search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 117138"

    காதல் தோல்வியால் தனியார் கம்பெனி ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேதராப்பட்டு:

    பெரியகாலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் பாலாஜி (வயது 27). இவர் அங்குள்ள தனியார் கெமிக்கல் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 

    இந்த நிலையில் பாலாஜி அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த விவரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் மகளுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.

    இதனால் பாலாஜி மனமுடைந்தார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது அவர் தான் காதலித்த பெண்ணுக்கு செல்போன் மூலம் நான் வாழ விரும்பவில்லை. சாகப்போகிறேன் என்று எஸ்.எம்.எஸ்.அனுப்பினார்.

    பின்னர் அவர் அதே பகுதியில் உள்ள தனது நண்பர் கார்த்திக் அரவிந்த் வீட்டுக்கு சென்றார். அங்குள்ள காலி மனையில் வைத்து பாலாஜி விஷத்தை குடித்தார். மேலும் தனது கையில் பிளேடால் அறுத்து கொண்டார். உடனே அவரது நண்பர் அவரை காப்பாற்றி அவருக்கு அறிவுரை கூறினார். பின்பு பாலாஜி அங்குள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றார். அங்கு ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கொண்டு சென்ற அவர் தனது உடலில் ஊற்றி கொண்டு தீவைத்து கொண்டார். 

    இதில், அவரது உடல் முழுவதும் கருகியது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இதுபற்றி தகவல் அறிந்ததும் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் ஆஸ்பத்திரிக்கு சென்று பாலாஜியிடம் மரண வாக்குமூலம் பெற்றார்.அப்போது காதல் தோல்வியால் தீக்குளித்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலாஜி பரிதாபமாக இறந்தார்.
    காந்தி லலித்குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தனக்கு சம்பந்தமில்லை என கூறி வரும் நிலானி, தற்கொலை முயற்சி செய்த நிலையில், அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், நிலானியை தேடி வருகின்றனர். #Nilani
    சின்னத்திரை தொடர்களில் நடித்து வருபவர் நிலானி. கணவரை பிரிந்த இவர் மதுரவாயலை அடுத்த அஷ்டலட்சுமி நகரில் மகள், மகனுடன் வசித்து வருகிறார்.

    நடிகை நிலானியும், வளசரவாக்கத்தை சேர்ந்த காந்தி லலித்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், காதலன் காந்தி லலித்குமார் மீது நிலானி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுக்கிறார் என்று கூறி இருந்தார்.

    இதனால் மனம் உடைந்த காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் நிலானியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோ படங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

    இதையடுத்து, நிலானி தனக்கும், காந்தி லலித்குமார் தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை. அவரது நடவடிக்கை சரியில்லாததால் லலித்குமாரை விட்டு விலகி சென்று விட்டதாக கூறினார்.



    ஆனால் காந்தி லலித்குமார் தற்கொலைக்கு நிலானிதான் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நிலானி தனது வீட்டில் தொலைகாட்சிகளுக்கு பேட்டி அளிப்பதாக கூறியதையடுத்து நிருபர்கள் அங்கு சென்றனர்.

    அப்போது நிலானி கொசு மருந்தை குடித்து விட்டார் என்று அவரது 2 குழந்தைகள் கதறினர். உடனே அரை மயக்கத்தில் இருந்த நிலானியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கே.கே.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மதுரவாயல் போலீசார் ஆஸ்பத்திரியில் இருந்த நிலானியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது நிலானி கூறும்போது, காந்தி லலித்குமார் திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி தொல்லை கொடுத்து மிரட்டி வந்தார்.



    இதற்கு முன்பு 2 முறை தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி இருக்கிறார். தற்போது பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்த போது எதிர்பாராத விதமாக பலியாகி விட்டார். அவரது தற்கொலைக்கு நான் காரணமில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றேன் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் நிலானி மீது தற்கொலைக்கு முயன்றதாக வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    அவர் மீது 309-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலானி அங்கிருந்து திரும்பினார். ஆனால் அவர் மதுரவாயலில் உள்ள வீட்டுக்கு செல்லவில்லை. அவரது செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரது 2 குழந்தைகளும் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை.

