என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 105298"
- நான்கு வீதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பணி எப்படி செய்ய வேண்டும்.
- தேர் சீர்செய்யும் பணிகளை போலீசார் பார்வையிட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சாமிகோவிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 13ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
முக்கிய திருவிழாவான திருக்கதவு அடைக்கத் திறக்கபாடும் வரலாற்று திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில் மார்ச் மாதம் 3 ந்தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுக்க உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை வேதாரண்யம் வேதார ண்யேஸ்வர ஸ்வாமி ஆலய நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
தேர் திருவிழாவின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகை கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில் வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது தேர் செல்லும் நான்கு வீதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பணி எப்படி செய்ய வேண்டும் மற்றும் பக்தர்கள் அன்னதானம் செய்வதற்கு தனி இடம் ஒதுக்குவது வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளையும் தேர் சீர்செய்யும் பணியினையும் போலீசார் பார்வையிட்டன பின்பு கோவில் நிர்வாகத்தினருடன் கலந்தாலோசனை செய்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
தேர் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என போலீசார்தெரிவித்தனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்
அகரம்சீகூர்,
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி கொடியேற்றுதலுடன் தொடங்கி மயான கொள்ளை திருவிழாவும் நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபற்றது. இந்த தேரோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மாலை தீமிதி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
- அக்னிகுண்டம் இறங்குதல் மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் வீரபத்திரசாமியை வழிபட்டனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கோடாரம்பட்டி ஸ்ரீ வீரபத்திரசாமி கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு அக்னிகுண்டம் இறங்குதல் மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோடாரம்பட்டி ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
நேற்று முன்தினம் இரவு முதலாம் பூஜை, இரண்டாம் பூஜை மற்றும் மூன்றாம் பூஜைகள் நடைபெற்று நேற்று காலை அக்னி குண்டம் இறங்குதல் நடைபெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி ஸ்ரீ வீரபத்திரசாமியை வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் பெரிய தேர் பவானி வந்தது.இதில் 10 ஊர் கிராம மக்கள் ஒன்று கூடி தேர் இழுத்தனர், மஹா சிவராத்திரியை முன்னிட்டு 2 நாட்களாக தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- புத்தக திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது
- புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா மாா்ச் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் வரும் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம். நீலகிரி மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் ஒருங்கிணைந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகிறது.இந்தப் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்படும் 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. தொல்லியல் அருங்காட்சியகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பழங்குடியினரின் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், ஆளுமைகள் பங்கேற்கும் இலக்கிய நிகழ்வுகள் இத்திருவிழாவில் இடம் பெறவுள்ளன என்றாா்.
- அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை
- 3 இடங்களில் எல்.இ.டி. திரை, கூடுதலாக 3 சி.சி.டி.வி. கேமரா பொருத்திட வேண்டும்.
நாகர்கோவில் :
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழாவை சிற ப்பாக நடத்தும் வகையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் ஸ்ரீதர் தலை மையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது-
திருவிழா காலத்தில் போலீசார் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு களையும், பக்தர்கள் வருகை காலமான மார்ச் 1-ந் தேதி முதல் கடற்கரையில் பக்தர்கள் நீராடும் இடத்தில் போதிய பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
கடைகள் மற்றும் உணவகங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. தேவசம் இணை ஆணையர் ஒத்துழைப்புடன் உரிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் வசதிக்காக கோவிலை சுற்றி 3 இடங்களில் எல்.இ.டி. திரை அமைத்திட வேண்டும். கூடுதலாக 3 சி.சி.டி.வி. கேமரா பொருத்திட வேண்டும்.
திருவிழா நாட்களில் பக்தர்களின் வசதிக்காக தேவையான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். மண்டைக்காடு அருகே தற்காலிக பஸ் நிலையம், தகவல் மைய அறை, பயணிகள் அமரும் இடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க போதிய டேங்கர் லாரிகள் போன்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மின்சார வாரியத்தினர் திருவிழாக் காலங்களில் தங்கு தடையின்றி சமச் சீரான மின்சாரம் வழங்க வேண்டும். தற்காலிக கழிவறைகள் அமைத்து அதற்கு தேவையான தண்ணீரை பீப்பாய்களில் வைக்க வேண்டும். கூடுதலாக 20 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும்.
