என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 110143"
புதுவை முத்தியால் பேட்டை மாணிக்க முதலி யார் தோட்டம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வேலன். மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவரது மனைவி கஸ்தூரி (வயது 32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இதற்கிடையே மது குடிக்கும் பழக்கம் உள்ள வேலன் அடிக்கடி சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
அதுபோல் நேற்றும் வேலன் வேலைக்கு செல் லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை கஸ்தூரி கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து கஸ்தூரி தனது தாய் மல்லிகாவிடம் செல்போனில் பேசினார். பலமுறை கணவன் குடித்து விட்டு தகராறு செய்வதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா தனது உறவினர்களுடன் மகள் வீட்டுக்கு வந்தார். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அப்போது மின் விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் கஸ்தூரி தூக்கு போட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் தூக்கில் இருந்து கஸ்தூரியை மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கஸ்தூரி பரிதாப மாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியாங்குப்பம் கோட்டை மேடு சேரன் வீதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (52). கார் டிரைவர். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
சம்பத்குமார் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். என்றாவது ஒரு நாள் டிரைவர் வேலைக்கு சென்றாலும் அந்த பணத்தை வீட்டு செலவுக்கு கொடுப்பதில்லை.
அது போல் சம்பவத்தன்று டிரைவர் வேலைக்கு சென்ற சம்பத்குமார் அந்த பணத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல் அதனை செலவழித்தார். இதனை காயத்ரி கண்டித்தார். இதனால் மனமுடைந்த சம்பத்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) அவர் தின்று விட்டார்.இதில் மயங்கி கிடந்த சம்பத்குமாரை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சம்பத்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை எழுமலை சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிச்சைபாண்டி (வயது 33). இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பிச்சை பாண்டிக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்தது.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பாரதி கடந்த 23-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பிச்சை பாண்டி மனதை மிகவும் பாதித்தது.
மனைவியின் சாவுக்கு குடிப்பழக்கம் காரணமாகி விட்டதே? என்று மனவேதனை அடைந்த பிச்சைபாண்டி மனைவி இறந்த 2 நாளில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிச்சைப்பாண்டி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
காஞ்சீபுரம்:
மதுராந்தகம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். பெயிண்டர்.இவரது மனைவி ஜானகி (30) இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை.
இந்த நிலையில் பிரபாகரனுக்கு காஞ்சீபுரம் அடுத்த தாமரைத் தாங்கல் பகுதியைச் சேர்ந்த சாமியார் பாபு உடன் தொடர்பு ஏற்பட்டது. அவரிடம் தனக்கு குழந்தை இல்லையே என்று கூறி வருத்தப்பட்டார்.
இதையடுத்து பாபு, பவுர்ணமி அன்று ரகசிய யாகம் நடத்தினால் உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று பிரபாகரனிடம் கூறினார்.
மேலும் கணவன்-மனைவி இருவரும் குளித்துவிட்டு நகைகள் அணிந்து யாகத்தில் இருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை நம்பிய பிரபாகரன் ரகசிய பரிகார பூஜைக்கு சம்மதித்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு பிரபாகரன் தனது மனைவி ஜானகியுடன் தாமரைத் தாங்கல் கிராமத்திற்கு சென்றார். அவர்களை சாமியார் பாபு, இரவு 11 மணி அளவில் தாமரைத் தாங்கல் கிராமத்துக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று யாகம் செய்தார். அப்போது கணவன்-மனைவி இருவரும் கண்ணை மூடிக் கொண்டு சாமி கும்பிடுங்கள் என பாபு கூறினார்.
தம்பதி இருவரும் கண்ணை மூடிக் கொண்டிருந்த போது திடீரென பாபு அங்கிருந்த கல்லால் பிரபாகரனின் முகத்தில் தாக்கினார். பின்னர் ஜானகியையும் தாக்கி கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
அதிர்ச்சி அடைந்த ஜானகி கூச்சலிட்டார். கிராம மக்கள் திரண்டு வந்து காயம் அடைந்த பிரபாகரனை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சீபுரம் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர்.
தப்பி ஓடிய போலி சாமியார் பாபுவை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). இவரது மனைவி ஜெயா(45).
இவர்கள் இருவரும் சவுரிபாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக ரோந்து சென்ற பீளமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி இருவரையும் பிடித்து விசாரித்தார்.
அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது அதில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் தேனியில் இருந்து கஞ்சாவை கடத்தி கொண்டு வந்து சிறு, சிறு பொட்டலங்களாக மாற்றி கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் கடந்த 4 வருடங்களாக கோவை ஒத்தகால் மண்டபம் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.
முருகன் மீது பெரிய கடை வீதி போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் இருக்கிறது. இவர் கடந்த சில நாட்களாக பீளமேடு பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததாக போலீசார் கூறினார். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காட்டூர் போலீசார் காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்ற போது பஸ் நிலையத்தின் எதிர்புறம் உள்ள கழிப்பிடம் அருகே முதியவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நிற்பதை கண்டனர். அவரை பிடித்து சோதனை செய்த போது 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் புதுசித்தாபுதூரை சேர்ந்த பன்னீர்செல்வம்(69) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் ரூ.1280 -ஐ பறிமுதல் செய்தனர். #tamilnews
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன்(32). இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் முத்து கிருஷ்ணன் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர்.
