search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl student"

    • மாலையில் மாரிமுத்து வீட்டிற்கு வந்தபோது கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.
    • அதிர்ச்சியடைந்த அவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மீனாட்சி தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார்.

    ஆத்தூர்:

    முக்காணி அருகே உள்ள குருவிதுறையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் மீனாட்சி (வயது15). இவர் முக்கானி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாரிமுத்து மற்றும் அவரது மனைவி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மீனாட்சி மட்டும் தனியாக இருந்தார். மாலையில் மாரிமுதது வீட்டிற்கு வந்தபோது கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மீனாட்சி தூக்கிட்ட நிலையில் காணப் பட்டார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது ெதாடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தந்தை பெரியார் என்ற தலைப்பில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சு போட்டி கடந்த 10-ந்தேதி நடந்தது.
    • இப்போட்டியில் சிவசைலநாத நடுநிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி பாலமுகனா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் பெற்றார்.

    செங்கோட்டை:

    தென்காசி ஐ.சி.ஐ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ் வளா்ச்சித்துறை சார்பில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சு போட்டி கடந்த 10-ந்தேதி நடந்தது. இப்போட்டியில் நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி பாலமுகனா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் பெற்றார்.

    இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியா் சுதாநந்தினி பள்ளியின் சார்பில் பாராட்டி பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். வெற்றி பெற்ற மாணவியையும், அதற்கு பயிற்சி அளித்த ஆசிரியா் பிரபாகரன், அதற்கு உறுதுணையாக இருந்த லதா ஆகியோரை பள்ளி நிர்வாகி கணேஷ்ராம், பள்ளிச்செயலா் தம்புசாமி, பள்ளிக்குழு உறுப்பினா் மணிகண்டன், ஆசிரியா்-ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

    • கடந்த 15-ந் தேதி நிறுவனத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை.
    • இதையடுத்து மாணவியின் தாயார் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி முனைஞ்சி பட்டியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 15-ந் தேதி நிறுவனத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தாயார் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • அன்சாரி மாணவி ஒருவரிடம் பாலியல் நோக்கத்துடன் பேசியதாக கூறப்படுகிறது.
    • போக்சோ சட்டத்தின் கீழ் முகமது அன்சாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி ஆசாத்நகரில் தனியார் இன்ஸ்டிடியூட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் முதல்வராக தென்காசி நடுப்பேட்டை தெருவை சேர்ந்த முகமது அன்சாரி(வயது 55) என்பவர் இருந்து வருகிறார். இவர் 17 வயதான கல்லூரி மாணவி ஒருவரிடம் பாலியல் நோக்கத்துடன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் குற்றாலம் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் முகமது அன்சாரி மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அகில இந்திய அளவிலான குண்டு எரிதல் போட்டி நடைபெற்றது.
    • தமிழகம் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த ப்ரித்தி சிவா பிச்சம்மாள் என்ற கல்லூரி மாணவி கலந்து கொண்டு 3-ம் இடம் பிடித்தார்.

    தூத்துக்குடி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர்கான அகில இந்திய அளவிலான குண்டு எரிதல் போட்டி நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த ப்ரித்தி சிவா பிச்சம்மாள் என்ற கல்லூரி மாணவி கலந்து கொண்டார்.

