உள்ளது. இந்த வழியாகத்தான் பண்ரு–ட்டியில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் வருகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் பள்ளத்தில் தடுமாறி வருகிறது. 4 சக்கர மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகளும் இந்த பள்ளத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகி–றார்கள். எனவே மாநக–ராட்சி அதி–காரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் இந்த விஷ–யத்தில் தனிக்கவனம் செலுத்தி புதிய சாலை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியு–றுத்தி உள்ளனர்.

    • கடலூரில் மோசமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளளாகினர்.
    • உரிய நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தும் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுககப்படவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தொழிற்சாலை அதிகம் உள்ள பகுதியாக விளங்கி வருகிறது. குறிப்பாக கடலூர் சிப்காட் பகுதியில் அதிக தொழிற்சாலைகள் அமைய பெற்று உள்ளது. சிப்காட் அருேக கடலூர் துறைமுகம் பகுதியில் ெரயில்வே ஜங்ஷன் உள்ளது. இங்கு பல்வேறு ஐஸ் கட்டி தொழிற்சாலைகளும் உள்ளது. கடலூர் சிப்காட் வளாகத்தில் கெமிக்கல் தொழிற்சாலை, மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை, பெயிண்ட் தொழிற்சாலை, அலுமினிய பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பலவிதமான தொழிற்சாலைகள் உள்ளது.இப்படி கடலூரில் மற்றும் கடலூரை சுத்தி பலவிதமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் இங்கு பல்வேறு ஹோட்டல்கள், சுற்றுலா தலமான சில்வர் பீச் போன்றவற்றை உள்ளடக்கியது கடலூர். இப்படி முக்கியமானதாக இருந்தாலும் அனைவரும் போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடிய சாலை கடலூரில் மிக மோசமாக உள்ளது.

    இந்த சாலை கடலூரிலும், பல்வேறு தொழிலை உள்ளடக்கிய துறைமுகத்திலும் சாலை மிக மோசமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செய்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த மோசமான நிலையில் உள்ள சாலையால் பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். மோசமான சாலையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தும் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுககப்படவில்லை. எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு சாலையை சரி செய்ய வேண்டும் என்றுபொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    மோசமான சாலையால் விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை பகுதியைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே குழந்தை இறந்து பிறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை அருகில் உள்ள எழுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி துர்க்கையம்மாள் (வயது 26). நிறை மாத கர்ப்பிணி.

    சம்பவத்தன்று அதிகாலையில் துர்க்கையம்மாள் பிரசவ வேதனையால் துடித்தார். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 4 மணியளவில் துர்க்கையம்மாள் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது.

    அதில் அவரை ஏற்றி 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. இதனால் 60 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 6 மணி நேரம் ஆனது. இதனால் ஆம்புலன்சிலேயே குழந்தை இறந்தது.

    காலை 10 மணியளவில் துர்க்கையம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடனடியாக ஆபரேசன் செய்தனர். அப்போது குழந்தை இறந்தே பிறந்தது. இதைக் கேட்டதும் சரவணனும் அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் துர்க்கையம்மாளின் உடல் நிலையும் கவலைக்கிடமானது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    துர்க்கையம்மாளின் கிராமத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் மாவடிபட்டு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆனால் அங்கு அனுமதிக்காமல் ஆம்புலன்ஸ் டிரைவர் அவரை 60 கி.மீ. தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    இது தொடர்பாக துர்க்கையம்மாளின் உறவினர்கள் கூறும் போது, ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருந்ததே குழந்தையின் உயிரை பலி வாங்கிவிட்டது என்று தெரிவித்தனர். #Tamilnews
    ×