அப்போது வீட்டில் உள்ள அறையில் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்து கிருஷ்ணனும், லாவண்யாவும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கதவை உடைத்து உ ள்ளே சென்று தூக்கில் பிணமாக தொங்கிய கணவன்-மனைவி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
எட்டயபுரம் கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 48). இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இவரது மனைவி மீனாட்சி(40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 29-ந் தேதி அதிகாலை மீனாட்சி சமைத்து கொண்டிருந்தார். அப்போது கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த மீனாட்சி சமைத்து கொண்டிருந்த கொதிக்கும் எண்ணையை எடுத்து முனியசாமி மீது ஊற்றியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் மீனாட்சியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
தேனி:
கம்பம் அருகே உள்ள கூடலூரில் கே.பி. பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். (வயது 40). இவரது மனைவி கல்பனா (37). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்து இருந்துள்ளார். இது சம்பந்தமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதனால் சுரேஷ் அடிக்கடி தனது மனைவியிடம் சண்டையிட்டு அவரை கொடுமைபடுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த வாக்குவாதத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான மனைவி கல்பனா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.
எஸ்.பி. உத்தரவின் பேரில் கூடலூர் வடக்கு போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்டது எஸ்.வலையங்குளம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது29), கூலி தொழிலாளி.
இவரது மனைவி பஞ்சவர்ணம் (27). இவர்களுக்கு 7 வயதில் செல்வகுமார் என்ற மகன் உள்ளார். கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
சம்பவத்தன்று இரவும் தகராறு ஏற்பட ஆத்திரம் அடைந்த இளங்கோ வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து மனைவி மீது ஊற்றினார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வைத்து விட்டு கதவை சாத்தி விட்டு வெளியே வந்து விட்டார்.
அப்போது உள்ளே இருந்த செல்வகுமாரின் அழுகுரல் கேட்டது. உடனே மகனை காப்பாற்ற இளங்கோ கதவை திறந்து கொண்டு உள்ளே போனார். அப்போது உடலில் தீயுடன் அலறி துடித்துக் கொண்டிருந்த பஞ்சவர்ணம் கணவரை கட்டிப்பிடித்தார். இதில் அவரது ஆடையிலும் தீ பிடித்தது.
சிறிது நேரத்தில் அவரும் வலியால் அலறி துடித்தார். கணவன்-மனைவியின் கூக்குரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர்.
ஆபத்தான நிலையில் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இளங்கோ பரிதாபமாக இறந்தார். இன்று அதிகாலை பஞ்சவர்ணமும் இறந்தார். #tamilnews
வேலூர் அடுத்த கணியம்பாடி கணிகணியானை சேர்ந்தவர் சிவா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக செல்வி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 15-ந் தேதி அன்று சிவா செல்வியின் வீட்டிற்கு சென்று மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு அழைத்துள்ளார்.
அதற்கு செல்வி வரமறுத்ததால் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவா தான் வைத்திருந்த கத்தியால் செல்வியின் கழுத்து மற்றும் உடலில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதில் செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தென்னவன்(38).இவரது மனைவி கவிதா(32). இவர்கள் 2 பேரும் திருப்பூர் குமாரானந்தபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி வேலைபார்த்து வந்தனர். தென்னவன் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கவிதா பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார்.
தென்னவனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கிடையே தகராறு இருந்து வந்தது.
இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் கவிதா மன உளைச்சலில் இருந்தார். மேலும் கணவர் தனது நடத்தையில் சந்தேகப்படுவது அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.
நேற்று தென்னவன் வெளியே சென்று இருந்தார். வீட்டில் தனியாக இருந்த கவிதா விஷம் குடித்தார். இதில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே இறந்தார்.
வெளியே சென்ற தென்னவன் வீடு திரும்பியபோது மனைவி தற்கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டை உள் பக்கம் பூட்டி கொண்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை வெகு நேரமாகியும் தென்னவன் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது தென்னவன் தூக்கில் தொங்குவதையும், கவிதா பிணமாக கிடந்ததையும் கண்டு திடுக்கிட்டனர்.
இது குறித்து திருபூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிகக்ப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கணவன்-மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்த தென்னவன் - கவிதாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வேலூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள்.
கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் குமாரானந்த புரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பாப்பணன் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது மனைவி சுமதி ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுற்றுப்பகுதியில் குடியிருப்பவர்களிடம் வாரம் ரூ. 100 என்ற அடிப்படையில் தீபாவளி சீட்டு நடத்தினார்கள்.
இதில் ஏராளமானோர் பணம் செலுத்தினார்கள். 52 வாரம் முடிந்து 6,200 ரூபாய் முதிர்வு தொகை தருவதாக கணவன்-மனைவி கூறி இருந்தனர்.
ஆனால் சீட்டு முடிவடைந்து பணம் கொடுக்க வேண்டிய நிலையில் கணவன்-மனைவி தங்கள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் சீட்டு பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். அவர்களில் 15 பேர் ரூ. 6 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் தெரிவித்தனர். 100-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளதால் மோசடி தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தலைமறைவான கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி பாலாமணி (55).
சம்பவத்தன்று பாலாமணி தனது தாயார் மாராத்தாளை அழைத்துக்கொண்டு மொபட்டில் அன்னூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். மொபட் பூலுவபாளையம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வேன் மொபட் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த பாலாமணி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கால்களில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய மாராத்தாளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் சிறுமுகையை சேர்ந்த ஞானசேகரன் (23) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் இது குறித்து பாலாமணியின் கணவர் சண்முகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஒரு காரில் உறவினர்களுடன் புறப்பட்டு அன்னூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். கார் பொகளூர் அருகே வந்த போது சண்முகத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார்.
இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக சண்முகத்தை அன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் சண்முகத்தின் உடலை அவரது உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். விபத்தில் இறந்த பாலாமணியின் உடல் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கணவன்-மனைவி 2 பேரின் உடல்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரேயான் நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சண்முகத்தின் மகன் ஸ்ரீதர் ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார். அவர் வந்த உடன் உடல்கள் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்