மேலும் திருவிழா நாட்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் ஆங்காங்கே அமைத்து 24 மணி நேரமும் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
சுகாதாரத்துறையினர் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வீதிகளில் குப்பை கள் தேங்காத வண்ணம் சுத்தப்படுத்த வேண்டும். மருத்துவத்துறையினர் கோவில் பகுதியில் ஆம்பு லன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைப்பதுடன் முதலுதவிக்கான மருந்து மற்றும் உபகரணங்களுடன் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் செயல்படுவதுடன் குறைந்தது 3 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
குளியலறைகள் மற்றும் கழிவறைகள் சுத்தமாகவும் மக்கள் கூட்டத்திற்கு ஏற்ப போதுமான எண்ணிக்கை யில் அமைக்கப்பட வேண்டும். நடமாடும் கழிப்பிடங்கள் தவறாது அமைக்க வேண்டும்.
தீயணைப்புத் துறையினர் கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான படகு மற்றும் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களை பணியமர்த்திட வேண்டும். கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைத்து கூட்டத்தினை ஒழுங்கு படுத்த வேண்டும். பொங்கல் வைக்கும் இடத்தை கண்காணிக்க வேண்டும்.
மண்டைக்காடு திருவிழா வின் போது தரை வாடகை வசூல் செய்வது தொடர்பாக விதிமுறை மீறல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மயான கொள்ளை திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக தீ மிதி திருவிழா நடைபெற்றது.
- கும்ப பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
பாப்பாரப்பட்டி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பழைய பாப்பாரப்பட்டி அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் மயான கொள்ளை திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக தீ மிதி திருவிழா நடைபெற்றது.
கடந்த 11-ம் தேதி வாஸ்து சாந்தி பிரவேசபலி , 13-ம் தேதி கணபதி ஹோமம், கங்கை பூஜையும் முடித்து கங்கணம் கட்டி கொடியேற்றத்துடன் விழா, அம்பாள் வீதி உலா நடைபெற்றது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை சாமி கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து கல்யாண கோலத்தில் அம்மன் திருவீதி உலா ,பிள்ளைப்பாவ் சுற்றுதல் நடைபெற்றது.
பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் மயானத்துக்கு சென்று மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் தினசரி தெருக்கூத்து நடைபெற்றது . நிறைவு நாளான புதன்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. வியாழக்கிழமை பிச்சாண்டவர் கோலத்தில் அம்மன் வீதியுலா நடைபெறும். வெள்ளிக்கிழமை கும்ப பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தரமகர்த்தாக்கள் முனியகவுண்டர், பழனி ஊர்ப் பெருந்தனக்காரர்கள் சேகர், பச்சியப்பன், பழனியப்பன் மற்றும் விழாக் குழுவினர் ஊர்பொதுமக்கள் செய்தனர்.
- ஆலங்குடி மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவிலில் முளைப்பாரி எடுப்பு திருவிழா நடைபெற்றது
- ஏராளமான பெண்கள் பங்கேற்பு
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள மேற்பனை க்காடு கிராமத்தில் கல்லணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீரமாகாளி யம்மன் கோயில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. தினந்தோ றும் வாணவேடிக்கை, மங்கள இசையுடன் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக முளைப்பாரி எனும் பாலிகை எடுப்புத்திருவிழா நடந்தது. முளைப்பாரி திருவிழாவில் மேற்பனைக்காடு மேலக்காடு, வடையக்காடு, குறிஞ்சி நகர், கன்ரான் குடியிருப்பு, கீழக்காடு, தெக்கிக்காடு, ராஜாளி குடியிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம பெண்கள் தானியங்களை முளைவித்த பாத்திரங்களை மலர்களால் அலங்கரித்து, கும்மியாட்டத்துடன் ஊர்வலமாக தலையில் சுமந்து வந்து மண்ணடித்தி டலைச்சுற்றி வந்தனர். பின்னர்ஆற்றங்கரை வழியாக வீரமாகாளியம்மன் கோயில் அருகில் உள்ள பெரிய குளத்தில் முளை ப்பாரிகளை கரைத்து அதன் பின்னர் கூட்டு பிரார்த்தனை நடத்தி அம்மனை வழிபட்டனர். இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை இக்கோயிலில் மது எடுப்பு திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.
- ஆடு கோழிகளை கடித்து ரத்தம் குடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி,
தருமபுரி மாவட்டம், அ.பாப்பாரப்பட்டி அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.
நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சாமி கல்யாணம் நடைபெற்றது.
