search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 112912"

    பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர் தர்ஷன் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். #Election2019 #Vote
    கோவை:

    கோவை கணபதியை சேர்ந்த சக்திவேல், அனிதா தம்பதியின் மகன் தர்ஷன் (வயது 8). இவர் ஸ்டேன்ஸ் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுவனுக்கு ஓவியத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளது. இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஓவியம் வரைய திட்டமிட்டார். இதையடுத்து தனது தந்தையின் உதவியுடன் கடந்த 7-ந் தேதி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரைய தொடங்கி 14-ந் தேதி முடித்தார். இதில் அவர் மொத்தம் 1,050 ஓவியங்கள் வரைந்தார்.

    இந்த ஓவியத்தில் விரலில் அழியாத மை வைப்பது போன்றும், அதை சுற்றிலும் தேசிய கொடியில் உள்ள நிறங்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர ஓவியங்களில் வாக்களிக்க தயார், உனது ஓட்டு, உனது உரிமை, வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன், நல்ல இந்தியா அமைய வாக்களியுங்கள், உங்கள் விரலின் வலிமை உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து சிறுவன் தர்ஷன் தனது ஓவியங்களுடன் கலெக்டர் ராஜாமணியை பார்த்தார். அப்போது கலெக்டர் சிறுவனின் திறமையை பாராட்டினார். இதுகுறித்து சிறுவன் தர்ஷன் கூறியதாவது:- எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. தற்போது நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியங்கள் 1,050 வரைந்து உள்ளேன். இதற்கு 8 நாட்கள் ஆனது. வலிமையான நாடு அமைய அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
    ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக திருப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர் பாடம் நடத்தியுள்ளார்.
    திருப்பூர்:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ இன்று வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியது.

    திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்தால் மாவட்டத்தில் சில பள்ளிகள் பூட்டப்பட்டிருந்தன. ஒரு சில பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களை கொண்டு வகுப்புகள் எடுக்கப்பட்டன. சில மாணவர்கள் பள்ளிக்கு வந்த பின்னர் ஆசிரியர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் நுழைவு வாயில் முன்பு நின்று என்ன செய்வது என்று குழப்பமடைந்தனர். இதேபோன்று அரசு அலுவலகங்கள் வெறிச் சோடியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    திருப்பூர் வடக்கு தாலுகா பகுதியில் உள்ளவர்கள் குமரன் சிலை முன்பும், தெற்கு பகுதியில் உள்ளவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோன்று ஊத்துக்குளி, தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்ளிட்ட தாலுகா அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
    கல்விச் சேவைக்கும் எண்ணற்ற அப்ளிகேசன்கள் உள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் சில அப்ளிகேசன்களை இங்கே அறிவோம்...
    கணினிகளை மிஞ்சியதாக செல்போன்கள் அவதரித்துவிட்டபிறகு, மென்பொருட்களைவிட அப்ளிகேசன்களின் ஆட்சி அதிகமாகிவிட்டது. உணவு ஆர்டர் கொடுப்பதில் இருந்து முன்பதிவில்லா டிக்கெட் பெறுவதுவரை அப்ளிகேசன்களின் பயன்பாடு அதிகம். கல்விச் சேவைக்கும் எண்ணற்ற அப்ளிகேசன்கள் உள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் சில அப்ளிகேசன்களை இங்கே அறிவோம்...

    புராஜெக்ட்கள் தயாரிக்க...


    பள்ளிப் பருவத்தில் இருந்தே கட்டுரைகள் படைப்பது பலருக்கு கஷ்டமான விஷயம். கல்லூரியில் கட்டுரைகள் மற்றும் அசைன்மென்டுகள் விரிவாகவும் தெளிவாகவும் தயாரிக்கப்பட வேண்டும். பல நேரங்களில் ஆராய்ச்சி கட்டுரைகள்போல பாடப்புத்தகத்தில் இல்லாத நிறைய தகவல்களை சேகரித்தும், புதிய நோக்கில் ஆராய்ந்தும் கட்டுரைகள் படைக்க வேண்டியதிருக்கும். இதற்கு மிகுந்த புத்திசாலித்தனமும், சாதுர்யமும் அவசியமாகும்.