    போலீசார் தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உள்ள நிலையில் நிலானி திடீரென்று மாயமாகி உள்ளார், அவர் எங்கு உள்ளார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Nilani #GandhiLalithKumar

    காந்தி லலித் குமார் தற்கொலைக்கு தான் காரணமில்லை என்று கூறும் நடிகை நிலானி தற்கொலைக்கு முயன்ற நிலையில், காந்தி பற்றி தவறான தகவலை பரப்பினால் நிலானியின் உண்மை முகத்தை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். #Nilani
    சென்னை மதுரவாயலை அடுத்த அஷ்டலட்சுமி நகரில் வசித்து வருபவர் டி.வி. நடிகை நிலானி. இவர் வளசரவாக்கத்தை சேர்ந்த காந்தி லலித்குமார் என்பவரை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுப்பதாக காதலன் மீது மயிலாப்பூர் போலீசில் நிலானி புகார் கொடுத்தார். இதனால் மனம் உடைந்த காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் இறப்பதற்கு முன்பு நிலானியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக நிலானி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் செய்தார். அதில், “தனக்கும் காந்தி லலித்குமார் தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை. அவருடன் ஒன்றாக சுற்றியது உண்மை.

    ஆனால் நாங்கள் திருமணம் செய்தது கொள்ளவில்லை. அவரது நடவடிக்கை சரியில்லாததால் அவரை விட்டு விலகி சென்று விட்டேன்” என்று கூறி இருந்தார்.



    இந்த நிலையில் நடிகை நிலானி நேற்று மதியம் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் பேட்டி அளிக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்ததால் தொலைக்காட்சி நிருபர்கள் அங்கு குவிந்திருந்தனர்.

    அப்போது அவரது 2 குழந்தைகளும் கீழே இறங்கி ஓடி வந்து அம்மா கொசு மருந்து குடித்துவிட்டதாக கதறினார்கள். உடனே அங்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில் ஏற்றி அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காந்தி லலித்குமாரின் தற்கொலைக்கு நடிகை நிலானிதான் காரணம், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காந்தி உறவினர்கள் வற்புறுத்தி வந்தனர். இதனால் அவர் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலானியை பார்த்துக் கொள்ள யாரும் வரவில்லை. இதனால் அவரது 2 குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கிறார்கள்.

    முன்னதாக ‘லலித் குமாரின் தற்கொலைக்கு தாம் காரணமில்லை என விளக்கமளித்த நிலானி அவருக்கு ஆண்மை இல்லை’ என்று குற்றம் சாட்டினார். நிலானியின் குற்றச்சாட்டுக்கு திருவண்ணாமலையில் வசிக்கும் லலித்குமார் அண்ணன் ரகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து, ரகு கூறியதாவது:-

    என் தம்பி காந்தி லலித்குமாரும், நடிகை நிலானியும் 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். திருமணமாகாத என் தம்பி, நிலானிக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்தார். நிலானியின் 2 குழந்தைகளையும் தன்னுடைய குழந்தைகள் போல் கவனித்து வந்தார்.

    லலித்குமாரை பற்றி அவதூறு பரப்புவதை நிலானி நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவருடன் பழகியவர்கள் யார், யார்? என் தம்பியிடம் எவ்வளவு பணம் பறித்தார் என்பதற்கான, முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன்.

    நிலானியின் குழந்தைகள் நலன் கருதி, ஆதாரங்களை வெளியிட வேண்டாம் என நினைக்கிறேன். மீண்டும் அவதூறு பரப்பினால் நிலானி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Nilani #GandhiLalithKumar #Raghu

    விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றையொட்டி ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையில் ஏராளமான வீடுகள் உள்ளன.

    தற்போது மழை காலம் நெருங்குவதையடுத்து அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றையொட்டி ஆக்கிரமித்து கட்டியிருந்த 47 வீடுகளை அகற்ற கடந்த மாதம் பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். அவர்களுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டது.

    ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது வீட்டை காலி செய்யாமல் அங்கேயே தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் வந்தனர். அவர்கள் பொருட்களை அப்புறப்படுத்தி வீடுகளை இடித்து அகற்றினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க போவதாக கூறி திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றினார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    வீட்டுக்குள் அவரது மனைவியும், 2 குழந்தையும் இருந்தனர். அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து கர்ணனையும், அவரது குடும்பத்தையும் மீட்டனர்.

    பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதில் பெரும் பரபரப்பு எற்பட்டது.

    தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. தீக்குளிக்க முயன்ற கர்ணனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    தொலைக்காட்சி உதவி இயக்குநர் காந்தி தற்கொலை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவர் தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக அவரது நிலானி கமிஷனர் அலுவகத்தில் மனு அளித்துள்ளார். #Nilani
    தொலைக்காட்சி சீரியல் நடிகை நிலானி - உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் இருவரும் காதலித்து வந்தார்கள். காந்தி நிலானியை திருமணம் செய்யவும் விரும்பினார். ஆனால் நிலானிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் போலீசில் புகார் அளித்தார். இதனால் மனம் உடைந்த காந்தி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில், நிலானி, காந்தி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

    இதையடுத்து போலீசுக்கு பயந்து நிலானி தலைமறைவாகியதாகவும், அவரது செல்போன் சுவிட்ஸ்ஆப் செய்து வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.


