என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Darshan"
- திட்டக்குடி அருகே செல்லியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
- ஓம்சக்தி ஓம்சக்தி என கோஷமிட்டவாறு கோயில் வளாகத்திற்கு சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமுளை கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. முதல்முறையாக செல்லியம்மனுக்கு 108 பால்குட வழிபாடு நடைபெற்றது. இதில் அந்த கிராமத்தை பெண்கள், ஓடைப்பகுதியில் இருந்து சக்தி கரகத்தின் பின்னால் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். ஓம்சக்தி ஓம்சக்தி என கோஷமிட்டவாறு கோயில் வளாகத்திற்கு சென்று 108 பால்குடத்தில் கொண்டுவரப்பட்ட பாலால் செல்லி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிப்பட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
- அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர விழாவுக்காக கொடியே ற்றப்பட்டது.
விழாவின் முதல் நாளில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தி ல் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்கள் செய்து இருந்தனர்.
- தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.
- காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.
திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்களிக்கிறார்.
மலை மீது தோணியப்பர், சட்டை நாதர் ஆகிய சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் தெற்கு கோபுர வாசல் அருகே எழுந்து அருள் புரிகின்றனர்.
பிரசித்திப் பெற்ற இக்கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வருகை புரிந்தார்.
தொடர்ந்து அவர் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, தோணியப்பர் சுவாமி, திருநிலை நாயகி அம்மன், அஷ்ட பைரவர் சுவாமி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கணக்கர் செந்தில் சுவாமி படங்கள், பிரசாதங்களை வழங்கினார்.
அவருடன் ,திமுக நிர்வாகி முத்து.
தேவேந்திரன் ,அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் சீர்காழி நகர் மன்ற உறுப்பினர் சாமிநாதன் ஆகியோர் உடன் வந்தனர்.
- நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் ஒன்றாம் சேத்தி வடக்கு குத்தகை பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் 102 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது. தொடர்ந்து,
நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து கோவிலை சுற்றி சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து விமான கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
- ரூ.3 கோடியில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.
- கோவில் வளாகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் பிரசித்தி பெற்ற அருணஜடேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பெரிய நாயகி அம்பாள் அருணஜடேஸ்வரர் அருள்பாலிக்கிறார்கள்.
இந்த கோவில் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் கடந்த 2003-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.3 கோடியில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி திருப்பணிகள் தொடங்கியது.
கடந்த 6 மாதங்களில் திருப்பணிகள் நிறைவு பெற்று 2 ராஜகோபுரங்கள் மற்றும் 10 விமானங்களில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
50 செப்புக் கலசங்களும் வைக்கப்பட்டன.
பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கோவில் வளாகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டது.
அதில் 59-யாக குண்டங்களும், 25 வேதிகைகள் அமைக்கப்பட்டு, 80 சிவாச்சாரியார்கள் மூலம் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகள் நடந்தன.முன்னதாக, கடந்த 5-ந் தேதி தேரடி விநாயகர், திருவீதி விநாயகர், ஊருடையப்பர், வீரியம்மன், விஸ்வநாதர் ஆகிய பரிவார கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நேற்று அருணஜடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக மகா பூர்ணாஹூதியுடன் கடம் புறப்பட்டு, காலை 9.30 மணிக்கு கோபுரம், விமானங்களுக்கு குடமுழுக்கும், 10.30 மணிக்கு மூலவர்களுக்கு அபிஷேகமும் நடைபெ ற்றன.
விழாவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் முத்துக்குமாரசாமி தம்பிரான், மதுரை ஆதீனம்ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், கூனம்பட்டி ஆதீனம், காசி மடத்து இளவரசு சபாபதி தம்பிரான் சாமிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் சிராப் கந்தசாமிபிள்ளை, பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், துணைத் தலைவர் கலைவாணி சப்பாணி, கலைச் செல்வன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தக்கூடாது.
- ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம், பால் போன்ற இலகு ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.
சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீஅய்யப்பனை தரிசனம் செய்யச் செல்லும் பக்கர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி மனது, உடல் ஆகிய இரண்டையும் தூய்மையாக்கி அய்யப்பனை நினைத்து மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள்.
இவ்வாறு விரதம் மேற்கொள்ளுபவர்கள் விரதகாலத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்து நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலும் மனமும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். விபூதி, சந்தனம் குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து அவரவர் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரணகோஷங்கள் முழங்க வேண்டும்.
விரதகாலம் முழுமையும் ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம், பால் போன்ற இலகு ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரதகாலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.
விரதத்தின்போது வீட்டு விலக்கான பெண்களின் அருகாமையைத் தவிர்க்க வேண்டும்.
விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தக்கூடாது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கியமாகக்கடைபிடிக்க வேண்டிய விரதம் பிரம்மச்சர்ய விரதம்.
மாலை போட்டிருக்கும்போது பகல் நேரத்தில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கும்போது தலையணை, மெத்தை போன்றவற்றைத் தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும் என்பது ஐதீகம்.
- பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார்.
- இந்திரன் புலிவடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார்.