    இப்படி கல்லூரியில் தரப்படும் புராஜெக்ட்களால் தடுமாறும் மாணவர் கூட்டம் நிறைய. அவர்கள் வெளியே தனிநபரிடம் உதவி பெற்று தங்கள் பிராஜெக்ட்டை செய்து தரக் கேட்பதும் அல்லது பிறர் செய்ததை காப்பி அடித்து எழுதுவதும் உண்டு. இதற்காக உதவியாளரை தேடித்திரி வதும் உண்டு.

    இப்படி சிரமப்படாமல் கல்லூரி கட்டுரைகளுக்கும், புராஜெக்ட் திட்டங்களுக்கும் கைகொடுக்க இணைய தளங்களில் பல்வேறு அப்ளிகேசன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் நிஞ்சா எஸ்ஸேஸ்(NinjaEssays). 300-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்களின் நலன்கருதி எழுதிய ஏராளமான கட்டுரைகள் இங்கே கிடைக்கின்றன, பல கட்டுரைகளை இலவசமாக படிக்க முடியும், சில கட்டுரைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. தேவையெனில் விருப்பப்படும் பேராசிரியரை உதவியாளராக நியமித்துக் கொண்டு புராஜெக்ட் செய்யலாம்.

    மேற்கூறியது போன்ற அப்ளிகேசன்தான் help.plagtracker. ஆனால் உங்கள் கட்டுரைகள் மற்றும் புராஜெக்ட்டுகளுக்கு ரெடிமேடு தயாரிப்புகளை வழங்குவதற்குப்பதிலாக உங்கள் தயாரிப்புகளை சரிபார்க்கவும், தேவையான, சரியான மாற்றங்களை செய்துகொடுக்கும் எடிட்டிங் வேலைகளுக்கு பேராசிரியர்களின் உதவியை பெற்றுத் தருகிறது இந்த அப்ளிகேசன். உங்களுடைய படைப்பை கொடுத்து எடிட் செய்து தர கேட்கலாம் அல்லது தனிநபர் உதவியாளராக ஒரு பேராசிரியரை நியமித்துக் கொள்ளவும் வழி உண்டு.

    குழுவாக படிக்க...


    சிலருக்கு சேர்ந்து படித்தால்தான் நன்கு படித்த மாதிரி இருக்கும். எளிதில் புரியும். அப்படி குழு படிப்பிற்கு கைகொடுக்கும் அப்ளிகேசன்தான் ஓபன்ஸ்டடி (open study) அப்ளிகேசன். வரலாறு, கணிதம், இயற்பியல், வேதியியல் என எல்லா பாடங்களுக்கும் இங்கே குழுக்கள் உண்டு. அவர்களுடன் பாடம் சம்பந்தமான விஷயங்களை கலந்துரையாடலாம், சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம்.



    புத்தகங்களைப் பார்த்துப் படித்து புரிந்துகொள்வதைவிட, மற்றொருவர் வாசித்துக் காட்ட அதில் இருந்து தேவையான விஷயங்களைப் புரிந்து கொள்வது பலருக்கு எளிதாக இருக்கும். இதற்காக கல்லூரி புத்தகங்கள் பெரும்பாலானவற்றை ஆடியோவாக குரல் வடிவில் தருகிறது audible அப்ளிகேசன். வகுப்பறையில் மீண்டும் மீண்டும் ஒன்றை நடத்தச் சொல்லிக் கேட்பது இயலாத காரியம். ஆனால் ஆடியோ புத்தகத்தில் உங்களுக்கு புரியும் வரை ரீவைண்ட் செய்து கேட்டு பாடத்தை மனதில் ஏற்றிக்கொள்ளலாம். ஆரம்பத்தில் இந்த அப்ளிகேசன் ஒரு மாதத்திற்கு இலவசமாகவும், பின்பு சலுகை கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.

