என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "College girl"
- நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
- உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்தாமரைகுளம்:
அகஸ்தீஸ்வரம் மேலதெருவை சேர்ந்தவர் ஜெகதா (வயது 58). இவரது கணவர் ராதாகிருஷ்ணன் (62), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெகதா கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் மதியம் துணிகளை வீட்டில் மொட்டமாடியில் உள்ள கொடியில் காயபோடும்போது தன்னைத்தானே நிலைதடுமாறிமேலே இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு துடி துடித்துள்ளார்.
இதை பார்த்த உறவினர்கள் மற்றும் பக்கத்தில் நின்றவர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராதாகிருஷ்ணன் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதா உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெகதாவின் மகளுக்கு நாளை திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துபார்த்து செய்து வந்த நிலையில் திடீரென அவர் பலியானது அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- நர்கீஸிடம் பேச விரும்புவதாக தெரிவித்து அவரை அழைத்துள்ளான்
- டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு ,கூட்டத்தை கூட்ட வேண்டும்
டெல்லியை சேர்ந்த 25 வயது கல்லூரி மாணவி நர்கீஸ்.
இவருக்கு இர்ஃபான் எனும் டெலிவரி வேலை செய்யும் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டது. நர்கீஸை காதலிப்பதாக இர்ஃபான் அவரிடம் தெரிவித்துள்ளான். இதனை ஏற்க நர்கீஸ் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இர்ஃபான் அவரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளான். நர்கீஸிடம் பேச விரும்புவதாக தெரிவித்து அவரை அழைத்துள்ளான். இதனை அப்பாவியாக நம்பி வந்த அவரை இரும்பு கம்பியால் அடித்து கொன்றுள்ளான்.
தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே இன்று நர்கீஸின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இரும்பு கம்பியால் தாக்கப்பட்டது முதற்கட்ட விசாரணையிலேயே உறுதியானது.
காவல்துறையின் விசாரணை முடிவில் இர்ஃபான் கைது செய்யப்பட்டான். அப்போது அவன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
"சடலத்தின் அருகே இரும்பு கம்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள். இக்குற்றம் காதல் விவகாரத்தில் நிகழ்ந்துள்ளது", என்று டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சந்தன் சௌத்ரி கூறினார்.
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், இந்த சம்பவத்தை அறிந்து, பெண்களுக்கு தேசிய தலைநகரில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறியிருப்பதாவது:
"டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இன்று 2 சம்பவங்கள் நடந்துள்ளன: தாப்ரியில் ஒரு சிறுமி சுட்டு கொல்லப்பட்டார், அரபிந்தோ கல்லூரி அருகே ஒரு பெண் இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்டார். டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கூட்டத்தை கூட்ட வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த சம்பவங்களை மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது.
இவ்வாறு ஸ்வாதி கூறினார்.
- பாபு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகர்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் பாபு. அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த மாணவியிடம் பாபு ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து பாபு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய ப்பட்டது. இன்ஸ்பெக்டர் மேனகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் பாபு மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாபுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாணவி காயல்பட்டினத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்
- வேலைவாய்ப்பு சம்பந்தமாக பதிவு செய்ய செல்வதாக கூறி பள்ளி சான்றிதழ்களை எடுத்துச் சென்றுள்ளார்
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள கல்லாமொழி அம்மன் கோயில்தெருவை சேர்ந்த வர் இந்திரா (வயது 54) இவரது மகள் மாலதி ( 17). இவர் காயல்பட்டினத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி வேலைவாய்ப்பு சம்பந்தமாக பதிவு செய்ய செல்வதாக கூறி பள்ளி சான்றிதழ்களை எடுத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் இதுகுறித்து குலசேகரபட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கைது செய்யப்பட்ட சதீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைப்பு
- இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம்.
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையே கொலையாளி சதீசை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப்பட்ட சதீசை 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து டி.எஸ்.பி.செல்வகுமார் தலைமையில் சிபிசிஐடி போலீசார் இன்று சம்பவம் நடைபெற்ற சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவு.
- கொலையாளி சதீசுக்கு 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல்.
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையே கொலையாளி சதீசை போலீசார் கைது செய்தனர். இரவு முழுவதும் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், இன்று பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து சதீசை 28ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கல்லூரி மாணவி சத்திய பிரியா ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
- கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.
- திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சதீஷ் என்ற இளைஞர் மாணவியை காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்நிலையில், மகள் இறந்த சோகத்தில் இருந்த மாணவியின் தந்தையும் மரணமடைந்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகள் இறந்த தகவல் அறிந்த தந்தை துக்கம் தாங்காமல், உறவினர்களிடம் புலம்பிக் கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இருவரின் உடல்களும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை மகள் மற்றும் தந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
- கல்லூரி செல்வதற்காக மாணவி ஒருவர் கோவை செல்லும் பேருந்தில் ஏறினார் .
- மாணவி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை பிடித்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் கல்லூரி செல்வதற்காக மாணவி ஒருவர் கோவை செல்லும் பேருந்தில் ஏறினார். அப்போது அந்த பஸ்சில் படிக்கட்டில் நின்றிருந்த முதியவர் ஒருவர் அந்த மாணவியிடம் பேக்கில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார் .
அந்த மாணவி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை பிடித்து தர்மஅடி கொடுத்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் முதியவரை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி ஏ.ரெட்டி அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு வித்யாஸ்ரீ (வயது 21) என்ற மகள் உள்ளார். வித்யாஸ்ரீ தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வந்தார்.
மாதையன் பக்கத்து வீட்டில் வசிபவர் ராஜேந்திரன். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு நந்தன் என்கிற நிர்மல் குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளை மதிகோண்பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். அவர் மதிகோண்பாளையத்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மாதையனும், ராஜேந்திரனும் அருகருகே வசித்து வருவதால் இரு குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். மாதையன் ஓசூருக்கு வேலைக்கு சென்றுவிடுவதால் அவரது வீட்டில் மனைவி லதா, மகள் வித்யாஸ்ரீ, அவரது பாட்டி உள்பட 3 பெண்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்களிடம் ராஜேந்திரன் மகன் நந்தன் அடிக்கடி தங்களது நண்பர்களுடன் சென்று எங்களிடமே தகராறில் ஈடுபடுகிறார்களா? என்று கூறி மிரட்டி வேண்டுமென்றே தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
நேற்று மீண்டும் இருதரப்பினருக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது நந்தன் மீண்டும் வீடு புகுந்து லதாவையும், வித்யாஸ்ரீயையும் மிரட்டினார். இதனால் பயந்துபோன லதா, அவரது மகள் வித்யாஸ்ரீ ஆகியோர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் இரு தரப்பினரையம் அழைத்து சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.
போலீசில் புகார் தெரிவித்தால் ஆத்திரத்தில் நந்தன் நேற்று மீண்டும் லதா வீட்டிற்குள் சென்று எங்கள் மீது நீ போலீசில் புகாரா கொடுக்கிறாய்? என்று கூறி லதாவையும், வித்யாஸ்ரீயையும் தாக்கி ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இதில் மனமுடைந்த வித்யாஸ்ரீ அருகே இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். தீ அவரது உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயில் கருகிய வித்யாஸ்ரீவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர்.
வித்யாஸ்ரீக்கு உடலில் 90 சதவீதத்துக்கு மேல் கருகியதால் அவரிடம் நேற்று இரவு நடத்த சம்பவங்கள் குறித்து மாஜிஸ்திரேட்டு வாக்குமூலமாக பெற்றார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வித்யாஸ்ரீ இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அப்போது அவரது உடலை பார்த்து தாய் லதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் ராஜேந்திரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வித்யாஸ்ரீ இறந்த தகவலை அறிந்த அவருடன் படிக்கும் மாணவர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
வித்யாஸ்ரீயை ஆபாசமாக திட்டியும் தாக்கியதால்தான் அவர் மனமுடைந்து தீக்குளித்தார் என்பதால் இதற்கு காரணமான நந்தன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
அவரது தந்தை கூலி தொழிலாளியாக உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. டாக்டர்களிடம் சென்று சிகிச்சை அளித்தபோதும் அவர் குணமடையவில்லை.