    இந்த போட்டியில் அவர் இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்தார். பரிசு, சான்றிதழ்களுடன் சொந்த ஊர் திரும்பிய ப்ரித்தி சிவா பிச்சம்மாளுக்கு தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபயிற்ச்சி மேற்கொள்வோர் சங்கத்தினர் சார்பாக மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்கத்தை சேர்ந்த சேகர், பழனி வேல், துரைசிங்கம், செல்லத்துரை,ஜெகன், மணி குட்டி, பிரபாகர்,சண்முகம் உள்ளிட்ட பலர் மாணவி ப்ரித்தி சிவா பிச்சம்மாளுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • குடும்ப சூழ்நிலை காரணமாக லோகநாதனின் மூத்த மகள் தாமரைகனி கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
    • ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் மற்றும் போலீசார் நாசரேத் மகளிர் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து மாணவியை பள்ளியில் சேர்த்தனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தி லுள்ள பள்ளிகளில் கல்வி பயிற்று படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ- மாணவிகளை கண்டு அறியப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதன் பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில், ஆழ்வார் திருநகரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொ ண்டதில் ஆழ்வார் திருநகரி அண்ணா நகரிலுள்ள கூலி தொழிலாளி லோகநாதன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. மூத்த மகள் 9-வது வகுப்பும், இரண்டாவது மகள் 8-வது வகுப்பும் நாசரேத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக மூத்த மகள் தாமரைகனி கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். உறவினர்கள் மாணவியிடம் பள்ளிக்கு ஏன் செல்லவில்லை என்று கேட்டதற்கு சரியான பதிலும் சொல்லவில்லை எனவும், மாணவியின் தகப்பனார் லோகநாதன் மதுவுக்கு அடிமையான நிலையில் மகள்களை சரிவர கவனிக்கவில்லை எனவும் உறவினர்கள் வீட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

    இதன் பெயரில் ஸ்ரீவை குண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் மற்றும் போலீசார் மாணவியின் உறவினர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று அறிவுரை வழங்கியதில் மேற்கொண்டு படிக்க ஒத்துகொண்ட நிலையில் படிப்பதற்கு தேவையான உபகரணங்கள் காவல்துறையினர் சார்பில் வாங்கி கொடுத்து பள்ளிக்கு அவரது காரில் நாசரேத் மகளிர் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து பள்ளியில் சேர்த்தனர். மேலும் மாணவி சம்பந்தப்பட்ட தகவலுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என கூறி வந்தனர். மேலும் மாணவியின் தகப்பனார் லோகநாதன் குடிப்பழக்க த்தில் இருந்து விடுபட்டு மகள்களை சரியாக கவனிக்கவும் அறிவுரைகள் கூறினார்கள்.

    ஏற்கனவே கருங்குளம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆழ்வார் திருநகரி டீக்கடையில் வேலை பார்த்து வந்ததும் அவரை மீண்டும் பள்ளியில் சேர்க்க டி.எஸ்.பி. மாயவன் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. காவல்துறையின் நடவடிக் கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • பெண் குழந்தைகளுக்கான சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.
    • இந்த சிறப்பு பயிற்சி மூலம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வட்டாரத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளிகளில் தமிழ்நாடு அரசின் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 8 அரசு நடுநிலைப் பள்ளிகள், 8 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 6,7,8 ஆகிய வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகள் வெளியே போகும் பொழுதும், வரும்பொழுதும் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த தற்காப்பு பயிற்சிகள் அந்தந்த பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள் மேற்பார்வையில், தற்காப்பு கலை பயிற்சியாளா்கள் ராம்ராஜ், இப்ராஹிம், காக்கும்பெருமாள், சர்மா, ராணி சந்திரா ஆகியோர் கராத்தே, டேக் வாண்டோ பயிற்சிகளை மாணவிகளுக்கு அளித்தனா். மேலும் இந்த சிறப்பு பயிற்சி மூலம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பயன் பெறுகின்றனர். தற்காப்பு கலை பயிற்சி சார்ந்த செயல்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி, வட்டார பெண் கல்வி ஒருங்கிணைப்பாளர் சுகந்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனா்.

    • முதலிடம் பெற்ற மாணவி லாவண்யாபாஸ்கர், முதல்கட்ட தேர்வில் முன்னேறி உலகளாவிய 2-ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
    • உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி லாவண்யா பாஸ்கர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர் பள்ளியில் 10- ம் வகுப்பு பயிலும் மாணவி லாவண்யா பாஸ்கர், கடந்த நவம்பர் மாதம் உலக அளவில் நடைபெற்ற ஒலிம்பியாட் ஆங்கில தேர்வில் 100 சதவீத தேர்ச்சியில் முதலிடம் பெற்று உலக சாதனை செய்துள்ளார்.