    ஆராய்ச்சி தலைப்புகளுக்கு...

    புதிதாக என்ன தலைப்பில் ஆராய்ச்சி செய்யலாம், அதற்கு என்ன விவரங்கள் தேவைப்படும் என்பது மாணவர்களுக்கு தலைவலியை உருவாக்கும் பிரச்சினையாக இருக்கும். அதுபோன்ற நேரத்தில் உதவக்கூடிய இணையதளங்களும் இன்று நிறைய உள்ளன. அதில் ஒன்றுதான் InstaGrok. இதில் நீங்கள் விரும்பிய தலைப்பை உள்ளீடு செய்து அது பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளையும், சில ஆராய்ச்சி தலைப்புகளையும் அறிய முடியும். ஆய்வுக்கு வழிகாட்டும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடவும் முடியும். ஆய்வுக்கு உதவும் பல்வேறு தகவல் தொகுப்புகளும் இதில் காணப்படும்.

    கட்டுப்பாடுகளுக்கு...

    வகுப்பறைக்குள், செல்போன்கள் அனுமதிக்கப்படுவ தில்லை. சிலர் மறதியிலோ, ரகசியமாகவோ வகுப்பறைக்கு செல்போன்களை கொண்டு சென்றுவிட்டு, அழைப்பு வந்ததும் செல்போன் சிணுங்கி மாட்டிக் கொள்வதும், பேராசிரியர்களின் கண்டிப்புக்கும், தண்டனைக்கும் ஆளாவது உண்டு. இது போன்ற சிக்கல்களை தவிர்க்க உதவுகிறது ஸ்டடியஸ் (Studious) அப்ளிகேசன். இதில் நீங்கள் எந்த நேரத்தில் எங்கிருப்பீர்கள், எந்த நேரத்தில் உங்கள் மொபைல் சைலன்ட்மோடுக்கு மாற வேண்டும் என்பதை பதிவு செய்து வைக்கலாம். அப்படிச் செய்துவிட்டால் நீங்கள் மறந்தாலும் அந்த நேரத்திற்கு தானாக சைலன்ட் மோடுக்கு மாறி, வகுப்பறையிலும், செமினாரிலும் நீங்கள் அவமானப்படுவதை தடுத்துவிடும்.

    வகுப்பறையில் கண்டிப்புக்கு பயந்து சைலன்ட் மோடுக்கு மாறலாம். ஆனால் வகுப்பைவிட்டு வெளியே வந்துவிட்டால் படிக்கும் நேரத்திலும் சமூக வலைத்தளங்களில் உலவ மனம் துடிக்குமே. அப்படி மனம் அலைபாயும் நேரத்தில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத் தளங்களின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து படிப்பில் கவனம் செலுத்த உதவுகிறது SelfControl அப்ளிகேசன். இதை இலவசமாக பயன்படுத்த முடியும்.

    இன்னும் சில அவசிய தேவைகள்...

    * பாடத்திட்டங்கள், வகுப்பு நேரங்கள் மற்றும் உங்கள் கல்வித்திட்டங்களை குறிப்பிட்டு சீராக வழி நடத்த உதவுகிறது ஐ-ஸ்டிஸ் புரோ (iStudiez Pro) அப்ளிகேசன். இது ஐபோன், ஐபேடு கருவிகளில் மட்டுமே செயல்படும்.

    * தேவையான புத்தகங்களை வாங்கவும், தேவையற்ற புத்தகங்களை விற்கவும் உதவும் ஹால்ப்.காம் (Half.com) இணையப் பக்கம் வசதியாக இருக்கும்.

    * மாணவர்களின் செலவை மேற்பார்வையிட உதவும் அப்ளிகேசன் மின்ட் (Mint). செலவுகள், தேவைகள் எல்லாவற்றையும் பதிவிடும்போது பயனுள்ள சேமிப்பு வழிகளை நினைவூட்டக்கூடியது மின்ட் அப்ளிகேசன், இது இலவச அப்ளிகேசனாகும்.

