search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "balance"

    • வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
    • பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    திருப்பூர்: 

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு.நவம்பர்- 2023 ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 571.60 மி.மீ. நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 494.30 மி.மீ ஆகும். சராசரியாக பெய்யவேண்டிய மழையின் அளவை விட 77.30 மி.மீ குறைவு ஆகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அதன்படி நெல் 11.03 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 14.74 மெட்ரிக் டன், பயிறுவகை பயிறுகள் 16.57 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 3.45 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1767 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1218 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,847 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 568 மெட்ரிக் டன் அளவு இருப்பில் உள்ளதென மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளிடமிருந்து 150 கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மா.மாரியப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும்.
    • முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து சீர்காழி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் சீத.லெட்சுமனன் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ஞான சம்பந்தம், கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ, மாநில பொதுச்செய லாளர் கணிவண்ணன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். தொடர்ந்து 100 நாள் வேலைத்திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சரத்சந்திரன், நவாஸ், மாவட்ட பொருளாளர் சிவராமன், ராஜா, ஒன்றிய குழு துனை தலைவர் பானு சேகர், மகிளா காங்கிரஸ் தலைவி சித்ரா செல்வி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • பல வருடங்களாக வழங்காமல் இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கிராம உள்ளாட்சி துறை பணியாளர் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி ஒன்றியம் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள் செய்த வேலைக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காத தையும் கண்டித்தும், பல வருடங்களாக வழங்காமல் இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு ஒன்றிய கவுரவ தலைவர் பெத்தபெருமாள் ஒன்றிய சங்க தலைவர் கருணாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரமணி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஏஐடியுசி துணை செயலாளர் காந்தி, சங்க மாவட்ட தலைவர் சாந்தகு மார் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    • கலைக்கப்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிலுவைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்.0452-2535669-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு தற்போது கலைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் நெசவாளர்களுக்கு நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலுவைத்தொகை உள்ளன.

    நிலுவைத்தொகையை இந்த செய்தி வெளியிடப்பட்ட 15 தினங்களுக்குள் அலுவலக நேரத்தில் 29, கக்கன் தெரு, செனாய் நகர், மதுரை-20 என்ற முகவரியில் இயங்கி வரும் கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் (சங்க நெசவாளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு ஒளிநகல்) கைத்தறி அலுவலர்/கலைத்தல் அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    அவ்வாறு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அரசிடம் இருந்து நிலுவைத் தொகையை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட பயனாளிகளிடம் இருந்து உரிய கோரிக்கைகள் வராத பட்சத்தில் நிலு வையில் உள்ள தொகைகள் அனைத்தும் அரசுக்கு மீள சமர்ப்பிக்கப்படும்.

    கூடுதல் தகவல்களுக்கு மேற்கண்ட முகவரியில் இயங்கி வரும் கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்.0452-2535669-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நகரத்தை மேன்மைப்படுத்தி பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்ய தனி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
    • மத்திய அரசு தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஒதுக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    நாடாளுமன்ற மாநிலங்களவையின் குளிர்காலக் கூட்ட த்தொடரில் தி.மு.க. எம்.பியான கே.கல்யாணசுந்தரம் பேசியதாவது:

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரவில்லை. அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

    கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். மகாமகம் அடுத்த 2028-ல் நடைபெற உள்ளது.

    பல லட்சம் மக்கள் வந்து செல்லும் கும்பகோணம் நகரத்தை மேன்மைப்படுத்தி பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்ய தனி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலான ரயில்வே பாதை விழுப்புரம்-தஞ்சாவூர் இரு வழிப்பாதையாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    அதேபோல் மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் பாதையை புதுப்பிக்கும் கோரிக்கையும் சென்னை-தஞ்சாவூர் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோரிக்கையும் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதனை உடனே முடிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு நிறுவனங்களான ெரயில்வே, நெய்வேலி, பெல் போன்ற தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஒதுக்க வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான கைவினைப் பொருட்கள் உற்பத்தி யாகின்றன. அவைகள் அனைத்தையும் அரசே கையகப்படுத்தி விற்பனை செய்வதன் மூலமாக கைவினை கலைஞர்களுக்கு ஒரு போனஸ் வழங்குவது போன்ற வாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒவ்வொரு ஆண்டும் 5 மாத வட்டி தள்ளுபடி ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • வட்டி சலுகையை பயன்படுத்தி கிரைய பத்திரம் பெற்றுக் பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவிற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்புகளில் (சுயநிதி திட்டம் மற்றும் வணிக மனைகள் நீங்கலாக) ஒதுக்கீடு பெற்ற அனைத்து ஒதுக்கீடுதாரர்களுக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணையின்படி அரசாணை ( நிலை ) எண்.194 வீ.வ.ம.ந.பு.வ. ( நி.எ.2(1) துறை நாள் 4-11-2022ன் படி வட்டி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    மேற்கண்ட சலுகைகளை பெற ஒதுக்கீடு தாரர்களால் ஆறு மாத காலத்திற்குள் அதாவது அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதிக்குள் நிலுவைத்தொகை ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகைக்கு நடைமுறையில் உள்ள தனி வட்டியுடன் மூன்று தவணைகளில் செலுத்த வேண்டும்.

