search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102009"

    மணமேல்குடி அருகே கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் டிரைவர் படுகாயமடைந்தார்.
    மணமேல்குடி:

    தூத்துக்குடியிலிருந்து, காரைக்காலுக்கு கிரானைட் கல் ஏற்றிக்கொண்டு நேற்று கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை முரளிதரன் என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரி மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது காரக்கோட்டை பாலம் அருகே வளைவில் திரும்பும்போது, குறுக்கே மாடு ஒன்று சென்றது. இதனால் மாடு மீது லாரி மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரியின் இடிபாடுகளில் சிக்கி, டிரைவர் முரளிதரன் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த முரளிதரனை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்திற்குள்ளான லாரியில் இருந்த கிரானைட் கற்கள் அனைத்தும் மாற்று லாரி மூலம் காரைக் காலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ராயக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது கருக்கனஹள்ளி. இங்கிருந்து மின் கம்பங்களை ஏற்றிக் கொண்டு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சிலர் பிள்ளாரி அக்ரஹாரம் நோக்கி டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அந்த டிராக்டர் பிள்ளாரி அக்ரஹாரம் பக்கமாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த தர்மபுரி மாவட்டம் கும்மனூர் அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்த முனியப்பன், பாலக்கோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த தனபால் (42), சிதம்பரம் (24), சென்னப்பன் (25), சைமன் (25), ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டிநாயக்கனஅள்ளியை சேர்ந்த சுரேஷ் (22), முகலூரை சேர்ந்த மூர்த்தி (25) ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர்.

    அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான டிராக்டரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கங்கைகொண்டானில் மினி வேன் கவிழ்ந்ததால், 2 பஸ்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்துகளில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கயத்தாறு:

    மதுரையில் இருந்து மசாலா பாக்கெட் பண்டல் லோடு ஏற்றிய மினி வேன் நேற்று காலையில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தது. 9.30 மணியளவில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இசக்கி அம்மன் கோவில் அருகில் உள்ள வளைவில் நாற்கர சாலையில் வந்தபோது, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மினி வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

    அப்போது மினி வேனின் பின்னால் அரசு விரைவு பஸ் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை நெல்லையை சேர்ந்த சுப்பையா (வயது 52) ஓட்டி வந்தார். மினி வேன் கவிழ்ந்ததை பார்த்ததும், டிரைவர் சுப்பையா பஸ்சை உடனே நிறுத்தினார்.



    அப்போது அந்த அரசு விரைவு பஸ்சின் பின்னால் மதுரையில் இருந்து நெல்லைக்கு மற்றொரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை டிரைவர் அமர்நாத் (48) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் கண்டக்டராக பரமசிவம் (43) இருந்தார். அரசு விரைவு பஸ் திடீரென்று நின்றதும், டிரைவர் அமர்நாத் ஓட்டி வந்த பஸ்சை உடனே நிறுத்த முயன்றார். ஆனால் அரசு விரைவு பஸ்சின் பின்புறமாக அந்த பஸ் பயங்கரமாக மோதியது.

    இதற்கிடையே விபத்துக்குள்ளான பஸ்களை பின்தொடர்ந்து மற்றொரு கார் வந்தது. அந்த காரை விருதுநகரை சேர்ந்த பாண்டி மகன் சுந்தர் (29) ஓட்டி வந்தார். அவர் விபத்துக்குள்ளான பஸ்களின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை இடதுபுறமாக திருப்பினார். இதில் நிலைதடுமாறிய கார், நாற்கர சாலையோர தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு பாய்ந்து நின்றது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் மதுரையில் இருந்து வந்த பஸ்சின் டிரைவர் அமர்நாத், கண்டக்டர் பரமசிவம் மற்றும் அந்த பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த பழனிவேல், நவநீதகிருஷ்ணன், மோகன், கோவில்பட்டியை சேர்ந்த ஸ்ரீதேவி உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும், கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 20 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் மினி வேன், கார், அரசு விரைவு பஸ்சில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    கோத்தகிரி அருகே சுற்றுலா வேன் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

    கோத்தகிரி:

    சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 21 பேர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்.

    பின்னர் கோத்தகிரி வழியாக சென்னை புறப்பட்டனர். வேனை டிரைவர் சுரேஷ்குமார் (36) ஓட்டி வந்தார்.

