என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cannabis"
- 80 கஞ்சா செடிகளை வளர்த்த ராகுல் சௌத்ரி (46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- கஞ்சா செடிகளை லைட் மற்றும் ஏசி பொருத்தி அவர் வளர்த்து விற்று வந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் சுமார் 80 கஞ்சா செடிகளை வளர்த்த ராகுல் சௌத்ரி (46) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராகுலின் தந்தை நொய்டாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக 2013 இல் பணியில் இருந்தபோது உயிரிழந்தார். அதனால் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் ராகுலுக்கு காவல்துறையில் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவரால் அந்த போலீஸ் தேர்வில் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து வியாபாரத்தில் இறங்கிய ராகுலுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலைக் குறைப்பதற்காக ராகுல் கஞ்சா அடிக்க தொடங்கினார். பின்னர் தனது தேவைக்காக வீட்டில் கஞ்சா வளர்க்க தொடங்கி பின்னர் அதனையே தனது தொழிலாக அவர் மாற்றியுள்ளார்.
நொய்டாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வெப் சீரிஸ்களை பார்த்து ஆன்லைனில் கஞ்சா விதைகளை தனது வீட்டில் ராகுல் கஞ்சா வளர்க்க தொடங்கியுள்ளார். அங்கு சுமார் 80 கஞ்சா செடிகளை லைட் மற்றும் ஏசி பொருத்தி வளர்த்து விற்று வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த வீட்டில் கஞ்சா வளர்க்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனை செய்த போலீசார் ராகுலை கைது செய்து சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
- கணவன் கஞ்சா செடிகளை வாங்கி மனைவிக்கு தெரியாமல் அவரது காரில் பின்புறம் நட்டு வைத்துள்ளார்.
- சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
சிங்கப்பூரில் 37 வயதான டான் சியாங்லாங்கிற்கு 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தனது மனைவியை பிரிந்தார் சியாங்லாங். ஆனால் அவர்கள் விவாகரத்து பெறவில்லை.
சிங்கப்பூர் சட்டப்படி திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியிருந்தால் மட்டும் தான் விவாகரத்து கோரமுடியும். ஆனால் தம்பதியினரில் யாராவது ஒருவரின் மேல் குற்ற வழக்கு இருந்தால் சீக்கிரம் விவாகரத்து பெறமுடியும்.
ஆகையால் கணவன் ஒரு திட்டம் தீட்டியுள்ளான். 500 கிராம் அளவிலான கஞ்சா செடிகளை வாங்கி மனைவிக்கு தெரியாமல் அவரது காரில் பின்புறம் நட்டு வைத்துள்ளார். இவற்றில் பாதி கஞ்சா செடிகள் நன்றாக வளர்ந்துள்ளது.
பின்னர் போலீசார் அவரது காரை சோதனை செய்த போது போதைப்பொருட்களை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் கஞ்சா வளர்த்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அப்போது அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்த போது அவரின் கணவன் கஞ்சா செடிகள் நட்டத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
தனது மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தற்போது இவருக்கு சுமார் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பபட்டது.
சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
- கஞ்சாவுடன் ரீல்ஸ் வீடியோவால் சிக்கிக்கொண்டனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த முடிச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை அதிரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முனுபு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வாலிபர்கள் சிலர் கஞ்சா புகைப்பது போன்று வீடியோ வெளியானது. இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்த போது ரீல்ஸ் வெளியிட்டது அப்பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளான தீபக், சந்துரு என்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க போலீசார் செல்போன் எண்ணை வைத்து கண்காணித்தனர்.
இந்த நிலையில் லட்சுமி நகர் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றின் மதகு அருகே பதுங்கி இருந்த தீபக், சந்துரு ஆகிய 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோத சுமார் 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் தீபக் , சந்துரு ஆகிய இருவருக்கும் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவர்களை போலீசார் கைது செய்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு கை, காலில் மாவு கட்டு போடப்பட்டது. விசாரணையில் பள்ளிக்கரணை பகுதி முழுவதும் கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டி பறந்துள்ளது தெரிந்தது.
மாணவர்கள், வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த மாதம் கஞ்சா விற்பனை தொடர்பாக எதிர்தரப்பினருடன் ஏற்பட்ட மோதலில் தீபக்கின் நண்பரான விக்னேஷ் படுகொலை செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக தீபக் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் அதே பகுதியில் உள்ள வீடுகளை அடித்து நொறுக்கிய சம்பவமும் நடந்து உள்ளது.
கைது செய்யப்பட்ட சந்துரு கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்து உள்ளார். தற்போது கூட்டாளிகள் 2 பேரும் கஞ்சாவுடன் ரீல்ஸ் வீடியோவால் சிக்கிக்கொண்டனர்.