    இந்த தேர்வில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 300 பள்ளிகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளியை சேர்ந்த மாணவி லாவண்யாபாஸ்கர் தேசிய, மாநில, மாவட்ட மற்றும் உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    முதலிடம் பெற்ற மாணவி லாவண்யாபாஸ்கர், முதல்கட்ட தேர்வில் முன்னேறி உலகளாவிய 2-ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். உடன்குடி கிராமத்தை சேர்ந்த லாவண்யா - பாஸ்கர் என்பவரது மகள் ஆவார். அவர் தற்போது சவுதியில் கணினி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் மாணவி லாவண்யாவுக்கு கேடயம் வழங்கி கவுரவப்படுத்தி னார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் மற்றும் முதல்வர் பாத்திமா எலிசபெத் மாணவியை பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். ஆசிரியர்கள் மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கபட்டது. இதற்காக காலை 6 மணி முதல் சிறப்பு வகுப்புகள் எடுத்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

    உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி லாவண்யா பாஸ்கர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவிக்கு சபாநாயகர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியைகள், பெற்றோர் உள்பட பலர் கலந்துள்ளனர்.

    • விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
    • மாநில அளவிலான தடகள போட்டியில் 3000-மீ ஓட்டப்பந்தயத்தில் வெறும் காலில் ஓடி 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவி ராதிகாவுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது, திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் 3000-மீ ஓட்டப்பந்தயத்தில் வெறும் காலில் ஓடி 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்ற லட்சுமிநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த விளாத்திகுளம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி ராதிகாவுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை ரோஸ்லின் சாந்தி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, நகர செயலாளர் வேலுச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் வேல்ஈஸ்வரி, அன்பில்நாராயண மூர்த்தி, குறிஞ்சி ராம்குமார், பிரியா முனியசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பக்கத்து வீடு என்பதால் சிறுமியிடம், கவுதம் நட்பாக பழகி வந்தார்.
    • 2 பேரும் கடந்த ஒரு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    கோவை 

    கோவை சிறுமுகையை சேர்ந்தவர் 17 வயது மாணவி.இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கவுதம்(வயது19).கூலித்தொழிலாளி. பக்கத்து வீடு என்பதால் சிறுமியிடம், கவுதம் நட்பாக பழகி வந்தார்.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி 2 பேரும் கடந்த ஒரு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவியை கவுதம் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். மாணவியும் அங்கு சென்றார். அப்போது அவரை அழைத்து கொண்டு கவுதம் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு வைத்து மாணவியை திருமணம் செய்தார். பின்னர் தனது பெற்றோரிடம் சிறுமியை மேஜர் என கூறி அங்கு வசித்தார்.

    அப்போது பல முறை மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர் மாணவியை பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும் மாணவி மைனர் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர் சம்பவம் குறித்து சிறுமுகை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கவுதம் சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    போலீசார் கவுதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலத்தில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு பெற்றோர்கள் செருப்படி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சேலம்:

    சேலம் மெய்யனூர்பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சதீஷ் (வயது 24) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதுடன், சில்மிஷமும் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.  

    இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால் அந்த ஆசிரியர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் ஆசிரியர் சதீஷ் தொடர்ந்து மாணவிகளுக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒரு மாணவியின் இடுப்பை பிடித்து அடிக்கடி சில்மிஷம் செய்து வந்தார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களது உறவினர்களுடன் பள்ளிக்கு வந்தனர். 
    மேலும் அவர்களுடன் மற்ற மாணவிகளின் பெற்றோரும் வந்தனர். அவர்கள் பள்ளிக்குள் சென்று ஆசிரியர் சதீஷை வெளியே இழுத்து வந்தனர். பின்னர் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு வைத்து அவரை செருப்பால் சரமாரியாக அடித்தனர். இதனால் வலி தாங்காமல் அலறிய சதீஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை மடக்கிப்பிடித்து நடு ரோட்டில் வைத்து அடித்து உதைத்தனர். 
     