    இந்த வேன் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் மேல் தட்டப்பள்ளம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு குறுகிய வளைவில் திரும்பும் போது டிரைவர் பிரேக் போட முயன்றார். அப்போது வேன் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேன் டிரைவர் சுரேஷ் குமார், சீனிவாசன், ராமு, பாலா, நாகேந்திரன் ஆகிய 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    காயம் அடைந்தவர்களை அப் பகுதியில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த சீனிவாசன், ராமு ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜெயங்கொண்டம் அருகே தனியார் பஸ், அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 15 பேர் காயமடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சை வடலூரை சேர்ந்த ஜோதிவேல் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார். கச்சிராபாளையத்தை சேர்ந்த சரவணன்(44) கண்டக்டராக பணியாற்றி வந்தார். அந்த பஸ் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ், அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் ஒருபுறமும், தனியார் பஸ்சின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்து உருக்குலைந்து காணப்பட்டது.



    இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்தவர்கள் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவித்தனர். இதில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பண்டாரவடை கிராமத்தை சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மனைவி காதர்பீவி (34) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார்.

    மேலும் சாகுல் ஹமீது, அவரது மகள் ஆப்ரின் பாத்திமா(12) மற்றும் அவர்களுடன் பயணம் செய்த உறவினர்களான நஸ்ரின்பானு(28) அவரது குழந்தை ராஹிபா (2) மற்றும் ஷேக் பாதுஷா(45) அவரது மனைவி ஹசீனா பேகம் (38) ஆகியோரும், ராஜமன்னார்குடியைச் சேர்ந்த பொதியப்பன் மனைவி ஜெயலட்சுமி (38) சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சங்கரமூர்த்தி (48) திருவாரூர் மாவட்டம் குன்னூர் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி (38), தா.பழூர் கார்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணகி (40) காட்டுமன்னார்குடி சம்பத் மகள் ராஜபிரியா (24), அவரது தங்கை அறிவுக்கரசி (19), அரசு பஸ் டிரைவர் ஜோதிவேல், கண்டக்டர் சரவணன், தனியார் பஸ் டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த ராமமூர்த்தி (38) ஆகிய 15 பேரும் படுகாயமடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த காதர்பீவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மீட்பு பணி முடிந்ததும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 15 பேரையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் தங்கபிச்சமுத்து, ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டு, அவர்களிடம் நலம் விசாரித்தனர். விபத்தில் மனைவியை பறிகொடுத்த சாகுல் ஹமீதுக்கும் அவர்கள் ஆறுதல் கூறி விட்டு, விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து படுகாயமடைந்த 15 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையோரத்தில் நின்று இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர்.
    பனைக்குளம்:

    திருவண்ணாமலை மாவட்டம் போலூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் வேன் ஒன்றில் ராமேசுவரம் கோவிலுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.இந்த வேனை டிரைவர் சதீஷ் என்பவர் ஒட்டினார். நேற்று காலை மண்டபம் கடற்கரை பூங்கா அருகே வேன் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் மண்டபம் காவல் நிலைய ஆய்வாளர் மாயராஜலட்சுமி,சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசகாய சேகர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேனுக்குள் பழனி (வயது75), கலைச் செல்வி (35), சங்கரி (35), காயத்ரி (15) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்து கிடந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மண்டபம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 
    சுங்குவார்சத்திரம் அருகே பயணிகள் கூட்டத்துக்குள் லாரி புகுந்து கவிழ்ந்ததில் தாய் மற்றும் மகள் உள்பட 3 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஷேர் ஆடடோவுக்காக ஏராளமானோர் காத்து நின்றனர். அப்போது சென்னையில் இருந்து வேலூரை நோக்கி ஊர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி வேகமாக சென்றது.

    சாலையின் குறுக்கே சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க லாரிய டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்ற பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிங்காடிவாக்கம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி செண்பகவள்ளி (45), இவரது மகள் கனிமொழி (20), லாரி டிரைவர் அரவிந்தன் (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களை சுங்குவார்சந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் மீட்டு சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    உக்ரைனில் இருந்து பிரிக்கப்பட்டு ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 18 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Crimeacollege #Crimeacollegeblast
    மாஸ்கோ:

    1991-ல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ல் உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

    உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தங்கள் நாட்டுடன் இணைந்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

    எனினும், ரஷியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக கிரிமியாவை அந்நாடு மக்கள் கருதி வருகின்றனர்.

