என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Electric"
- இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் விலை ரூ.1,19,555 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- குருகிராம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் மின்சார வாகனம் இதுவாகும்.
ஜிடி டெக்ஸா (GT Texa) என்கிற பெயரில் புதிய எலெக்ட்ரிக் பைக்கை ஜிடி ஃபோர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் விலை ரூ.1,19,555 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குருகிராம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் மின்சார வாகனம் இதுவாகும்.
இந்த எலெக்ட்ரிக் பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.
இந்த பைக்கின் எலெக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்கும் 3.5kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் செய்வதன் மூலம் அதிகப்பட்சமாக 120 - 130 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் எனவும் ஜிடி ஃபோர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை வெறும் 4- 5 மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்து விடலாம்.
இந்த எலெக்ட்ரிக் பைக்கின் எடை வெறும் 120 கிலோ மட்டுமே ஆகும். ஆனால் இந்த பைக்கினால் 180 கிலோ எடை வரை சுமக்க முடியும்.
- இந்தியர்களின் பிரியமான எஸ்.யு.வி. ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyndai Creta) இருக்கின்றது.
- கடந்த மாதம் மட்டும் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களின் பிரியமான எஸ்.யு.வி. ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyndai Creta) இருக்கின்றது. இந்த கார் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்.யு.வி. கார் மாடல் என்பதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகின்றது.
கடந்த மே மாதத்தில் அதிகமான விற்பனையான கார்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது ஹூண்டாய் கிரெட்டா. கடந்த மாதம் மட்டும் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிரெட்டாவின் ஈவி (EV) எனப்படும் ஹூண்டாய் எலக்ட்ரிக் ரக காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தான் கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்தையும், அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் வெளியீட்டையும் நாம் எதிர்பார்க்கலாம்.
தற்போது இந்தியா சாலைகளில் இந்த கிரெட்டா EV-யை சோதனை செய்து வருகிறது ஹூண்டாய். அப்படி கிரெட்டா EV சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கிரெட்டா EV மாடல் ரூ.15 லட்சம் விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரெட்டா EV காரில் என்னனென்ன சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
- இவர், வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடுப்படுத்து முயன்றார்.
- இதில், தூக்கி எறியப்பட்ட, கிருஷ்ணவேணி, ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
கரூர
கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள பெரியவ ரப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(வயது 29). இவர், வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடுப்படுத்து முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உள்ளது. இதில், தூக்கி எறியப்பட்ட, கிருஷ்ணவேணி, ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து உறவினர்கள் புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் கிச்சிபாளையம், களரம்பட்டி மெயின் ரோட்டில் எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பர் கடை வைத்து நடத்தி வருகிறார்.
- கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கல்லாவில் இருந்து ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் கிச்சிபாளையம், களரம்பட்டி மெயின் ரோட்டில் வைத்தியலிங்கம் (வயது 48) என்பவர் எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தார்.
அப்போது, கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கல்லாவில் இருந்து ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வைத்தி யலிங்கம் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டின் அருகே உள்ள மின்சார மீட்டா் பெட்டியின் கம்பியை எதிா்பாராத விதமாக தொட்டுள்ளாா்.
- விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனா்.
காங்கயம் :
மூலனூரை அடுத்த நத்தப்பாளையம் பகுதியை சோ்ந்த பாலமுருகன் மகன் செல்வகுமாா் (வயது 14). இவா் நத்தப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் 8- ம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளிக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் காங்கயம் சக்தி நகா் அருகே உள்ள தனது உறவினா் வீட்டுக்கு அவா் வந்துள்ளாா்.
இவா் தன் நண்பா்களுடன் விளையாடி கொண்டிருந்தாா். அப்போது வீட்டின் அருகே உள்ள மின்சார மீட்டா் பெட்டியின் கம்பியை எதிா்பாராத விதமாக தொட்டுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா்.அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் செல்வகுமாா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனா்.
- எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
அதே சமயம் இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . இந்த மின் கம்பங்கள் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளதால் அடிப்பகுதி பெயர்ந்தும் சேதமடைந்தும் காணப்படுகிறது.
சில மின் கம்பங்கள் கம்பிகளின் உதவியுடன் தொங்கியபடி உள்ளன. சில மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. முற்றிலும் சாய்ந்தால் பெரும் அசம்பாவிதம் நடக்கும், உயிர்ப்பலி ஏற்படும் என்பதால் அந்த பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஏரியில் உள்ள மின்கம்பங்களை மாற்றி வேறு இடத்தில நட மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்னல்தா புதுக்குளம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் நடராஜன் பல்பை கழட்டிவிட்டு புதிய பல்பு மாட்டிக்கொண்டிருந்தார்
- அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள சென்னல்தா புதுக்குளம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 62). இவர் தனது வீட்டில் எரியாமல் இருந்த பல்பை கழட்டிவிட்டு புதிய பல்பு மாட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது உடலில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை பாவூர்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்ட ர்கள் தெரிவித்துவிட்டனர்.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டம் நகர்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது.
- இதில் நகர்ப்புற மின் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டம் நகர்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி.நகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி உள்ளிட்ட மின் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் நகர்ப்புற மின் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
- காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
- வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பார்வையிட்டனர்.
அரவேணு
நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு வனசரகத்தில் யானை, காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களில் நடமாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
நடு ஹட்டி கிராமத்ைதயொட்டிய தேயிலை தோட்டத்தில் நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேயிலை தோட்டத்திற்குள் காட்டெருமை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வனசரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பார்வையிட்டனர். பின்னர் காட்டெருமை இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, தேயிலை தோட்டம் வழியாக செல்லும் மின்கம்பி, அறுந்து கிடந்ததை பார்த்தனர். இதனால் காட்டெருமை மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேயிலை தோட்ட பகுதியில் மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. அப்போது தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை எதிர்பாரத விதமாக மின்சார கம்பியில் மோதி இறந்துள்ளது என்றனர்.
இதையடுத்து வனத்துறையினர் இன்று காலை கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் இறந்த காட்டெருமையின் உடலை உடற்கூராய்வு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
- மணல் பரப்பில் வைத்து வயரை எரித்து மோட்டாரை திருடி சென்றுள்ளனர்.
- ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் பஞ்சாயத்து நல்லம்மாள்புரம் குளக்கரையில் பஞ்சாயத்துக்கு சொந்தமான மின்மோட்டார் அறை உள்ளது.
இந்த அறை கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே இருந்த மின்மோட்டார் மற்றும் வயர்களை திருடி சென்று அருகில் உள்ள மணல் பரப்பில் வைத்து வயரை எரித்து மோட்டாரை திருடி சென்றுள்ளனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பஞ்சாயத்து உறுப்பினர் அன்னலிங்கம் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள மூன்றம்பட்டியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருடைய மகன் ஞானவேல்(வயது28). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்று தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய அண்ணன் முனிராஜ் ஞானவேலை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஞானவேல் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் மின்சாரம் தாக்கி பலியான ஞானவேலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த ஞானவேலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்