search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Love Dispute"

    • சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் முரளி (வயது 22), கூலி தொழிலாளி.

    இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், முரளியை எச்சரிக்கை செய்தனர்.

    இருப்பினும் முரளி அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேச வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் அண்ணன் சந்தோஷ், முரளியை பலமுறை கண்டித்துள்ளார்.

    இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முரளி இன்று காலை தும்பேரிக்கு வந்தார்.

    இதனைப் பார்த்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த முரளி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கி இருந்த சந்தோஷை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
    • ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை திருபுவனை அருகே சன்னியாசி குப்பம் பேட் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் கீர்த்தனா (வயது18). இவர் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

    இவரை அதே பகுதியை சேர்ந்த உறவினர் முகேஷ் (23) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது காதலை மாணவியிடம் பலமுறை கூறியும், அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று காலை கீர்த்தனா கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். இதற்காக மதடிகப்பட்டில் இருந்து பஸ் ஏறி சன்னியாசிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கத்திக்குத்தில் மாணவியின் தலை, கழுத்து பகுதியில் வெட்டுக்காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கீர்த்தனா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

    இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்த மாணவியின் தம்பி அபினேஷ் தனது நண்பருடன் மொபட்டில் அங்கு வந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது அக்காளை தூக்கி மொபட்டில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.

    மாணவியை எடுத்து வந்ததை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே கீர்த்தனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அபினேஷ் கதறி அழுதான்.

    மாணவி படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டனர். இதற்கிடையே கீர்த்தனா இறந்தது பற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். மாணவியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர் ஹரி தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    மாணவி படுகொலை தொடர்பாக திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முகேஷை வலைவீசி தேடி வருகின்றனர். முகேஷ் மீது ஏற்கனவே அடிதடி, திருவண்டார்கோவில் மதுபான கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    முகேஷ் பெயர், போலீசாரால் பராமரிக்கப்பட்டு வரும் ரவுடிகள் சரித்திர பதிவேட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.
    • அதைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவுக்கு ஹரிஹரன் தொல்லை கொடுத்து வந்தாக கூறப்படுகிறது.

    மதுரை:

    மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். பாண்டிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அபர்ணா (வயது19) பிளஸ்-2 படித்து முடித்து விட்டு, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    அபர்ணாவின் பாட்டி வீடு விராட்டிபத்தில் உள்ளது. அங்கு அவர் அடிக்கடி செல்வார். அப்போது அங்குள்ள தனது மாமா வீட்டிற்கு வந்திருந்த கோவை சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஹரிஹரன் (23) என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஹரிஹரன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அபர்ணாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர்.

    ஆகவே தன்னை பெண் கேட்டு வருமாறு அபர்ணா கூறியிருக்கிறார். அதன் பேரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அபர்ணாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு ஹரிஹரன் சென்றுள்ளார். ஆனால் ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.

    தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவிடம் தொடர்ந்து ஹரிஹரன் கேட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் முனீஸ்வரன் என்பவருக்கு அபர்ணாவை நிச்சயம் செய்தனர். அவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஹரிஹரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அபர்ணாவின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று பாண்டியும், அவரது மனைவியும் வழக்கம்போல் மளிகை கடைக்கு சென்று விட்டனர். அபர்ணா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    மாலையில் அவரது வீட்டிற்கு ஹரிஹரன் வந்தார். அப்போது அபர்ணா தனக்கு நிச்சயிக்கப்பட்ட முனீஸ்வரனுடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். தன்னுடன் வந்து விடுமாறு அபர்ணாவை ஹரிஹரன் அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபர்ணாவை சரமாரி குத்தினார். பின்பு அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்நிலையில் அபர்ணாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்த முனீஸ்வரன், வீட்டில் யாரோ தகராறு செய்கிறார்கள் என அபர்ணாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து மளிகை கடையில் இருந்த அபர்ணாவின் தாய் மற்றும் சித்தப்பா ஆகியோர் வீட்டிற்குள் வந்தனர். அப்போது அவர்கள் வீட்டிற்குள்ளே இருந்து ஹரிஹரன் தப்பி ஓடினார். அவரை அவர்கள் பிடிக்க முயன்ற போது தன்னிடம் இருந்த பையை கீழே போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    அந்த பையை சோதனை செய்து பார்த்த போது அதில் கத்தி, சுத்தியல், கையுறை போன்றவை இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு அபர்ணா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் அபர்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அதில் திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால் அபர்ணாவை அவரது காதலன் ஹரிஹரன் திட்டமிட்டு கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் சென்றதால் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டன. அங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் ஹரிஹரன் எங்கு சென்றார்? என்று ரகசியமாக விசாரணை நடத்தினர்.