    * எழுதாமல், தட்டச்சு செய்யாமல் குறிப்பெடுக்க உதவுகிறது Dragon Dictation அப்ளிகேசன். இது, நாம் உச்சரித்தாலே எழுத்துகளாக குறிப்பெடுத்துக் கொள்ளும். இது பலவகையில் உதவியாக இருக்கும்.

    * உங்கள் பயிற்சிகள் அழிந்துவிடாமல் பாதுகாக்க சுகர் சிங் (SugarSync) அப்ளிகேசன் உதவுகிறது. இது பல கருவிகளில் உங்கள் தயாரிப்புகளை சேமிப்பதுடன், பாதுகாப்பை வழங்குகிறது.

    * மாணவர்களுக்கான மின்னணு நூலகமாக விளங்கும் அப்ளிகேசன் BenchPrep. நூல்கள் மட்டுமல்லாது பிளாஸ்கார்டு, வினாத்தாள்கள், பாடங்களும் உள்ளன.

    * கல்லூரி பாடங்களின் சொற்களுக்கு பொருளும், எளிய விளக்கமும் தரும் அகராதி அப்ளிகேசன் Dictionary.com/Mobile.

    மாணவர்களான நீங்கள், செல்போனில் பொழுதுபோக்கு தளங்களில் சென்று நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள அப்ளிகேசன்களை பயன்படுத்தி கல்வியை வளப்படுத்திக் கொண்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
    விருதுநகரில் பள்ளி வளாகத்தில் வி‌ஷம் குடித்த பிளஸ்-2 மாணவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விருதுநகர்:

    விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சஞ்சய் (வயது 16). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர், வீட்டில் இருந்து வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். ஆனால் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் சஞ்சய், திடீரென வி‌ஷம் (எலிமருந்து) குடித்து மயங்கினார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவர் சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சகமாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சஞ்சய்க்கு தனி வகுப்பு நடத்தியதாகவும், இதனால் மன வேதனை அடைந்து வி‌ஷம் குடித்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. #tamilnews
    பள்ளிக்கல்வி துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    சிவகங்கை:

    பள்ளிக்கல்வி துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். முதன்மைக்கல்வி அதிகாரி பாலுமுத்து வரவேற்று பேசினார். விழாவில் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்வதில் பெருமையாக உள்ளது. ஏனென்றால் நான் படித்த பள்ளி இது. நாங்கள் படிக்கும் போது எனது ஊரான தமராக்கியில் இருந்து 16 கி.மீ. சைக்கிளில் வந்து தான் படித்தேன். இன்று அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சைக்கிளை வழங்குவது மேலும் பெருமையாக உள்ளது. கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் தற்போது ரூ.9 கோடி மதிப்பீட்டில் 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது.

    தனியார் பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். இதனால் பல அரசு பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும். மேலும் தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி கையேடுகளையும் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். விழாவில் ஆவின் சேர்மன் அசோகன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஆனந்தன், கோபி, வருவாய் அலுவலர் லதா, தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்தின் நன்றி கூறினார். 
    காடையாம்பட்டி அருகே உள்ள பொட்டியபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆங்கில ஆசிரியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள பொட்டியபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 135 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இங்கு 8 ஆசிரியை, ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் உணவு இடைவேளையின்போது, 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர், வழக்கம்போல் வீட்டிற்கு உணவு சாப்பிட சென்றுவிட்டு மதியம் தாமதமாக பள்ளிக்கு வந்தார்.

