search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 121973"

    • டாஸ்மாக் கிடங்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் வழங்க வேண்டும்.
    • சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நலநிதி உள்ளிட்ட நிதி பயன்களை வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் தலைமை வைத்தார்.

    கூட்டத்தில் சுமப்பணி சம்மேளன மாநிலத் தலைவர் குணசேகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் கஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜானகிராமன், சிஐடியு நிர்வாகிகள் மாலதி, வைத்தியநாதன், லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பேரளம் ரயில்வே குட்செட் தலைவர் வீரபாண்டியன் வரவேற்றார். இறுதியில் டாஸ்மார்க் கிளைத் தலைவர் துரைராஜ் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும்.

    அரசு நுகர்வோர் வாணிபக் கழக நிர்வாகத்தில் பணி புரியும் சுமை பணி தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்யும் முறையில் தனியார் மயமாக்கும் உத்தரவினை வாபஸ் பெற வேண்டும்.

    தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக சுவைப்பணி தொழிலா ளர்கள் மற்றும் டாஸ்மாக் கிடங்கில் பணிபு ரியும் தொழிலா ளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் வழங்க வேண்டும்.

    சுமைப்பணி தொழிலாள ர்க ளுக்கு நல நிதிஉள்ளிட்ட நிதி பயன்களை வழங்க வேண்டும்.

    பணிநேர த்தில் சுமை பணி தொழி லாளர்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு விபத்து காப்பீடு வழங்க வேண்டும்.

    தொழிலாளர் நல வாரிய த்தில் வீடு கட்டும் திட்டத்தை தொழிலா ளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவே ற்றப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பாதுகாப்பின்மையும் அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது என குஜராத்தில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #CongressWorkingCommittee #CWCMeeting
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது. சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவிடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் அவரது உருவச்சிலைக்கு சோனியா, மன்மோகன்சிங், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை தொடங்கிய நாளான இன்று, சபர்மதி ஆசிரமத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு காரிய கமிட்டி கூட்டம் தொடங்கப்பட்டது. 

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா, ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், அசோக் கெலாட், நாராயணசாமி, சித்தராமையா, தருண் கோகாய், ஹரிஷ் ராவத் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். 



    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தேசத்தின் பாதுகாப்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

    தேசப் பாதுகாப்பு பிரச்னையில் தோல்வி அடைந்துள்ள பிரதமர் மோடி, அதை ஏற்காமல் பிரச்னையை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு ஏற்பட்டுள்ள மகத்தான தோல்விகளில் இருந்தும், போலியான கூற்றுக்களை மறைக்கும் வகையிலும், தொடர்ந்து பொய்களை கூறி மக்களை திசைதிருப்பி வருகிறார்.

    இந்தியா ஜனநாயகத்தின் மீது திடமான நம்பிக்கை கொண்ட நாடு. நமது ராணுவ படையால் நாம் பெருமிதம் கொள்வோம். வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் நமது ராணுவம் எப்போதும் தோற்கடிக்கப்பட கூடாது என்பதே நமது எண்ணம்.

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பாதுகாப்பின்மையும் அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. பெண்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலை உள்ளதை இந்த கமிட்டி கண்டிக்கிறது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேறின. #CongressWorkingCommittee #CWCMeeting
    ஜம்மு காஷ்மீரில் 40 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, இதற்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு எதிராக ஐநா சபையில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வர உள்ளது. #JammuKashmir #CRPF #PulwamaAttack

    பாரீஸ்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. தற்போது இவன் தலைமறைவாக இருக்கிறான்.

    இந்த நிலையில் மசூத் அசாரை ஐ.நா. சபையில் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் தீவிரமாக உள்ளது.