    கோப்பு படம்

    இந்த நிலையில், சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என்றும், காந்தி தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் புகார் மனு அளித்துள்ளார். 

    நடிகை நிலானி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் போலீசில் புகார் அளித்ததால், அவரது காதலர் காந்தி தற்கொலை செய்துள்ள நிலையில், இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. #Nilani
    காதலுக்காக உயிரையே மாய்த்துள்ளார், நடிகை நிலானியின் காதலன் காந்தி. ஒரு பெண்ணை... அதுவும் 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் இப்படியெல்லாம் காதலிக்க முடியுமா? என்கிற கேள்வி காந்தியின் மரணத்தால் திரும்ப திரும்ப எழுகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீஸ் சீருடையில் தோன்றி போலீசுக்கு எதிராக வசனம் பேசிய நிலானியை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது. அந்த அளவுக்கு அவர் பிரபலமாகிவிட்டார்.

    இப்படி புரட்சிகரமாக குரல் எழுப்பிய நிலானியை, திருவண்ணாமலையை சேர்ந்த காந்தி காதலித்தார். அவரை திருமணம் செய்யவும் விரும்பினார். ஆனால் நிலானிக்கு இதில் விருப்பம் இல்லாததால் போலீசில் புகார் அளித்தார். இதனால் மனம் உடைந்த காந்தி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.



    நிலானி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளின் தாய் என்று தெரிந்த போதிலும் கடந்த 3 ஆண்டுகளாக காந்தி, அவரை காதலித்து வந்துள்ளார். சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற கனவுடன் திருவண்ணாமலையில் இருந்து சென்னை வந்த காந்தி அதற்காக தீவிரமாக முயற்சி மேற்கொண்டிருந்தார். பிரபல நடிகர் ஒருவரின் ரசிகர் மன்றத்திலும் அவர் இருந்துள்ளார்.

    ஆலப்பாக்கத்தில் ஒரே வீட்டில் குடும்பமும் நடத்தியுள்ளனர். தாலி கட்டாத மனைவியாக இருந்த நிலானியை, தனது வாழ்க்கைத் துணைவியாக்க நினைத்தது மிகப்பெரிய தவறாகி இருக்கிறது/

    இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோக்களும், போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    இந்த வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வீடியோவில், நிலானியின் கால் விரல்களில் மெட்டி போட்டுவிடும் காந்தி 2 கால்களையும் கைகளில் ஏந்தி உள்ளங்காலில் முத்தம் கொடுக்கிறார்.

    நிலானியோ, அழுக்கு... அழுக்கு என்கிறார். அதைப் பற்றியெல்லாம் காந்தி கவலைப்படாமல் முத்தமழையை பொழிந்து கொண்டே இருக்கிறார். #Nilani #GandhiLalithKumar

    திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் வற்புறுத்துவதாக சின்னத்திரை நடிகை நிலானி போலீசில் புகார் அளித்த நிலையில், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அவரது காதலன் காந்தி லலித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #Nilani
    தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடைந்த போது, போலீஸ் சீருடையில் தோன்றி, போலீசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் நிலானி.

    நிலானிக்கும், சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது.

    இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்றிருந்த போது, அங்கு வந்த காந்தி லலித்குமார் நிலானியுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை அவதூறாகவும் பேசியுள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பில் இருந்தவர்கள் காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.



    இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்று, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையில் நடிகை நிலானியிடம் தகராறில் ஈடுபட்ட அவரது காதலன் காந்தி லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். #Nilani #GandhiLalithKumar

    கடையநல்லூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    கடையநல்லூர்:

    நெல்லை மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் நிலையம் அருகே வசிப்பவர் சிதம்பர ஈஸ்வரன். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது 26). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். 

    சிதம்பர ஈஸ்வரன் சென்னையில் வேலை செய்வதால், பாக்கியலட்சுமி தனது குழந்தைகளோடு மாமனார் பால குருநாதன், மாமியார் கிருஷ்ணம்மாள் ஆகியோருடன் வசித்து வந்தார். 

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாக்கியலட்சுமி பரிதாபமாக இறந்தார். 

    பாக்கியலட்சுமி எதற்காக தீக்குளித்து தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. இதுபற்றி பாக்கியலட்சுமியின் தந்தை முனியசாமி கொடுத்த புகாரின் பேரில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புளியங்குடி துணை சூப்பிரண்டு ஜெயகுமார் விசாரணை நடத்தினார். பாக்கியலட்சுமிக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகளே ஆவதால், இதுபற்றி தென்காசி உதவி கலெக்டர் சவுந்தரராஜன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் திடீரென 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சேலம்:

    சேலம் குகை பஞ்சந்தாங்கி ஏரி கொல்லப்பட்டரை தெருவை சேர்ந்தவர் சந்தியாதேவி (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி சரண்தேவி(5) என்ற மகளும், 10 மாதம் ஆன சவுமியா என்ற குழந்தையும் உள்ளனர்.