    அவர் கோவையை சேர்ந்தவர் என்பதால் அங்கு சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனால் கோவை செல்லக்கூடிய வழித்தடத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பதுங்கி இருந்த ஹரிஹரனை தனிப்படை போலீசார் இ்ன்று கைது செய்தனர்.

    இதையடுத்து அவர் அங்கிருந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். அபர்ணாவை கொலை செய்வதற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை காதலித்த பெண் தன்னுடன் வர மறுத்ததால், தனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்க கூடாது என நினைத்து ஆத்திரமடைந்து அபர்ணாவை கொன்றதாக ஹரிஹரன் தெரிவித்தாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கத்திக்குத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிஷாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
    • இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கையை காதலித்த வாலிபரை கத்தியால் குத்திய 17 வயது சிறுவனை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சாகுல்.

    இவரது மகன் நிஷார் (வயது 25). துணி வியாபாரி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ் நகரை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    நிஷார் அடிக்கடி தனது காதலிக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி வந்தார். இதனை சிறுமியின் 17 வயது அண்ணன் பார்த்து விட்டார். அவர் சிறுமியை கண்டித்தார். மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு தனது சகோதரியிடம் கூறி வந்தார். மேலும் நிஷாரை சந்தித்த அவர் தனது தங்கையுடனான காதலை கைவிடுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று நிஷார், ராஜ்நகர் பகுதியில் உள்ள தனது நண்பரான ரமேஷ்குமார் என்பவரது வீட்டிற்கு சென்றார். இதனை சிறுமியின் அண்ணன் பார்த்து விட்டார். தனது தங்கையை பார்ப்பதற்காக தான் நிஷார் வந்துள்ளார் என நினைத்து தகராறு செய்தார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிறுமியின் அண்ணன் தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து நிஷாரின் மார்பு, கை ஆகிய பகுதிகளில் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    கத்திக்குத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிஷாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கையை காதலித்த வாலிபரை கத்தியால் குத்திய 17 வயது சிறுவனை தேடி வருகிறார்கள்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரே பெண்ணை 2 பேர் காதலித்ததால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    பொள்ளாச்சியை சேர்ந்த 17 வயது மாணவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அதே பெண்ணை அய்யனார் (19) என்பவரும் ஒருதலையாக காதலித்து வருகிறார். இதனால் அந்த பள்ளி மாணவருக்கும் அய்யனாருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று அய்யனார் தனது நண்பர்களான கல்லூரி மாணவர் அபுல்பஷ் (19), சதாசிவம் (22), கவின் கோகுல் (19), அரவிந்த் (20) ஆகியோரை அழைத்துக்கொண்டு ஜோதி நகர் பகுதிக்கு சென்றார்.

    அப்போது அங்கிருந்த பள்ளி மாணவரிடம் திடீரென அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனைப் பார்த்த பள்ளி மாணவரின் நண்பர்கள் கவுதம் (21) மற்றும் விஜய் (20) அங்கு சென்று பள்ளி மாணவருக்கு ஆதரவாக பேசினர்.

    இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அய்யனார் மற்றும் அவரது நண்பர்கள் கவுதம் மற்றும் விஜய்யை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதில் கவுதம் மற்றும் விஜய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து கவுதம் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர் அபுல்பஷ், கவின் கோகு, அரவிந்த் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தகராறின் போது அய்யனாருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தப்பி ஓடிய சதாசிவத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது காதலியுடன் ஏற்பட்ட தகராறில் கோவை வாலிபர் தூக்குப்போட்டு தறகொலை செய்துகொண்டார்.
    ஊட்டி:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் இளையசூரியன் (வயது 26). இவர் கோவை கணேசபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இளைய சூரியனும் இவரது உறவுப் பெண்ணும் காதலித்து வந்தனர்.

