என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Darshan"
- சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
- திருமறை பாடல்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தரிசனம் செய்ய வந்தார்.
அவரை கோவில் செயல் அலுவலர் அறிவழகன், ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்னம் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். கோவிலுக்குள் சென்ற குரு மகா சன்னிதானம் மணவாளர், உள்பட பஞ்ச மூர்த்திகளையும், திருநாவுக்கரசர் வார வழிபாட்டு மன்ற ராஜேந்திரனின் திருமறை பாடல்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், ஊர் பிரமுகர்களான மாவட்ட வர்த்தக சங்க தலைவர் வேதநாயகம், பிராமண சங்க தலைவர் ராமசாமி, கத்தரிப்புலம் தொழில் உரிமையாளர் சொக்கலிங்கம், தேவி பாலு உள்ளிட்ட பிரமுகர்–களுக்கும், பக்தர்களுக்கும் அருள் ஆசி வழங்கினார்.
- நேற்று இரவு 10 மணி, நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி என நான்கு கால அபிஷேகம்.
- மாலை 6 மணிக்கு பத்மநாபன் குழுவினரின் மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு நேற்று இரவு 10 மணி, நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி என நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சந்தனம், பால், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிசேகம் நடைபெற்றது.
பக்தர்கள் கூட்டம்
சிவராத்திரி என்பதால் இரவு முழுவதும் மட்டும் அல்லாமல் விடிய, விடிய பக்தர்கள் சிவனை வழிபட்டனர். இன்று அதிகாலை வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலை சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சை திலகர் திடல் அருகே அரண்மனை தேவஸ்தானம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பத்மநாபன் குழுவினரின் மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது.
கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்
கலைநிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (பொ) சூரியநாராயணன், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, சதய விழாக்குழு தலைவர்செல்வம், மண்டலக்குழு தலைவர்கள் மேத்தா, ரம்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கலைநிகழ்ச்சிகள்
அதைத்தொடர்ந்து மீரா குழுவினரின் கயிலாய வாத்தியம், லட்சுமணன் வாத்தியாரின் தெருக்கூத்து, காமாட்சி பத்மா குழுவினரின் நாத இசை சங்கமும், சீர்காழி சிவசிதம்பரம் குழுவினரின் பக்தி இசை, புலவர் ராமலிங்கம் குழுவினரின் பட்டிமன்றம், தேன்மொழி ராஜேந்திரன் குழுவினரின் பறை இசை, காவடி, கரகாட்டம், நையாண்டி மேளம், சிவன்சக்தி நடனம், கலாபரத் மற்றும் தேஜாஸ் குழுவினரின் பரதநாட்டியம், தியசோனவின் குச்சிப்புடி நடனமும் நடைபெற்றது. நிறைவாக தொலைக்காட்சி புகழ் பாடகர்களின் பக்தி இசை பாடல்கள் நடைபெற்றது. விடிய விடிய நடந்த நிகழ்ச்சிகளை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.
இதேபோல் தஞ்சபுரீஸ்வரர் கோவில், மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் சிவராத்திரி விழா நடைபெற்றது.
- அருணகிரிநாதரால், சேந்தனார் பெருமானால் பாடல் பெற்ற தலமாகும்.
- சிறந்த அறிவும் பெற்று, திருமணத்தடை நீங்கி சுபிட்சம் பெருகும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
அருணகிரிநாதரால், சேந்தனார் பெருமானால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
முசுகுந்த சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்த கோயில் சூரபத்மனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரணை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற ஸ்தலமாக தலபுராணம் கூறுகின்றது.
இத்தலம் திருச்செந்தூ ருக்கு நிகராக போற்றப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள குரா மரத்தின் அடியில் தியானம் செய்ய மனதெரிவு, அறிவுக்கூர்மை உண்டாகும். மேலும் முருகன், தெய்வானை திருமண நிச்சயம் நடைபெற்ற ஸ்லமாதலால் இங்கு வழிபடுபவருக்கு தீரா பழி நீங்கி, மனதெரிவு, சிறந்த அறிவும் பெற்று, திருமணத்தடை நீங்கி சுபிட்சம் பெருகும் எனவும் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அதிகாலை முதல் 3 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் ஜெயராமன், செயல் அலுவலர் ரம்யா ஆகியோர் செய்துயிருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
- இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளில் தைப்பூசவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து ஜோதி தரிசனத்தை தரிசிப்பார்கள்.
தஞ்சாவூா்:
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொதுச்செ யலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
ஆண்டுதோறும் தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் திருவிழா தைப்பூசம் ஆகும். தைப்பூசம் என்பது நமது மரபில் முக்கிய நாளாகும். தை மாதத்தில் வருகின்ற பௌர்ணமியை ஒட்டி பூச நட்சத்திரத்தை தைப்பூசம் என கொண்டாடுகின்றோம். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளில் தைப்பூச விழா வெறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மலேசியா, இலங்கை , மொரிசியஸ் ஆகிய நாடுகளில் இவ்விழாவிற்கு அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பூசம் என்பது முருகக் கடவுளுக்கு உகந்த நாளாக கொண்டாடுவது வழக்கம்.
முருகப்பெருமான் குடிகொண்டுள்ள திருத்த லங்களில் கோலாகலமாக குறிப்பாக அறுபடை வீடுகளில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழனியில் காவடிகள் எடுத்து பொதுமக்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை தைப்பூச நாளன்று முருக பெருமானுக்கு செலுத்தி வருகின்றனர்.