    இந்நிலையில், கிரிமியாவில் கருங்கடலையொட்டியுள்ள கிழக்கு பகுதியான கெர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இன்று நடந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    குண்டுவீச்சு தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் காரணம் எனவும் ரஷிய ஊடகங்கள் மாறிமாறி செய்தி வெளியிட்டு வருகின்றன. #Crimeacollege #Crimeacollegeblast
    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இன்று காலை அரசு பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். #SayalkudiAccident
    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள மாயகுளம் பாரதி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் அருள் (வயது 22). உமயசிங்கம் மகன் உமயபாலா (18), லிங்கம் மகன் விஜயராஜ் (18), ரவி மகன் கிருஷ்ணகுமார் (23), ராமச்சந்திரன் மகன் நவீன் (18), சக்திவேல் மகன் உபயகணேஷ் (20), முருகேசன் மகன் புவனேசுவரன் (16) ஆகிய 7 பேரும் பட்டாசு வாங்குவதற்காக காரில் சிவகாசி சென்றனர்.

    அங்கு பட்டாசுகளை வாங்கிவிட்டு இன்று அதிகாலை ஊருக்குப் புறப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள கீழச்செல்வனூர் போலீஸ் நிலையம் அருகே காலை 5 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசு பஸ் அங்கு வந்தது. எதிர்பாராத விதமாக பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்த அருள், உமயபாலா, விஜயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றவர்கள் பலத்த காயமடைந்தனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கீழச்செல்வனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் இதம்பாடல் கிருஷ்ணனும் (57) விபத்தில் காயம் அடைந்தர். விபத்து குறித்து கீழச்செல்வனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #SayalkudiAccident
    கூடலூரில் தாறுமாறாக ஓடிய கார், மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    கூடலூர்:

    ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சுற்றுலா வாகனங்கள் அதிகளவு இயக்கப்படுகின்றன. இங்குள்ள மலைப்பாதைகளில் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்க போலீசார் அறிவுறுத்தி வருகின் றனர். மேலும் அதுகுறித்த விழிப்புணர்வு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகள் அதனை பின்பற்றுவது இல்லை. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த கூடலூர் நகரில் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சாலையின் நடுவில் கான்கிரீட் தடுப்புகளை போலீசார் அடுக்கி வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கோழிக்கோடுக்கு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. கூடலூர் பழைய பஸ் நிலையத்தை கடந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி மற்றும் 14 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களுடன் இணைந்து போலீசார் காரை மீட்டனர். இதையடுத்து விபத்து குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிரீஸ் நாட்டுக்கு அடைக்கலம் தேடிசென்ற குடியேறிகளை ஏற்றிவந்த லாரி துருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் இன்று கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். #Nineteenkilled in #migrantvehiclecrash #Turkeymigrantvehiclecrash
    இஸ்தான்புல்:

    உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

    பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

    மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, இத்தாலி நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    கடல்மார்க்கம் தவிர சாலை வழியாகவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளான நார்வே, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தஞ்சம் அடைய நூற்றுக்கணக்கான குடியேறிகள் தினந்தோறும் சென்றவண்ணம் உள்ளனர்.


    அவ்வகையில், கிரீஸ் நாட்டுக்கு அடைக்கலம் தேடிசென்ற குடியேறிகளை ஏற்றிவந்த லாரி துருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் இன்று கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

    மேற்கு துருக்கியில் உள்ள இஸ்மிர் விமான நிலையம் வழியாக சென்ற லாரி கடுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஆழமான கால்வாய்க்குள் விழுந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாகவும், உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற உடனடி விபரம் ஏதும் தெரியவில்லை என்றும் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Nineteenkilled in #migrantvehiclecrash  #Turkeymigrantvehiclecrash
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நவராத்திரி விழாவிற்கு சென்று திரும்பிய 10 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். #ChhattisgarhAccident
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ராஜநந்த்கான் மாவட்டம், டோங்கர்கர் நகரில் உள்ள புகழ்பெற்ற பம்லேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் துர்க் மாவட்டம் பிலாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை அந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொகுசு காரில் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    ராஜநந்த்கான்-துர்க் சாலையில் சோம்னி கிராமம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல டிரைவர் முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி மீது சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுமையாக சேதமடைந்தது.

    காருக்குள் இருந்த 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரைத் தேடி வருகின்றனர். #ChhattisgarhAccident
    ×