என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜப்பான்"
- 1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர்.
- 1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார்.
உலகின் மிக வயதான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களை பார்த்ததுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், 1918 ஆம் ஆண்டு பெரிய அளவில் பரவிய காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று ஆகியவற்றை பார்த்தவர் ஆவார்.
மரியா பிரான்யாஸ் கடந்த 1907 ஆம் ஆண்டு, மார்ச் 4ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அதன்பின் அவரது குடும்பம் சொந்த நாடான ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தது.
1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர். வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மரியா பிரான்யாஸ் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 20] காலமானார். மரியா அவர் விரும்பியபடியே தூக்கத்தில் அமைதியான முறையில் வலியில்லாமல் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலவகின் மிக வயதான பெண்மணியாக மரியா பிரன்யாஸ் உயிரிழந்ததை அடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான தொமிக்கோ இதூக்கா [Tomiko Itooka] உலகின் மிக வயதான பெண்மையாக கின்னஸ் புத்தக அங்கீகாரத்தை பெற்றுள்ளார். 1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இதூக்கா ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அசியா [Ashiya] நகரின் வசித்து வருகிறார்.
- ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை.
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி இருக்கிறது.
நிலநடுக்கம் காரணமாக ஜப்பானியை தீவுகளான குய்ஷூ மற்றும் ஷிகோகு ஆகிய பகுதிகளை ஒட்டிய கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. நிலநடுக்கம் மியாசகியில் இருந்து 20 மைல் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்துள்ளது.
- ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது
- 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர். விளையாட்டு என்பதையும் தாண்டி தங்களது நாடுகளின் கவுரவம் சார்ந்த மிகப்பெரிய பொறுப்பு தங்களை நம்பி கொடுக்கப்பட்டுள்ளதாக வீரர்கள் கருதுவதால் வெற்றியும் தோல்வியும் அவர்களை உணர்ச்சிவசப் பட வைத்துவிடுகிறது.
அந்த வகையில் நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியில் தோல்வியடைந்த ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது. நேற்று 52 கிலோவுக்கு உட்பட பெண்கள் ஜூடோ போட்டியில் உலகின் முதன்மை ஜுடோ வீராங்கனையாக விளங்கும் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை தியோரா கெல்டியோரோவா [Diyora Keldiyorova] உடன் ஜப்பானின் யுதா அபே விளையாடினார்.
4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார். இதனால் ஜூடோ மேட்டை விட்டு கதறி அழுதபடி சென்ற அபேவை அவரது பயிற்சியாளராலும் தேற்ற முடியவில்லை. 3 வருடங்களுக்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்சில் அபே தங்க மெடல் வாங்கி ஜப்பானுக்குப் பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
- டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள விநாயக சிலைகள் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
- நான்முக விநாயகரும் அந்நாட்டில் இருக்கிறார்.
ஜப்பான்
சீனா வழியே தான் விநாயகர் வழிபாடு ஜப்பானுக்கு சென்றுள்ளதாம்.
கான்கிட்டன் ஹாயக்ஷா என்று விநாயகருக்குப் ஜப்பானில் பெயர்கள் உள்ளன.
டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள விநாயக சிலைகள் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
தாய்லாந்து
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்துக்கோவிலில் கையில் எழுத்தாணியுடன் ஐந்தாம் நூற்றாண்டு விநாயகர் காணப்படுகிறார்.
நான்முக விநாயகரும் அந்நாட்டில் இருக்கிறார்.
- அவரது இறுதிச் சடங்குகள் தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்றது.
- சுபாஷ் தண்டேகரின் மறைவிற்கு, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.
கேம்லின் க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் உடல்நல குறைவால் நேற்று இரவு காலமானார்.
சுபாஷ் தண்டேகர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்குகள் தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர், கேம்லின் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழில் துறை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சுபாஷ் தண்டேகரின் மறைவிற்கு, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.
இந்த 93 ஆண்டு பழமையான கேம்லின் நிறுவனம் 1946ல் தனியார் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு, 1998ல் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது.
ஸ்டேஷனரி தயாரிப்பில் கேம்லின் நிறுவனம் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேம்லின் நிறுவனம் 2011 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பான் நாட்டின் கோகுயோ என்னும் நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வருகிறது. தற்போது கேம்லின் நிறுவனத்தில் சுமார் 51 சதவீத பங்குகளை ஜப்பான் நாட்டின் கோகுயோ வைத்துள்ளது.
- எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது.
- ஒப்பந்தத்தின் மதிப்பு 843 மில்லியன் டாலர் ஆகும்.
வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கின.
விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-ம் ஆண்டு தொடங்கப் பட்டு 2000-ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின் குழு நடவடிக்கைகளுடன் இயங்கத் தொடங்கியது. பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2030-ம் ஆண்டு முடிகிறது.
அதன்பின்னர் விண் வெளியில் இருந்து அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தி வளிமண்டலத்திற்கு கொண்டு வருவதற்காக பிரத்தியேக விண்கலம் உருவாக்கப்படுகிறது.
இந்த பணியை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது. இந்தப் பணிக்கான 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.5 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளக் கூடிய ஒரு வாகனத்தை உருவாக்க உள்ளது.
இதுதொடர்பாக நாசா கூறும்போது, யு.எஸ். டி.ஆர்.பிட் வாகனத்தை (விண் கலம்) உருவாக்கி வழங்குவதற்கு ஸ்பேஸ்எக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பு 843 மில்லியன் டாலர் ஆகும். இது விண்கலம் தயாரிப்புக்கான தொகை மட்டுமே.
விண்வெளி நிலையத்தை வளிமண்டலத்திற்குள் கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஆபத்தை தவிர்ப்பதையும் இந்த விண்கலம் உறுதி செய்யும். டிஆர்பிட் விண்கலத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து அப்புறப்படுத்தப்படும்.
அதன் பின்னர் அந்த விண்கலமும், சர்வதேச விண்வெளி நிலைய பாகங்களும் வளிமண்ட லத்தில் நுழையும்போது, அவை இரண்டும் உடைந்து எரியும் என்று தெரிவித்தது. விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பு இன்னும் நல்ல நிலையில் இருந்தாலும், அதனை அகற்றுவதற்கான எதிர்கால திட்டங்களை இப்போதே உருவாக்க வேண்டும் என்றும் எந்த உதவியும் வழங்கப்படாவிட்டால் அது இறுதியில் தானே பூமியின்மேல் விழுந்து மக்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொண்டை வறட்சி, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவை முதலில் ஏற்படும்.
- உயிரிழப்புகள் அதிகபட்சமாக பாக்டீரியா தாக்கிய 48 மணி நேரத்துக்குள் ஏற்படும்
பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் அரிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) எனப்படும் நச்சு அதிர்ச்சி நோய் பாதிப்பு நச்சுக்களை இரத்த ஓட்டத்தில் பரவச் செய்து உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கிறது.
ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முழுவதுமாக தளர்த்தப்பட்ட நிலையில் இந்த சதையை உண்ணும் பாக்டீரியடா ஜூன் 2 நிலவரப்படி சுமார் 977 பேரை தாக்கியுள்ளது. கடந்த வருடம் இதனால் 941 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி கடந்த 1999 ஆம் ஆண்டு இந்த பாக்டீரியா முதல் முதலில் கண்டறியப்பட்டது.
இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொண்டை வறட்சி, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவை முதலில் ஏற்படும். பின் படிப்படியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் செயலிழப்பு ஏற்பட்டு இறுதியில் மரணத்துக்கு வழிவகுக்கும். இந்த உயிரிழப்புகள் அதிகபட்சமாக பாக்டீரியா தாக்கிய 48 மணி நேரத்துக்குள் ஏற்படும் என்று டோக்கியோ மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நோய்த்தொற்றுகள் பிரிவு மருத்துவர் கென் கிகுச்சி தெரிவிக்கிறார்.
அதிகாலையில் முதலில் கால் வீக்கம் ஏற்பட்டு மதியத்துக்குள் மூட்டு வரை பரவும் அளவுக்கு பாதிப்பின் வீரியம் வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது உள்ள பாக்டீரியா பரவல் வரும் நாட்களில் வேகம் எடுத்து பாதிப்பு எண்ணிக்கை 25,00 உயரும் என்று அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏன்னெனில் இந்த பாக்டீரியா மலத்தின் மூலம் அதிகம் பரவ வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
- அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
- இந்த படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிடப்பட்டுள்ளது. படம் 2025-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிடப்பட்டுள்ளது. படம் 2025-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது. அஜித் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10 அன்று ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று முடிவடைந்த நிலையில் . இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.