அதேபோல் கடலூர் மாவட்டம் வடலூர் ராமலிங்க அடிகளார் உருவாக்கிய சத்திய ஞான சபை தைப்பூச ஜோதி தரிசன விழா வருகின்ற 5-ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி இந்த ஆண்டு 152 ஆம் ஆண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற உள்ளது .
இதில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதும் வந்து இந்த ஜோதி தரிசனத்தை தரிசிப்பார்கள் . எனவே தமிழக அரசு சென்னை மட்டுமில்லாமல் தமிழக முழுவதும் வரும் 5-ம் தேதி டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புனிதநீர் அடங்கிய கடம் யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.
- விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்துவேலி லயன் கரை பகுதியில் சூடாமணி முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதிதாக பிரம்மாண்டமாக சூடாமணி முனியாண்டவர் சிலை அமைக்கப்பட்டு பரிவார தெய்வங்களான கருப்புசாமி, மதுரை வீரன், நாகாத்தம்மன், ஆகிய சந்நிதிகளுக்கு புதுவர்ணம்பூசி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கோவிலின் அருகில் யாக சாலை அமைக்கப்பட்டு செம்மேனிநாத சிவாச்–சாரியார் தலைமையில் கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது. காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் யாகசாலையில் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது.
பின்னர் புனித நீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு சூடாமணி முனியாண்டவருக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு வாணவேடிக்கை நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கைகளில், கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.
- உழவர் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது.
நவக்கிரகங்களில் ஒருவரான சனீஸ்வரர், இங்கு பொங்கு சனீஸ்வராக அருள்பாலிப்பதால் இக்கோவில் பொங்கு சனீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது.
இக்கோவிலில் தனிச்சன்னதியில் பொங்கு சனி பகவான் கைகளில், கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் உழவர் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
- ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி தேரில் எழுந்தருளினார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் சாரங்கபாணி பெருமாள் கோவில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவில், 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்ய தேசமாகும்.
இங்கு பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தில் தேரோட்டம் நடப்பது வழக்கம்.
கடந்த 7-ந் தேதி தைப்பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தைப்பொங்கலை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி தேரில் எழுந்தருளினார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
- தஞ்சை ஆபிரகாம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
- சிறப்பு அலங்காரத்துடன் லட்டு படி சேவை நடந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் லட்டு படி சேவை நடந்தது. இதையடுத்து தஞ்சை மாமணி கோவில் பாகவதர்களால் திவ்ய பிரபந்த சேவை பாடப்பட்டது.
பின்னர் இசை குழுவினரால் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. இதையடுத்து ஜெய சொராலய மாணவிகளின் வினைப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் நிருத்தியாஞ்சலி நாட்டிய கலாலயம் மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது.
பின்னர் பெருமாளுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
- தஞ்சை மேலே வீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது.
- மூலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சை மேலே வீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது.
மூலை அனிமாரின் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். சனிதோஷம் உள்ளிட்ட நவக்கிரகங்கள் தோஷங்கள் மற்றும் வாஸ்து தோஷங்கள் போக்கும் தலமாகும்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் பொங்கல் அன்று சூரியனுக்கு அனுமன் நன்றி தெரிவிப்பதாக ஐதீகம். அதன்படி நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மூலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து மூலை அனுமாருக்கு கரும்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கரும்புகள் அலங்காரத்தில் காட்சியளித்த மூலை அனுமாரை ஏராளமான பக்தர்கள் மனம் உருகி தரிசனம் செய்தனர்.
- ராமநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் செய்தனர்.
- 3-ம் பிரகாரத்தில் உள்ள சபாபதி சன்னதிக்கு மாணிக்கவாசகர் சென்றடைந்தார்.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 3 மணி முதல் ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. பின்னர் ராமநாதசுவாமி சன்னதியில் இருந்து மலர் அலங்காரத்துடன் மாணிக்கவாசகர் புறப்பாடானார். அப்போது திரளான பக்தர்கள் வழிநெடுகிலும் சாமி தரிசனம் செய்தனர். 3-ம் பிரகாரத்தில் உள்ள சபாபதி சன்னதிக்கு மாணிக்கவாசகர் சென்ற டைந்தார்.
அதனைத்தொடர்ந்து அங்குள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற து. காலை 4.15 மணி முதல் 5.15 மணிக்குள் ஆருத்ர தரிசன பூஜைகள் நடந்தன. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது.
- சிறப்புகளையுடைய இக்கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க உமையவள் அபயாம்பிகை மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து புகழ்பெற்ற தலமாகும்.
பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கொடிமரம் முன்பு எழுந்தருளியுள்ள நந்திக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள்பொடி, திரவியபொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் நந்தி அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.
பிரசாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டு தரிசனம் செய்தனர்.
- சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய 4 கால சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
- இந்த கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடந்தது.
சேலம்:
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய 4 கால சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
இந்த கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடந்தது. அந்த ஆண்டு கும்பாபிஷேக விழாவிற்காக பாலாலயம் செய்யப்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படவில்லை. கடந்த செப்டம்பரில் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட உள்ளது.
இதை ஒட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடராஜருக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், பழங்கள் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இந்த சிறப்பு அபிஷேகம் நாளை காலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக சுகவனேஸ்வரருக்கு தங்க நாகாபரணம், அம்மனுக்கு தங்க கவசம் சாத்துபடி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்கிறார்கள்.
இதேபோல் அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகிரி சுப்பிரமணி சுவாமி கோவில், உத்தமசோழபுரம் கராபுரநாதர் கோவில், வேலூர் தான்தோன்றி ஈஸ்வரன் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், சிவன் கோவில் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களின் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்