    காதல் ஜோடி சுற்றுலாவுக்காக மதுரையில் இருந்து ஊட்டிக்கு பஸ்சில் வந்தனர். பின்னர் ஊட்டி படகு இல்லம் அருகே அறை எடுத்து தங்கி ஊட்டியை சுற்றிப் பார்த்தனர். பல இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் அறைக்கு திரும்பினர்.

    அறையில் காதல்ஜோடிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த காதலி தனது செல்போனில் வைத்திருந்த இளையசூரியனின் போட்டோவை அழித்து விட்டதாக தெரிகிறது. பின்னர் ஊருக்கே திரும்பிச்செல்கிறேன் என்று கூறி புறப்பட்டு சென்று விட்டார். காதலி அறையை விட்டு வெளியேறியதும் இளையசூரியன் அறையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    சிறிது நேரத்தில் வாலிபரை சமாதானம் செய்ய காதலி திரும்பி வந்து கதவை தட்டினார். வெகுநேரம் கதவு திறக்கப்படவில்லை. அதிர்ச்சியடைந்த காதலி இது குறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கூறினார். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அறையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வாலிபர் எலி மருத்து தின்று உயிர் போகாததால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவையில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி.

    இவரது மகன் முரளிதரன் (வயது 19). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பாலாஜி(24) என்பவருக்கும் இடையே பெண் விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்தது. டிப்ளமோ படித்துள்ள பாலாஜி கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று இரவு முரளிதரன் மற்றும் அவரது நண்பர்கள் நவின்பிரபு, பிரசாத் ஆகியோர் கெம்பட்டிகாலனியில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அங்கு வந்த பாலாஜிக்கும், முரளிதரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பாலாஜி மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளிதரனின் மார்பில் குத்தி விட்டு தப்பி ஓடினார்.

    ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த முரளிதரனை நண்பர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

    கொலை குறித்து தகவல் அறிந்ததும் பெரியகடைவீதி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய பாலாஜியை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கைதான பாலாஜியும் பிளஸ்-1 மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாலாஜியுடன் பழகுவதை மாணவி நிறுத்தி விட்டார். அதன்பிறகு முரளிதரனின் நண்பர் ஒருவருடன் மாணவி பேசி பழகி வந்துள்ளார். கடந்த 23-ந்தேதி மாணவியின் பிறந்த நாளையொட்டி அந்த வாலிபர் மற்றும் முரளிதரன் ஆகியோர் மாணவியின் வீடு அருகே சென்று அவரை சந்தித்து பிறந்த நாள் பரிசு கொடுத்துள்ளனர்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கும்பலாக சேர்ந்து முரளிதரன் மற்றும் அவரது நண்பரை சூழ்ந்து கொண்டு எங்கள் பகுதிக்கு நீங்கள் எப்படி வரலாம்? என கூறி தகராறு செய்துள்ளனர். கும்பலில் இருந்த பாலாஜி, நான் காதலித்த பெண்ணுடன் நீங்கள் எப்படி பேசலாம்? என கூறி இருவரையும் கண்டித்துள்ளார். அங்கிருந்து ஒருவழியாக முரளிதரன் தப்பி சென்றார்.

    இச்சம்பவத்தில் முரளிதரனுக்கும், பாலாஜிக்கும் விரோதம் உருவாகியது. நேற்று இரவு வேலை முடிந்து பாலாஜி வீட்டுக்கு நடந்து சென்ற போது அவரை முரளிதரனும், நண்பர்களும் சேர்ந்து தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளனர். இதில் ஆவேசமடைந்து அவர் முரளிதரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    பாலாஜி கூறிய தகவல்களை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர். இன்று மாலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    பழனியில் காதல் தகராறில் ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பழனி:

    பழனி அடிவாரம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் மணிகண்டன் (வயது28). ஆட்டோ டிரைவர். இவர் அண்ணாநகரை சேர்ந்த ராமன் என்பவர் மகளை காதலித்துள்ளார்.

    இது தொடர்பாக அந்த பெண்ணின் அண்ணனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இது தொடர்பாக மணிகண்டனுக்கும், பெண்ணின் அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெண்ணின் சகோதரர் மணிகண்டனை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் தகராறில் வாலிபரை காரில் கடத்திய கும்பலை 3 மணி நேரத்தில் போலீசார் மீட்ட சம்பவம் வேலூர், காவேரிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அரப்பாக்கத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 28). இவர் புதுவசூர் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வாணாபாடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வேணுகோபாலிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் வேணுகோபாலிடம், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. வேணுகோபால் மீண்டும் மறுத்துள்ளார்.

