search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது"

    ராஜபாளையத்தில் மது பழக்கத்தை கைவிட முடியாததால் வி‌ஷம் குடித்து துப்புரவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 30). ‘செப்டிக் டேங்க்‘ சுத்தம் செய்யும் பணி செய்து வந்தார்.

    இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது சித்ரா, 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான இசக்கிமுத்து கடந்த சில நாட்களாக அதிகமாக மது அருந்தினார்.

    இதனை மனைவி சித்ரா கண்டித்தார். இதனால் மன வேதனை அடைந்த இசக்கிமுத்து, வி‌ஷம் (குருணை மருந்து) குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு இசக்கிமுத்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவருடைய தந்தை சித்ராயா, ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    போச்சம்பள்ளி அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள சுண்டக்காப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது50). விவசாயியான இவர் தோட்டத்தில் பட்டுக்கூடு வளர்த்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அன்பழகன் நேற்று மதியம் தனது விவசாயதோட்டத்தில் பூச்சிமருந்தை குடித்து  மயங்கி கிடந்தார்.  

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனேஅவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து அன்பழகனை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைபெற்ற அன்பழகன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்த அன்பழகனுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளார்.
    எல்லைப்பிள்ளை சாவடியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லைப் பிள்ளைச்சாவடி மணக்குள விநாயகர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் மரிஜான் (வயது 45). இவருக்கு ஜோஸ்பின் (39) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    புதுவையில் இண்டர்நெட் சென்டர் நடத்தி வந்த ராஜேஷ் மரிஜான் அதில் நஷ்டம் ஏற்படவே இண்டர்நெட் சென்டரை மூடி விட்டு சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    விடுமுறை நாட்களில் புதுவை வந்து மனைவி- மகன்களை பார்த்து விட்டு செல்வது வழக்கம். புதுவை வரும் போது ராஜேஷ் மரிஜான் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அதுபோல் நேற்று வாக்களிக்க புதுவை வந்த ராஜேஷ் மரிஜான் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் வேதனை அடைந்த ராஜேஷ் மரிஜான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் மின் விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் நாகமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குருசுகுப்பத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை குருசுகுப்பம் பிரான்சிஸ் ஆசிப் தெருவை சேர்ந்தவர் தேவராசு (வயது 55). மீனவர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    தனியாக வசித்து வந்த இவர் அதே பகுதியில் வசித்து வந்த அவரது அக்காள் விஜயா அவ்வப்போது சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்து வந்தார்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள தேவராசு திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அவர் வீட்டில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார்.

    அப்போது எதேச்சையாக வீட்டுக்கு வந்த விஜயா அங்கு தனது தம்பி தேவராசு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தேவராசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாணரப்பேட்டை அன்னை நகரை சேர்ந்தவர் சிவசங்கர் (27). பெயிண்டர். குடிப்பழக்கம் உள்ள இவர் கஞ்சா பழக்கத்துக்கும் ஆளானார். இதனால் எப்போதும் போதை மயக்கத்திலேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சிவசங்கர் வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் சிவசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டாஸ்மாக் மதுக்கடைகளில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வதற்கும் தேர்தல் கமி‌ஷன் தடை விதித்துள்ளது. #LSPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பணத்துக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் புழங்குவது மது பானம்தான்.

    அரசியல் கட்சிகளின் வேலைக்காக வருபவர்களில் பெரும்பாலானவர்கள். மாலை நேரம் ஆகிவிட்டால் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    இதனால் மதுக்கடைகளில் வழக்கத்தைவிட இப்போது மது விற்பனை அதிகமாகி கொண்டு வருகிறது.

    தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்தபிறகு மதுபான கடைகளையும், மது உற்பத்தி தொழிற்சாலைகளையும், கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 19 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து தினமும் எத்தனை லாரிகளில் மது பாட்டில்கள் வெளியே கொண்டு செல்லப்படுகிறது என்பதை கண்காணிக்க இப்போது ஒவ்வொரு தொழிற்சாலை வாசலிலும் சி.சி.டி.வி. கேமரா நிறுவப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு தொழிற்சாலைகளில் இருந்தும் தினமும் 200 லாரிகளில் டாஸ்மாக் குடோன்களுக்கு மதுபாட்டில்கள் அனுப்பப்படுவது வழக்கம்.