    அதற்காக ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டில் இங்கிலாந்து பிரான்ஸ் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

    ஆனால் தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரம் மூலம் சீனா தடுத்து விட்டது. எனவே அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது பங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக 2-வது தடவையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்னும் சில நாட்களில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    அதற்கான நடவடிக்கையில் பிரான்ஸ் அரசின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீர்மானம் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் ஆலோசகர் பிலிப் எடின் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாவுடன் நேற்று டெலிபோனில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். #JammuKashmir #CRPF #PulwamaAttack

    ஸ்டெர்லைட் ஆலையை மூட‌ சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்தனர். #Sterlite

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் 22-ந்தேதி வழக்கு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்து கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டது. இதன் காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆலையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல் அரி ராகவன், மகேஷ் ஆகியோர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை கண்டித்து இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்கள், நகரங்களில் உள்ள வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று காலை தூத்துக்குடி பண்டாரம்பட்டி, அ.குமரெட்டியாபுரம், மீளாவிட்டான் உள்ளிட்ட கிராமங்களிலும், சுற்றுப்பகுதியிலும் சில வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. தெருக்களிலும் கருப்புக்கொடி கட்டப்பட்டன. தூத்துக்குடி பாத்திமாநகரில் அப்பகுதியினர் சிலர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற சென்றனர்.


     

    இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது. பின்பு பொதுமக்கள் சாலை ஓரம் கருப்புக்கொடியுடன் நின்று கோ‌ஷம் எழுப்பினர். இதனிடையே தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரை வருகிற 21-ந்தேதி மக்கள் கூட்டமைப்பு சார்பில் சந்திக்க முடிவு செய்து உள்ளனர்.

    அதில் மக்கள் கூட்டமைப்பை சேர்ந்து உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே தூத்துக்குடி டபிள்யூ.சி.சி. ரோட்டில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் அருகே அக்கட்சியினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாலன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், துணைச்செயலாளர் செல்வக்குமார், எட்வின் பாண்டியன், கோட்டாள முத்து, தொழிற்சங்க துணைத் தலைவர் சண்முக குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு கொடியேந்தி ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கோ‌ஷம் எழுப்பினார்கள். திடீரென அவர்கள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது. #marxistcommunist
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

    கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது. மத்திய, மாநில அரசுகளுடன் அல்லாது தோழமை கட்சிகளை ஆதரிப்பது. கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வருகிற 2019 ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கட்சி வளர்ச்சிக்காக நிதி வசூல் செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    இந்த கூட்டத்தில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழூர் உள்ளிட்ட ஒன்றியத்தை சேர்ந்த மாவட்டக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், முன்னணி கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆண்டிமடம் வட்ட செயலாளர் பரமசிவம் வரவேற்றார். முடிவில் தா.பழூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். #marxistcommunist
    உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், பசுவை நாட்டின் தாயாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #Uttarakhand #RashtraMata
    டேராடூன்:

    இந்தியாவில் மாடுகளை பாதுகாக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். சமீபத்தில் பசு பாதுகாவலர்கள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பசுக்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பசு பாதுகாவலகள் என்ற பெயரில் சிலர் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    மேலும், நாட்டின் பல பகுதிகளிலும் பசுக்களை பாதுக்காக்க பல்வேறு மையங்கள் மற்றும் அமைப்புகள் நிருவப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஒருபடி மேலே சென்று, பசுவை நாட்டின் தாய் என அறிவித்து புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இதுதொடர்பாக பேசிய உத்தரகாண்ட் மாநில கால்நடை பராமரிப்பு மந்திரி ரேகா ஆர்யா, இந்த தீர்மானத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். #Uttarakhand #RashtraMata
    மதுரையில் ஜெயலலிதாவுக்கு முழுஉருவச்சிலை அமைக்கப்படும் என்று பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூடடம் மதுரை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பேரவை மாவட்ட செயலாளர் சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மாரிச்சாமி, முத்துஇருளாண்டி முன்னிலை வகித்தனர். மாநில பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. அமர்நாத், நிர்வாகிகள் முருகேசன், அபுதாகீர், சீனிவாசன், டாஸ்மாக் போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மதுரை மாநகர் முழுவதும் ஜெயலலிதா பேரவை சார்பில் 1 லட்சம் புதிய உறுப்பினர்களை அ.தி.மு.க.வில் சேர்க்க பாடுபடுவது என்றும், வருகிற 2019-ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா பிறந்த தினத்தில் மதுரை மாநகரில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவுக்கு முழுஉருவ சிலை நிறுவி திறக்க வேண்டும் என்று பேரவை மாநில செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை வேண்டிக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவு சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாத கிராம சபை கூட்டங்களில் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக அமைக்கப்படவுள்ளது.

