என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "car accident"
விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 60) விவசாயி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ஞானசீலன் (48) என்பவரும் மொபட்டில் பிடாகத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்று இரவு 9 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.
விழுப்புரம் ஊழியர் நகர் குடியிருப்பு பகுதிக்கு சென்றபோது மதுரையில் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் திடீரென்று முன்னால் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து விழுந்த புருஷோத்தமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஞானசீலன் படுகாயத்துடன் உயிர் தப்பினார். மேலும் அந்த காரை ஓட்டிவந்த சுந்தரபாண்டியன் (36) என்பவரும் காயம் அடைந்தார்.
விபத்து நடந்த ஒரு சில வினாடிகளில் பின்னால் இருந்து வந்த ஒரு மினி வேனும் இந்த கார் மீது மோதியது. இதில் காரும் வேனும் பலத்த சேதம் அடைந்தன. வேனில் இருந்த சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (21) என்பவரும் காயம் அடைந்தார்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுந்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.
அங்கு விபத்தில் காயம் அடைந்த ஞானசீலன், பிரகாஷ், சுந்தரபாண்டியன் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
புதுச்சேரி:
முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது50), கார் டிரைவர். இவருடைய மனைவி சிவசங்கரி (வயது45). இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்களில் அரியாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
செல்லும் வழியில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் கதிரேசன் மனைவி சிவசங்கரி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் கதிரேசனை மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கதிரேசன் பரிதாபமாக இறந்து போனார். மனைவி சிவசங்கரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பேட்ரிக், ஏட்டு புவனேஷ் அகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜநந்த்கான் மாவட்டம், டோங்கர்கர் நகரில் உள்ள புகழ்பெற்ற பம்லேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் துர்க் மாவட்டம் பிலாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை அந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொகுசு காரில் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
ராஜநந்த்கான்-துர்க் சாலையில் சோம்னி கிராமம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல டிரைவர் முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி மீது சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுமையாக சேதமடைந்தது.
காருக்குள் இருந்த 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரைத் தேடி வருகின்றனர். #ChhattisgarhAccident
கோவா மாநிலத்தின் ஆளும் பாஜக அரசின் எம்.எல்.ஏ.வான கிலென் டிக்லோவின் மகன் கைல் கிலென் சௌசா டிக்லோ நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் தனது ஆடம்பர காரில் வேகமாக சென்றுகொண்டு இருந்தபோது சாலையை கடக்க முயன்ற 2 இளம்பெண்கள் மீது வேகமாக மோதினார்.
இந்த விபத்தின்போது அப்பகுதியில் இருந்த மக்கள் கார் மீது கற்களை எரிந்து சேதப்படுத்தவும், காரில் தீ வைக்கவும் முயற்சித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் கைல் கிலென் சௌசா டிக்லோ கைது செய்யப்பட்டார். மேலும், காரில் தீ வைக்க முயன்ற பொதுமக்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வின் மகன் கைது செய்யப்பட்டு இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GoaMLASon #CarAccident
சுரண்டை:
நெல்லை மாவட்டம் சுரண்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் வேல்சாமி மகன் அருள் (வயது 17). அம்மன் சன்னதியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் சிவா (15), அம்பேத்கர் நகர் பால்துரை மகன் சங்கை (17). பள்ளி மாணவர்களான அருள், சிவா, சங்கை ஆகிய 3 பேரும் நண்பர்கள். இவர்கள் பங்களா சுரண்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இன்று காலை நண்பர்கள் சுரண்டை-சாம்பவர் வடகரை சாலையில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந் தனர். அவர்கள் ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த மாணவன் அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். சிவா, சங்கை ஆகியோர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சப்-இன்ஸ் பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மாணவர்கள் சிவா, சங்கை ஆகியோரை மீட்டு தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பலியான அருள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சுரண்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் எது? அதனை ஓட்டி வந்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். நடை பயிற்சி சென்ற மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியு ள்ளது.
ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.எல்.சி.யாக இருந்து வந்தவர் மூர்த்தி (வயது 80). விசாகப்பட்டணம் தொகுதியில் இருந்து 2 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரும், கிதம் பல்கலைக்கழக தலைவருமான மூர்த்தி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 6-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார்.
