என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "gold coin"
- அகழாய்வில் தற்போது வரை 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
- 3-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க நாணயம் கிடைத்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் தற்போது வரை 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள், ஆட்ட காய்கள், சுடுமண் முத்திரைகள், ஆபரணங்கள், செப்புக்காசுகள், சூது பவளம், செவ்வந்திக்கல் உள்பட 1,800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதிதாக தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏற்றுமதி வணிகத்திற்கு பயன்படுத்திய தென்னிந்திய பணம் என்று சொல்லப்படும் தங்க நாணயம் சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளது.
இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் கூறுகையில், 'தங்க நாணயத்தின் ஒரு பகுதி இதழ்கள் வடிவிலும், மறுபகுதியில் புள்ளி கோடுகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழர்கள் தங்க ஆபரணம் போன்று தங்க நாணயத்தையும் நுணுக்கமான வேலைபாடுகளுடன் செய்துள்ளனர். 3-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க நாணயம் கிடைத்துள்ளது.
இந்த தங்க நாணயத்தை பார்க்கும்போது முன்னோர்கள் அதிகமாக ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
- பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன.
- இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் ஷாருக்கான் தான்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் இந்திய சினிமாத்துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன
இந்நிலையில், ஷாருக்கானுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அவரின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயம் ஒன்றை பாரீஸில் உள்ள க்ரெவின் மியூஸியம் வெளியிட்டுள்ளது.
இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக் கான் படைத்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர்
- மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்
சென்னை தியாகராயர் நகரில் பிரபல நகைக் கடையில் 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியாக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் மீது நகைக் கடையின் மேலாளர் சந்தோஷ்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர். 9.47 கிலோ தங்கக் காசுக்கு மட்டும் பணம் கொடுத்த சகோதரர்கள் மீதமுள்ள 28.5 கிலோ தங்கக் காசுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.600 கோடி மோசடி செய்ததாக சகோதரர்கள் கணேஷ் மீது சுவாமிநாதன் மீது வழக்குகள் உள்ளன. மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
நிதி நிறுவனம் நடத்தி சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியதால் இவர்கள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
- இன்று காலை வழக்கம் போல் தனியார் ஷோரூமை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
- தடயவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
கடலூர்:
கடலூர் - சிதம்பரம் சாலையில் செல்லங்குப்பம் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமை நேற்று இரவு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்று விட்டனர். இன்று காலை வழக்கம் போல் தனியார் ஷோரூமை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்தி ருந்தது. அங்கு ஒரு அறை யில் வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைந்து பொருட் கள் சிதறி கிடந்தது. பின்னர் லாக்கரை சென்று பார்த்த போது 3 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் 6 கிராம் தங்க நாணயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. கொள்ளையர்கள் ஷோரூம் க்குள் எப்படி வந்தனர்? என பார்வை யிட்ட போது, பின்புறம் இருந்த ஜன்னலை அறுத்து மர்ம நபர்கள் உள்ளே வந்து பணம் மற்றும் தங்க நாணயத்தை திருடியது தெரியவந்தது.
இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப் புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். கடலூர் - சிதம்பரம் சாலையில் மக்கள் நட மாட்டமும், வாகன போக்கு வரத்தும் 24 மணி நேரமும் இருந்து வரும் நிலையில் மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நாணயத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது.
- ஆந்திர மாநில தொல்லியல் துறை தங்க நாணயங்களை இன்னும் கைப்பற்றவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சித்தேபள்ளி கிராமத்தில் அங்காளம்மா கோவில் உள்ளது.
இந்த கோவில் அருகே உள்ள மலையில் பாறாங்கல் ஒன்றின் அடியில் நேற்று தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது. இதில் 450-க்கும் மேற்பட்ட தங்கக் காசுகள் இருந்தன.
இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) இயக்குனர் கே முனிரத்தினம் ரெட்டி கூறுகையில்:-
புதையலில் இருந்த தங்க காசுகள் 15 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளில் இருந்த தங்க நாணயங்கள், விஜயநகர மன்னர் I மற்றும் II ஹரிஹரர் மற்றும் டெல்லி சுல்தான்களுக்கு சொந்தமானது.
ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது. இப்பகுதியில் உள்ள பழமையான கோவிலுக்கு அருகிலேயே இந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது.
இடைக்காலங்களில், முறையான வங்கி முறை இல்லாததால், மக்கள் தங்கள் பணத்தை கோவில்களில் டெபாசிட் செய்தனர்.
ஆந்திர மாநில தொல்லியல் துறை தங்க நாணயங்களை இன்னும் கைப்பற்றவில்லை.