    இந்த திட்டத்துக்காக விவசாய நிலங்களில் குறியீடு கல் பதிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸ் பாதுகாப்புடன் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நில அளவீடு பணிகளை முடித்துவிட்டனர்.

    இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதில், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்படும் கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பொதுமக்களும் விவசாய சங்கங்களும் முடிவு செய்திருந்தனர்.

    ஆனால், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் ஏதும் நிறைவேற்றக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. பிரச்சினை ஏற்படக்கூடிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு கூட்டத்தை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், கோரிக்கை தொடர்பாக மனுவாக அளித்தால் கலெக்டரிடம் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முழக்கமிட்டனர். நீண்ட நேரமாகியும் பொதுமக்கள் சமாதானம் அடையாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    சி.நம்மியந்தல் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்துக்கு வந்த அதிகாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாக தெரிவித்தனர். இதனை ஏற்காத அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுவை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். 3 மணி நேரம் பொதுமக்கள் அதிகாரிகளை சிறை வைத்திருந்தனர்.

    நரசிங்கநல்லூர், தொரப்பாடி, சி.நம்மியந்தல், ஓரந்தவாடி, அந்தனூர், நயம்பாடி, சிறுகலாம் பாடி, மேல்ராவந்தவாடி உள்ளிட்ட கிராமங்களில் பொது மக்களிடம் இருந்து மனுக்களை மட்டும் அதிகாரிகள் வாங்கி சென்றனர்.

    மேல்வணக்கம்பாடி, பெலாத்தூர், தென்னகரம், தென்பள்ளிப்பட்டு, ராந்தம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம சபைக் கூட்டங்களில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துவிட்டு சென்றுள்ளனர். அதன் நகலையும் வழங்குவதாக கூறியுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
    மணப்பாறை:

    மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த  சிலமாதங்களாக நடைபெற்றுவரும் கொள்ளை மற்றும்வழிப்பறி சம்பவங்களை தடுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது. கட்சி அலுவலகத் தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு  ஒன்றியச் செய லாளர் சரவணன் தலைமை தாங்கினார். 

    அவைத் தலைவர் சந்திர சேகர் வரவேற்றுப் பேசினார். மாவட்டக்கழகச் செயலாளர் வக்கீல்  கிருஷ்ணகோபால், மாவட்ட அவைத்தலைவர் பாரதிதாசன்  ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினர். இதில் தே.மு.தி.க 14-ம் ஆண்டு கட்சி தொடக்க விழா, செப்டம்பர் 16- ல் திருப்பூர் மாநில மாநாடு,  தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள்விழா குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் மணப்பாறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி  மற்றும் கொள்ளை சம்ப வங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில் மக்கள் காவல் துறையினர் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உள்ளது. 

    மேலும் இந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால் மக்கள் வெளியில் செல்லக் கூட அச்சப்படும் நிலை உள் ளதை  கருத்தில்  கொண்டு  சம்மந்தப்பட்ட  காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்து  நடவடிக்கை எடுத்து குற்ற சம்பவங்களை தடுப்பதற் கான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

    கடந்த ஒன்றரை ஆண்டிற் கும் மேலாக மணப் பாறை நகராட்சியில்  ஆணையர் இல்லாத  சூழல் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனால்  திட்டப்பணிகள் தடைபட்டு நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு உடனடியாக ஆணையரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் வேல் முருகன், வசந்த் பெரிய சாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் முல்லை சந்திர சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் குமார் நன்றி கூறினார்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் மீன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் ஒருங்கிணைந்த மீன் வியாபாரிகள், தந்தை பெரியார் மீன் அங்காடி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு மீன் கமி‌ஷன் ஏஜெண்டுகள் முருகன், ரசீது, ஜெய்லானுதீன், சாகுல் ஹமீது ஆகியோர் தலைமை வகித்தனர். 

