search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • 5, 6-வது பிளாகில் உள்ள 110 வீடுகள் காலி செய்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
    • வீடுகளை காலி செய்வதற்கு 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் பல்வேறு அமைப்பினர் மனு அளித்தனர்.

    இதில், கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியில் உள்ள அருள்முருகன் நகர், காந்தி நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மண்டியிட்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்காக எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் உள்ள அருள்முருகன் நகர், காந்தி நகர் பகுதியில் உள்ள 5, 6-வது பிளாகில் உள்ள 110 வீடுகள் காலி செய்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மேலும், இந்த வீடுகளில் வருகிற 22-ந் தேதி மின் இணைப்பு துண்டிக்க போவதாக அறிவித்துள்ளனர். இந்த பகுதியில் பள்ளி குழந்தைகள் பலர் உள்ளனர்.

    இவர்களுக்கு தேர்வுகள் நடக்க உள்ளது. இந்த நிலையில், வீடுகளை காலி செய்ய சொல்கிறார்கள். வீடுகளை காலி செய்வதற்கு 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மக்கள் விடுதலை முன்னணியினர் அளித்துள்ள மனுவில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி பகுதியில் போதை பொருள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.

    டாஸ்மாக் கடைகளில் இரவு 11 மணிக்கு மேல் அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், வடபுதூரில் புதிதாக தொடங்க உள்ள டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தனர். பெரியசாமி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க கூடாது என வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 495 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது :-

    குைறதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 495 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்ப ட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காய்ந்த நெற்கதிர்களை கையில் ஏந்தி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் மனு கொடுத்தனர்
    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்

    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சக்திவேல் மற்றும் அப்பகுதி விவசாயிகள் காய்ந்த நெற்கதிர்களுடன் இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ;-திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா திரு நெகுல்குளம், தேவராயநேரி, அசூர், வாழவந்தான் கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக திரு நெகில் குளம், தேவராய நேரி ஆகிய இரண்டு கிராமங்களில் மட்டும் 600 ஏக்கருக்கு மேல் புகையான் மற்றும் குடிநோய் பாதிக்கப்பட்டுள்ளது . இதனால் ஒரு ஏக்கருக்கு 10 மூட்டை கூட நெல் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.அதேபோன்று திருவரும்பூர் வட்டாரத்தில் மட்டும் மொத்தம் 12 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூர் பகுதி என்பது டெல்டா மாவட்டத்தின் அரை கிலோமீட்டர் அருகில் உள்ளது. டெல்டா விவசாயிகளுக்கு கிடைக்கும் இழப்பீடுகள் , நன்மைகள் இங்குள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை எனவே திருவுறும்பூர் பகுதியை டெல்டா பகுதியில் இணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


    • கோவை மாநகரில் 700க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
    • விடுதிக்குள் சோதனை என்ற பெயரில் அத்துமீறி நுழைந்து கட்டாய வரி வசூல் செய்கின்றனர்.

    கோவை,

    கோவையில் உள்ள விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகரில் 700க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் தங்கி உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கட்டணத்தில் சாப்பாடு மற்றும் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது விடுதி உரிமையாளர்களை ஓட்டல்களுக்கு நிகராக ஜி.எஸ்.டி வரி செலுத்த நிர்பந்திக்கப்படுகின்றனர். மேலும் விடுதிக்கு சோதனை என்ற பெயரில் அத்துமீறி நுழைந்து கட்டாய வரி வசூல் செய்கின்றனர். இதனால் கோவை மாநகரில் செயல்பட்டு வரும் விடுதி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெரிய ஓட்டலுக்கு நிகராக வரி வசூலிப்பதை கைவிட்டு விடுதிக்கு என ஜி.எஸ.டி. வரியில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • கபிஸ்தலம் சுற்று பகுதிகளில் 800 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
    • மஞ்சள் நோய் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு கரும்புகள் வளர்ச்சி குன்றி உள்ளது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் தாலுகாவில் சேர்ந்த விவசாயிகள், தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறிப்பிட்டுள்ளதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் சுற்று பகுதி களான வடசருக்கை, வீரமாங்குடி, தேவன்குடி, சோமேஸ்வரபுரம், மணலூர், கணபதி அக்ரகாரம் உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 800 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.