    மாதத் தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி, நிலத்திற்கான இறுதி விலை வித்தியாசத் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் 5 மாத வட்டி தள்ளுபடி ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    எனவே ஒதுக்கீடு தாரர்கள் நிலுவைத் தொகையை செலுத்தி வட்டி சலுகையை பயன்படுத்தி கிரைய பத்திரம் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்த சலுகையானது வட்டி தள்ளுபடி திட்டம் அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலங்கள் (3-5-2023) வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • எண். 194, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நாள். 4.11.2022 வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • நிலுவையிலுள்ள அசல் தொகைக்கு நடைமுறையிலுள்ள தனிவட்டியுடன் மூன்று தவணைகளாகவோ செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    கோவை வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுகொள்ளாத ஒதுக்கீடுதாரர்களுக்கு அதனை வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள அரசால் அரசாணை (நிலை) எண். 194, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நாள். 4.11.2022 வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    அந்தஅரசாணையின்படி திருப்பூர் மாவட்டத்தில்செயல்படுத்தப்பட்டுள்ளமுதலிபாளையம், பல்லடம் நிலை -I,II, பெரியார் நகர், பொள்ளாச்சி, உடுமலை பேட்டை, வேலம்பாளையம் ஆகிய திட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை இதுவரை முழுவதுமாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீடுதாரர்கள் வட்டி தள்ளுபடியில் அதனை ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையிலுள்ள அசல் தொகைக்கு நடைமுறையிலுள்ள தனிவட்டியுடன் மூன்று தவணைகளாகவோ செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இச்சலுகை வருகிற 3.5.2023 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனவும், எக்காரணத்தைக்கொண்டும் கால நீட்டிப்பு செய்யப்படமாட்டாது . எனவே ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கிரையப்பத்திரம் பெற்று பயன்அடையுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • கடன் நிலுவை வசூல் என்ற பேரில் மிரட்டி அதிரடி வசூல்.
    • வீடுகளை பூட்டி மழைக்காலத்தில் மக்களுக்கு இழைக்கும் அராஜகம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பைனான்ஸ்
    நிறுவனங்களால் நடக்கக்கூடிய ஒரு சில நிறுவனங்கள் கடன் நிலுவை வசூல் என்ற அடிப்படையில் மிரட்டி அதிரடி வசூலில் ஈடுபடுகின்றனர்.

    இதனால் ஏழைமற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தை குறிவைத்து கோர்ட் உத்தரவுகளை பெற்று வீடுகளை பூட்டி மழைக்கா லத்தில் மக்களுக்கு இழைக்கும் அராஜக போக்கை கண்டித்து ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஏ.எம்.மோகன் தலைமையில் ஒத்தக்கடை என்ற பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத அறப்போ ராட்டத்தை தொட ங்கினார்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள பாக்கி தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.
    • குடிநீர் இைணப்பு துண்டிக்கப்படும்.

    புன்செய்ப்புளியம்பட்டி:

    புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிருப்பதாவது:-

    புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, கடை வாடகை, ஆண்டு குத்தகை ஆகியவற்றை உடனடியாக செலுத்தப்பட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் முன்அறிவிப்பு இன்றி தங்களுடையை குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்தியிலே அக்னிபத்திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
    • அக்னிபத் திட்டத்தில் சேர்ந்து 4 வருடத்திற்கு பிறகு வெளிவரும் போது ஏறத்தாழ ரூ.12 லட்சத்தில் இருந்து 14 லட்சம் இருப்புத் தொகையாக தருகிறார்கள்.

    மதுக்கூர்:

    மதுக்கூரில் சிவசேனா மாநில துணைத்தலைவரும் காவி புலிப்படை நிறுவனத்தலைவரும் தமிழக இந்த பரிவார் மாநில அமைப்பாளருமான புலவஞ்சி சி. பி. போஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட அக்னிபத் திட்டத்தை நான் சார்ந்த அமைப்பின் சார்பாக வரவேற்கிறேன். குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்தியிலே அக்னிபத்திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

    வெளிநாட்டு வேலைக்கு இளைஞர்கள் கடனைப் பெற்று வட்டிக்கு கடன் வாங்கி செல்கிறார்கள். திரும்பி வரும்போது வட்டியை மட்டுமே கட்டக்கூடிய சூழலிலும் தள்ளப்படுகிறார்கள் . சில போலியான ஏஜென்டுகள் அவர்களை தவறாக வழி நடத்துகிறார்கள்.

    அக்னிபத் திட்டம்இந்தியா முழுவதும் வரவேற்கப்பட கூடிய திட்டம். இதை வைத்து அரசியல் செய்வது நல்லதல்ல.இந்த திட்டத்தில் சேர்ந்து 4 வருடத்திற்கு பிறகு வெளிவரும்போது ஏறத்தாழ ரூ.12 லட்சத்தில் இருந்து 14 லட்சம் இருப்புத் தொகையாக தருகிறார்கள். அதில் தொழிலும் செய்து கொள்ளலாம். அது தவிர மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தில் அவர்களுக்கு சலுகை வழங்கப்படும் என்று உத்திரவாதம் வழங்குகிறார்கள்.

    இதில் அரசியல் செய்யாமல் இளைஞர்களை தவறான வழியில் வழிநடத்தி விடாமல் அவர்களுக்கு நல்ல பாதையிலே வகுத்து தர வேண்டும். மாறாக போராட்டம் நடத்தி பொது சொத்தை சேதப்படுத்துவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×