    கும்பகோணம் வர்த்தக சங்க தலைவர் கே.எஸ்.சேகர், வக்கீல் ஆனந்த், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீன் வியாபாரிகளுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும். பொது இடங்களில் பெண்கள் சுகாதாரமின்றி மீன்கள் விற்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

    பின்னர் மீன் மார்க்கெட் முன்பு இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிறகு சப்- கலெக்டர் பிரதீப்குமார், நகராட்சி ஆணையர் உமா மகேஸ்வரி, நகர்நல அலுவலர் பிரேமா ஆகியோரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    சுடுகாட்டுக்கு பாதை கேட்டு மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்திட மார்க்சிஸ்டு கம்யூ. கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாகூர்நெட்டப்பாக்கம் கொம்யூன் குழு கூட்டம் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தமிழ்மாநில குழு உறுப்பினர் பெருமாள், கொம்யூன் செயலாளர் தமிழ்செல்வன், பிரதேசக்குழு உறுப்பினர்கள் கலியன், இளவரசி உள்ளிட்டு கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பாகூர் கொம்யூனில் குருவிநத்தம் பெரியார் நகர் மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. தற்போது தென்பெண்ணையாற்றின் கரையோரம் அவ்வப்போது எழும் சர்ச்சைகளுக்கு இடையே சவ அடக்கம் செய்யப்படுகிறது. இவர்களுக்கு நிரந்தர சுடுகாடு இல்லை.

    குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளன்சந்தை ஆகிய 2 கிராம பஞ்சாயத்தில் சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். இப்பகுதி மக்கள் தென்பெண்ணையாற்றின் சிறுகரையில்தான் சவ அடக்கம் செய்கிறார்கள். ஆற்றைக் கடந்துதான் சவ அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட தரைப்பாலம் வெள்ளப் பெருக்கால் காணாமல் போய்விட்டது. அதனைத் தொடர்ந்து புதியதாக அமைக்கப்பட்ட பாலம் 2017 நவம்பரில் பெய்த கன மழையால் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் சவ அடக்கம் செய்வதற்கு ஆற்றுக்குள் இறங்கி போக வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் சவ அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    ஆற்றின் குறுக்கே புதிய தரமான பாலம் கட்டித் தந்திட வேண்டும். சுடுகாட்டில் மின்விளக்கு, குடிநீர் இணைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவும் வலியுறுத்தி கிராமங்களில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    மாநில அரசும், சம்மந்தப்பட்ட துறையும் தலையிடாத பட்சத்தில் சுடுகாடு வசதி கேட்டு மக்கள் பங்கேற்போடு போராட்டத்தை நடத்திடவும் முடிவெடுத்துள்ளது.

    நடப்பு பட்ஜெட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 10 லட்சம் மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 15 நாட்கள் மட்டும் வேலை கிடைக்கும். மத்திய, மாநில அரசுகள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதியை குறைத்து வேலை நாட்களையும் குறைத்து வருகிறது.

    இதனால் கிராமப்புற வறுமை, ஒழிப்பு, பிழைப்புக்காக புலம் பெயருதலை தடுத்தல் ஆகிய நோக்கம் சிதைக்கபட்டு விடும். ஆகவே, மத்திய, மாநில அரசுகள் 65 ஆயிரம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் அடிப்படையில் 65 லட்சம் மனித வேலை நாட்களை உருவாக்கவும், அதற்கான நிதி ஒதுக்கவும் வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் இழைக்காத பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 11-ந் தேதியுடன் (இன்று) 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கைது செய்யப்பட்டு இரு ஆயுள் தண்டனை காலங்கள் முடிவடைந்த பிறகும், ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    7 தமிழர்களின் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 4½ ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் மத்திய அரசு சார்பில் கூறப்படும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒத்திவைக்கப்படுவதும், பின்னர் அந்த வழக்கு கிடப்பில் போடப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. அவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் 27 ஆண்டுகளைக் கடந்தும் அப்பாவிகளின் சிறைவாசம் தொடர்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டதைப் போன்று, அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலைசெய்ய எந்தத் தடையும் இல்லை.

    ஆனால், யாருக்கோ அஞ்சி அந்த வாய்ப்பைப் பயன்படுத்த ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர். இது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இழைக்கப்படும் துரோகமாகும். தமிழர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நீதிகிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி 161-வது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி அவர்கள் விடுதலையாவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×