என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 110335"
- பரமத்திவேலூர் தாலுகா வீரணம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபாவிற்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- இதில் 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வீரணம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபாவிற்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் முதல் முறையாக நவதானிய அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நாமக்கல், பரமத்தி, பரமத்திவேலூர், பொத்தனூர், கீரம்பூர், வள்ளிபுரம், போதுப்பட்டி, கந்தம்பாளையம், கொசவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதலே வந்து தரிசனம் செய்தனர். மேலும் சாய்பாபாவிற்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக பிஸ்கட், நாட்டு வெல்லம், எண்ணெய், மற்றும் பூக்கள், தேங்காய் கொண்டு வந்து செலுத்தினர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- தனுர் மாத பூஜை கடந்த மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
- புத்திரன் கிருஷ்ண பரமாத்மாவுக்கும் வருசபானு கோபனின் புத்திரி ராதா பிராட்டிக்கும் திருக்கல்யாணம்.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டையில் கிருஷ்ணன் கோவில் என்ற அழைக்கப்படும் பிரசன்ன ராஜகோபாலசாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் தனுர் மாத பூஜை கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராதா கல்யாணம் நடைபெற்றது. நந்தகோப மகாராஜாவின் புத்திரன் கிருஷ்ண பரமாத்மாவுக்கும் வருசபானு கோபனின் புத்திரி ராதா பிராட்டிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், மஞ்சள் பொங்கல் போன்றவை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி விவேகா னந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள கோசாலையில் விவேகானந்தகேந்திர நிர்வாகம் மூலம் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் பரா மரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அந்த கோசாலையில் உள்ள 50 பசு மாடுகளுக்கும் கழுத்தில் பூமாலை அணிவிக்கப்பட்டு நெற்றியில் சந்தனம் குங்குமம் திலகம் இட்டு கொம்பில் பட்டு துணியி னால் பரிவட்டம் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், மஞ்சள் பொங்கல்போன்றவை 3 மண்பானைகளில் வைத்து பெண்களால் பொங்கல்இடப்பட்டது.
அதன்பிறகு கோசாலையின் மத்தி யில்அமைக்கப்பட்டுஇருந்த கோமாதாவுடன் கூடிய கிருஷ்ணபகவான் சிலை முன்புகாய், கனிகள் மற்றும் பழவகைகள் படைக்கப்பட்டு பொங்கல் பானைகள் வைத்து பசு மாடுகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கேந்திர துணைத் தலைவர் அனுமந்தராவ், மூத்த ஆயுட்கால ஊழியர் அங்கி ராஸ், கேந்திர இயற்கை வள அபிவிருத்தி திட்ட செயலாளர் வாசுதேவ்,
கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், ஆரல்வாய்மொழி பேரூராட்சிதலைவர்முத்துக் குமார், தோவாளை பஞ்சாயத்து யூனியன் தலைவி சாந்தினி பகவதியப்பன், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை தினேஷ், நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதி செய லாளர் ஜெயகோபால், தோவாளை வடக்கு ஒன்றிய கழக பொருளாளர் வெங்கடேஷ், தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், கன்னியாகுமரி லாட்ஜ் உரிமையாளர் சங்க நிர்வாகி சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் பிரசாதமான சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், மஞ்சள் பொங்கல் போன்றவை வழங்கப்பட்டது.
