என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "driver"
- எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரகாசின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
- எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி ஊராட்சி, வேட்டுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி மகன் பிரகாஷ் (வயது 25). வேன் டிரைவரான இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் எடப்பாடி நோக்கி வந்தார்.
எடப்பாடி - கோனேரிப்பட்டி பிரதான சாலையில் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரகாசின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சிலுவம்பாளையம் தம்பாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி, அவரது மகன் கவின் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காவலாளியை டிரைவர் தாக்கினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.
மதுரை
மதுரை ஆரப்பாளையம் டி.டி.மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக இருப்பவர் ஜோசப் (வயது 68). இவர் பணியில் இருந்த போது ஆரப்பாளையம் புட்டு தோப்பு செக்கடி தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் தான் ஓட்டி வந்த ஆட்டோவை திருமண மண்டபத்தின் முன்பு நிறுத்தி உள்ளார். அவரிடம் வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தும்படி ஜோசப் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை ஆபாசமாக பேசி தாக்கினார். இது குறித்து கரிமேடு போலீசில் ஜோசப் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
மதுரை நடராஜ் நகர் ஜான்சன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் சோபிதா அபிதா (வயது 22). இவர் மணப்பெண் அலங்காரம் செய்து வருகிறார். இதனால் பலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். ஆண் நண்பர்களுடனும் அடிக்கடி பேசியுள்ளார். இதனை பாஸ்கரன் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சோபிதா அபிதாவையும், சகோதரி மற்றும் தாயையும் ஆபாசமாக பேசியள்ளார். அதனை சோபிதா அபிதா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன் சோபி ஆபிதாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கரிமேடு போலீசில் சோபிதாஅபிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.
- குருசாமி நேற்று முன்தினம் இரவு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி சென்றார்.
- இரவில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அருகே வந்த போது அவ்வழியாகவந்த வாலிபர்கள் அவரை மறித்து பணம் கேட்டனர்.
தூத்துக்குடி:
தென்காசி மாவட்டம் செங்கோட் டையை சேர்ந்தவர் குருசாமி (வயது 50). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி சென்றார்.
இரவில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அருகே வந்த ேபாத அவ்வழியாகவந்த வாலிபர்கள் அவ ரை மறித்து பணம் கேட்டனர். அவர் மறுக்கவே ஆத்திர மடைந்தவர்கள் அரிவாளால் அவரை வெட்டிவிட்டு அவரிடம் இருந்த ரூ. 35 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடினர்.
இதில் படுகாயமடைந்த குருசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த பரத்விக்னேஷ் (22), மகராஜா (22) மற்றும் 2 பேர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பரத் மற்றும் மகராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
- திருப்பூரை சேர்ந்த, ஒன்பது வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
- ராக்கியாபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், (36) என்பவர் கார் ஓட்டி வந்தார்.
திருப்பூர்:
திருப்பூரில், ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்ட கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரை சேர்ந்த, ஒன்பது வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் உறவினர் திருமணம் நடக்கிறது. இதற்காக கார் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். ராக்கியாபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 36 என்பவர் கார் ஓட்டி வந்தார்.
அப்போது அவர் வீட்டில் இருந்த, ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி நடந்த விபரத்தை பெற்றோரிடம் கூறினார்.அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
- பயணிகளும், கண்டெக்டரும் அவரை ஆசுவாசப்படுத்தி உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் டிரைவர் உடனே பஸ்சை பொறுமையாக இயக்கி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
நத்தம்:
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை மதுரை கடச்சநேந்தலை சேர்ந்த கிருபாகரன் (36) ஒட்டி வந்தார். பஸ் உலுப்பகுடி அருகே வந்தபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சி வலி ஏற்பட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் கிருபாகரன் பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார்.
இதனை தொடர்ந்து பயணிகளும், கண்டெக்டரும் அவரை ஆசுவாசப்படுத்தி உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் டிரைவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் டிரைவர் உடனே பஸ்சை பொறுமையாக இயக்கி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- செல்லதுரை (வயது 23).இவர் நெல் அறுவடை எந்திர டிரைவர். இவர் இவர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலையில் யோகஆஞ்சநேயர் கோவில் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- திருவெண்ணைநல்லூர் போலீசார் உடலை கைப்ப ற்றி, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 23). நெல் அறுவடை எந்திர டிரைவர். இவர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அரசூர் அருகே யோக ஆஞ்சநேயர் கோவில் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருவெண்ணைநல்லூர் போலீசார் உடலை கைப்ப ற்றி, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது பிரேத பரிசோதனை முடித்து செல்லதுரையின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நேற்று வழங்கப்பட்டது. இதனை வாங்க மறுத்த உறவினர்கள், திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
- தனியார் பஸ் டிரைவர்கள் மோதியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
- பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலத்தில் வெளியூர் பஸ் நிலையம் மதுரை மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது. பஸ் நிலையம் எதிரே டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வங்கிகளும் இயங்கி வருகிறது.
வெளியூர் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்தி முந்திச் செல்வதில் தனியார் பஸ் டிரைவர்களுக்க அடிக்கடி தகராறு இருந்து வருகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிவகாசிக்கு செல்லும் தனியார் பஸ் திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றியது. இந்த பஸ்சை கள்ளிக்குடிடய அடுத்துள்ள குராயூரை சேர்ந்த பிச்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சுக்கு அடுத்து மற்றொரு தனியார் பஸ் சிவகாசிக்கு மதுரையில் இருந்து வந்தது. இதை சோளங்குருணியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ்(32) ஓட்டிவந்தார்.
