என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழக்குப்பதிவு"
- நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பொதுமக்கள் சடலமாக மீட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி அனிதா(32) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இவர் கூலி வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்றார். அங்கு சந்திரசேகருக்கு ஆந்திர மாநிலம், ஆவலங்குப்பம் பகுதியை சேர்ந்த தேவராஜ் மனைவி பூஜா (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், கள்ளத்தொடர்பாக மாறி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சந்திரசேகர், பூஜாவை தனியாக வாணியம்பாடிக்கு அழைத்து வந்தார். வாடகை வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இதனை அறிந்த பூஜாவின் உறவினர்கள் இன்று காலை வாணியம்பாடி வந்தனர். வாணியம்பாடி தேங்காய்பட்டரை பகுதியில் சந்திரசேகருடன் தங்கியிருந்த பூஜாவை காரில் அவரது உறவினர்கள் அழைத்து செல்ல முயன்றனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது காரின் கண்ணாடி உடைத்து, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.
அப்போது ஆத்திரமடைந்த சந்திரசேகர் ஓடிச் சென்று அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தார். இதனைப் பார்த்த பூஜாவும் மற்றொரு விவசாய கிணற்றில் ஓடிப்போய் குதித்தார். இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பொதுமக்கள் பிணமாக மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விதிவிலக்காக தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே 17 சதவீதம் வழக்கு பதியப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 1,27,178 புகாரில் 2,806 மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2022 ஜனவரி முதல் 2023 மே மாதம் வரை சிறுவர் ஆபாச படங்கள், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்கள், கற்பழிப்பு, கும்பலால் பலாத்காரம், ஆன்லைன் மோசடி போன்ற பெறப்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 20,99,618 புகார்கள் பெறப்பட்டது. ஆனால் இதில் 42, 868 புகார்களுக்கு மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2 சதவீதமே ஆகும்.
குறிப்பாக டெல்லியில் 2,16,739 புகார்கள் பெறப்பட்டுள்ளது. ஆனால் இதில் 1.2 சதவீதமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,27,178 புகாரில் 2,806 மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் பல்வேறு மாநிலங்களிலும் சைபர் கிரைமில் ஏராளமான புகார் வந்தாலும் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விதிவிலக்காக தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே 17 சதவீதம் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சைபர் கிரைமில் ஏராளமான புகார்கள் தெரிவித்தாலும் குறைவாக வழக்குபதிவு செய்து காரணம் குறித்து மும்பை முன்னாள் போலீஸ் கமிஷன் சிவானந்தன் கூறியதாவது:-
இத்துறையில் புகார்களை இன்ஸ்பெக்டர்கள் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க முடிவும். ஆனால் அதற்கு போதுமான அதிகாரிகள் இல்லை.
அதே வேளையில் அனைத்து இன்ஸ்பெக்டர்களும் சைபர் குற்றங்களை விசாரணை நடத்தும் அளவுக்கு தொழில் நுட்பம் சார்ந்தவர்கள் இல்லை என்பதும் மேலும் தொழில் நுட்ப சாதனங்களும் போதிய அளவில் இல்லாததால் இந்நிலை நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.
- பனையேறிகள் மீது மதுவிலக்கு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும்.
- தமிழகத்திலும் கள் உணவு பொருள் என்பதை கோடிட்டு பனைமர கள்ளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் பனைமர கள் இறக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு கள் மற்றும் பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், பதநீர் இறக்க உரிமை பெறும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.
பனையேறிகள் மீது மதுவிலக்கு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும். கேரள மாநில அரசு போல் தமிழகத்திலும்கள் உணவு பொருள் என்பதை கோடிட்டு பனைமரக் கள்ளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் தனபாலன். இவரது மகள் ஓவியா (வயது 25). வக்கீலான இவர், மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரை வண்டியூர் பாண்டிக்கோவில் தெருவைச் சேர்ந்த வக்கீல் தேவக்குமாரும் (29) நானும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் நெருங்கி பழகினார். தற்போது பெற்றோரின் தூண்டுதலால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வக்கீல் தேவக்குமார், அவரது தந்தை விஜய நடராஜன் (60) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் இரவு 9.48 மணியளவில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றவாறு அவர் சுமார் 7 நிமிடங்கள் பேசினார்.