    இதைப்பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆசிரியரின் சில்மிஷம் பற்றி அறிந்ததும் அவர்களும் தங்கள் பங்குக்கு சதீஷை பின்னி எடுத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் ஆசிரியர் சதீஷ் மயக்கம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளப்பட்டி போலீசார், ஆசிரியரை அங்கிருந்து மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதையடுத்து அங்கு திரண்ட பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள், ஆசிரியர் சதீஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் அனுமதிக்க கூடாது, மாறாக பெண் ஆசிரியர்களை நியமித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

    பின்னர் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக ஆசிரியர் சதீஷ் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆசிரியரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர். 

    சேலத்தில் சமீப காலமாக மாணவிகள், சிறுமிகளுக்கான பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   
    எலும்புருக்கி நோய் பாதிப்பால் சிறப்பு அனுமதி பெற்று படித்து சமீபத்தில் உயிரிழந்த கோவை மாணவி பிளஸ் 1 தேர்வில் 600-க்கு 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். #Plusoneresult
    கோவை:

    கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சிட்டி பாபு. கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகள் பிரித்தி.

    இவர் சிறு வயது முதல் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆனால் அவர் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.

    தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் படிப்பில் சுட்டியாக விளங்கினார். அவர் சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார். பிரித்தியால் நடக்க முடியாது என்பதால் அவரை தாய் புவனேஸ்வரி தனது தோளில் சுமந்து சென்று பள்ளியில் விட்டு வந்தார்.

    பள்ளி முடியும் வரை தனது மகளுக்கு உதவியாக இருந்தார். இதன் பலனாக மாணவி பிரித்தி நன்கு படித்தார். அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 468 மதிப்பெண் பெற்றார்.

    இதனை தொடர்ந்து பிரித்தி கலைப்பிரிவில் படிக்க விரும்பினார். ஆனால் சீரநாயக்கன் பாளையம் மேல்நிலைப்பள்ளியில் கலைப்பிரிவு பாட வகுப்புகள் இல்லை. மற்ற பாடப்பிரிவுகள் தான் இருந்தது.

    இதனால் தன்னால் மேற்படிப்பு படிக்க முடியாமல் போய் விடுமோ என கவலை அடைந்தார். பிரித்தியின் தாயும் வேறு பள்ளியில் மகளை சேர்த்தால் எப்படி அவளை சுமந்து கொண்டு செல்வது என வருத்தத்தில் இருந்தார்.

    இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் கல்வி அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று அதே பள்ளியில் வணிக கணிதம் பிரிவு கொண்டு வந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரித்தி அதே பள்ளியில் மீண்டும் சேர்ந்து பிளஸ்-1 படித்தார்.

    பிளஸ்-1 பொது தேர்வையும் அவர் எழுதினார். தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்த அவர் பொழுது போகாமல் தவிர்த்து வந்தார். தேர்வு முடிவை அவர் ஆவலுடன் எதிர் பார்த்து இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரித்தி திடீரென மரணம் அடைந்தார்.

    அவரது மரணம் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதி பொது மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில் மாணவி பிரித்தி 471 மதிப்பெண் பெற்று இருந்தார்.

    அவர் தமிழில் 93, ஆங்கிலம்- 54, பொருளாதாரம்-68, வணிக கணிதம்- 74, வணிகவியல்-88 அக்கவுண்டன்சி -94 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.

    பிளஸ்-1 தேர்வில் 471 மதிப்பெண் பெற்ற மாணவி தற்போது உயிருடன் இல்லை என்பதை நினைத்து பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கண்ணீர் வடித்தனர். #Plusoneresult
    ×