    இதனால் வகுப்பு ஆங்கில ஆசிரியை கிரிஜா, அந்த மாணவரை ஏன் தாமதமாக வந்தாய் என கேட்டு கண்டித்துள்ளார். மேலும் பெஞ்ச் மீது ஏறி நிற்குமாறு கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த மாணவர் தான் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பொம்மைகளை சுவரில் எறிந்தார். இதில் ஒரு பொம்மை சுவரில் பட்டு எகிறி ஆசிரியை கிரிஜா மீது விழுந்தது. உடனே அவர், பள்ளியில் மற்ற மாணவர்களை போல் ஒழுங்காக இருக்குமாறு கூறி சத்தம் போட்டார்.

    இதனால் கோபம் அடைந்த அந்த மாணவர் தேர்வு அட்டை, தன்னுடைய புத்தகப்பை மற்றும் கையில் கிடைத்த பொருட்களை ஆசிரியை மீது வீசியெறிந்து தாக்குதல் நடத்தினார். மேலும் ஆசிரியையை ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து கிரிஜா, தலைமை ஆசிரியை புவனேஸ்வரியிடம் சென்று மாணவர் இப்படி செய்வதற்கு எல்லாம் நீங்கள் தான் காரணம் எனக் கூறி குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே மாணவர் பள்ளியில் நடந்த வி‌ஷயத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோரும் பள்ளிக்கு வந்து எங்களது மகனை நீங்கள் எப்படி? பெஞ்ச் மீது ஏறி நிற்க சொல்லலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதற்கு ஆங்கில ஆசிரியை கிரிஜா எல்லா பிள்ளைகளும் முன் கூட்டியே வகுப்பறைக்கு வந்து விடுகிறார்கள். உங்கள் மகன் மட்டும்தான் தினமும் தாமதமாக வருகிறான் என்று கூறினார். அதன் பிறகு தான் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த வி‌ஷயம் நேற்று மாலையில் தான் வெளியே தெரியவந்தது. உடனடியாக வட்டார கல்வி அலுவலர் அன்புலி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அங்கு ஊர் மக்களும் திரண்டனர். அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரியையும், ஆங்கில ஆசிரியை கிரிஜாவையும் இடமாறுதல் செய்ய வேண்டும். இந்த 2 ஆசிரியைகளின் பனிப்போர் தான் பிரச்சினைக்கு காரணம். இவர்களின் மோதலால் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி கல்வி அதிகாரியிடம் முறையிட்டனர்.

    அப்போது கல்வி அதிகாரி கூறுகையில், இப்போதைக்கு இடமாறுதல் எதுவும் அளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட மாணவர், தனது வகுப்பு ஆசிரியை மீது தாக்குதல் நடத்தியிருக்கக் கூடாது. இனிமேல் இவ்வாறு செயல்பட்டால் மாணவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசாரிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியை புவனேஸ்வரிக்கும், ஆங்கில ஆசிரியை கிரிஜாவுக்கும் இடையே வகுப்புகள் நடத்துவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வப்போது 2 பேரும் மோதிக் கொள்வார்கள். அதன் எதிரொலியாக மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக விசாரணையில் எங்களுக்கு தெரியவந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கல்விதுறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு இதில் சம்பந்தமில்லை என கூறி கைவிரித்து விட்டனர்.

    கீரிப்பாறை அருகே இளம்பெண்ணை 10-ம் வகுப்பு மாணவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    கீரிப்பாறை அருகே உள்ள மலைக்கிராம பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மருத்துவ சிகிச்சைக்காக சென்றார்.

    அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. உடனே அந்த பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் குடும்ப விவரங்களை டாக்டர்கள் விசாரித்தனர்.

    அப்போது அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற தகவல் தெரியவந்தது. திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆனதால் அந்த பெண் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு சிகிச்சை பெற வந்ததும் தெரியவந்தது. அந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் இதுபற்றி கீரிப்பாறை போலீசாருக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.

    கீரிப்பாறை போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அந்த பெண்ணுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயதான 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறியதால் அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதில் அந்த பெண் கர்ப்பிணியானார்.

