என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீவிபத்து"
- தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.
- சமையல் செய்த போது எண்ணெய் கடாயில் இருந்து பற்றிய தீ அருகில் இருந்த பொருட்கள் மீது பரவியதே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாம்பரம்:
தாம்பரம் முடிச்சூர் சாலையில் முகமது நசீர் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென ஓட்டல் முழுவதும் பரவத்தொடங்கியது,
ஊழியர்கள் மற்றும் சாப்பிட வந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். தாம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்,
ஆனால் அதற்குள் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது. சமையல் செய்த போது எண்ணெய் கடாயில் இருந்து பற்றிய தீ அருகில் இருந்த பொருட்கள் மீது பரவியதே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருந்ததால் கியாஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
- தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கொல்கத்தாவை சேர்ந்தவர் பிஜாய் (வயது 35). இவர் கோவை தியாகி குமரன் வீதி பகுதியில் தங்கி தங்க நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார்.
அவர் இன்று காலை வழக்கம்போல வீட்டில் சமைப்பதற்காக கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமானது. அதிர்ஷ்டவசமாக பிஜாய் உயிர் தப்பினர்.
சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அங்கு காயம் அடைந்து கிடந்த பிஜாயை மீட்டனர். அவரை உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருந்ததால் கியாஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன
- எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்
பெரம்பலூர்
பெரம்பலூர் நகரம் எளம்பலூர் சாலையில் உள்ள தென்றல் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் கஸ்தூரி (வயது 46), இவரது கணவர் கொளஞ்சிநாதன் இறந்து விட்டார் இந்நிலையில், மகன் கமலேஸ் உடன் தனக்கு சொந்த மான ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை கஸ்தூரி மற்றும் அவரது மகன் கமலேஸ் இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். அப்போது சற்று நேரத்தில் கஸ்தூரியின் வீட்டில் இருந்து அதிகமான புகை வெளியே வந்துள்ளது.
இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஓட்டு வீட்டில் கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்த, தீயை அனைத்தனர். இச்சம்பவத்தில் வீட்டில் உள்ள பீரோ, கட்டில், டேபிள் சேர், பாத்திரங்கள் மற்றும் உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பாலாது.
தகவல் அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இரவு நேரம் என்றும் பாராமல் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயில் சேதமான வீட்டினை பார்வையிட்டு அதன் உரிமையாளர் கஸ்தூரி மற்றும் அவரது மகன் கமலேஷ் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். மேலும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடு கட்டி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும் எனவும் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
- காரைக்குடியில் செருப்பு குடோனில் தீ விபத்தில் ரூ. ரூ.பல லட்சம் செருப்புகள் எரிந்து நாசகியது.
- 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செகண்ட் பீட் அருகே உள்ள டாக்சி ஸ்டாண்ட் பகுதியில் தனியார் செருப்பு குடோன் உள்ளது.
பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த குடோனில் மின் கசிவு காரணமாக இன்று காலை தீப்பற்றி எரிந்தது. குடோனில் இருந்த ரூ. பல லட்சம் மதிப்பிலான செருப்புகள் எரிந்து சேதமானது.
காரைக்குடி தீயணைப்பு நிலையம் ஊருக்கு வெளியே 3 கிலோமீட்டர் தூரம் தள்ளி இருந்ததால் தீயை அணைக்க வருவதற்கு தாமதம் ஆனது.அதன் பின்பு காரைக்குடி, தேவகோட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- தீவிபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 புதிய மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.
- கம்ப்பூட்டர் உள்ளிட்ட பொருட்களும் நாசமானது. கீழ்தளத்துக்கு தீ பரவாததால் அங்கிருந்த மோட்டார்சைக்கிள்கள் தப்பியது.
தாம்பரம்:
தாம்பரம் மேம்பால அருகே பிரபல நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை மையம் இயங்கி வருகிறது. இன்று காலை ஊழியர்கள் விற்பனை மையத்தை திறந்து சுத்தப்படுத்திய போது முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சிறுது நேரத்தில் தீ மளமளவென அந்த தளம் முழுவதும் பரவியது. இதில் அங்கு விற்பனைக்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளிலும் தீ பரவி பற்றி எரிந்தது.
இதனால் விற்பனை மையம் முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் 4 வண்டிகளில் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 புதிய மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. அங்கிருந்த கம்ப்பூட்டர் உள்ளிட்ட பொருட்களும் நாசமானது. கீழ்தளத்துக்கு தீ பரவாததால் அங்கிருந்த மோட்டார்சைக்கிள்கள் தப்பியது.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீ விபத்தில் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த அரசு அலுவலரை அதிகாரிகள் பாராட்டினர்.
- சமையலறை கூரை கொட்டகையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பாரனூர் ஊராட்சி கைலாச சமுத்திரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி லட்சுமி. இருவரும் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றனர்.
