search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College"

    • உணவு திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.
    • ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 'திருப்பூர் உணவுத்திருவிழா -2022' காங்கயத்தில் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.விழாவின் ஒரு பகுதியாக காங்கயம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து காலை 8 மணிக்கு, 'வாக்கத்தான்' விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. மேலும், சலங்கையாட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி ஆட்டத்துடன் விழா களைகட்ட போகிறது.உணவுத்திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.

    முன்னதாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டிகளும் நடக்கின்றன.உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகம், ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். படைப்புகளை, eatrighttiruppur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்தும் சமர்ப்பிக்கலாம். விவரங்களுக்கு 78711 33777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    உணவு திருவிழாவின் ஒரு பகுதியாக 7-ந் தேதி காலை 10மணிக்கு, காங்கயம் என்.எஸ்.என்., திருமண மண்டபத்தில் சமையல் போட்டி நடக்கிறது.

    ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென்னிந்திய சமையல், சிறுதானிய சமையல், பால்வகை சமையல், மறந்து போன உணவகள், சமையல் அலங்காரம் ஆகிய தலைப்புகளில், சமையல் செய்யலாம்.போட்டியில், 'செப்' தாமு மற்றும் 'செப்' அனிதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

    சமையல் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, 'திருப்பூரின் அறுசுவை அரசி' என்ற பட்டமும், பரிசுகளும் வழங்கப்படும். போட்டியாளர் விரும்பிய உணவுகளை வீட்டில் தயாரித்தும் எடுத்துவரலாம். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறுபவர், இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இறுதிப்போட்டி சமையல் கலைஞர் முன்னிலையில் மண்டபத்தில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
    • நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மற்றும் நாகர்கோவிலில் உள்ள பிரபல ரோபோடிக்ஸ் நிறுவனமான ''மேட் ஆட்டோமேசன்'' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    இதில் பி.எஸ்.ஆர்.கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, மேட் ஆட்டோமேசன் நிர்வாக இயக்குநர் பிரவீன் மேத்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் கல்லூரியில் உள்ள ரோபோடிக்ஸ் ஆய்வு கூடத்தை புதிய தொழில்நுட்பம் மூலம் விரிவாக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் இந்த துறையில் வேலைவாய்ப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி கொள்ள முடியும்.

    நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் தொடக்க உரையாற்றினார். டீன் மாரிசாமி சிறப்புரையாற்றினார். மின்னனுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் பேசுகையில், ரோபோக்கள் பற்றியும், பல்வேறு துறைகளில் ரோபோக்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் எடுத்துரைத்தார். மருத்துவம், பெயிண்டிங், பாதுகாப்புத்துறை, விண்வெளி ஆய்வு, விவசாயி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதை பற்றி எடுத்துரைத்தார்.மேலும் மனிதர்களின் மனதை கட்டுப்படுத்தும் ரோபோ பற்றியும், அதன் சிறப்பம்சங்களையும் விளக்கினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னனுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், மீனா பிரகாஷ், ஐ.ஐ.சி. ஒருங்கிணைப்பாளர் தனம், கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நடப்பு கல்வி ஆண்டில் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
    • பள்ளி, கல்லூரி விடுதிக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி வரையில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் நடப்பு கல்வி ஆண்டில் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் இணைய வழியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் பள்ளி விடுதிக்கு வருகிற 20-ந்தேதி வரையிலும், கல்லூரி விடுதிக்கு வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையிலும் https://tnadw.hms.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    இந்த விண்ணப்பங்கள் தேர்வு குழுவினரால் பள்ளி விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு வருகிற 21-ந் தேதி மற்றும் 22-ந் தேதி ஆகிய 2 நாட்களும், கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி அன்றும் தேர்வு செய்யப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வளாகத்தேர்வு நடந்தது.
    • பல்வேறு துறையைச் சேர்ந்த 52 மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரிப் பணி அமர்வு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.

    பணிஅமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.

    அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்த வேண்டும். தகுதி மற்றும் திறமையால் பணி நியமனம் பெற முயற்சிக்க வேண்டும் என்றார்.

    சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் மங்களா பத்மநாபன் நேர்க்காணலைச் சந்திக்கும் முன்பு மாணவர்களிடையே நிறுவனம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் பணி வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

    இந்த நிறுவனத்தின் வளாகத் தேர்வில் பல்வேறு துறையைச் சேர்ந்த 52 மாணவர்கள் பங்கேற்றனர்.

    பணி அமர்வு மைய ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமணக்குமார், ராஜீவ் காந்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அனைத்துத் துறைச் சார்ந்த பணியமர்வு மைய பொறுப்பாளர்கள் ஒத்துழைப்பு நல்கினர். ஜானகிராமன் நன்றி கூறினார்.

    • ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் ஊட்டி அரசு கலைகல்லூரியில் நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை வேதியியல் துறையின் இணை பேராசிரியர்கள் முனைவர்கள் ஜீபி மற்றும் கோமதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் உதகை ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் வேதியியல் துறையின் சார்பாக மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் ஊட்டி அரசு கலைகல்லூரியில் நடைபெற்றது.

    ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஆனந்தவிஜயகுமார் தலைமை தாங்கினார்.கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு)முனைவர் எபநேசர், மகபேறுசிறப்பு மருத்துவர் பவ்யா மற்றும் கலைகல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் கனகாம்பாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோமதி வரவேற்றார்.

    இதில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜூபி, பார்மகாலேஜ் துறை தலைவர் முனைவர் பிரவின், ஈசா யோக மையத்தின் உதவியாளர் சிவக்குமார், முனைவர் கிருஷ்ணவேணி, பேராசிரியர் அருண், விரிவுரையாளர் பிரியதர்ஷனி உள்பட பலர் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறையின் இணை பேராசிரியர்கள் முனைவர்கள் ஜீபி மற்றும் கோமதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • கல்லூரி மாணவரை தாக்கிய பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பேருந்தை வழிமறிது பெண் ஒருவர் உள்ளே சென்று வாலிபரிடம் கேள்வி கேட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள பெரியசோரகை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 21). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பு 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார்.

    கடந்த 4 ந்தேதி மாலை கல்லூரி பேருந்தில் வந்துகொண்டிருந்த போது சின்னப்பம்பட்டி அருகே பேருந்தை வழிமறித்த பெண் ஒருவர் உள்ளே சென்று முருகனிடம் உன்னுடைய நண்பன் கவின்ராஜ் எங்கடா என்று கேட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில் காயமடைந்த முருகன் ஓமலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

    இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் கல்லூரி மாணவரை தாக்கிய பெண் சின்னப்பம்பட்டி அருகிலுள்ள அக்கறை–பட்டியை சேர்ந்த பரிமளா–தேவி என்பதும் இவருடைய மகன் பாலாஜிக்கும், கவின்ராஜ் என்ற மாணவ–ருக்கும் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று பஸ்சில் இல்லாததால் அவருடைய நண்பர் முருகனை தாக்கியதும் தெரியவந்தது. இதுபற்றி முருகன் கொடுத்த புகாரின் பேரில் பரிமளாதேவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • கல்லூரி கனவு நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு வழிவகை செய்யும் சேலம் கலெக்டர் கார்மேகம் பேச்சினார்.
    • “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழக முதல்- அமைச்சர் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, இன்று சேலம் அம்மாப்பேட்டையில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் இந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து நான் முதல்வன் "கல்லூரி கனவு " எனும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் புத்தகத்தினை வெளியிட்டார்.

    இதையடுத்து கலெக்டர் கார்மேகம், பேசியதாவது-

    சேலம் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்ற 1,600 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. மேலும், மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கு தேவையான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய நான் முதல்வன் "கல்லூரி கனவு" எனும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

    மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பார்த்திபன், செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், அருள், எஸ்.சதாசிவம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா விஜயக்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

    • ஈரோட்டில் கல்லூரி மாணவி தனது தோழியை பார்த்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடு பார்த்தும் கிடைக்கவில்லை.
    • இதனையடுத்து மாணவியின் தாய் லலிதா வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ரஞ்சிதா (19).

    இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த ரஞ்சிதா மதியம் தனது தோழியை பார்த்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பின்னர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடு பார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மாணவியின் தாய் லலிதா வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    • திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
    • எனவே, மாணவ-மாணவிகள் வருகிற ஜூலை 7-க்குள் இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு முதல்வர் ராஜா வரதராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இதன்படி, புதிய கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இணைய வழியில் தொடங்க ப்பட்டுள்ளது. தற்காலிகமாக பூதலூர் கூட்டுறவு காலனி பகுதியில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கல்லூரி வகுப்புகள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    புதிய கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராக தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரியில் தமிழ் துறைதலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் டாக்டர் ராஜாவரதராஜா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொ ண்டார்.

    புதிதாக தொடங்க வுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் வகுப்புகள் தொடங்க உள்ளது. எனவே, மாணவ-மாணவிகள் வருகிற ஜூலை 7-க்குள் இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு முதல்வர் ராஜா வரதராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. தூத்துக்குடி பொறியியல் கல்லூரி டீன் டாக்டர் பீட்டர் தேவதாஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
    • விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீனாட்சிபட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் 13-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவினை போப் கவுன்சில் சேர்மன் ஜான் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். சாயர்புரம் சேகர தலைவர் டேனியல் ஞானப்பிரகாசம் ஆசி வழங்கினார்.

    கல்லூரி தாளாளர் டி.எஸ்.கே.ராஜரத்தினம் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் அருள்மொழி செல்வி கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. தூத்துக்குடி பொறியியல் கல்லூரி டீன் டாக்டர் பீட்டர் தேவதாஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்களுக்கு பொருளியல் கற்கும் பொழுது நல்ல வேலை வாய்ப்பினை பெறுவதற்கு அதிக திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான கருத்துக்களை கூறினார்.

    சிறப்பு விருந்தினராக ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெபிதா பங்கேற்று மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மற்றொரு சிறப்பு விருந்தினரான இந்தியன் டென்டல் அசோசியேஷன் தலைவர் டாக்டர் அருண்குமார் மாணவர்கள் விடாமுயற்சியுடன் எந்த ஒரு செயலையும் செய்து வெற்றியடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    விழாவில் ஜானகி ராஜரத்தினம், பிரியா பிரகாஷ்ராஜ் குமார், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் சாயர்புரம் கவுன்சில் செயற்குழு உறுப்பினர் தேவசகாயம், தங்கபாண்டி, சுமித்ரா, ஆலயமணி, அருண் ஆகிய திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜெயக்குமார், சீசன் தியாகராஜன், எமர்சன், இருதயராஜ், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி நிறுவனர் டாக்டர் பிரகாஷ்ராஜ் குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர் டாக்டர் அருள்மொழி செல்வி தலைமையில் கல்லூரி பேராசிரியர்களும், மாணவ- மாணவிகளும் செய்திருந்தனர்.

    • ஆத்தூர் அருகே தலைவாசலை அடுத்த காமக்காபாளையத்தில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சியத்தால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலை அடுத்த காமக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தா (வயது 21). இவர் சேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாக தெரி–கிறது.

    அந்த மாணவி பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர். இந்த நிலையில் அந்த மாணவிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி நந்தாவிடம் கூறி தன்னை மறந்து விடுமாறு சொன்னதாக தெரிகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நந்தா திடீரென விஷத்தை குடித்து விட்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே நந்தா பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தலைவாசல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று நந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட நேரு யுகேந்திரா-விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து சர்வதேச யோகா தினத்தை கல்லூரி கலையரங்கில் கொண்டாடியது.

    இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் விஷ்ணுராம் மற்றும் டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். மாணவி சவுமியா வரவேற்புரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட இளைஞர் நல அதிகாரி ஞானசந்திரன் கலந்து கொண்டார். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட சமூக சுகாதார அலுவலர் ராஜாகுமார், யோகா அமைப்பை சேர்ந்த ஜெயக்குமார், ரமேஷ், கோபிநாத், கருப்பசாமி, அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். துர்க்கை ஈஸ்வரன், உடற்கல்வி ஆசிரியர் சுந்தர மூர்த்தி, நேரு-யுகேந்திர அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    ×