இந்த நாணயங்களை அருங்காட்சியகங்களில் வைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
- ஆறுமுகநேரியில் நகர தி.மு.க. செயலாளரின் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
- புதிய உறுப்பினர்களை சேர்த்தவர்களை பாராட்டி தங்க காசுகள் மற்றும் வெள்ளி காசுகள் வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த கலாவதி கல்யாண சுந்தரம் தலைவராகவும், கல்யாணசுந்தரம் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
தங்க காசுகள்
இவர்கள் கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற போது அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் தங்களின் சொந்த செலவில் இருசக்கர வாகனம் வழங்கினர். இது மாநில அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. வில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இதன்படி ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் அதிக உறுப்பி னர்களை சேர்த்த தி.மு.க .வை சேர்ந்த 6 பேருக்கு தங்க காசுகளையும், 20 பேருக்கு வெள்ளி காசுகளையும் நகர தி.மு.க. செய லாளர் நவநீத பாண்டியன் வழங்கி உள்ளார்.
அலுவலகம் திறப்பு
ஆறுமுகநேரியில் நகர தி.மு.க. செயலாளரின் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நகரச் செயலாளர் நவநீத பாண்டி யன் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி அமைப் பாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன் வரவேற்று பேசினார். பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்பு ரையாற்றினார்.
தொடர்ந்து அவர் கட்சிக்கு அதிகப்படியான புதிய உறுப்பினர்களை சேர்த்தவர்களை பாராட்டி தங்க காசுகள் மற்றும் வெள்ளி காசுகளை வழங்கி னார். அதன்படி ஜான் பாஸ்கர், சரவண வெங்க டேஷ், மகேஷ், செல்வம், ஜெயக்குமார், முகேஷ்குமார் ஆகியோர் தங்க காசுகளை பெற்றுக் கொண்டனர். மேலும் 20 பேருக்கு வெள்ளி காசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் வருகிற 17-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபெற இருக்கும் பி.எல்.ஏ.2 பயிற்சி பாசறை கூட்டத்தில் தகுதியான அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதென்று வலியுறுத்தப்பட்டது. விழாவில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தெற்கு மாவட்ட துணை அமைப் பாளர் மகேஷ், 14-வது வார்டு கவுன்சிலர் நிர்மலா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசு தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
பெற்றோரின் ஆங்கில மோகத்தால் அரசு பள்ளிகள் மூடப்படும் நிலை உருவானதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பெற்றோர் மத்தியில் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் குறைந்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் 17 மாணவர்கள் மட்டுமே படித்ததால் அந்த பள்ளி கடந்த வாரம் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய 10 ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்.
இந்தநிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பள்ளியில் சேர்ந்தால் ஒரு கிராம் தங்க நாணயம், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு கோவையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கு பலன் அளிக்கும் வகையில் நேற்று 2 மாணவிகள் உள்பட 3 பேர் பள்ளியில் சேர்ந்தனர். இதனால் மாணவர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஷ் கூறும்போது, பள்ளியில் நாளை மேலும் 4 மாணவர்கள் சேர உள்ளனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துவிடும். கல்வி அதிகாரிகள் முன்னிலையில் புதிய மாணவர்களுக்கு தங்க நாணயம் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார். #Tamilnews
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள துலுக்கவிடுதி வடக்கு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டுமென கிராம மக்கள் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த 1 மாதகாமாக கிராம மக்கள் வீடு வீடாக சென்று பெற்றோர்களைச் சந்திந்து தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆலோசனை வழங்கினர். அதனை ஏற்றுக் கொண்ட பெரும்பாலான பெற்றோர்கள தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்தனர்.
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களை வரவேற்று பரிசுகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேராவூரணி வட்டார தொடக்க கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ( பட்டுக்கோட்டை) பாண்டியன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ. கோவிந்தராசு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
அரசு பள்ளியில் சேரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் துலுக்கவிடுதி பள்ளி வளர்ச்சி கரங்கள் மற்றும் நேரு நற்பணி மன்றம், முன்னாள், இன்னாள் இளைஞர்கள் ஆகியோர் இணைந்து 28 மாணவர்களுக்கு தலா 1 கிராம் தங்கநாணயத்தை பரிசாக வழங்கினர். பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் 28 மாணவர்களுக்கும் தலா ஆயிரம் வீதம் வழங்கினார். 57 மாணவர்களுக்கு இலவச பள்ளிச் சீருடைகளை பார்த்தசாரதி வழங்கினார்.
விழாவில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகலாதன், துணைத்தலைவர் துரைமாணிக்கம், கவுரவத் தலைவர் அண்ணா பரமசிவம், ராமநாதன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஆனந்தி, பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் செல்வராசு, துணைத் தலைவர் மாரிமுத்து, அன்னையர் குழு தலைவி மகேஸ்வரி, பேராவூரணி கான் முகமது, ராமையன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வேலு, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகனை துலுக்கவிடுதி வடக்கு கிராம மக்கள் செய்திருந்தனர். தலைமை ஆசிரியை வாசுகி நன்றி கூறினார். # tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்