- கால பைரவருக்கு முளைப்பாரி பூஜை
- கால பைரவருக்கு முளைப்பாரிகை பூஜை நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள செங்குந்தபுரம் ஸ்ரீகாலபைரவருக்கு முளைப்பாரிகை பூஜை நடைபெற்றது. இந்த கோயில் கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்டு, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்று வருகிறது. சிவனின் பருவத்திலிருந்து தோன்றிய ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் முன்வினை நீ்ங்கி, திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, குடும்ப ஒற்றுமை, கடன் பிரச்சினை, கல்வியில் மேன்மை, பெருவாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். இதனை முன்னிட்டு கடந்த மாதம், பக்தர்கள் டோக்கன் பெற்று முளைப்பாரி பூச்சட்டிகளை உருவாக்கி வளர்த்து வந்தனர். இந்நிலையில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக முளைப்பாரிகளை எடுத்துவந்தனர். தொடர்ந்து காலப்பைரவருக்கு பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் கோயில் அருகேயுள்ள திருக்குளத்தில் முளைப்பாரிகையை மக்கள் விட்டு வழிபாடு செய்தனர். வழிபாட்டிற்கான ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு காலபைரவரை வணங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
- கரூர் வள்ளுவர் கல்லூரியில் திருவடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
- அகத்தியர் சன்மார்க்க சங்க நிர்வாகிகள், சித்தர்களின் 108 போற்றிகளை பாட மாணவிகள், விரலி மஞ்சளில் குங்குமத்தை இட்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்
கரூர்:
கரூர் வள்ளுவர் அறிவி–யல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் தமிழ்த்துறை மன்றமும், அகத்தி–யர் சன் மார்க்க சங்கம் ஓங்காரக் குடில் (கரூர் கிளை) இணைந்து நடத்திய சித்தர்க–ளின் திரு–வடி திருவிளக்கு பூஜை புத்தாண்டில் புதுமை–யாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இரண்டா–மாண்டு மாணவிகள் அனை–வரும், தமிழ் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர்.
மொத்தம் 200 மாணவிகள் கையில் அகல் விளக்கும், செவ்வந்தி பூக்களோடும், விரலி மஞ்சள், குங்குமத்தோடும் மங்களகரமாக அமர்ந்து பூஜையில் பங்கேற்றனர். அகத்தியர் சன்மார்க்க சங்க நிர்வாகிகள், சித்தர்களின் 108 போற்றிகளை பாட மாணவிகள், விரலி மஞ்சளில் குங்குமத்தை இட்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் வள்ளுவர் கல்லூரியின் செயலர் ஹேம–லதா செங்குட்டுவன் முன்னிலை வகித்தார்.
இணைச்செயலர் ராகவி நிகில்கண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் இரு–ளப்பன் ஆகியோர் பங்கேற்றனர். மார்கழி மாதம் என்பதால் ஆண்டாள் பாடிய திருப் பாவை பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜையின் நன்மைகள் குறித்தும், சித்தர்களின் பெருமை மற்றும் திருவிளக்கு வழி–பாடு நோக்கங்கள் குறித்தும் மாணவிகளோடு பகி–ரப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
- கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டது.
- கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
கும்பகோணம்:
108 வைணவ தலங்களில் 3-வது தலமாக கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவில் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழங்க கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா நாட்களான தினமும் சாமி விதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது.
- லால்குடி அருகே நகர் கிராமத்தில் அய்யப்பன் மண்டல பூஜை விழா நாளை மாலை நடைபெறுகிறது
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர் கிளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்து–வருகிறார்கள்
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால் குடியை அடுத்த நகர் கிராமத்தில் அய்யப்பன் மண்டல பூஜை விழா நாளை (புதன்கிழமை) மாலை நடைபெறுகிறது. விழாவுக்கு அகில பாரத அய்யப்ப சேவா சங்க மாவட்ட தலை–வர் ரமேஷ் தலைமை தாங்கு–கிறார். மாவட்ட இணைச் செயலாளர் சரவணன் வர–வேற்கிறார்.மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட பொருளா–ளர் சுரேஷ், அலுவலக செய–லாளர் அம்சராம், மாவட்ட தொண்டர்படை புஜ்பராஜ், குருசாமி வீரப் பன் ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக என்.வி.–முரளி கலந்து கொள்கி–றார்.அய்யப்ப மண்டல பூஜையை மாவட்ட கவுரவ தலைவர் எம்.வி.சபரிதாஸன், தலைவர் பாண்டி–யன், செயலாளார் சரவணன், ஆலோசகர் தர்மலிங்கம், செந்தில், ராஜகோபால், பாலசுந்தரம், சசிகுமார், செட்டியப்பன் ஆகியோர் நடத்துகின்றனர்.அய்யப்பன் புஷ்ப அலங்காரத்தை திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் டி.பி.ஞானஸ்கந்த குருக்கள் செய்து வருகி–றார். இந்நிகழ்ச்சியில் மண்டல அபிசேக உபய–தாரர் அய்யாவு, பிரபா–கரன், செல்வநாதன், ஆரோக்கியசாமி, ராஜ–மாணிக்கம், ராமலிங்கம், கதிரேசன், தேவராஜ், நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ஜெரால்டு ஆரோக்கியராஜ், நெல்வியா–பாரி மனோகரன் பொதுப் பணிதுறை பிச்சை, திரு–மங்கலம் ஒன்றிய கவுன்சிலர் டி.எம்.செல்வம், ஓட்டுநர் பரமானந்தம், ராஜா ஆகி–யோர் நன்கொடை அளிக் கிறார்கள்.அன்று இரவு 7 மணி–யளவில் நாதஸ்வர புகழ் மணக்கால் கோவில் பிள்ளை மற்றும் திருச்சி சிந்தாமணி ஏசு, கார்த்திக்ராஜா, திரு–மங்கலம் கருனாநிதி, உறை–யூர் சத்தியமானவா கோபி குருசாமி ஆகியோரின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர் கிளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்து–வருகிறார்கள். முடிவில் மாந்துறை சிவன–டியார் மதியழகன் நன்றி கூறுகிறார்.
- சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.
திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம். இங்கு தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் உச்சிகால பூஜையின் போது சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நேற்று நடப்பாண்டின் கடைசி வெள்ளிக்கிழமை தினமாக இருந்ததால் திருப்புவனம், மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மடப்புரம் கோவிலுக்கு இயக்கப்பட்டன. மேலும் திருப்புவனம்-மடப்புரம் சாலையில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.
இதேபோல் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இந்த கோவில்களில் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- வேதபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது
- 108 வட மாலை சாத்தி தீபாதாரணை காண்பிக்கப்பட்டது
பெரம்பலூர் :வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் வேத நாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, 108 வட மாலை சாத்தி தீபாதாரணை காண்பிக்கப்பட்டது. மேலும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை பக்தர்கள் 10 கிலோ எடையில் பெரிய அளவிளான கேக் வெட்டி அதனை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பூக்கடை முன்பு நின்று பூஜை பொருட்களை வாங்கி செல்வதால் விபத்து.
- தரை கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த கோவிலின் அருகே உள்ள நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சாலையோரம் சிலர் பூக்கடைகள் அமைத்து பூ வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதனால் இந்த சாலையில் செல்லும் ஏராளமான வாகனங்களுக்கும், கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு இது இடையூராக உள்ளது.
தார்சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இந்த கடைகள் அமைக்கப் பட்டுள்ளன.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூக்கடை முன்பு நின்று பூஜை பொருட்களை வாங்கி செல்வதால் விபத்துகளை சந்திக்கும் நிலை உள்ளது.
எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் அமைக்கப்பட்டுள்ள தரை கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கும், நெடுஞ்சாலைதுறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதனகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை நடந்தது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்
மதனகோபால சுவாமி கோவிலில் நேற்று கோ பூஜை நடந்தது. இதையொட்டி மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனமும், மகாதீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து பசுவிற்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும், பசுவையும் வழிபட்டனர். மேலும் இளம்பெண்கள் பஞ்சபாண்டவர் சன்னதியில் உள்ள ஆண்டாள் சிலை முன்பு திருப்பாவை பாசுரங்களை பாடி, தங்களது வேண்டுதல் நேர்த்தி வழிபாட்டை தொடங்கினர்.
- மூலவர் மற்றும் உற்சவருக்கு மகாதீபாராதனை காண்பித்தனர்.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நேற்று 2-வது ஆண்டாக ஏகதின வில்வ லட்சார்ச்சனை மற்றும் சிறப்புப்பூஜைகள் நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் லட்ச வில்வார்ச்சனை தொடங்கியது.
தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையிலும், மீண்டும் மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணிவரையிலும் லட்ச வில்வார்ச்சனை நடந்தது. மாலை 5.30 மணிக்கு கோவில் அர்ச்சகர்கள் மூலவர் மற்றும் உற்சவருக்கு மகாதீபாராதனை காண்பித்தனர்.
மாலை 6 மணியளவில் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள்ளே பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். லட்ச வில்வார்ச்சனை பூஜையில் பங்கேற்று வழிபட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்