என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "postal workers"
- தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஊழியர்கள் பணிக்கு வராததால் அனைத்து தபால் நிலையங்களிலும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு:
தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று ஒரு நாள் அகில இந்திய அளவில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இன்று தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்திலும் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் 3 தலைமை தபால் நிலையங்கள், 65 துணை தபால் நிலையங்கள், 252 கிளை தபால் நிலையங்களில் 800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களில் இன்று 700 -க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் பணிக்கு வராததால் அனைத்து தபால் நிலையங்களிலும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் இயங்கும் 252 தபால் நிலையங்கள் மூடப்பட்டதால் பணிகள் கடுமையாக பாதித்தன. குறிப்பாக தபால் பட்டுவாடா, பண வர்த்தனை முடங்கியது.
இதுகுறித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க ஈரோடு கோட்டச் செயலாளர் வெள்ளியங்கிரி கூறியதாவது:-
தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை கண்டித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஏற்கனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக தபால் பட்டுவாடா, பண பரிவர்த்தனை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடி கணக்கில் வர்த்தகம் முடங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தபால் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
- போராட்டம் காரணமாக இன்று தபால் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டன.
மதுரை
பொதுத் துறை நிறுவனமான தபால் சேவையில் தனியார் துறையை ஊக்குவிப்பதை கண்டித்து நாடு முழுவதும் தலைமை தபால் நிலைங்களில் தபால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் சுமார் 30-க்கும்மேற்பட்ட ஊழியர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.தல்லாகுளம் தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை உடனடியாக கைவிட கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
போராட்டம் காரணமாக இன்று தபால் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டன.
- தபால் துறையை தனியார் மயமாக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்துறை ஊழியர்கள் கடந்த 3,4.5-ந் தேதிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
- பாளை தலைமை தபால் நிலையத்தில் அனைத்து இந்திய அஞ்சல் ஊழியர் சம்மேளனததின் புறநிலை ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
தபால் துறையை தனியார் மயமாக்ககூடாது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்துறை ஊழியர்கள் கடந்த 3,4.5-ந் தேதிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். இந்நிலையில் நாடு முழுவதும் தபால் ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்திலும் ஊழியர்கள் போராட்த்தில் ஈடுபட்டனர்.
பாளை தலைமை தபால் நிலையத்தில் அனைத்து இந்திய அஞ்சல் ஊழியர் சம்மேளனததின் புறநிலை ஊழியர் சங்கத்தினர் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில் கோட்ட செயலாளர்கள் ஜேக்கப்ராஜ், அருண்குமார், சுப்பிரமணியன், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து தபால் ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக மாற்ற வேண்டும், கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தக்கோரியும், சங்க உறுப்பினர் சரிபார்ப்பை உடனே வெளியிட வலியுறுத்தியும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 10-வது நாளாக நடைபெற்றது. போராட்டத்தை தொடர்ந்து நேற்று நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சலக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஜி.டி.எஸ். கோட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை கோட்ட அஞ்சல் செயலாளர் விஜயராகவன் தொடங்கி வைத்து பேசினார்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் அன்பழகன், திருவாரூர் கிளை செயலாளர்கள் ரேணுகா, கோவிந்தராஜ், சண்முகநாதன், மீனாட்சிசுந்தரம், சட்டநாதன், பிரபாகரன், ராஜா, குமரவேலு, அரிதாஸ் உள்பட அனைத்து ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தை சேர்ந்த முருகானந்தம் நன்றி கூறினார்.
அஞ்சல் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக தபால் நிலையத்தில் கடந்த 10 நாட்களாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தபால் நிலையம் முன்பு உள்ள ஏ.டி.எம். மையமும் 10 நாட்களாக மூடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்