    8 மாதம் ஆனதால் இனி மேலும் அதனை மறைக்க முடியாது என்பதால் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்த பெண் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய அந்த மாணவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்யும் பட்சத்தில் அந்த இளம்பெண் மீதே நடவடிக்கை பாயும் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் மீட்கப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கப்பரிசை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் குழந்தைகள் மீட்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதன்படி மீட்கப்பட்டு தற்போது எஸ்.எஸ்.எல்.சி படித்து வரும் 25 மாணவ-மாணவிகளுக்கும், பிளஸ்-2 படித்து வரும் 25 மாணவ-மாணவிகளுக்கும் ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, எஸ்.எஸ்.எல்.சி மாணவ-மாணவிகளுக்கு அகராதியும், பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கால்குலேட்டரும் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஒரு குடும்பத்தின் ஏழ்மை மற்றும் பல்வேறு காரணங்களால் சிறு வயதிலேயே குழந்தைகள் தொழிலுக்கு அனுப்பப்படுவதால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதில் இருந்து குழந்தைகளை மீட்டெடுத்து சிறப்பான கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக, அரசு பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும், குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டு உயர்கல்வி கற்கும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 30 மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். குழந்தை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.

    எனவே, உங்களது வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது என்பதை மனதில் வைத்து, உயர்கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த பணியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மற்ற குழந்தைகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக இருப்பதோடு, குழந்தை தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் உயர்கல்வி கற்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் ஆதிநாராயணன், திட்ட மேலாளர் செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கிறிஸ்டி, லைலாம்பிகா, குழந்தைகள் பாதுகாப்பு உதவி இயக்குனர் சுடலைசெல்வம் மற்றும் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாத மாணவன் தன்னை கடத்தியதாக பெற்றோரிடம் கடத்தல் நாடகம் ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சேலம்:

    சேலம் கோட்டை அபிப்தெரு பகுதியை சேர்ந்தவர் செஸ்ராஜ். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் அந்த பகுதியில் பூட்டு கடை நடத்தி வருகிறார்.

    இவரது மகன் நரேஷ் (வயது 16). ராஜஸ்தான் மாநிலத்தில் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலத்திற்கு அவரை அழைத்து வந்த பெற்றோர் ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தனர். தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு பள்ளி பேருந்தில் சென்று வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு செல்வதற்காக புறப்பட்டு வீட்டருகே நின்றார். அப்போது திடீரென சத்தம் போட்டபடி வீட்டை நோக்கி பதறியடித்த படி ஓடிவந்தார்.

    பின்னர் 7 பேர் சேர்ந்து வாயை பொத்தி தன்னை கடத்தி செல்ல முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்து விட்டதாகவும் ஏங்கி, ஏங்கி அழுத படி பெற்றோரிடம் கூறினார்.அவரது கை மற்றும் நெஞ்சு பகுதிகளில் கத்தியால் கிழித்ததாகவும், இதனால் அவரது உடம்பில் இருந்து இருந்து ரத்தம் வடிவதாகவும் கூறினார்.

    இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே 7 பேர் கடத்த முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்பித்து வந்ததாகவும் மாணவர் கூறியதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் மாணவனை தனியாக அழைத்து விசாரித்தனர்.

    அப்போது மாணவர் பரபரப்பு தகவல்களை கூறினார். அதன் விவரம் வருமாறு:

    ராஜஸ்தானில் படித்து வந்த நரேசுக்கு இங்குள்ள பள்ளியில் படிக்க விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனால் அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி இங்கு அழைத்து வந்து ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தனர்.