நேற்று 2 பேரும் வேலைக்கு சென்றுவிட, அவர்களது மகள் நந்தினி ஈஸ்வரி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது சமையலறை கூரை கொட்டகையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவியது. இதனால் நந்தினி ஈஸ்வரி செய்வதறியாது தவித்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலக நில அளவை சார் ஆய்வாளர் வீரகாமேஸ்வரன் வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் அங்குள்ளவர்களை உதவிக்கு அழைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
வீட்டில் தீ கொழுந்து விட்டு எரிய அங்கிருந்த சிலிண்டரை வீரகாமேஸ்வரன் துணிச்சலாக சென்று அப்புறப்படுத்தி வெளியே எடுத்து வந்தார். அதன் பின் பொதுமக்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.
தீயை அணைக்க விரைந்து செயல்பட்ட வீரகாமேஸ்வரனுக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- திண்டுக்கல் அருகே டைல்ஸ் கடையில் தீ பற்றி விபத்து ஏற்பட்டது
- இதில் சுமார் ரூ.30லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது
திண்டுக்கல்:
திண்டுக்கல் பேகம்பூர் சிக்கந்தர் சாய்பு சந்து பகுதியைச் சேர்ந்தவர் முகமது முஸ்தபா (வயது 47). இவர் வத்தலக்குண்டு ரோடு ஏ.பி. நகரில் டைல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.
சனிக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். இன்று அதிகாலை அவரது கடையில் தீப்பிடித்து எரிவதாக அப்பகுதி பொதுமக்கள் முகமது முஸ்தபாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முஸ்தபா தனது உறவினர் சர்புதீனுடன் கடைக்கு வந்தார். அப்போது காற்று வேகமாக வீசியதால் கடையில் இருந்த பொருட்கள் எரிந்தது. மேலும் கடையின் முன்பு நிறுத்தி இருந்த சொகுசு கார் மற்றும் சரக்கு வாகனமும் தீயில் எரிந்தன.
இது குறித்து திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை போராடி அணைத்தனர்.
மேலும் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பயிற்சி டி.எஸ்.பி.க்கள் இலக்கியா, பிரதீப் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது தொழில் போட்டி காரணமாக யாரேனும் தீ வைத்துச் சென்றார்களா; என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று இரவு திடீரென கழிவுப்பஞ்சு கொட்டப்பட்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
- பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்:
பல்லடம் சின்னவடுகபாளையத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 50 ). இவர் அந்த பகுதியில் நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென கழிவுப்பஞ்சு கொட்டப்பட்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அனைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 10 பேல் கழிவுப்பஞ்சுகள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திண்டிவனத்தில் பரபரப்பு மரக்கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
- ஓட்டை பிரித்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் கணபதி மரக்கடை இயங்கி வருகிறது. இந்த மரக்கடையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென்று தீப்பற்றி எரிவதாக திண்டிவனம் நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வாகனம் சென்றது. மரக்கடை உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் பின்பக்கமாக சென்று ஓட்டை பிரித்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
சரியான நேரத்தில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததால் தீயானது அங்குள்ள மரங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. மரம் அறுக்கும் இயந்திரம் மட்டும் எரிந்துக் கொண்டிருக்கும் பொழுது தீ அணைக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் காலதாமதமாக சென்றிருந்தால் தீ அருகில் உள்ள மரங்களுக்கு பரவி பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும். மரம் அறுக்கும் இயந்திரத்திற்கு வரும் மின் இணைப்பை நிறுத்தாமல் சென்றதால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
+2
- கடையில் இருந்து புகை மூட்டம் வருவதை கண்ட பொதுமக்கள் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
- கட்டிடம் உயரமாக இருந்ததால் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள சின்னசுரைக்காய்பட்டி தெருவை சேர்ந்தவர் பசும்பொன். இவர் அதே பகுதியில் பெரிய அளவில் எலெக்ட்ரிக் ஸ்பேர்பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு கடை ஊழியர்கள் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென எலெக்ட்ரிக் கடையில் திடீரென தீப்பிடித்தது. இதில் தீ மளமளவென்று பரவி அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமாகின.
கடையில் இருந்து புகை மூட்டம் வருவதை கண்ட பொதுமக்கள் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் ஜெயராமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கட்டிடம் உயரமாக இருந்ததால் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது. இருந்தபோதிலும் இந்த தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டதாக கூறப்படுகிறது.
தீப்பிடித்து எரிந்த கடைக்குள் கியாஸ் சிலிண்டர்கள் இருந்ததால் அவைகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி விட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.
- கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றபோது வீட்டின் உள்ளே தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது
- உயர் மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் வட்டகரைப் பகுதியை சேர்ந்தவர் ஜெரோம். இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குழந்தைகள் வீட்டில் இருந்தனர். நேற்று மாலையில் மனைவி, குழந்தைகள் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர் வீட்டுக்கு திரும்பியபோது வீட்டில் இருந்து புகை மண்டலம் வந்தது. கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றபோது வீட்டின் உள்ளே தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உயர் மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் ரெயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். கேண்டீன் அருகே உள்ள பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகளும் வெளியேறினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #GwaliorRailwayStation
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்