கல்யாண கோலத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. பிள்ளைப்பாவ் சுற்றுதல் நடைபெற்றது. பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அம்மன் மயானத்துக்கு சென்று மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் கோவில் முன்பு 14 நாட்கள் தினசரி இரவு கோபால்சாமி நாடகக்குழுவினரின் தெருக்கூத்து நடைபெற்றது.
விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. நாளை தீமிதி விழாவும், வியாழக்கிழமை பிச்சாண்டவர் கோலத்தில் அம்மன் வீதியுலா நடைபெறும்.
வெள்ளிக்கிழமை கும்ப பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.
இதேபோல் பிக்கிலி ரைஸ்மில் அருகில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும் தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் பிக்கிலி மயானத்தில் நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் அம்மன் அருள் வந்து ஆடு கோழிகளை கடித்து ரத்தம் குடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
சாமி கல்யாணம் மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி குமபிட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அகரம்சீகூர்:
அகரம்சீகூர்அடுத்து பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கிராமத்தில் அமைந்துள்ள அங்காள அம்மன் திருக்கோயிலில் மாசி மாத மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அங்காளம்மனுக்கு மலர்களால் சிறப்பு செய்யப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மயானத்தில் குட்டிகுடி நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு உதிரச் சோறு வைத்து படையலிட்டப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.பின்னர் உதிரச் சோறு தெளிக்கப்பட்டது. குழந்தை இல்லா தம்பதிகள், திருமணமாகத வர்கள் மற்றும் வேண்டு வரம் கேட்பவருக்கு உதிரத் சோறை, பக்தியுடன் பெற்று கொண்டனர்.குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தையுடன் வந்து அம்மன்மடியில் குழந்தையை வைத்து வணங்கினர். இந்த மயான கொள்ளை திருவிழா வில் ரஞ்சன்குடி,மங்கள மேடு உள்ளிட்டசுற்றுப்புற பகுதிகளில்இருந்து வந்திருந்த ஆயிரக்கண க்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
கரூர்,
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- அம்மன் கோவில் மயானக் கொள்ளைத் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
- சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளைத் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது-. இதையொட்டி நேற்று காலை ஹோமங்கள், மற்றும் சிறப்பு பூஜைகளுடன் கோவில் வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து கோவில் திருப்பணி பணியாளர்கள் அனைவருக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம், முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பிரவேசம், மகா கணபதி ஹோமம், மற்றும் பூஜைகளுடன் அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இன்று மஹா சிவராத்திரியும், நாளை சூலம் போடுதல் நிகழ்ச்சியும், அம்மன் மயான கொள்ளைக்கு புறப்படுதலும் நடைபெற உள்ளது. இதே போல் காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோயில் மற்றும் பன்னீர் செல்வம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயிலில், மயான கொள்ளைத் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா வருகிற 26-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்குகிறது
- 13-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்து–மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு–தோறும் மாசிபெருந்திருவிழா பூச்சொ–ரிதல் மற்றும் தேரோட்டத்து–டன் விமரிசையாக நடைபெறும். மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் விழாவும் அடுத்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவையொட்டி பூச் சொரிதல் விழாவுடன் கூடிய தேரோட்டம் காப்பு–கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மாசிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக பூச்சொரிதல் விழா 26ந்தேதி நடக்கிறது. இதையொட்டி முத்துமாரி–யம்மனுக்கு சிறப்பு அபி–ஷேகம், வழிபாடுகள் நடை–பெறவுள்ளது புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். இதேபோல பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், தம்பதிகள் கரும்புத் தொட்டில் கட்டி கோவிலுக்கு மேள தாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வ–லமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்து–வார்கள். விழாவையொட்டி பந்தல்கள் அமைக்கப்பட்டு, கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர், பானகம் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து இரவு புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகு–தியை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை கோவி–லுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் சன்னதியில் பூக்களை சார்த்தி வழிபட்டுச் செல்வார்கள். தொடர்ந்து 27-ந்தேதி அதிகாலையில் பூப்பிரித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 13.03.2023 அன்று அம்மன் தேரோட்டமும், அதனைத்தொடர்ந்து 05.03.2023 அன்று இரவு காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் 15 நாள் திருவிழா தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்து–மாரியம்மன் வீதிஉலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8-ம் நாள் (12.03.2023) அன்று பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபடுவார்கள். 9-ம் நாள் திருவிழாவன்று (13.03.2023) மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள். மாசிப்பெருந் திருவிழா 21.03.2023 தேதி காப்புக்களைதலுடன் நிறைவு பெறுகிறது. விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்