என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "MLa study"
- அரசு ஆஸ்பத்திரிகளில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- வைரஸ் காய்ச்சலா என்பதை நன்கு ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை யை முறையாக வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டு உள்ளது.
ராஜபாளையம்
மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் ராஜ பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் குழந்தை கள், முதியவர்கள் என பொதுமக்கள் என பலரும் காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை ராஜ பாளை யம்- தென்காசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் எம்.எல்.ஏ தங்க பாண்டியன் ஆய்வு மேற் கொண்டு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை களை முடுக்கி விட்டார்.
ஆய்வின்போது தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
ராஜபாளையம் தொகுதி யில் அதிகளவில் காய்ச்ச லால் குழந்தைகளும் பொது மக்களுக்கும் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவ மனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலி யர்கள் பணியில் இருக்க வேண்டுமென கூறப்பட்டு உள்ளது. நோயாளிகளிடமும் கனிவுடன் பேசி அவர் களிடம் அவர்களுக்கு சாதா ரண காய்ச்சலா அல்லது வைரஸ் காய்ச்சலா என்பதை நன்கு ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை யை முறையாக வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டு உள்ளது.
தினசரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் 150 முதல் 200 புறநோயாளி களுக்கும் அரசு மருத்துவ மனையில் 800 முதல் 1000 வரையிலான புறநோயாளி களுக்கும் மருத்துவம் பார்க்கப்படுகிறது. குழந்தை களுக்கு காய்ச்சல் என்றால் வீட்டில் வைத்து மருந்து கொடுப்பதை தவிர்த்து விட்டு உடனடியாக குழந்தை களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிசிச்சை பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவ மனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்து அதற்கான பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது, அந்த பணிகளை தங்கப் பாண்டி யன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.
தலைமை மருத்துவர் (பொறுப்பு) மாரியப்பன் அவர்கள் மருத்துவர் சுரேஷ் அவர்கள், பொதுப் பணித்துறை உதவிப் பொறி யாளர் பாலசுப்பிரமணியன் கவுன்சிலர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப் பாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சாலையின் தடுப்பு சுவர்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கூறினார்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கிராமம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை வந்தவாசி எம்.எல்.ஏ அம்பேத்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்/ அப்போது சாலை விரிவாக்கம் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் கேட்டார்.
பின்னர் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் சாலையின் தடுப்பு சுவர்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கூறினார்.
ஆய்வின் போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ் தரணிவேந்தன், நகர செயலாளர் தயாளன், ஒன்றிய செயலாளர் ஆர்யாத்தூர் பெருமாள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேம்படுத்த துறை அதிகாரிகளுடன் தேவராஜி எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் ம..அன்பழகன், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் சி. எஸ்ஹ பெரியார்தாசன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- வாக்காளர் சிறப்பு முகாமை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கடந்த கடந்த 9-ந் தேதி தொடங்கி வருகிற டிசம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது.
சிவகங்கை
சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த கடந்த 9-ந் தேதி தொடங்கியது. வருகிற டிசம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கலாம். சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் மேற்கு ஒன்றியம் மணலூர் ஊராட்சியில் நடந்த புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், மற்றும் வாக்காளர் சேர்ப்புக்கான முகவர்களிடம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.செந்தில்நாதன் ஆய்வு செய்தார். இதில் திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மணலூர் மணிமாறன், வக்கீல் திருப்புவனம் மதிவாணன், கிளைச் செயலாளர்கள் பீசர்பட்டினம் ராமச்சந்திரன், கீழடி சதாசிவம், மணலூர் பிரபு, தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பரமக்குடி அருகே மழை நீர் சூழ்ந்த வீடுகளை முருகேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- மழைச்சேதம் ஏற்பட்டால் அந்த பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, பார்த்திபனூர் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை கனமழை கொட்டியது.
பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. பரமக்குடி அருகே உள்ள கீழப் பார்த்திபனூர், இடையர் குடியிருப்பு, சூடியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்களில் அள்ளி வெளியேற்றினர். வீடுகளை விட்டு வெளியே வராமல் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
இதுகுறித்து பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்படி எம்.எல்.ஏ. முருகேசன், தாசில்தார் தமிம்ராஜா ஆகியோர் அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் மின் வாரிய அதிகாரிகளை அழைத்து இந்த பகுதியில் ஆபத்து ஏற்படாத வகையில் மின் விநியோகம் செய்யவேண்டும் என எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். மழைச்சேதம் ஏற்பட்டால் அந்த பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
- புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரப்படும் என உறுதி
- கிராம சபை கூட்டத்தில் தலைமை ஆசிரியை கதறி அழுதபடி புகார் செய்ததையடுத்து நடவடிக்கை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பெருமாள் கோயில் தெருவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் இடிந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது என தலைமை ஆசிரியர் சாந்தி, பேருராட்சி வார்டு சபா கூட்டத்தில் கடந்த 1-ந் தேதி அழுதபடி புகார் செய்தார்.