    இந்த கரும்பு பயிர்களில் ஒரு விதமான மஞ்சள் நோய் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு கரும்புகள் வளர்ச்சி குன்றி ஒரு அடியிலேயே எட்டு கணுக்களும் உள்ளது.

    கரும்பின் தோகையை பிரிக்கும் போது உள்ளே எரும்பு, பூச்சி போன்றவை உள்ளது. வளர்ச்சி இல்லாததால் கரும்பு கொள்ளையை வயலிலேயே அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்து சாகுபடி செய்த விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    எனவே மத்திய மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு இந்து மகா சபை எதிர்ப்பு தெரிவித்தனர்
    • திருச்சி கலெக்டரிடம் புகார் மனு

    திருச்சி:

    அகில பாரத இந்து மகா சபா தேசிய தலைவர் வி.எஸ்.ஆர்.ஆனந்த் தலைமையில் பா.ஜ.க. பிரமுகர் எஸ்.டி.–அசோக்குமார், இந்து மகா சபா நிர்வாகி மதுபாலன், திருச்சி குட்ஷெட் லாரி தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சங்கர், அகில பாரத அனுமன் சேனா மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் கங்கா–தரன், அகில பாரத இந்து மகா சபா மாவட்ட தலைவர் மகேஷ் ஆகியோர் கலெக்டர் மா.பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப–தாவது:- திருச்சி டி.வி.எஸ். டோல் கேட் அருகில் சென்னை, தஞ்சை நெடுஞ்சாலைக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வந்தது. பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த கடை சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் அந்த டாஸ்மாக் மதுபான கடையை திறக்க முயற்சித்த போது அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அப்போது மதுபான கடை திறக்கும் முடிவை டாஸ்மாக் அதிகா–ரிகள் கைவிட்டனர். இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் அந்த மதுபான கடை அதே பகுதியில் திறக்கப்பட்டது. இது சர்வீஸ் சாலையில் அமைந்துள்ளது. மதுபான கடைக்கு சென்று மது வாங்கிக் கொண்டு அந்த ஒரு வழிப்பாதையில் தான் திரும்பி வரவேண்டும். இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இங்கு கல்லூரி, தேவா–லயம் ஆகியவையும் அமைந் துள்ளன. இந்த மதுபான கடை மாணவ, மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஆகையால் இந்த டாஸ்மாக் மதுபான கடையை அந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக கலெக்டரை சந்தித்து வழங்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் சாலை வசதி, குடிநீா் வசதி, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவாக கொடுத்து வருகின்றனர்.

    நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் திருப்பூர் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக கலெக்டரை சந்தித்து வழங்கினர். அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் 638 மனுக்கள் பெறப்பட்டன.

    இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுத்தினாா். முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி நடவடிக்கை

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வரும் இந்திரா காந்தி சாலையில் பெருமளவுக்குஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.அதாவது 100 அடி சாலையானது தற்போது 10 அடியாக குறுகி உள்ளது. எனவே பஸ் நிலையத்தில்இருந்து வெளியே வரும் பஸ் மற்றும் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நகராட்சி ஆணையாளர்மகேஸ்வரி, நகர நில அளவையர்அசோக் குமார்ஆகியோர் இந்திரா காந்தி சாலை பஸ் நிலையம் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகிராம மக்கள் கலெக்டரிடம் மனு,