    ஆனால் இப்போது இதைவிட அதிகமான லாரிகளில் மது பாட்டில்கள் அனுப்பப்பட்டால் அதற்கான விளக்கத்தையும், மாவட்ட கலெக்டருக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல் டாஸ்மாக் மதுக்கடைகளில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடைகளில் வழக்கமாக நடைபெறும் விற்பனையை விட 20 சதவீதத்துக்கு மேல் விற்பனை அதிகரித்தால் அதற்கான காரணத்தையும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுபற்றி டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய துறையாக டாஸ்மாக் உள்ளது. மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு மட்டும் ரூ.26 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம் வந்துள்ளது.

    இப்போது தேர்தல் நேரம் என்பதால் அனைத்து மதுக்கடைகளிலும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.

    எனவே இதை கட்டுக்குள் கொண்டு வர மொத்தமாக பெட்டி பெட்டியாக மது விற்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

    சட்டத்துக்கு புறம்பாக கள்ளத்தனமாக மது விற்பனையில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் கூறி உள்ளோம். #LSPolls

    தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் இந்தக்கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பேரையூர்:

    சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டியைச் சேர்ந்தவர் அழகுசாமி. இவரது மகன் அழகுபாண்டி (வயது 35). இவர் கப்பலூரில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இதனால் மனைவி மற்றும் மகனுடன் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் வசித்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி அவரை விட்டுச் சென்றார். இதனால் மது பழக்கத்திற்கு அடிமையான அழகுபாண்டி சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தோப்பூர் கண்மாய்க்குள் குப்பை கிடங்கு அருகே அழகுபாண்டி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

    இதுபற்றி ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது அழகுபாண்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்தப்பகுதியில் மது பாட்டில்களும் கிடந்தன.

    இதனால் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதினர். கொலை செய்யப்பட்ட அழகுபாண்டி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தோப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அழகுபாண்டி (32) என்பவர் சம்பவத்தன்று கொலையான அழகுபாண்டியுடன் மது அருந்தியது தெரியவந்தது.

    அவரை பிடித்து விசாரித்தபோது, மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அழகுபாண்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் தோப்பூர் அழகுபாண்டியை கைது செய்தனர்.

    சேலம் கருப்பூர் அருகே அரசு அனுமதிஇன்றி சந்துக்கடை வைத்து நடத்திய பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூரை அடுத்த பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் தைலம்மாள் (வயது 70). இவர் உள்பட கட்டுவளவு பகுதியை சேர்ந்த மல்லிகா (55), கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சாந்தா (50), கந்தசாமி (60), சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த அய்யப்பன்(32) ஆகியோர் அரசு அனுமதியின்றி சந்துக்கடை வைத்து நடத்தியதாக தெரிகிறது.

    இதை அறிந்த கருப்பூர் போலீசார், பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் அரசு அனுமதிஇன்றி சந்துக்கடை வைத்து நடத்திய அவர்கள் 5 பேரையும் கருப்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews

    திருச்சி உறையூரில் குடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கொத்தனார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருச்சி:

    திருச்சி உறையூர் வைக் கோல்காரதெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகாலெட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன், மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு ராஜா வீட்டில் வேட்டியால் தூக்குமாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார். 