இதற்கிடையில் உறவினர்கள் சிலர் கோவில்களுக்கு அழைத்துச் சென்று பரிகார பூஜைகள் செய்தால் மாணவியின் உடல்நலம் சீராகும் என்று கூறினர். இதனால் அவரது தந்தை பல கோவில்களுக்கும் அழைத்துச் சென்று பரிகார பூஜைகள் செய்து வந்தார். அவர்கள் வீடு அருகே உள்ள ஒரு கோவிலுக்கும் மாணவியை அடிக்கடி பரிகார பூஜைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி தனது வீட்டில் இருந்த மாணவி திடீரென்று மாயமாகிவிட்டார். வீட்டு பீரோவில் இருந்த 11 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தோழிகள் வீடு, உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் மாயமானது பற்றி கொற்றிக்கோடு போலீசில் தந்தை புகார் செய்தார். அதில் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி கூறியிருந்தார்.
போலீசாரும் மாயமான மாணவி பற்றி தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அப்போது அந்த மாணவியை அவரது வீடு அருகே உள்ள கோவிலில் பூஜைகள் செய்யும் பூசாரியே கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் பூசாரியும், மாணவியும் போலீசில் நேற்று மாலை தஞ்சம் அடைந்தனர்.
அந்த பூசாரியும் தானும் 3 வருடங்களாக காதலித்து வருவதாகவும், தனது படிப்பு முடியும் நிலையில் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால் பூசாரியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு சித்திரங்கோடு பகுதியில் வசித்து வந்ததாக மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.
பூசாரியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளதும், மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அது பற்றி மாணவியிடம் போலீசார் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்கள். மேலும் அவர்களின் பெற்றோரையும் போலீஸ் நிலையம் வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் பூசாரியுடன்தான் வாழ்வேன் என்று மாணவி பிடிவாதமாக கூறிவிட்டார். பெற்றோர் அவரை தங்களுடன் வரும்படி கண்ணீருடன் கேட்டுக்கொண்ட போதும் மாணவி தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவர் மேஜர் என்பதால் அவரை பூசாரியுடன் போலீசார் அனுப்பிவைத்தனர். முறைப்படி திருமணம் செய்து கொண்டு அதை பதிவு செய்து தங்களிடம் காட்ட வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
நங்கவள்ளி போலீஸ் நிலையம் அருகில் வசித்து வருபவர் குமார் (வயது 34). இவர் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம், இலாங்காட்டை சேர்ந்தவர் மகேஸ்வரி (19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம், 3-ம் ஆண்டு படித்து வருகிறார். முகநூலில் அறிமுகமான இருவரும் கடந்த 2 அண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய மகேஸ்வரி நங்கவள்ளியில் உள்ள குமார் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை லட்சுமி நரசிம்மர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு நங்வள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து மகேஸ்வரியின் பெற்றோரிடம் போலீசார் தொடர்பு கொண்ட போது அவர்கள் மகளை பார்க்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டனர். இதனால் புதுமண தம்பதிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
முதுகுளத்தூரை சேர்ந்த கண்ணன் மகள் தீபிகா (வயது18). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரும், கமுதி அருகே சீமனேந்தலை சேர்ந்தவரும், தற்போது பாம்பனில் வசித்து வரும் ராமன் மகன் வெற்றிவேலும் (21) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த மாதம் 18 வயது தீபிகாவிற்கு பூர்த்தியடைந்ததையடுத்து, ஜூலை முதல் தேதியில் தீபிகா முதுகுளத்தூரில் தனது வீட்டிலிருந்து இரவு வெளியேறி, காதலன் வெற்றிவேல் வீட்டில் தஞ்சமடைந்தார்.
இதுகுறித்து தீபிகாவின் தாய் அமுதா தனது மகளை காணவில்லை என முதுகுளத்தூர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து முதுகுளத்தூர் போலீசார் காதல் ஜோடிகள் தீபிகா -வெற்றிவேலை கண்டுபிடித்து, முதுகுளத்தூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
கல்லூரி மாணவி தீபிகாவிற்கு 18 வயது முடிந்து சில வாரங்களே ஆனநிலையில், அவருக்கு ராமநாதபுரம் சமூக நலத்துறை அதிகாரிகள் ‘கவுன்சிலிங்’ வழங்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
மேலும் இருவரும் மேஜரான நிலையில் இருப்பதால் கவுன்சிலிங் முடிந்தபிறகு இருவரின் விருப்பபடி செல்லவும் உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்