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பூர்த்தங்குடி, தெ.நெடுஞ்சேரி ஊர் பொதுமக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர். அந்த மனுவில் கூறியி ருப்பதாவது   காட்டுமன்னார்கோயில் பெட்ரோல் பங்க் அரு காமையிலும், காட்டு மன்னார்கோயில் நெடுஞ்சாலை ஒரத்திலும் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைந்துள்ளது. இங்கு வரும் மதுபான பிரியர்கள் சாலையிலேேய வாகனங்களை நிறுத்தி விடு கின்றனர். மேலும், குடித்து விட்டு மது போதையில் கூச்சலிடுகின்றனர்.  இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிப்படை கின்றனர். இதனால் டி.நெடுஞ்சேரி முதல் கந்தகுமாரன் வரை அதிகளவில் வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இந்த மதுபான கடை டி.நெடுஞ்சேரி ஊராட்சி எல்லைக்கு உட்பட்டது. இடப்பற்றாகுறை காரண மாக பூர்த்தங்குடி ஊராட்சி யில் முறை கேடாக இயங்கி வருகின்றது. இந்த டாஸ்மாக் கடையை நிரந் தரமாக எங்கள் ஊராட்சியில் இருந்து இட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    • தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழில் நகரமாக பொள்ளாச்சி உள்ளது.
    • தென்னை பொருட்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகின்றன.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி நகர பா.ஜ.கவினர் பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் ஒரு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழில் நகரமாக பொள்ளாச்சி உள்ளது. இங்கிருந்து ஒவ்ெவாரு ஆண்டும் கோடிக்கணக்கான மதிப்பில் தென்னை பொருட்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகின்றன.

    வருவாய் கோட்டம், கல்வி மாவட்டம், நெடுஞ்சாலை உட்கோட்டம், மக்களவை, சட்டசபை என அனைத்துக்கும் தலைமையிடமாக பொள்ளாச்சி உள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் திருப்பூர் இருந்தது. தற்போது திருப்பூர் தனி மாவட்டமாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் நீண்ட காலமாக பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    நிர்வாக காரணங்களுக்காகவும், மாவட்ட தலைநகருக்கும், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிக்கும் அதிக தூரம் உள்ளது.

    மலைப்பகுதியான வால்பாறை அருகே உள்ள சோலையாறு பகுதியில் இருந்து கோவை கலெக்டர் அலுவலகம் சென்று வர, சுமார் 260 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை மற்றும் ஆனைமலை ஆகிய 4 வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம், உடுமலை வட்டங்களை உள்ளடக்கி பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு பொள்ளாச்சி மாவட்டத்தை உருவாக்க வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுயஉதவிக்குழுக்கள் மூலம் எழுதி கொள்ளலாம்
    • கலெக்டர் அறிவிப்பு

    கரூர், 

    மக்கள் குறைதீர் கூட்டத்தில், மனுக்கள் இலவச எழுதித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் மனு கொடுக்க வரும் மக்களிடம் மனுக்கள் எழுதித்தர அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க மனுக்கள் பதியும் இடத்துக்கு அருகிலேயே, மாவட்ட நிர்வாகத்தால் சுயஉதவி குழுக்கள் மூலம், கட்டணம் ஏதுமின்றி இலவசமாக மனுக்களை எழுதித்தர, இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடிமக்களால் தொல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
    • முசிறி கோட்டாட்சியரிடம் மனு

    முசிறி,

    முசிறி சேலம் பைபாஸ் ரோட்டில் ஏற்கனவே இரண்டு மது கடைகள் இருப்பதினால் அடிக்கடி பொதுமக்கள் பிரச்சனைகளும் விபத்து களும் ஏற்படுகிறது.மேலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மற்றும் ஊராட்சி அலுவலகத்திற்கு செல்லும் அரசு அலுவலர்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இந்த வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மளிகை கடை, ஜவுளி கடை, ஸ்டேஷனரி கடை, பெட்ரோல் பங்கு, மசூதி போன்ற தேவைகளுக்காக சொல்லுகின்ற பொழுது பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.இந்நிலையில் மூன்றாவ தாக தா.பேட்டை ரோடு ரவுண்டானா கிழக்கு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் மதுபான கடை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்க இருப்பதை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும், மதுக்கடைகள் தேவையில்லை என அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் கோட்டாட்டாச்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு மனு மீது பரிசீலனை செய்து, மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் மாதவன் உறுதி அளித்தார்.

    ×