ஏற்கனவே முன்னால் சென்ற பஸ், திருமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிகொண்டிருந்ததை கண்ட பின்னால் வந்த பஸ்சின் டிரைவர் ஆத்திரமடைந்தார். அவர் வேகமாக சென்று ஏற்கனவே நின்று கொண்டிருந்த பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தினார்.
இதில் பிச்சை ஓட்டி வந்து நிறுத்திய பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக பிச்சை மற்றும் 2-வதாக வந்த பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் சிவரக்கோட்டையை சேர்ந்த ஜெயராஜ்(41) ஆகியோர் ஏன் பஸ்சை எடுக்கவில்லை என்று கூறி பிச்சையுடன் தகராறு செய்தனர். 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
இதுகுறித்து பஸ் டிரைவர் பிச்சை, தன்னை மற்றொரு பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் ஜெயராஜ் ஆகியோர் இரும்பு ராடு கொண்டு தாக்க முயன்றதாக திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நிலையம் எதிரேயே தனியார் பஸ் டிரைவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க திருமங்கலம் போலீசார், தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பஸ்ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தன்னார்வ அமைப்பினர், பயணிகள் வலியுறுத்தினர்.
- இன்று காலை கடம்பூர் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நல்லசாமி சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கயத்தாறு:
கயத்தாறை அடுத்த கடம்பூர் அருகே உள்ள சிதம்பரபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 38). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் கடந்த சில மாதங்க ளாக அவர் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று காலை கடம்பூர் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற அவர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து ெரயில்வே போலீசார் அங்கு வந்து நல்லசாமி உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இசைக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (29) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
- சின்னதுரை, இசையை அவதூறாக பேசி செங்கற்களால் தாக்கினார்.
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள்நகர், கீழத்தெருவை சேர்ந்தவர் இசை (வயது26). கார் டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (29) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இசை தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சின்னதுரை, இசையை அவதூறாக பேசி செங்கற்களால் தாக்கினார். இதில் காயமடைந்த இசை நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக சின்னதுரையை தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே இரும்பு பொருட்களை திருடி மினி வேனில் கொண்டு சென்ற டிரைவர் போலீஸ்காரரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார்கடலூர் அருகே குள்ளஞ்சாவடி ராமநாதன் குப்பம் கூட்ரோடு பகுதியில் குள்ளஞ்சாவடி போலீஸ்காபெரியகுப்பம் தனியார் கம்பெனியிலிருந்து திருடப்பட்ட 2 டன் இரும்பு பொருட்கள் அதில் இருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து இரும்பு பொருட்கள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் எருமாபாளையம் சுந்தர்மாளிகை தெரு மாரியம்மன் கோவில் எதிரில் வசித்து வந்த வேன் டிரைவர் மாயமானார்.
- கடந்த 20-ந்தேதி மதியம் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார். அன்று மாலை 5.30 மணி அளவில் அவர் தனது மனைவி சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் கோவை யில் வாடகைக்கு வண்டி ஓட்ட சென்றுள்ளேன்.
சேலம்:
சேலம் எருமாபாளையம் சுந்தர்மாளிகை தெரு மாரியம்மன் கோவில் எதிரில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 45). இவருடைய மனைவி சங்கீதா (40). இந்த தம்பதிக்கு பிரகாஷ் (23) என்ற மகனும், பிரதிஷா(21) என்ற மகளும் உள்ளனர்.
வேன் டிரைவர் சிவகுமார் சன்னியாசி குண்டு அருகில் சொந்தமாக பந்தல் அமைக்கும் கடை வைத்தும், வேன் வைத்தும் டிரைவராக தொழில் செய்து வந்தார். இந்த வேன் வாங்குவதற்கும் பிள்ளை–களை படிக்க வைப்பதற்கும் சில வருடங்களுக்கு முன்பு அவர், வட்டிக்கு பணம் 7 லட்சம் வரை கடன் வாங்கினார். பணம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர்.
இந்த நிலையில் அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் சிவகுமார் கவலை அடைந்து புலம்பிக் கொண்டிருந்தார். கடந்த 20-ந்தேதி மதியம் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார். அன்று மாலை 5.30 மணி அளவில் அவர் தனது மனைவி சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் கோவை யில் வாடகைக்கு வண்டி ஓட்ட சென்றுள்ளேன்.
நாளை வீட்டிற்கு வந்து விடுகிறேன் என கூறினார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிவகுமாரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என தெரியவில்லை.
'இது குறித்து சங்கீதா கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிவகுமார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சிவகுமார் கடனுக்கு பயந்து தலைம–றைவாக உள்ளாரா? அல்லது கந்து வட்டி கும்பல், சிவகுமாரை கடத்தினார்களா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவையில் முகாமிட்டு சிவகுமாரை தேடி வருகின்றனர்.
- லாரி டிரைவர் மகேஷ் 7 வயது சிறுமி ஒருவரிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
- சிறுமி கத்தி கூச்சலிடவே மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
நெல்லை:
பாளை அருகே உள்ள சீவலப்பேரி பொட்டல் நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது 31). லாரி டிரைவர். சம்பவத்தன்று மகேஷ் ஒரு 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கதினார் ஓடி வந்தனர்.
இதனைப் பார்த்த மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் சம்பவம் குறித்து சீவலப் பேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.
கைது
போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மகேசை பிடித்து கைது செய்தனர்.அவர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்