இந்த சம்பவம் அனைத்து சமூக வலைத்திலும் பரவியது. இதையடுத்து கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில், கட்டிடங்கள் ஜேசிபி மூலம் இடிக்கப்பட்டது.
இதையடுத்து முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமச்சந்திரன் பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது தலைமை ஆசிரியை சாந்தியிடம், கட்டிடங்கள் குறித்து ஏன்? என் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என வினவினார்.
தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரப்படும் என தலைமை ஆசிரியரிடம் உறுதியளித்தார்.
அப்போது ஒன்றிய செயலாளர் கொளத்தூர் திருமால், ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார், வழக்கறிஞர்வெ ங்கடேசன், கண்ணமங்கலம் நகர செயலாளர் பாண்டியன், பேருராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், பொருளாளர் சிந்தியா செல்வம், வார்டு கவுன்சிலர்கள் சுகுணாகுமார், சௌமி யாகமல், இளைஞணி ஏழுமலை உள்பட பலர் உடனிருந்தனர்.
- பக்தர்கள் தேர் இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
- சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சரிசெய்ய உத்தரவு
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் ஊராட்சிக்குட்பட்ட மயில் பாறை முருகன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமத்தில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஆடி மாதத்தில் பக்தர்கள் காவடி எடுத்தும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு பக்தர்களுக்கு போதுமான குளியலறை மற்றும் கழிவறை வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இங்குள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மயில் பாறை முருகன் கோவில் பகுதியில் பெண்கள் உள்ளிட்ட பெரியவர் முதல் சிறியவர் வரை குளிப்பதற்கு குளியலறையும் கழிவறை கட்டிடமும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனால் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி நேற்று மயில் பாறை முருகன் கோவில் பகுதிக்கு சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவில் நிர்வாகம் குறித்தும் பக்தர்களின் வருகைகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார்.
இதனை அடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் குளியலறை மற்றும் கழிவறை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து நேரில் பார்வையிட்டார்.
மேலும் இங்குள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார்.
குழந்தைகளுக்கு முறையாக சத்துணவுகளை வழங்க வேண்டும் எனவும் அங்கன்வாடி மையப் பணியாளர்களுக்கு தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது பொறுப்புக் குழு உறுப்பினர் சசிகுமார், ஏலகிரி கிராமம் ஊராட்சி மன்ற தலைவர் ரகு உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மேட்டு தெருவில் இருந்து கந்தாடை தெரு வழியாக இருபுறமும் செல்லும் வீடுகளில் பின்புறம் உள்ள கழிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக தூர்வாரபடாமல் இருந்தது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக கூறி அந்தப் பகுதி மக்கள் சந்திரபிரபா எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில் உடனடியாக ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை வைத்துள்ளவர்களை சந்தித்து நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து வாருவதற்கு நடவடிக்கைக்கு தூர்வாரும் பணியினை சந்திரபிரபா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
25 ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்த கழிவுநீர் பாதைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படாமல் இருக்க வழிவகை செய்தார்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினரை மக்கள் பாராட்டினர்.
மாவட்ட கவுன்சிலர் முத்தையா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாபு, பொறியாளர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் பிரமநாயகம், பழனி குரு ஆகியோர் உடன் இருந்தனர்.
வேலூர்:
அணைக்கட்டு பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் பஸ் நிலையம் அமைப்பதற்கான இடவசதி அங்கு இல்லை என்பதால் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. இதனால் அணைக்கட்டு பஸ் நிறுத்தத்தில் மழை, வெயிலுக்கு கூட ஒதுங்கவும் இடம் இல்லாமல் பயணிகள் தவித்தனர்.
இதற்கிடையில் பஸ்கள் வந்து நின்று செல்லும் அளவுக்கு பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு வருகிறது. அணைக்கட்டு சட்டபேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த பணி நடைபெறுகிறது.
அதன்படி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் காத்திருப்பு அறை மற்றும் பஸ்கள் நின்று செல்ல சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார.
அப்போது 10 நாட்களுக்குள் கட்டுமானப் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும் பஸ் நிறுத்தத்தில் ரூ.5 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை நிறுவவும் ஏற்பாடு செய்துள்ளார். அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணமேனன்,மாவட்ட பிரதிநிதி அஸ்லாம்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பழனி, அணைக்கட்டு ஊராட்சி செயலாளர் மணி, குடியாத்தம் நகர பொறுப்பாளர் சவுந்தரராஜன், கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் சிட்டிபாபு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Busstop #MLA
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்