என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 107163"
- மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
திருவாரூர்:
திருவாரூர் கூத்தாநல்லூர் அருகே உள்ள, மணக்கரையில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது.
இதில், அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக, பக்தர்கள் பால்குடம் காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து, கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி மாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மானாமதுரை பகுதியில் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- கோவிலில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
மானாமதுரை
மானாமதுரை வைகையாற்றங்கரையில் உள்ள ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு 16 வகையான மூலிகை பொருள்கள் வைத்து அபிஷேகம் நடைபெற்றது. பின் வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜை செய்து கோவில் பிரகாரம் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் ஆனந்தவல்லி சோமநாதரை தரிசனம் செய்தனர்.
இதேபோல் மேலெநெட்டூரில் கும்பாபிஷேகம் செய்யபட்டு புதுபிக்கப்பட்ட சொர்ணவாரீஸ்வரர் சாந்தநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வேம்பத்தூர் கைலாசநாதர் ஆவுடையம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் இங்கு உள்ள சிம்ம வாகனத்தில் காட்சி தரும் புதன் பகவானையும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மானாமதுரை பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
- சோழவந்தான், தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழ வந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி கோவிலில் வைகாசி மாத பிரதோஷ விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ரவிச்சந்திர பட்டர், பரசு ராம சிவாச்சாரியார், அய்யப்பன் ஆகியோர் பூஜைகளை செய்தனர்.
பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாக னத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் கோவிலை வலம்வந்து சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர்.
இந்த வழிபாட்டில் பா.ஜனதா விவசாய அணி மாநில துணைத்தலைவர், எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, வள்ளி மயில், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நம்புதாளை கோவிலில் நந்திக்கு அபிஷேகம் நடந்தது.
இதேபோல திருவேடகம் ஏலவார்க்குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சோழவந்தானை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடை பெற்றது.
அதன்படி தொண்டி அருகே நம்புதாளையில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவாலயமான அன்னபூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் நந்திக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பழங்கள், விபூதி, சந்தனம், அபிஷே கப்பொடிகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து உற்சவமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. பெண்கள் பலர் விரதமிருந்து கோவிலை வலம் வந்தனர்.
பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமி நாதன் ஆகியோர் செய்தி ருந்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிர சாதமாக வழங்கப்பட்டது.
தொண்டி அருகே திருவாடானை ஆதிரெத்தி னேஸ்வரர், தீர்த்தாண்ட தானம் சர்வதீர்தேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது.
- நடராஜர்-சிவகாமி அம்மன் சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனியில், முருகன் கோவிலின் உபகோவிலாக பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழாவின் கொடியேற்றம், தேரோட்டம் உள்ளிட்டவை இந்த கோவிலில் வைத்தே நடைபெறுகிறது. எனவே இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளன்று நடராஜர்-சிவகாமி அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று சித்திரை திருவோண நட்சத்திரம் என்பதால் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு நடராஜர்-சிவகாமி அம்மன், விநாயகர், அஸ்திரதேவர் ஆகியோருக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம், 16 வகை தீபாராதனை நடைபெற்றது.
அதன்பின்னர் நடராஜர்-சிவகாமி அம்மன் சப்பரத்தில் நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
- காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
- சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 37-வது ஆண்டாக சித்திரைத் திருவிழாவை தீயாடியப்பர் பஸ் நிலைய டாக்ஸி, டூரிஸ்ட் வேன், மினி வேன், ஆட்டோ உரிமையாளர்கள் தொழிலாளர்கள் இணைந்து நடத்தினார்கள்.
திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் நாக்கில் உடல் முழுவதும் அலகு குத்தி கொண்டு, ஆட்ட காவடி, பறவை காவடி எடுத்து திருக்காட்டுப்பள்ளி வீதிகளின் வழியாக சிறப்பு கிராமிய இசையுடன் ஊர்வலமாக வந்து தெண்டாயுதபாணி சுவாமி கோவிலை அடைந்தனர்.
அங்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலையில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்.
- சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவாரூர்:
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் நேற்று கேது பகவானுக்கு பால்,பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர்,மஞ்சள்,சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ராகுதோஷம், கேதுதோஷம், நாகதோஷம், திருமணதடை உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலில் வழங்கப்படும் வெள்ளியிலான நாகத்திற்கு அபிஷேகம் செய்து பரிகார பூஜை செய்தனர். இதற்கனா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு நேற்று சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
- தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு நேற்று சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- அம்மனுக்கு மஞ்சள், பால் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூரில் பழமைவாய்ந்த ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரைப் பெருவிழா பூச்சொரிதலுடல் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது. 30அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற 600க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.
முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், திரவிய 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்து பக்தர்கள் அருள் பாலித்தார்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உத்திராபதிஸ்வருக்கு பால், தயிர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- மாலை உத்திராபதிஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை உத்திராபதியார் கோவில் தெருவில் உத்திராபதிஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமுதுபடையில் பெருவிழா நேற்று நடைபெற்றது.
அதில் அனைத்து வகையான பழங்கள், இனிப்புகள் , காய்கறி வகைகள் கொண்டு சமையல் செய்து அன்னம் படைக்கப்பட்டது.
முன்னதாக பக்தர்கள் விநாயகர் கோவிலில் இருந்து பால் காவடி எடுத்து உத்திராபதிஸ்வரர் கோவில் வந்தடைந்தனர்.
பின்னர் உத்திராபதிஸ்வருக்கு பால், தயிர், திரவிய பொடி, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அன்னதானம் நிகழ்ச்சியின் போது சிவன் பார்வதி சிறு தொண்டர் வெங்கட்நங்கை சந்தன நங்கை சீராளன் முருகன் போன்ற புராண கதைகளின் வேடங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது.
பின்பு மாலை உத்திராபதிஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இரவு சுவாமி வீதியுள்ள காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் துரைராஜன் , சிவா, பிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.
- குரு பகவானுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- பரிகார ராசிக்காரர்கள் யாகத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தரங்கம்பாடி:
குரு பெயர்ச்சி விழா ஏப்ரல் 22 ம்தேதி சனிக்கிழமையில் இரவு 11. 24 மணிக்கு குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகினார்.
இதனை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை சேந்தங்கு டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வதான்யேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் ( வள்ளலார் கோயிலில்) ரிஷப வாகனத்தில் அமர்ந்து ஸ்ரீமே தா தக்ஷிணாமூர்த்தியான குரு பகவானுக்கு மூலிகை, பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தானம், பலவகை பழங்கல் மற்றும் வாசனை பொருட்கள் கொண்டு கோயில் அர்ச்சகர் பாலச்சந்தர் சிவாச்சாரியார் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் தங்கம் அங்கி செலுத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஐந்து முகம் கொன்ட பத்து பூஜை தீபங்கள் காட்டப்பட்டது.
இதில் பரிகார ராசிகள், பயன்பெறும் ராசிகள், பரிகாரத்தில் மற்றும் யாகத்திலும் பங்கு பெற்று பயனடைந்தனர்.
தருமபுரம் ஆதீன தம்பிரான் சுவாமிகள் கலந்துக்கொன்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோயில் கண்காணிப்பாளர் அகோரம், முக்கிய பொருப்பாளர்கள் பக்தர்கள் திரளாக கலந்துக்கொன்டு வழிப்பட்டனர்.
- குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்க உள்ளார்.
- இன்று இரவு 9 மணிக்கு குருபகவானுக்கு விசேஷ யாகம் மற்றும் மகா அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மானம்புசாவடி ஆட்டுக்கார தெருவில் நாகம்மாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் குரு பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.
இன்று இரவு 10 மணிக்கு மேல் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்க உள்ளார் .
இதை முன்னிட்டு இரவு 9 மணிக்கு குரு பகவானுக்கு விசேஷ யாகம் மற்றும் மகா அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மீனம், மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம் தனுசு ஆகும்.
பரிகார கட்டணம் ரூ.100 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் யாக அபிஷேக பூஜை பொருட்களை பக்தர்கள் முன்னதாகவே கோவிலில் வந்து சேர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
- சோழவந்தான் கோவில் மண்டல அபிஷேகம் நடந்தது.
- விழா ஏற்பாடுகளை பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் பன்னி முட்டி முனியாண்டி கோவில் மண்டல அபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. இதையொட்டி மண்டல பூஜை தினசரி நடைபெற்று வந்தது. சிறப்பு மண்டல அபிஷேகம் ஆனந்த் என்ற கற்பூரபட்டர் தலைமையில் யாகபூஜை இன்று காலை நடந்தது இதைத் தொடர்ந்து பன்னி முட்டி முனியாண்டி சுவாமி மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மண்டல அபிஷேகம் நடைபெற்றது. சண்முகபூசாரி பூஜை செய்து பிரசாதம் வழங்கினார். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னாள் சேர்மன் எம்.கே. முருகேசன், காடுபட்டி திரவுபதி அம்மன் கோவில் பூசாரி பாலு, முதலியார் கோட்டை கிராமத்தலைவர் ஜெயக்கொடி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்