பின்னர் பேச்சை முடித்துக்கொண்டு அவர் கீழே இறங்க முயன்றபோது, மேடையை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. மேலும் முட்டையும் வீசப்பட்டது. அவை மேடையில் வந்து விழுந்தன. கமல்ஹாசன் மீது படவில்லை. இதையடுத்து அவர் மேடையில் இருந்து இறங்கி, காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதைக்கண்ட மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஒருவரை பிடித்து தாக்கினார்கள். இதையடுத்து அவரை போலீசார் மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் 2 பேர் தப்பிவிட்டதும் தெரியவந்தது. மேலும் மேடை மீது செருப்பு வீசியவர் பாஜக-வின் கரூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் அவர் மீது வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் கலவரத்தை உருவாக்குதல், சட்ட விரோதமாக கூடுவது, பொருட்களை வீசி அவமானம் படுத்துவது, கொலை மிரட்டல் மற்றும் ஆயுதம் வைத்தல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த ஆடியோ நேற்று முன்தினம், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனால் பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டியில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள், தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தனர்.
அப்போது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதால், இரவில் வாருங்கள் என்று கூறி, அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இதை யடுத்து நேற்று முன் தினம் இரவு, அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் மீண்டும் பொன்ன மராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் இருந்து, போலீசார் புகார் மனுவை பெற்றுக்கொண்டனர்.
அப்போது அவர்கள், உடனடியாக அந்த 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு போலீசார் உடனடியாக எப்படி கைது செய்ய முடியும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலையில் மீண்டும் கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த ஒரு சமூக பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் உடனடியாக தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ரோடுகள் முழுவதும் கற்களாக கிடந்தன. இந்த கல்வீச்சில் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 3 போலீசாருக்கும், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த மற்ற 10 பேர் ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
இதில் புதுக்கோட்டை ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாகனங்கள் உள்பட 6 காவல்துறை வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களால் தாக்கி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
இந்நிலையில் அவதூறாகப் பேசியவர்களை கைது செய்யக்கோரி பொன்னமராவதி உள்பட 30 கிராமங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின்போது வன்முறை கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன
புதுக்கோட்டையில் பிரச்சனை ஏற்பட்ட பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 75% நகரப்பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பிரச்சனை தொடராமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் அளித்த புகாரில் சுமார் 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #PonnamaravathiViolence
கடலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலுக்காக 6 சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும்படை, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தேர்தல் விதிமுறை மீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் வந்தது. உடனே பறக்கும் படை அதிகாரி சுரேஷ் குமார் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் அவரிடம் விசாரித்தபோது அவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி. புத்தூரை சேர்ந்த நடராஜன் என்பதும், தி.மு.க நிர்வாகி என்பதும் தெரியவந்தது. அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து நடராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் சப்-கலெக்டர் பிரசாந்திடம் ஒப்ப டைக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், ஜெயப்பிரதா குறித்து அப்படி பேசவில்லை என்று கூறிய ஆசம் கான், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலகுவதாக கூறினார்.
இந்நிலையில், ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் அடிப்படையில், ஷகாபாத் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan
பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ராஜ்சத்யன் போட்டியிடுகிறார். இவர் மதுரை மீனாட்சி அரசு கல்லூரியில் நேற்று தபால் வாக்குப்பதிவு செய்த போலீஸ்காரர்களிடம் ஓட்டு கேட்டார்.
இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி தங்கமீனா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #LoksabhaElections2019
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் வ.து.ந. ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடந்த 9-ந் தேதி திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக வாகனங்களில் பேரணியாக வந்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ்குமாரி முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி டி.டி.வி. தினகரன், வேட்பாளர் வ.து.ந. ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் தேர்தல் பறக்கும் படையால் ரூ.124.53 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 989.6 கிலோ தங்கம், 492.3 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடப்பதால், மே 27ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #VelloreITRaids #Duraimurugan
தேனி:
பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் பிரீத்தி. இவருக்கும் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள டி.சுப்புலாபுரம் மேற்கு தெருவை சேர்ந்த கார்த்திக் என்பருக்கும் கடந்த 3.2.2017 தேதி திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 40 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு பிரீத்தியை கொடுமை படுத்தி வந்துள்ளனர்.
தனியாக வீடு பார்க்க வேண்டும் என சொல்லி பிரீத்தியின் 18 பவுன் நகைகளை அடகு வைத்து விட்டனர். வரதட்சணை வாங்கி வராத ஆத்திரத்தில் பிரீத்திக்கு சரிவர சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளனர்.
குழந்தை பிறப்பிற்காக பிரீத்தி தனது தாய் வீட்டிற்கு வந்தார். அவரை பார்க்க வநத கார்த்தியின் உறவினர்கள் 5 பவுன் நகை குழந்தைக்கு அணிவித்து வீட்டிற்கு வர வேண்டும் என பேசி உள்ளனர். இதனால் பிரீத்தி கோர்ட்டில் வரதட்சணை புகார் குறித்து மனு அளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்துமாறு தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் கார்த்திக், மாமியார் பிரேமா, உறவினர்கள் ரேணுகா, சுப்பிரமணியம், பானுபிரியா, பெத்துராஜ் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்