    இந்த நிலையில் அப்பெண்ணின் தரப்பை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் நேற்று வேணுகோபால் வேலை செய்யும் கம்பெனிக்கு வந்தனர். அங்கு வேணுகோபாலை சந்தித்து திருமணம் குறித்து பேசினர். கம்பெனிக்கு வெளியே வேணுகோபாலிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த கும்பல் திடீரென அவரை காரில் தூக்கிப்போட்டு கடத்திச் சென்றனர். இதைப்பார்த்த அக்கம்பெனியின் மேலாளர் உடனடியாக சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனடியாக மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் வேணுகோபாலை கடத்திச் சென்ற கார் எண் குறித்தும் அக்கம்பெனியின் மேலாளர் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். அந்த எண்ணை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

    கடத்தப்பட்ட வேணுகோபாலை, அக்கும்பல் காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் பாலாற்றுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அக்கும்பலில் 3 பேர் வேலூரில் உள்ள ஒரு மோட்டார்சைக்கிளை எடுப்பதற்காக வேலூருக்கு அதே காரில் சென்றனர். வேணுகோபால் மீதம் உள்ள 3 பேரின் பிடியில் இருந்தார்.

    கார் வாலாஜா சுங்கச்சாவடி அருகே வந்தபோது அங்கிருந்த போலீசார் அந்த காரை பார்த்தனர். அதில் வேணுகோபால் இல்லை. இதுகுறித்து வாலாஜா போலீசார் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த காரை வாலாஜா போலீசார் பின்தொடர்ந்து வந்தனர். சத்துவாச்சாரி அருகே கார் வந்தபோது சத்துவாச்சாரி போலீசாரும், வாலாஜா போலீசாரும் அக்காரை மடக்கி காரில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் ராணிப்பேட்டை சீனிவாசபேட்டை தெருவை சேர்ந்த உமாமகேஸ்வரன் (29), காவேரிப்பாக்கம் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூவரசன் (30), ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த புத்தன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் வேணுகோபாலை அவர்களின் கூட்டாளிகள் 3 பேர் பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

    பின்னர் போலீசார், பிடிபட்ட 3 பேரிடம் உங்களது கூட்டாளிகளுக்கு போன் செய்து வேணுகோபாலை விடுவிக்குமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் தங்களது கூட்டாளிகளுக்கு போன் செய்து அவரை விடுவிக்குமாறு கூறினர். அதைத்தொடர்ந்து வேணுகோபாலை அவர்கள் விடுவித்தனர். பின்னர் அவர், தனது உறவினர் பாஸ்கர் என்பவர் மூலம் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். வேணுகோபாலை விடுவித்த 3 பேரும், தலைமறைவாகி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். சினிமா பாணியில் வாலிபர் மீட்கப்பட்ட சம்பவம் வேலூர், காவேரிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் காதல் தகராறில் என்ஜீனியரிங் மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பதி:

    திருப்பதி அடுத்த ரேணிகுண்டா கெங்கி ரெட்டி பள்ளியை சேர்ந்தவர் ஜானகிராம் (வயது 19). இவர் திருப்பதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். 2-வது ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் காஜீலு மாண்டியம் பகுதியை சேர்ந்த வம்சிராயல் (20) என்பவர் படித்து வந்தார்.

    இவர்கள் 2 பேரும் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்கள் கிரிக்கெட் விளையாட அழைப்பதாக தன் தாயிடம் கூறிவிட்டு ஜானகிராம் சென்றார். காஜீலு மாண்டியம் விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் ஜானகிராம் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

    அங்கு வம்சிராயல் தனது நண்பர்கள் 7 பேருடன் குடி போதையில் வந்து ஜானகி ராமிடம் தகராறு செய்தார். அப்போது வம்சிராயல் மற்றும் அவரது நண்பர்கள் மறைந்து வைத்திருந்த கத்தியால் ஜானகிராமை பயங்கரமாக குத்தினர். இதில் படுகாயம் அடைந்த ஜானகிராம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். #tamilnews
    ×