    இதனால் பள்ளிக்கு போக விருப்பம் இல்லாத நரேஷ் புத்தகப்பையை வீசி எறிந்து விட்டு தனது நகத்தால் கை மற்றும் நெஞ்சு பகுதியில் கிழித்து விட்டு மர்ம நபர்கள் கடத்தி சென்று கத்தியால் கிழித்ததாக பெற்றோரிடம் கூறியதும் தெரிய வந்தது.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மாணவரின் விருப்பத்தை கேட்டு அதற்கு தகுந்தாற்போல செயல்படுமாறு பெற்றோருக்கு அறிவுரை கூறினர். இந்த சம்பவம் இன்று சேலம் கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    அடையாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரின் குடிபோதை அளவிடும் கருவியை பறித்து தப்பி சென்ற மாணவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    சென்னை:

    சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பூ‌ஷன். இவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

    பூ‌ஷன் தன்னுடைய விலை உயர்ந்த சொகுசு காரில் அடையாறு நோக்கி வந்து கொண்டிருந்த போது சத்யா ஸ்டூடியோ அருகே போக்குவரத்து காவலர்கள் காரை மறித்து சோதனை செய்தனர்.

    அப்போது மாணவர் பூ‌ஷன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குடிபோதையை அளவிடும் கருவியை வைத்து சோதனை செய்ய முயன்றபோது மாணவர் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து கருவியை பறித்துக் கொண்டு காரில் தப்பி ஓடிவிட்டார்.

    அதிர்ச்சியடைந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக மற்ற போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கே அவர்கள் பூ‌ஷனுடைய காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவரிடமிருந்த கருவியை பறிமுதல் செய்து அவரை அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை மாநிலக் கல்லூரியின் ஆங்கில பெண் பேராசிரியர் தனது படிப்பை முடிக்கவிடாமல் தடுக்கிறார் என பி.எச்.டி. மாணவர் புகார் அளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் பி.எச்.டி. மாணவர் ஒருவர் அண்ணாசதுக்கம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    அதில், கல்லூரியின் ஆங்கில பேராசிரியர் என்.பிந்து என்பவர் தனது பி.எச்.டி படிப்பை முடிக்க விடாமல் தடுக்கிறார். மேலும் பி.எச்.டி. படிப்பில் இருந்து விலகி கொள்வதாக கடிதம் எழுதி கையெழுத்திட்டு வழங்குமாறு வற்புறுத்துகிறார் என்றும் கூறியுள்ளார். கல்லூரி பேராசிரியர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பிரிவினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, இந்த புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைவினரிடம் விசாரித்து வருகிறோம் என்றனர்.

    புகார் கூறப்பட்ட பேராசிரியர் என்.பிந்து கூறும்போது, ‘‘இந்த மாணவர் தினசரி கல்லூரிக்கு வருவதில்லை. 2014-ம் ஆண்டு பி.எச்.டி. படிப்பில் சேர்ந்தார். ஆனால் இதுவரை ஆராய்ச்சிக்கான தலைப்பை தேர்ந்தெடுக்கவில்லை.

    அப்படி இருக்கும் போது 6 மாதத்துக்கான அறிக்கையை அவரால் எப்படி தாக்கல் செய்ய முடியும் என்பன போன்ற பல்வேறு புகார்களை அவர் மீது கூறினார். #tamilnews
    இடைநிற்றல் உள்ளிட்ட மாணவர்களின் அனைத்து மேலாண்மையையும் மேற்கொள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘எமிஸ்‘ அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. #EMISCard #GovernmentSchool
    மானாமதுரை:

    தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை கண்டறியும் வகையிலும், பல்வேறு காரணங்களால் இடமாறும் மாணவர்களை எளிதில் மற்ற அரசு பள்ளிகளில் சேர்க்கும் வகையிலும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு, அந்தந்த பள்ளி தலை மை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி 16 இலக்க எண் கொண்ட எமிஸ் அடையாள அட்டை ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கும் எமிஸ் திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    முதற்கட்டமாக ஆசிரியர் தினத்தன்று பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டது. இதேபோன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 76 மாணவ-மாணவிகளுக்கு எமிஸ் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி அடையாள அட்டைகளை வழங்கினார். இதேபோன்று அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறியீடு கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆசிரியர்களின் பணியில் சேர்ந்த நாள், பதவி உயர்வு, இதுவரை பணியாற்றிய பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×