    இன்று காலையில் சந்தியாதேவி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது 2 குழந்தைகளுடன் மனு கொடுப்பதற்காக வந்தார். அப்போது அவர், குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு கையில் வைத்திருந்த மண்எண்ணெயை திடீரென தலையில் ஊற்ற முயன்றார். இதை பார்த்த போலீசார், ஓடி சென்று தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை வாங்கி அப்புறப்படுத்தினார்கள்.

    அப்போது அவர், போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து சந்தியாதேவியை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வைத்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான், கூலி வேலை செய்து வருகிறேன். எனது ஊரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வெள்ளிப்பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவரது கடையில் நான் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. நாங்கள் இருவரும் 2-வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தோம். இதனால் எனக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் பிறந்த சான்றிதழிலும் தகப்பனார் பெயர் கார்த்திகேயன் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அவர், என்னுடன் வாழ மறுத்து வருகிறார். குடும்ப செலவுக்கும் பணம் தருவதில்லை. இது குறித்து கேட்டால் என்னை அவர் அடித்து உதைக்கிறார். வலி தாங்க முடியாமல் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார், இது உங்கள் குடும்ப வி‌ஷயம் என்று கூறி அனுப்பி வைத்து விட்டனர். எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

    சேலம் பொன்னம்மா பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வேலவன். இவரது மனைவி ரேவதி (வயது 31). மனு நீதி நாளான இன்று காலை ரேவதி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென அவர் நுழைவு வாயில் முன்பு வைத்து மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்த போலீசார் அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது உறவினர் ஒருவருக்கு 1 லட்சத்து 23 ஆயிரம் கடன் கொடுத்ததாகவும், அவர் திருப்பி தரவில்லை என்றும், இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராஜபாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் செட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பாலாஜி (வயது 16). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பாலாஜிக்கு படிப்பு சரியாக வராததால் பெற்றோர் டியூசன் செல்ல வற்புறுத்தினர். ஆனால் பாலாஜிக்கு டியூசன் செல்ல மனமில்லை.

    பெற்றோர் வற்புறுத்தியதால் டியூசன் செல்வதாக கூறி பணம் வாங்கிச் சென்ற பாலாஜி, காளியம்மாள் கோவில் அருகே உள்ள ‘பம்பு செட்’ பகுதிக்கு சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து விட்டார்.

    உடல் முழுவதும் கருகிய நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பாலாஜி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி அருகே குழந்தை பிறந்து இறந்த சோகத்தில் தீக்குளித்த பெண் போலீஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் மெக்கானிக். இவரது மனைவி தேன்மொழி (36). இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தார்.

    இவருக்கு 5 வயதில் ஞானசாய் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் மீண்டும் தேன்மொழி கர்ப்பம் ஆனார். அவர் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. உறவினர்கள் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தேன்மொழிக்கு குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்து விட்டது. அவர் குழந்தை இறந்த சோகத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி திடீரென தேன்மொழி வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி பெண் போலீஸ் தேன்மொழி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
    பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பாகூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி (வயது 26). இவர், புதுவை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை பார்த்து வருகிறார்.

    இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வரும் திருச்செந்தூரை சேர்ந்த யஷ்வந்தய்யா (28) என்பவர் பழக்கமானார். நாளடைவில் இது காதலாக மாறியது.

    இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தாம்பத்திய உறவில் யஷ்வந்தய்யாவுக்கு நாட்டம் இல்லாததால் அவர் மீது இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    பின்னர் விசாரித்த போது, யஷ்வந்தய்யா பெண்ணாக இருந்து ஆணாக மாறி அறுவை சிகிச்சை செய்திருப்பது இளவரசிக்கு தெரிய வந்தது.

    இதனால் யஷ்வந்தய்யாவை பிரிந்து இளவரசி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திருமண நாளையொட்டி இளவரசியை யஷ்வந்தய்யா சந்தித்தார். அப்போது இருவரும் சேர்ந்து வாழலாம் என அவர் இளவரசியிடம் வற்புறுத்தினார்.

    ஆனால், இதற்கு இளவரசி சம்மதிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த யஷ்வந்தய்யா பாட்டிலில் தயாராக எடுத்து சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.

    தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் யஷ்வந்தய்யா அலறி துடித்தார். பின்னர் அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் உருண்டு புரண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யஷ்வந்தய்யாவை மீட்டு அவர் வேலை பார்க்கும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு யஷ்வந்தய்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×