என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100849"
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் இந்த போராட்டம் நடந்தது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஜாக்டோ-ஜியோ மாநில நிதி காப்பாளர் சேகர் தலைமையில் நடந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
காட்பாடியில் மாநில தலைமை குழு உறுப்பினர் ஜனார்த்தனன் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் அஜிஸ்குமார், குப்புராமன், ஆண்டாள், மாவட்ட தலைமை குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், செல்வகுமார், பாபு, ஆறுமுகம், குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், அரக்கோணம், ஆற்காடு, வாலாஜா, நெமிலி ஆகிய இடங்களில் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஏராளமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தனர்.
அணைக்கட்டில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் 13 ஆசிரியர்கள் பங்கேற்றதாக ஜாக்டோஜியோ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகளில் பணிகள் பாதிக்கபட்டது.
சில தொடக்க பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்க சென்றதால் பள்ளிக்கு பூட்டு போடபட்டது. அரசு அலுவலர்கள் போராட்டத்தால் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கபட்டன.
திருவண்ணாமலையில் ஜாக்டோஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அண்ணா சிலை மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்,
இதே போல் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு உள்பட மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். #tamilnews
மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் முதல் மனைவிக்கு பிறந்த பெண் ஆஷா பஸ்வான். இவருக்கும், பஸ்வானுகும் இடையே தற்போது நல்லுறவு கிடையாது. ஆஷா பஸ்வான், ராஷ்டிரீய ஜனதாதளத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ராம்விலாஸ் பஸ்வான் அளித்த பேட்டியில், “படிப்பறிவற்றவர் கூட இம்மாநில முதல்-மந்திரியாக இருந்துள்ளார்” என்று கூறினார். அவர் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரிதேவியை குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதை சுட்டிக்காட்டி, ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக அவருடைய மகள் ஆஷா தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளார். பஸ்வான் மன்னிப்பு கேட்கும்வரை எனது போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றும் அவர் கூறினார். #RamVilasPaswan #AshaPaswan #Protest
சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது. கடந்த மாதம் நடந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று அதிபர் பஷீருக்கு ஆதரவாக தலைநகர் கர்த்தூமில் போட்டி பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அரசுக்கு எதிராகவும் தனியாக போராட்டம் நடைபெற்றது. இதனால் தலைநகரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் போலீசார் தாக்கியதால் 3 பேரும் உயிரிழந்தார்களா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 40 பேர் வரை இறந்திருக்கலாம் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. #SudanProtests #BreadPrice
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மருதையான் கோவில் அருகே ஜேப்பியார் என்கிற பெயரில் தனியார் சிமெண்டு தொழிற்சாலை உள்ளது. இந்த சிமெண்டு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனவும், 14 மாதங்களாக பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்.தொகை வைப்பு நிதியில் தொகை செலுத்தப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், வழங்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று மாலை 6 மணி அளவில் சிமெண்டு தொழிற்சாலை அலுவலக ஊழியர்கள் 13 பேரை வெளியே போக விடாமல், உள்ளே சிறை பிடித்து தொழிற்சாலை வளாக நுழைவு வாயிலில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை தொடங்கினர்.
அப்போது அவர்கள் கடந்த 8 மாதங்களாக வேலை இழந்து தவித்து வருவதாகவும், ஆகவே, ஊதியத்தை உடனடியாக வழங்குமாறு கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் ஜேப்பியார் தொழிற்சங்க தலைவர் அறிவழகன் தலைமையில் நடந்து வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். #tamilnews
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா முழுவதும் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 9 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
அதன்படி நேற்று தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பேரணி, ரெயில் மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இன்று 2-வது நாளாக தஞ்சை பழைய பஸ்நிலையம் முன்பு குவிந்த ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியில் வர முடியவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதே போல் மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு அரசு ஊழியர் வடக்கு வட்ட தலைவர் சரவணன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் புதிய பஸ்நிலையம் முன்பு இன்று தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
தொ.மு.ச. தலைவர் செல்வராஜ் தலைமையில் திடீரென ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ. கண்ணன், ஐ.என்.டி.யூ.சி. செல்வராஜ் மற்றும் தில்லைவனம் கண்ணையன், எச்.எம்.எஸ் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர் சங்கங்கள் சார்பில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்புக்குழு சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு குழு தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் பாஸ்கரன், மாரிமுத்து, மகேந்திரன், சேகர், சிங்காரவேல், கிருஷ்ணன், சக்ரவர்த்தி, நாகராஜன், தமிழ்ச்செல்வி, மாதேஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல் தர்மபுரி ஆயுள் காப்பீட்டு கழக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளைத்தலைவர் வேடியப்பன் தலைமை தாங்கினார். கோட்ட இணை செயலாளர் மாதேஸ்வரன், கிளைசெயலாளர் மகேந்திரன், பொருளாளர் சரவணன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி சோமசுந்தரம், முகவர் சங்க நிர்வாகி கருணாநிதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். காப்பீட்டு கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். காப்பீட்டு பிரிமியத்தின் மீதான ஜி.எஸ்.டி.வரியை நீக்க வேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல் வங்கி ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் கலீபுல்லா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமமூர்த்தி, பழனிவேலு, சரவணன், செந்தில்வேலன், சந்துரு, சையத் ஜாமல், ரமேஷ், விஷ்ணுபிரியா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வுக்கான விதிகளை தளர்த்த வேண்டும். வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. #tamilnews
தஞ்சாவூர்:
தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் மன்ற மாநில செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரவிந்த் மற்றும் நிர்வாகிகள், கல்லூரி மாணவ- மாணவிகள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும், 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், 33 பாட பிரிவுகள் வேலை வாய்ப்புக்கு உகந்தல்ல என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை திரும்ப பெற வேண்டும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெறும் அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.