அய்யப்பனின் தரிசனத்தைப்போல அவரின் அவதார வரலாறும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம். சுவாமி அய்யப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது மட்டுமல்ல நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத வரலாறு ஆகும்.
காலவ மகிஷியின் மகளான லீலாவதி, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள். தனது சகோதரன் மகிஷாசுரணை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள். வரம் பெற்ற அவள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினாள்.
பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார். இதன் விளைவாக அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது. அரிகர புத்திரனாக மணிகண்டன் அவதரித்தார். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இட்டுவிட்டு அவர்கள் இருவரும் மறைந்தனர்.
காட்டுக்கு வேட்டையாட வந்த பந்தளநாட்டு மன்னன் ராஜசேகரன் குழந்தையை கண்டெடுத்து அதற்கு மணிகண்டன் என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தான் இந்த நிலையில் ராணி, ராஜராஜன் என்ற மகனை பெற்றெடுத்தாள் மந்திரியின் துர்போதனையால் அவள் மதிமயங்குகிறாள்.
சதி திட்டம் தீட்டப்படுகிறது. ராணி தலைவலியால் துடித்தாள் ராணியைக் குணப்படுத்த வைத்தியர் புலிப்பால் வேண்டும் என்றார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். புலிப்பாலை கொண்டுவர 12 வயது ஆன மணிகண்டன் புறப்பட்டார்.
பம்பை ஆற்றங்கரையில் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் இடையே கடும்யுத்தம் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். லீலாவதியாக அவள் சாப விமோசனம் பெற்றாள். அய்யப்பனை தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு திருவடி பணிந்து நின்றாள்.
அய்யப்பன் தான் நித்ய பிரம்மச்சாரி என்றைக்கு தன்னைத்தேடி கன்னி அய்யப்பன்மார் வராமல் இருக்கிறார்களோ அன்று அவளை மணந்து கொள்வதாக கூறி தமது இடப்பக்கத்தில் மாளிகைப்புறத்து மஞ்சள்மாதாவாக வீற்றிருக்க அருள்பாலித்தார்.
இந்திரன் புலிவடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார். அதை கண்டு மிரண்டராணி, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அய்யப்பன் தமது அவதார நோக்கினை எடுத்துக்கூறி தர்மசாஸ்தாவான தனக்கு விடை கொடுக்குமாறு வேண்டுகிறார். ராஜசேகர மன்னன் கலங்குகிறான்.
பம்பை நதிக்கரையில் மணிகண்டன் அம்பு எய்தார். அந்த இடத்தில் பந்தளமன்னன் கோவில் கட்டினான். பரசுராமர் அங்கு அய்யப்பன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். சபரி என்ற யோகினியின் நினைவாக அந்த இடம் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று அய்யப்பன் ஜோதிவடிவில் அருள்பாலிக்கிறார்.
- 6-வது கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே கீழையூர் கிராமத்தில் 400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமை க்கப்பட்ட இந்த கோவிலில் கும்பாபிஷேகவிழா பந்தகால்முகூர்த்தம் பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், கோ பூஜையுன் பூர்ணாஹூதி தீபாராதனைகளுடன் ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது.
6-வது கால யாக பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்கள் மல்லாரி இசை முழங்க கடம்புறப்பாடு நடைப்பெற்றது.
சிவாச்சாரியர்கள் கடங்களை சுமந்துவந்து வேதமந்திரங்கள் முழங்க மூலஸ்தான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காத்தாயி அம்மன் பச்சையம்மன், மாரியம்மன், வீரன் பெரியாச்சி, உள்ளிட்ட பரிவார தெய்வங்குளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபராதனை நடைப்பெற்றது.
- வியாழக்கிழமை அன்று தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்ததாகும்.
- ராகவேந்திர சுவாமிகளுக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடவாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்ற பிருந்தாவனம் என்பதால் இங்கு வியாழக்கிழமை அன்று தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த நிலையில் இன்று ஆனி மாதம் முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு ராகவேந்திர சுவாமிகளுக்கு சிறப்பு பாலாபிஷேகம் , அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருராயரை தரிசனம் செய்தனர்.
- உலக நன்மைக்காகவும், சகல பரிகார தோஷ நிவர்த்திக்காகவும் சுதர்சன ஹோமம் நடந்தது.
- மாலையில் கருட வாகன புறப்பாடு நடந்தது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பங்கஜவல்லி தாயார் சமேத ஸ்ரீ நிவாச பெருமாள் கோவிலில் வைகாசி திருவோண பெருவிழா நடைபெற்றது.
இதனையொட்டி உலக நன்மைக்காகவும், சகல பரிகார தோஷ நிவர்த்திக்காகவும் சுதர்சன ஹோமம் நடந்தது.
ஹோமத்தை தொடர்ந்து பால், தயிர், மஞ்சள்,சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வைத்து சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது.
மாலையில் கருட வாகன புறப்பாடும் நடைபெற்றது.
விழாவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி, தக்கார் லட்சுமி, பாபநாசம் இறைப்பணி மன்ற தலைவர் குமார், செயலாளர் வெங்கடேசன், கணக்கர் முருகுபாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்