என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "College"
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். செஞ்சுருள் கழக அமைப்பாளர் கு.கதிரேசன் வரவேற்று பேசினார்.
திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனை தலைமை டாக்டர் பொன்ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசுகையில், எய்ட்ஸ் நோயை போன்று புகை பிடிக்கும் பழக்கமும் கொடுமையானது. இன்றைய இளைஞர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என்றார்.
அரசு மருத்துவமனை ஐ.சி.டி.சி. ஆலோசகர் சாவித்திரி கருத்துரை வழங்கினார். பிற்பகல் அமர்வில் கல்லூரி விலங்கியல் துறை தலைவர் ச.சுந்தரவடிவேல், எய்ட்ஸ் நோய் பரவும் விதம் குறித்து கலந்துரையாடினார். மாணவர் செயலர் முகுந்தன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் எழிலி, மகேஷ்வரி, ஹெட்கேவர் ஆதித்தன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்ததானம் கல்லூரி மாணவர்கள் செய்தனர்.
- ஆண்டுதோறும் அலகு -2 சார்பாக ரத்த தானம் வழங்குவதை கொள்கையாகவே வைத்துள்ளனர,
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாக உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர். முன்னதாக மருத்துவர் வசந்தகுமார்இரத்த தானம் ஏன் வழங்க வேண்டும், யாரெல்லாம் ரத்த தானம் வழங்கலாம் என்று மாணவர்களுக்கு விளக்கிகூறினார். மேலும் தானம் செய்யும்இரத்தம் பல உயிர்களை காப்பாற்ற பயன்படுகிறது. ரத்த தானம் செய்ய மாணவர்கள் முன்வரவேண்டும் என்றார்.
அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறுகையில் , ஆண்டுதோறும் அலகு -2 சார்பாக ரத்த தானம் வழங்குவதை கொள்கையாகவே வைத்துள்ளோம். முகம் தெரியாத உயிரை காப்பாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பின்பு மாணவ பிரதிநிதி பாலசுப்பிரமணியன் தலைமையில் 17 யூனிட்ரத்த தானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- அந்தியூர் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.
- இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் அட்டகல்லூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். கூலி தொழிலாளி. இவரது மகள் காயத்ரி (21). குமாரபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக காயத்ரி வீட்டிலிருந்து அந்தியூர் பஸ் நிலையத்திற்கு தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்து அங்கிருந்து பஸ் மூலம் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
அதன்படி சம்பவத்தன்று காயத்ரியை அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து அந்தியூர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் காயத்ரி கல்லூரி செல்வதற்காக பஸ்சில் ஏறி சென்று உள்ளார்.
அதன் பின்னர் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை மாயமான தனது மகளை மீட்டுத்தருமாறு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் அங்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- பொன்னம்மா பேட்டையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
- இந்த நிலையில் சிவஜோதி கடந்த 31-ந்தேதி வீட்டில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.
சேலம்:
சேலம் அன்ன தானப்பட்டி நாரா யணபிள்ளை தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. கூலி தொழிலாளி. இவ ரது மகள் சிவஜோதி (வயது 19). இவர், பொன்னம்மா பேட்டையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிவஜோதி கடந்த 31-ந்தேதி வீட்டில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்க ளது மகளை பல்வேறு இடங்க ளில் தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து அன்னதா னப்பட்டி போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுக்க ப்பட்டது. அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து, மாய மான கல்லூரி மாணவி சிவ ஜோதியை தேடி வருகின்றனர். மாணவி மாயமானதற்கு காதல் விவகாரம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
- குதிரையேற்ற பயிற்சியாளர் வினய் தேசிய கொடியை ஏந்தியபடி குதிரையில் வலம்வந்தார்
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலை யன்கோட்டை யில் உள்ள கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கர வேளா ண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 8-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி யின் தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கினார்.முதல்வர் கருணாநிதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டா லின், அழகப்பா பல்கலை கழக உடற்கல்வி கல்லூரி யின் பொறுப்பு முதல்வர் முரளி ராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் சதீஷ்கு மார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடி ஏற்ற ப்பட்ட பின்பு கல்லுரியின் குதிரை யேற்ற பயிற்சி யாளர் வினய் தேசிய கொடியை ஏந்தியபடி குதிரையில் வலம்வந்தார்.தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்க, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற சேது பாஸ்கரா வேளான் கல்லூரி மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியபடி மைதானத்தை சுற்றி வந்தனர். கல்லூரி யின் உதவி உடற்கல்வி இயக்குனர் சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தி னர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டா லின், மாணவர்களின் தன்னம் பிக்கையை தூண்டும் வகையில் விளையாட்டு துறையில் சாதித்த பல்வேறு சாதனையாளர்க ளின் வாழ்க்கை நிகழ்வு களை கூறினார். விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரி யர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்க ளுக்கு சிறப்பு விருந்தினர்கள், கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் பரிசு களை வழங்கினர்.
- கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
- கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
கும்பகோணம்:
கும்பகோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பலமுரு பல்கலைக்கழக துணை வேந்தர் லட்சுமிகாந்த் ரத்தோடு மற்றும் சென்னை யில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் நிறுவன தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
கல்லூரியின் தலைவர் செந்தில்குமார், ஆலோசகர் பேராசிரியர் கோதண்ட பாணி, நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்க ளும், சான்றித ழ்களும் வழங்கப்பட்டது.
இதில் கல்லூரி துணை முதல்வர் கலைமணி சண்முகம் மற்றும் கல்விப்புல தலைவர் ருக்மாங்கதன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில் மற்றும் உதவியாளர் சதீஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- முன்னுரிமை அடிப்படையில் விரைந்து நாகையில் அரசு சட்ட கல்லூரியை தொடங்க வேண்டும்.
- இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தந்த சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷாநவாஸ் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
அந்த கோரிக்கை மனுவில் கூறியிப்பதாவது:-
மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்ற அரசின் திட்டத்தின் படி, நாகப்பட்டினத்தின் பின்த ங்கிய நிலையை கருத்தில் கொண்டு முன்னு ரிமை அடிப்படையில் நாகையில் விரைந்து அரசு சட்டக் கல்லூரியை தொடங்க வேண்டும்.
இது குறித்து ஏற்கெனவே சட்டப்பேரவையில் பேசியுள்ள தோடு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள 10 முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகவும் முன்வைத்து ள்ளேன்.
எனவே இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
- இளையான்குடி கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
- கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக சாதிக் அலி, சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியின் செயலர் ஜபருல்லாகான், ஆட்சி குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர் சபினுல்லாகான், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முகமது முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இதில் உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு மாணவ, ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
- சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி தொடங்கி வைத்தார்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்து வரும் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான முதலாம் ஆண்டு தேசிய அளவிலான ஃபிடே செஸ் போட்டியின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. காரைக்குடி பெரியார் சிலை அருகில் தொடங்கிய பேரணிக்கு கல்லூரியின் தாளாளர் டாக்டர் சேது குமணன் தலைமை தாங்கினார்.போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி தொடங்கி வைத்தார்.
இயக்குனர் கோபால் முன்னிலை வகித்தார்.தேவர் சிலை வரை நடைபெற்ற இப்பேரணியில் நூற்றுக்கணக்கான பார்வைத்திறன் குறைபாடுள்ள செஸ் வீரர், வீராங்கனைகள், விவசாய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்திச் சென்றனர்.
- கல்லூரி உட்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதர பணிகள் மேற்கொள்ளப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடை பெற்றது. விழாவில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டார்.
அப்போது கல்லூரியின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக கல்லூரி முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து ஏற்கெனவே சட்டம ன்றத்தில் பேசியதாகவும், ஆய்வகம், நூலகம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுமென உயர்கல்வித் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் இதர பணிகள் மேற்கொள்ள ப்படும் என்று அவர் கூறினார்.
- கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
- துணைவேந்தர், ரவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முகமது சதக் அறக்கட்டளையின் இயக்குநர் பி.ஆர்.எல்.ஹாமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார். முதல்வர் சதக்கத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர், ரவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில், பட்டம் பெறும் பட்டதாரிகள் தாங்கள் கற்ற கல்வியின் மேன்மையையும்,முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டு சமூக சிந்தனையுடன் கூடிய அறிவுத்திறனுடன் செயல்பட வேண்டும். அனைவரும் சமுதாயத்தில் நற்குடிமகன்களாகவும் நமது நாட்டின் பெருமை பண்பாடு சமூக நெறி மற்றும் பாரம்பரியத்தை காக்க உறுதி கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் முகமது சதக் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல்திட்ட அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் சதக்கத்துல்லா பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசிக்க பட்டதாரிகள் அதனை பின் மொழிந்தனர்.பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பதக்கங்களும், பட்டங்களும் வழங்கப்பட்டது. இதில் 926 இளங்கலை மாணவ,மாணவிகளுக்கு 70 முதுகலை மாணவ,மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்களும் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் செய்திருந்தனர்.விழாவிற்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் முகமது யூசுப், முகமது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் செயலாளர் சர்மிளா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்