அந்த வீடியோவில் உள்ள மற்ற நபர்கள் குறித்து போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைதான தீபக், சந்துருவிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
- சுற்றுலாப் பயணிகளின் பைகளிளும் சோதனை.
- போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளை புறக்கணித்து விட்டு பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கிளாவரை உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கு படையெடுக்கின்றனர்.
இந்த கிராமங்களில் மலைமுகடுகளின் அருகில் மண் வீடு, ஏ பிரேம் ஹவுஸ், டூம் ஹவுஸ், டெண்ட் கூடாரங்கள் உள்ளிட்டவைகளில் ஆபத்தான முறையில் தங்கி வருகின்றனர். இங்கு போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இதனையடுத்து கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில், போலீசார், சுற்றுலாத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இணைந்து தனியார் தங்கும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
கூக்கால் மலைக்கிராமத்தில் மலை முகடுகளின் அருகில் உள்ள அரசு வருவாய் நிலத்தில் 4-க்கும் மேற்பட்ட மண் வீடுகள் அமைத்து சுற்றுலாப்பயணிகளுக்கு தங்கும் அறைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இங்கு நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், போதை காளான்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த மண் வீட்டில் இருந்த சுற்றுலாப் பயணிகளின் பைகளும் சோதனை செய்யப்பட்டது.
மேலும் மண் வீட்டினை ஆபத்தான முறையில் தங்கும் விடுதியாக நடத்தி வந்த கூக்கால் கிராமத்தை சேர்ந்த தனராஜை கைது செய்து மண் வீடு அறைகளை பூட்டினர்.
மேலும் பூம்பாறை கிராமத்தில் விவசாய தோட்டத்தில் எந்த வித அனுமதியில்லாமல் இயங்கி வந்த ஏ பிரேம் ஹவுஸ்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும்.
எந்த வித அனுமதி இல்லாமல் இயங்கும் தனியார் விடுதிகளும், டெண்ட் கூடாரம், டூம் ஹவுஸ் உள்ளிட்டவைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மது மற்றும் கஞ்சாவினால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான்.
- 2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 32 லட்சம் மக்கள் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஒவ்வொரு வருடமும் 26 லட்சம் மக்கள் மரணிக்கின்றனர்.
போதைப் பொருட்களால் உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 6 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.
மது மற்றும் போதைப் பொருட்களால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான். மது அருந்துவதால் 20 லட்சம் ஆண்களும் கஞ்சாவினால் 4 லட்சம் ஆண்களும் ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர்.
மக்கள் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் அதிகமானோர் மதுவினால் உயிரிழக்கின்றனர். மக்கள் அதிக வருமானம் பெறும் நாடுகளில் குறைவான அளவிலேயே மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளது.
2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.
- ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
- ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிரபல ரவுடிகளும் அடங்குவார்கள். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடிகள், தங்களின் வழக்கு செலவு, குடும்ப செலவுக்கு சிறைக்குள் இருந்தபடி, செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாத, மாதம் மாமூல் வசூலித்து வருகின்றனர்.
இந்த வசூல் பணிகளை 2-ம் கட்ட ரவுடிகள் வசூலித்து ரவுடியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கின்றனர்.
இதனை தடுப்பதற்காக ஜெயிலில் அடிக்கடி ரவுடிகள் அறைகள் சோதனை நடத்தப்பட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பார்சல் கிடந்தது. அதனை எடுத்து ஜெயில் வார்டன்கள் பிரித்து பார்த்தபோது, ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் உட்பட 5 செல்போன்கள், ஒய் பை மோடம், பீடி கட்டுகள், கஞ்சா பொட்டலங்கள், 2 சார்ஜர், குட்கா பாக்கெட்டுகள் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் அதனை பறிமுதல் செய்து காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கஞ்சா தடை செய்யப்பட்டுள்ளது என தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
- தாய்லாந்தில் போதைப் பொருள் சட்டங்கள் கடந்த சில ஆண்டாக தாராளமயம் ஆக்கப்பட்டிருந்தது.
பாங்காங்:
தாய்லாந்தில் கஞ்சா சட்டவிரோதமானது. அங்கு போதைப் பொருள் சட்டங்கள் கடந்த சில ஆண்டாக தாராளமயம் ஆக்கப்பட்டிருந்தது.