இந்த போராட்டத்துக்கு மாநில அரசு ஊழியர்கள், பஸ் தொழிலாளர்கள், பொதுத்துறை ஊழியர்கள் என பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.
போராட்டம் காரணமாக நேற்று கோவை மாவட்டத்தில் வங்கி சேவை முடங்கியது. கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர், பி.எஸ்.என்.எல், எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் கோவை மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல ஓடியதால் பஸ் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை. அதே நேரம் கேரளாவில் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமாக இருந்ததால் அங்கிருந்து கோவைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் பாதுகாப்பு கருதி கோவையில் இருந்து கேரளாவுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. 2-வது நாள் போராட்டம் காரணமாக இன்றும் கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் உக்கடம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை ரெயில் நிலையத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்திலும், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பும், தபால் துறை ஊழியர்கள் வெரைட்டி ஹால் ரோட்டில் தலைமை தபால் நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
விருதுநகர்:
பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டாசு உற்பத்திக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி பட்டாசு தயாரிக்க முடியாது, பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் நீதிமன்ற விதிகளை பின்பற்றி பட்டாசு தயாரிக்க வழியில்லை என்பதால் பட்டாசு ஆலைகளை காலவரையன்றி மூடுவதாக அறிவித்தனர். அதன்படி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை மாற்ற வேண்டியும், மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், பட்டாசு ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன் பின்னரும் இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
அதன்படி விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ராஜபாளையம், சேத்தூர், கீழராஜகுலராமன், சாத்தூர், ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை, ஆமத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வச்சக்காரப்பட்டி உள்பட 19 இடங்களில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது.
இதில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி. யூ.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் பங்கேற்றனர். இவர்கள் 6 இடங்களில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சார்பில் சிவகாசி, மாரநேரி, திருத்தங்கல், தாயில்பட்டி, கன்னிசேரி உள்பட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக பல இடங்களிலும் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதகமாக சட்டங்களை திருத்தக்கூடாது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்றும்( செவ்வாய்க்கிழமை), நாளையும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எல்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பிற தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தது.
இந்த நிலையில் இன்று காலை முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. போராட்டத்தால் புதுவையில் பஸ்கள் ஓடவில்லை. தனியார் பஸ்கள் மட்டுமின்றி புதுவை அரசு போக்குவரத்துக்கழக பஸ்களும் ஓடவில்லை. தமிழகத்தில் இருந்து புதுவைக்கும், புதுவை வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்களும் குறைந்தளவில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியூரில் பணி செய்யும் ஊழியர்கள் பஸ் நிலைய வாசலில் நூற்றுக்கணக்கில் பஸ்களுக்காக காத்திருந்தனர். தனியார் என்ஜினீயரிங், மருத்துவக்கல்லூரி மாணவர்களை அழைத்து செல்வதற்காக சில பஸ்கள் மட்டும் இயங்கின. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் ஆட்டோ, டெம்போக்களும் முழுமையாக இயங்கவில்லை.
நகரின் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் காலை நேரத்திலேயே சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை மார்க்கெட் வளாகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
நகர பகுதி மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சேதாரப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி, திருபுவனை உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகள் இயங்க வில்லை. புதுவையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாணவர்களின் வருகை குறைவாக இருந்தது. மத்திய-மாநில அரசுகளின் அலுவலகங்கள் இயங்கினாலும் ஊழியர்களின் வருகை குறைவாக இருந்தது. ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் புதுவையில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
போராட்டத்தையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். பஸ் நிலையம், ரெயில்வே நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ரோந்து சென்றனர். #BharatBandh
கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது தேர்வாய் கண்டிகை கிராமம். இந்த கிராமத்திற்கு கடந்த சில மாதங்களாக முறையாக அரசு பஸ்கள் வந்து செல்லவில்லை. எனவே போக்குவரத்து வசதியின்றி இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முறையாக அரசு பஸ்களை இயக்கிட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று காலை அவ்வழியாக வந்த 3 அரசு பஸ்களை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்ததும் போக்குவரத்து டெப்போ அதிகாரிகள் மற்றும் பாதிரி வேடு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தினர்.
பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
மன்னர்குடி:
திருவாரூர் மாவட்டம் கோட்டூரை அடுத்த ஆலாத்தூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமதாஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-
கஜா புயல் தாக்கி 50 நாட்கள் கடந்தும் நிவாரணம் கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 60 சதவீத மகசூல் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பேச அரசு மறுத்து வருகிறது.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணைம் வழங்க வலியுறுத்தி பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ள விவசாயிகள் நீதி கேட்டு மன்னார்குடி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு பொங்கல் தினத்தன்று பொங்கலிடும் போராட்டம் நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Farmers
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்