என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 110335"
- நாராயணனும், அவரது குழுவினரும் பொன்னம்பல மேடு காட்டுக்குள் சென்று அங்கு பூஜை செய்துள்ளனர்.
- வன ஊழியர்கள் ராஜேந்திரன் மற்றும் ஷாபு ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு திருவிழாவின் போது ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த பகுதி தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் இருக்கிறது.
இந்த பொன்னம்பலமேட்டில் ஒருவர் நுழைந்து பூஜை நடத்தும் காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. இது சபரிமலை கோவில் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் பொன்னம்பலமேட்டில் பூஜைகள் நடத்தியது சென்னையை சேர்ந்த நாராயணன் என தெரியவந்தது.
நாராயணனும், அவரது குழுவினரும் பொன்னம்பல மேடு காட்டுக்குள் சென்று அங்கு பூஜை செய்துள்ளனர். அவர்கள் காட்டுக்குள் செல்ல வன ஊழியர்கள் சிலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்தது.
இதில் வன ஊழியர்கள் ராஜேந்திரன் மற்றும் ஷாபு ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கேரள போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலைரனூரை சுற்றி வருகிறது.
- சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது.
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலைரனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது. அங்காளபரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரியின் ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை அவர் மேல் வர வைத்து மேல்மயைனூர் அக்னி குலக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கிரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருள்ளாட்டம் ஆடி வருவார்.
பிறகு அவர் மயானத்திற்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கொட்டை தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஷ்வரி சக்தி என்று பாவிப்பார்கள். ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்து பிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடிசாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழா உருவாகின.
சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கிரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும் மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்லமாட்டார்.
- ஆண்டிமடம் அருகே விளந்தை கிராமத்தில் அப்பர் சுவாமிக்கு குரு பூஜை விழா நடைபெற்றது
- பக்தர்கள் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பாடல்களை பாடி கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விளந்தைகிராமத்தில் உள்ள, தர்மசம்வர்த்தினி அம்பிகா சமேத மேல அகத்தீஸ்வரர் கோயிலில். நால்வர் குரு பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருட அப்பர் குரு பூஜை விழா நடந்தது. இதனை முன்னிட்டு, மேல அகத்தீஸ்வரர், தர்மசம்வர்த்தினி, பிள்ளையார், முருகன், அகஸ்தியரை, தொடர்ந்து நாயன்மார்களில் நால்வர்களான. அப்பர், திருஞானசம்பந்தர், மணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பன்னிரு திருமுறை சுமந்து தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பாடல்களை பாடி ஆராதனையுடன் கூடிய குரு பூஜை நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பாடல்களை பாடி கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர்.
- உலக நன்மை வேண்டி குரு உபசார பூஜை மற்றும் கலச ஹோமம் பூஜை நடைபெற்றது.
- உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த குரு உபச்சார பூஜை மற்றும் கலச ஹோம பூஜையை வராச்சாரியார்கள் நடத்தினார்கள்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்தி நகரில் உள்ள விநாயகர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி குரு உபசார பூஜை மற்றும் கலச ஹோமம் பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி, புனித நீர் எடுத்து வந்து கலசத்தில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து ஹோம பூஜை நடைபெற்றது.
உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த குரு உபச்சார பூஜை மற்றும் கலச ஹோம பூஜையை சிவராச்சாரியார்கள் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து விநாயகர், தட்சிணாமூர்த்தி, பாலசுப்பிரமணியர் சாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- தேவகோட்டை தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
- மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது.
மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன்.
தேவகோட்டை
தேவகோட்டை நகரில் வள்ளியப்ப செட்டியார் ஊரணி வடக்கு வீதியில் சாரதா நகரில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் பங்குனி பெருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அப்போது அம்மனுக்கு காப்பு கட்டு நிகழ்ச்சியும், பிறகு மாலை சக்தி கரகம் எடுத்தாலும் நடைபெற்றது.
அன்றைய நாளில் தாய மங்கலம் முத்துமாரியம்மன் அலங்காரமும், புதன்கிழமை மீனாட்சி அம்மன், வியாழக்கிழமை காமாட்சி அம்மன், வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அம்மன் போன்ற அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நேற்று இரவு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், தடையின்றி குடும்பத்தில் சகல சுப நிகழ்ச்சிகள் நடக்க வும், மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பெண்கள் மற்றும் மாண விகள் கலந்து கொண்ட னர்.
அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. வருகின்ற 10-ந் தேதி பூச்செரிதல் விழாவும், 11-ந் தேதி முளைப்பாரி எடுத்து சுற்றி வருதல், 12-ந் தேதி பால்குடம், பூக்குழி இறங்கு தலும், மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது.
- சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- காலபைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் கிராமத்தில் உள்ள மேலமறை க்காடர் கோவிலில் முதலாம் ஆண்டு சம்வஸ்தராபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.
விழாவையொட்டி கோபூஜை, கும்ப பூஜையுடன் யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹூதியுடன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், பிள்ளையார், முருகன், காலபைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜையில் செவ்வந்திநாத பண்டாரசன்னதி கயிலைமணி வேதரத்னம் உள்பட பிரமுகர்களும், கோவில் திருப்பணி குழுவினரும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி செயலகம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது
- ஊராட்சி செயலகம் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஒரே இடத்தில் அமையும் வகையில் ஊராட்சி செயலகம் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன், துணைத்தலைவர் பாப்பாத்தி காசிநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் திருஞானம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .
- 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவில் பங்குனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவிலில் இருந்து நந்தவனத்துக்கு சென்று பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நேற்று காலை மேளதாளங்களுடன் சென்று கொடிப்பட்டம் வாங்கி கோவிலுக்கு கொண்டு வந்தனர். அதன் பின்பு காலை 9 மணிக்கு மேல் முத்துமாரியம்மன் சிலை முன்புள்ள கொடிமரத்தில், கொடியேற்றப்பட்டது.
பின்பு மூலிகைகள், திரவியப்பொடி, பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு வகையான அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு காப்பு கட்டிய பின்பு நேர்த்திகடன் செலுத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டிக் கொண்டனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் காப்புகட்டி நேற்று முதல் விரதத்தை தொடங்கினர். இரவு கும்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 14 நாட்கள் நடைபெறும் இந்த திரு விழாவில், தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, அம்மன் ரிஷபம், பூதம், யானை, அன்னப்பறவை, கேடயம், வெள்ளிக்குதிரை காமதேனு உள்பட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
- குளித்தலை அருகே சூரியனூரில் நடைபெற்றது
- எம்.எல்.ஏ இரா.மாணிக்கம் தொடங்கி வைத்தார்
குளித்தலை,
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரியனூர் ஊராட்சி பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.25..5 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம், 2 சிமெண்ட் சாலை அமைத்தல்.சமத்துவ மயானத்திற்கு காத்திருப்போர் கூடம் ஆகிய பணிகள் துவங்க குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார், விழாவில் கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், அவைத்தலைவர் ராஜேந்திரன்,குளித்தலை ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெரு ந்தலைவர் பொய்யாமணி தியாகராஜன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரிசக்திவேல், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், நகர துணை செயலாளர் வடிவேல், நங்கவரம் பேரூராட்சி மன்ற துணை தலைவர் அன்பழகன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமசாமி செந்தில், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சதீஸ்சர்மா மற்றும் அங்கன்வாடி பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.
- கடந்த 19-ம் தேதி எஜமானர் அனுக்ஞை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- புனிதநீர் நிரப்பி அதனை ஊர்வலமாக மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது. அபயாம்பிகை அம்மன் மயில் உருவம் கொண்டு சிவனை பூஜித்து சாப விமோசனம் அடைந்த தலம். மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை வள்ளி தேவசேனா உடனாகிய சுப்பிரமணிய சாமி கோவிலில் நாளை மறுநாள் (24-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா கடந்த 19-ம் தேதி எஜமானர் அனுக்ஞை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக புன்னிய நதிகளில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரையில் உள்ள காவிரி அம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட மல்லாரி மேளக்கச்சேரி உடன் ஒட்டகம், குதிரைகள் முன் செல்ல, 100-க்கும் மேற்பட்ட வேத சிவ ஆகம பாடசாலை சிறுவர்கள் தேவார பாடல்கள் பாடி பின் தொடர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்து கொள்ள வெள்ளி குடங்களில் புனிதநீர் நிரப்பி அதனை யானைகள் மீது ஏற்றி ஊர்வலமாக மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை தருமபுர ஆதீன கட்டளை மடத்தின் வாசலில் தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மலர் தூவி புனித கடங்களை வரவேற்றார்.
தொடர்ந்து யாகசாலையில் பாலசந்தர் சிவாச்சாரியார், திருக்கடையூர் மகேஷ் குருக்கள் ஆகியோர் முதல் கால பூஜைகள் தொடங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
- வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் காலபைரவருக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாலையூர் மற்றும் அருகில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கரூர்,
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, காகிதபுரம் குடியிருப்பில் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு சஷ்டியை முன்னிட்டு, சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல், பவித்திரம், பாலமலை, வெண்ணெய்மலை பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு, சஷ்டியை முன்னிட்டு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் பாலமலை பாலசுப்பி ரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபி ஷேகம் நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்