கஞ்சா வைத்திருந்தால் அபராதமும், சிறைவாசமும் விதிக்கப்படலாம். தனிநபர்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
மருத்துவத்துக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை சட்டப்படி அங்கீகரித்த முதல் ஆசிய நாடு தாய்லாந்துதான். இதற்கான அனுமதி கடந்த 2018ம் ஆண்டில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தாய்லாந்தின் புதிய அரசாங்கம் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கஞ்சாவை தடை செய்ய அழுத்தம் கொடுக்கிறது; ஆனாலும், மருத்துவ நோக்கங்களுக்காக அதனைப் பயன்படுத்த அனுமதித்துள்ளது
தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பட்டியலில் இருந்து தாய்லாந்து சில ஆண்டுக்கு முன் கஞ்சாவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
- நன்னிலம்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அங்கு சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்து விசாரித்தனர்.
திருவாரூர்:
நன்னிலம் சுற்றுவட்டார பகுதியில் நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருக்கண்டீஸ்வரம் முடிகொண்டான் ஆற்றுப்பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், நன்னிலம் பகுதியை சேர்ந்த கோவிந்தவேல் (வயது 23) என்பதும், அவர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தவேலை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- திருச்சி ஜங்ஷனில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர் சிக்கினார்
- மேலும் கேட்பாரற்று கிடந்த பையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்சி,
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சட்ட விரோதமாக கடத்தல் பொருட்கள் மற்றும் சமூக விரோத செயல்பாடுகளை தடுப்பதற்காக ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரெயில்வே ஜங்ஷனில் உள்ள 2-வது நடை மேடை சுரங்க பாதையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.பின்னர் அவர் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்த போது 4 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 80 ஆயிரம். பின்னர் 4 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் நாயக் (26) என்பவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.மேலும் ரெயில் நிலையத்தில் நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது அதில்14 கிலோ எடையுள்ள 4 மூட்டை கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனை கடத்தி வந்த நபர் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. இந்த கஞ்சா பொட்டலங்கள் கவுரா எக்ஸ்பிரஸ் மூலம் ஒடிசா திருச்சிக்கு கடத்தி பெறப்பட்டதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.
- திருச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
- கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது
திருச்சி.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி பிரியா (வயது 48) மற்றும் கேசவன் மனைவி முத்துமதி ( 60 ) ஆகிய 2 பெண்களை கைது செய்துள்ளனர்.
மேலும் திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஸ்ரீரங்கம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை உறையூர் போலீசார் கைது செய்து காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதேபோன்று உறையூர் விக்டோரியா ரோடு பெட்ரோல் பங்க் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஒரு சிறுவன் பிடிபட்டார். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ. ஒரு லட்சம் ஆகும். இது தொடர்பாக உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் ரெயில்வே ஜங்ஷன் போர்டிகோ பகுதியில் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ஒரு வாலிபர் சிக்கினார். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜாகபந்து நாயக் (32) என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக திருச்சி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவல்லி வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் எடமலைப்பட்டி புதூர் மற்றும் கோட்டை காவல் நிலைய பகுதிகளில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் கஞ்சா வழக்குகளில் 2 பெண்கள், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- அரியலூர் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- மாணவர்களுக்கு கஞ்சா விற்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது
அரியலூர்,
அரியலூர், செந்துறை சாலையிலுள்ள ஒரு பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், மாணவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப் படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன் பேரில் அங்கு சென்ற அரியலூர் நகர போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் அங்கு நின்று கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதை உறுதி செய்தனர்.இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர், மெக்கா நகரை சேர்ந்த சம்சுதீன் மகன் ஆசிப்(வயது 19), மதுரை மாவட்டம், பழங்காந்த்தம், பழைய முருகன் டாக்கிஸ் பகுதியைச் சேர்ந்த ரவி பூமிநாதன் மகன் ராஜ்குமார்(வயது 25) என்பது தெரியவந்தது.மேலும் இவர்கள் அரியலூரில் தங்கி துணிக் கடையில் ஒன்றில் வேலைப் பார்த்து வருவதோடு , இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது.
அவர்களை போலீசார் சோதனையிட்டு, பாக்கெட்டில் இருந்த 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பான்மசாலா ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் இவர்கள், இதையடுத்து அரியலூர் நகர போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.
- 4 வாலிபர்களும் பேர் தப்பியோட முயன்றனர்.
- சாராய விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே உள்ள முருங்கப்பாக்கம் ஏரிக்கரையில் 4 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ரோஷனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். ஏரிக்கரைக்கு சென்ற போலீசாரை கண்டவுடன் 4 வாலிபர்களும் பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்த போலீசார், 4 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தினர்.
இதில். திண்டிவனம் முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன், வெங்கடேஷ், ஹரிதாஸ், மாணிக்கம் என்பதும், இவர்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து கஞ்சா மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து 4 வாலிபர்கள் மீதும் வழக்கு ப்பதிவு செய்த போலீசார், இவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்குகி றார்கள், யார் யாருக்கு விநியோகம் செய்தார்கள் என்பது குறித்து விசாணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்