search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "borewell"

    • ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.
    • இதையடுத்து, அந்தக் குழந்தையை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    ஜெயப்பூர்:

    ராஜஸ்தானின் டவுசா மாவட்டம் பாண்டூகி என்ற இடத்தில் நேற்று மாலை 6 மணியளவில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

    இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், சுமார் 15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளது. குழந்தை விழுந்த இடத்தின் பக்கத்து நிலத்தில் ஜே.பி.சி. இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

    • விவசாயத் தொழிலாளியின் ஒன்றரை வயது மகள், தோட்டத்தில் திறந்திருந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளார்.
    • பல மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இன்றைய காலகட்டத்தில் ஆழ்துளை கிணறு கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களில் மூடப்பட்டு வரும் நிலையில், அதற்குள் விழுந்து பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் 45-50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க பல மணிநேரம் நடைபெற்ற மீட்பு பணி வீணானது.

    அம்ரேலியில் உள்ள சுர்கபாரா கிராமத்தை சேர்ந்த விவசாயத் தொழிலாளியின் ஒன்றரை வயது மகள், தோட்டத்தில் திறந்திருந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அம்ரேலி மீட்புக்குழுவினரும், 108 அவசரக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.

    45 முதல் 50 அடி ஆழத்தில் சிறுமி சிக்கியிருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து 108 அவசர குழு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமிக்கு முதலில் ஆக்ஸிஜனை வழங்கத் தொடங்கியது. மீட்புக்குழுவினர் கேமராக்களைப் பயன்படுத்தி மீட்புப் பணியைத் தொடங்கினர். இதையடுத்து நடைபெற்ற பல மணி நேரம் நடைபெற்ற மீட்பு பணியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

    முன்னதாக, இச்சம்பவம் குறித்து மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:- ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சிறுமியை மீட்க மீட்புக் குழுவினர் தீவிர முயற்சி செய்து வருகிறது. குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் கீழ்நோக்கி சிக்கியுள்ளது. சிறுமியின் முகம் மட்டுமே தெரிகிறது என்றார்.

    • பவானிசாகரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்தது.
    • காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றது.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பவானிசாகர் அணையில் தினந்தோறும் இரவு நேரங்களில் உலா வரும் காட்டுயானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது.

    இந்நிலையில் பவானிசாகர் அணை பகுதியில் தண்ணீரை தேடி வந்த 3 காட்டுயானைகள் பவானிசாகரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்தது.

    பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்த சின்டெக்ஸ் டேங்க் மற்றும் போர்வெல், தென்னை மரங்களை இழுத்து சேதப்படுத்தியது. அருகே குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் தண்ணீர் மற்றும் உணவுக்காக தேடி வரும் காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிகள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இந்த சம்பவம் குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டெல்லியில் விகாஸ்புரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான ஒரு ஆழ்துளைக் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் குழியில் குழந்தை ஒன்று தவறி விழுந்ததாக செய்திகள் வெளியானது.

    தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் இன்று பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். அப்பொழுது குழியில் விழுந்தது குழந்தை இல்லை, 30 வயது மதிப்புடைய நபர் என்று தெரிய வந்துள்ளது.

    அந்த நபர் எப்படி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார் என்றும், இறந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகளும் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார்களால் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் உடனடியாக சீல் வைக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் 40 அடி போர்வெல் குழியில் குழந்தை ஒன்று விழுந்தது.
    • குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    மூடப்படாத போர்வெல் குழிகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் விகாஸ்புரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான ஒரு போர்வெல் குழி உள்ளது. இந்தக் குழியில் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது.

    தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    • பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கர்நாடக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கர்நாடக துணை முதல் மந்திரி கே.டி.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் இந்தப் பிரச்சனையை மிக மிக தீவிரமாகப் பார்க்கிறேன். அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

    அனைத்து தொட்டிகளையும் கையகப்படுத்தி அனைத்து நீர் கிடைக்கும் இடங்களையும் கண்டறிந்து வருகிறோம். 217 சுரங்கங்கள் முயற்சி செய்யப்பட்டுள்ளன.

    பெங்களூரு நகரில் 3,000க்கும் மேற்பட்ட போர்வெல்கள் வறண்டுவிட்டன. காவிரியில் இருந்து என்ன தண்ணீர் வருகிறதோ அதுதான் வருகிறது.

    எனது வீட்டில் உள்ள போர்வெல் உள்பட அனைத்து போர்வெல்களும் வறண்டு கிடக்கின்றன என தெரிவித்தார்.

    • பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
    • ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது நம் நாட்டில் அடிக்கடி நடக்கிறது.

    மஹிந்திரா குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான ஆனந்த் மஹிரந்திரா சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர். தனது 10.8 மில்லியன் பின்தொடர்பவர்களுக்காக டிரெண்டிங் தலைப்புகள் மற்றும் ஈர்க்கும் கதைகள் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

    இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பிப்லியா ரசோடா கிராமத்தில் உள்ள ராஜ்கர் என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட 5 வயது சிறுமியின் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

    மேலும் அந்த பதிவில், " உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த சம்பவம் அதிக கவனம் பெறவில்லை என்றாலும் கூட, சிறுமியின் பெற்றோருக்கு, அவர்களின் உலகமே இருண்டதாகி இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:- இந்த சம்பவம் சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்பு போன்ற கவனத்தை ஈர்த்திருக்காது. ஆனால் இந்த குழந்தையின் பெற்றோருக்கு, அவர்களின் உலகமே மறைந்திருக்கும்.

    பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சில பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். மீண்டும் ஒருமுறை, நமது நாட்டின் பேரிடர் மீட்புப் படைகளுக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

    நம் ராணுவ வீரர்களைப் போலவே, அவர்களும் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க பகலும், இரவுமாக போராடுகிறார்கள்" என்றார்.

    இருப்பினும், இன்று அதிகாலை மீட்கப்பட்ட சிறுமி சில மணிநேரங்களுக்குப் பிறகு, போபாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை வயலில் திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் மஹி என்கிற 5 வயது சிறுமி விழுந்தார். அவர் 22 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார். பின்னர், தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிர முயற்சிக்கு பிறகு இன்று அதிகாலை 2.45 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டு, பச்சோரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியில் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

    பின்னர் 70 கிமீ தொலைவில் உள்ள போபாலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்தார் என்று தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் கிரண் வாடியா தெரிவித்தார்.

    பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    • ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் கடந்த காலங்களில் பருவமழை சரிவர இல்லாததால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் நீரோ 65 திட்டத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • இதன்மூலம் ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2 கட்டங்களில் 39 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

    திசையன்விளை:

    ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் கடந்த காலங்களில் பருவமழை சரிவர இல்லாததால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் நீரோ 65 திட்டத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன்மூலம் ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2 கட்டங்களில் 39 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. 3ம் கட்டமாக 40வது ஆழ்துளை கிணறு, உவரி பஞ்சாயத்தில் அமைக்கப்படுகிறது.

    இந்த பணியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார். 3ம் கட்டமாக உவரி, க.உவரி, க.புதூர், முதுமொத்தான்மொழி, அப்புவிளை, சமூகரெங்கபுரம் மற்றும் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஆழ்துளை கிணறுகள்

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராஜன், திசை யன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், மா வட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கர், வார்டு உறுப்பினர் ராணி, ஜெயமேரி, வினி ஸ்டன், பொற்கிளி நட ராஜன், புளியடி குமார், முத்து ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துவத்துடன் உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது.
    • அபாயகரமான இடங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகை வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டத்தில் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கட்டுமான பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவை மனிதர்கள், விலங்குகள், குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகளுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துவத்துடன் உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி கிணறுகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை போதுமான உயரத்தில் உறுதியான சுவர் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கைவிடப்பட்ட குவாரி குழிகளை சுற்றி உடனடியாக பாதுகாப்பு வேலிகள் அமைக்க குவாரிகளின் குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் கட்டுமான குழிகள், அகழிகளுக்கு வலுவான தடுப்புகளை அமைக்கவும், ஓட்டுனர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். அபாயகரமான இடங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகை வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    • ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
    • சுமார் 9 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்பட்டது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 4 வயது குழந்தையுடன் கிராமத்தில் உள்ள தோட்டத்திற்குச் சென்றார். தோட்டத்தில் அந்தப் பெண் வேலை செய்துகொண்டிருந்தபோது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

    அப்போது அங்கு வெட்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்தது. இதைக் கண்ட தாயார் அதிர்ச்சி அடைந்து கிராமத்தினரை அழைத்துள்ளார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். குழந்தை ஆழ்துளை கிணற்றில் 60 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், 60 ஆடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்புக் குழுவினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    சுமார் 9 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்பட்டது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • சொா்ணபுரி காா்டன் பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

    திருப்பூர்

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா்க்கும் கூட்ட முகாம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூா் மாநகராட்சி 16 -வது வாா்டு மாமன்ற உறுப்பினா் தமிழ்செல்வி கனகராஜ் தலைமையில் சொா்ணபுரி காா்டன் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -திருப்பூா் மாநகராட்சி 16 வது வாா்டு சொா்ணபுரி காா்டன் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீா் எடுக்கும்போது சாயக்கழிவு கலந்து முற்றிலும் மாசுபட்ட தண்ணீா் வருகிறது.

    இதைப் பயன்படுத்தும்போது தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.ஆககே எங்களது பகுதியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து 5வது நாளாகச் சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • முதல்வர் பூபேஷ் பாகேல் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறார்.

    சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாஹு. இச்சிறுவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

    இதையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பி மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து 5வது நாளாகச் சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து சத்தீஸ்கர் ஜாங்கிரி - ஷம்பா மாவட்ட ஆட்சியர் ஜான்ஜ்கிர், ஜிதேந்திர சுக்லா கூறுகையில், "முதல்வர் பூபேஷ் பாகேல் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறார். மீட்பு பணி 80 மணி நேரமாக நடந்து வருகிறது. ஆனால் மிக விரைவில் ராகுலை மீட்க முடியும். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. முதல்வர் பூபேஷ் பாகேல் வீடியோ மூலம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்," என்று கூறினார்.

    ×