இதற்காக அங்கு தங்கியிருந்த மூர்த்தி கலிபோர்னியாவில் இருந்து அலாஸ்காவுக்கு ஒரு காரில் சென்றார். செல்லும் வழியில் இந்த கார், லாரி ஒன்றுடன் பயங்கரமாக மோதியது. இதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் சென்ற பசவ புன்னையா, சவுத்ரி ஆகியோரும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை வட அமெரிக்காவில் உள்ள தெலுங்கு கூட்டமைப்பு தலைவர் சதிஷ் வெமனா செய்து வருகிறார்.
அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் மூர்த்தி பலியான சம்பவம் அறிந்து தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு மிகுந்த அதிர்ச்சி வெளியிட்டு உள்ளார். அத்துடன் மூர்த்தியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து உள்ளார். சமீப காலமாக தெலுங்குதேசம் கட்சித்தலைவர்கள் பலர் விபத்தில் உயிரிழந்து வருவது குறித்து அவர் வருத்தமும் தெரிவித்து உள்ளார்.
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அருகே உள்ள கூழபந்தல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 78). விவசாயி. இவர் நேற்று மாலை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற கார் ஏழுமலை மீது மோதியது. இதில் அவர் தூக்கிவீசபட்டு பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்ட அப்பகுதியினர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் .
அங்கு ஏழுமலை சிகிச்சைபலனின்றி இறந்தார். இது குறித்து தூசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேம்ராஜ்(வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் ஜெகன்(37), கிரண்(24), பிரபாகரன்(21) ஆகிய 3 பேருடன் ஒரு காரில் புதுவைக்கு வந்தார்.
பின்னர் அவர் தனது நண்பர்களுடன் அங்கிருந்து நேற்று இரவு காரில் வேலூருக்கு புறப்பட்டார். காரை பிரேம்ராஜ் ஓட்டிவந்தார். அந்த கார் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வளத்தி அருகே உள்ள வடவெட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது பிரேம்ராஜின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலைஓரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் காரின்முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பிரேம்ராஜ் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காரில் வந்த ஜெகன், கிரண், பிரபாகரன் ஆகிய 3 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் குமாரபாலன், சப்-இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூரை அடுத்த மயிலை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது30). இவர் உறவினரான செங்கல்பட்டு அடுத்த அனுமந்தை கிராமத்தை சேர்ந்த லாவண்யாவுடன் (25) கோவளம் அடுத்த தெற்குப்பட்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். இரவு 8மணியளவில் அவர்கள் தெற்குபட்டு கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தியும், லாவண்யாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews
பேரையூர்:
மதுரை தத்தனேரி அருள் தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் பொன்முனியாண்டி (வயது 40), தொழிலாளி. இவர் மதுரை லாரி டிரைவர் சக்தியுடன் விருதுநகர் சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
கள்ளிக்குடி போலீஸ் சரகத்துக்குட்பட்ட நல்லமநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் இன்று அதிகாலை வந்த அவர்கள் லாரியை நிறுத்தி விட்டு சாலையின் எதிர்புறம் உள்ள ஓட்டலுக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் சாலையை கடந்தபோது விருதுநகரில் இருந்து பேரையூர் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் பொன்முனியாண்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கள்ளிக்குடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பலியான பொன்முனியாண்டி உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த பேரையூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ராஜாமுகமதுவை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மேலகரம் பாரதிநகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவருடைய மனைவி சொர்ணலதா, மேலகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக உள்ளார்.
இன்று காலை டாக்டர் சொர்ணலதா தனது மகள் சுபஸ்ரீ (வயது17)யுடன் காரில் மதுரை வந்து கொண்டிருந்தார். காரை முதுகுளத்தூரைச் சேர்ந்த டிரைவர் ஞானசேகரன் (35) ஓட்டி வந்தார்.
கப்பலூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது தூத்துக்குடியில் இருந்து விருதுநகர் சென்ற லாரி எதிர் பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங் கியது.
டாக்டர் சொர்ணலதா, மகள் சுபஸ்ரீ, கார் டிரைவர் ஞானசேகரன், லாரி டிரைவர் ஆத்திகுளம் கலிய மூர்த்தி (43) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்