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி உறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று ராஜா உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு ராஜா தற்கொலை குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ராஜா தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்ததாகவும் இதை மனைவி  மகாலட்சுமி தட்டி கேட்டதால் தினமும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் இரவு குடித்து விட்டு வந்ததால் தகராறு ஏற்பட்டு இதில் மனமுடைந்த ராஜா இரவு 10 மணிக்கு மனைவி குழந்தைகள் தூங்கிய பிறகு வேட்டியால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகவும்  கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவை உருளையன்பேட்டையில் மனைவி திட்டியதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை ராஜாநகர் ரைஸ்மில் வீதியை சேர்ந்தவர் செங்கேணி (வயது55), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ருக்மணி வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    கடந்த சில நாட்களாக செங்கேணி வேலைக்கு ஏதும் செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். மேலும் ருக்மணி மற்றும் உறவினர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மதுகுடித்து வந்தார். இதனை ருக்மணி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த செங்கேணி மனைவி வீட்டின் மாடிக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ருக்மணி உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் ஏட்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செங்கேணியை தூக்கில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    சேலம் பள்ளப்பட்டி அருகே மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் அருகே உள்ள சித்தாகவுண்டர் தெருவை சேர்ந்தவர் வெங்கடசன்(வயது 43). கூலி தொழிலாளி. இவர் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் பெற்று குடித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவும் மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் மனைவி பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் வெங்கடேஷ் தகராறு செய்தார். எவ்வளவு தகராறு செய்தும் மனைவி பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார். இதை பார்த்த மனைவி சத்தம் போடவே அருகில் உள்ளவர்கள் வந்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவரின் உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் மனைவி கதறி அழுதனர். இது குறித்த பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    புதுவை அருகே மதுபழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    புதுவை அருகே தமிழக பகுதியான நாவற்குளம் குளத்து மேட்டு வீதியை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 26). கூலித்தொழிலாளியான இவர் மது பழக்கத்துக்கு அடிமையானார்.

    இதனால் இவருக்கு திருமணம் செய்ய யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து மது பழக்கத்தை மறக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பரந்தாமனை அவரது தாய் கிருஷ்ணவேணி அழைத்து சென்று கோலியனூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்.

    அங்கு சில நாட்கள் மட்டுமே பரந்தாமன் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்து விட்டார்.

    ஆனாலும் மது பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் நேற்று பரந்தாமனை அவரது தாய் கிருஷ்ணவேணி கண்டித்தார். பின்னர் அவர் வெளியே சென்று விட்டார்.

    தாய் கண்டித்ததால் மனவேதனை அடைந்த பரந்தாமன், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தாயின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்திய அளவில் 10 முதல் 75 வயது வரை உள்ள 16 கோடி பேர் மது குடிப்பதாக மத்திய அரசின் ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிலையத்துடன் இணைந்து ‘இந்தியாவில் பயன்படுத்தப்படும் போதை பொருள்கள் மற்றும் நோய் பாதிப்புகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் 36 மாநிலங்களிலும் 186 மாவட்டங்களில் 4.73 லட்சம் நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:-

    இந்திய அளவில் 10 முதல் 75 வயது வரை உள்ள 16 கோடி பேர் (14.6 சதவீதம்) மது குடிக்கிறார்கள். இதன்காரணமாக சத்தீ‌ஷ்கார், திரிபுரா, பஞ்சாப், அருணாசலபிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் நோய் பாதிப்பு அதிகளவில் உள்ளது. மதுகுடிப்பவர்கள் 38 பேரில் ஒருவர் ஏதாவது ஒரு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். 180 பேரில் ஒருவர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகிறார்.

    மதுவுக்கு அடுத்த இடங்களில் கஞ்சாவும், ஹெராயின் போன்ற போதைப்பொருட்களும் உள்ளன. 2.8 சதவீதம் பேர் (3.1 கோடி) கஞ்சாவும், 1.14 சதவீதம் பேர் ஹெராயினும், 0.96 சதவீதம் பேர் மருந்து பொருட்களையும், 0.52 சதவீதம் பேர் ஓபியமும் போதைக்காக பயன்படுத்துகிறார்கள். 10 முதல் 75 வயது வரை உள்ள 1.18 கோடி பேர் (1.08 சதவீதம்) தூக்க மாத்திரை, மயக்க மருந்து போன்றவைகளை போதைக்காக பயன்படுத்துகிறார்கள்.

    இவ்வாறு அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
    ×