நேற்று படப்பிடிப்பு தளத்தில் ஆதிக் ரவிச்சதிரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் ஒரு குத்து பாடலுக்கு நடன இயக்குனரான கல்யாண் மாஸ்டர் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான காயத்ரி கோபிசந்த் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தினார்
- ஆட்டம் தொடக்கத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி முதல் ஆரம்ப செட்டில் தென் கொரியா ஜோடியிடம் ஆட்டத்தை இழந்தனர்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான காயத்ரி கோபிசந்த் தனது அபாரமான திறமையை சிங்கப்பூர் ஓபன் 2024 மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் வெளிப்படுத்தினார். காய்த்ரியும் அவரது ஜோடியான திரிஷா ஜாலியும் இணைந்து தென் கொரியா ஜோடியான கிம் செய்- யங் மற்றும் கொங் ஹீ - யங் உடன் நேற்று போட்டியிட்டனர்.
ஆட்டம் தொடக்கத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி முதல் ஆரம்ப செட்டில் தென் கொரியா ஜோடியிடம் ஆட்டத்தை இழந்தனர். ஆனால் ஆட்டத்தின் மூன்றாவது செட்டில் காயத்ரி செய்த செயல் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
மூன்றாவது செட்டில் இந்திய அணி 3- 2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டம் தீவிரம் அடைந்துக் கொண்டு இருக்கும் பொழுது ஆட்டத்தின் நடுவே காயத்ரி கோபிசந்த் அவரது ரேக்கட்டை மாற்றி 4-2 என்று ஸ்கோர் எடுத்து கால் இறுதி சுற்றில் வென்றனர். அந்த பரபரப்பான ஆட்டத்திலும் காய்த்ரி இந்த செயலை செய்தது விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பலரும் இவரை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் சிஹாரு ஷிடா-மத்சுயுமா ஜோடியுடன் மோதியது.
அரை இறுதி ஆட்டத்தில் இதில் ஜப்பான் ஜோடியிடம் 21-23, 11-21 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- லிக்னோசாட் செயற்கைக்கோள் மக்னோலியா மரத்தினால் செய்யப்பட்டதாகும்.
- வெளிபுறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் மர செயற்கைக்கோளை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிட்டோமோ பாரெஸ்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.
சோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஒவ்வொரு பக்கமும் 10 சென்டி மீட்டர் (4 அங்குலம்) அளவைக் கொண்டுள்ளது. லிக்னோசாட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் வருகிற செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது.
லிக்னோசாட் செயற்கைக்கோள் மக்னோலியா மரத்தினால் செய்யப்பட்டதாகும்.
வெளிபுறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. லிக்னோசாட் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு விண்வெளியை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தொவித்தனர்.
- மற்ற வாழைப் பழங்களை விட மிகவும் சுவையானது.
- உறைய வைத்து வளர்த்தல் என்ற முறையில் உருவாக்குகிறார்கள்.
ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள், வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கி இருக்கிறார்கள். 'மோங்கீ' என்ற அந்த வாழைப்பழம், மற்ற வாழைப் பழங்களை விட மிகவும் சுவையானது என்பதுடன், இதன் தோலையும் சாப்பிட முடியும்.
சாதாரண வாழைப்பழங்களில் தோலில் கசப்புச் சுவை அதிகமாக இருக்கும். ஆனால் மோங்கீ வாழைப்பழத்தின் தோல் மிக மெல்லியதாகவும் மிகக் குறைவான கசப்புடனும் காணப்படுகிறது.
இந்த வாழையை `உறைய வைத்து வளர்த்தல்' என்ற முறையில் உருவாக்குகிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றிய முறை இது.
பனி யுகம் முடிந்த பிறகு, தாவரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வளர ஆரம்பித்தன. அந்த காலத்தில் தோன்றிய தாவரங்களின் டி.என்.ஏ.வை வைத்து, ஜப்பானின் குளிர் மிகுந்த பிரதேசத்தில் தாவரங்களை உருவாக்கினார்கள். அதில் ஒன்று மோங்கீ வாழை.
அந்த காலத்தில் இந்த வாழை வளர்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகின. ஆனால் இன்றோ 4 மாதங்களிலேயே முதிர்ச்சியடைந்து விடுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோங்கீ வாழைப்பழம் கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது.
ஆனால் ஒரு சிலரால் மட்டுமே இதை வாங்கி, சுவைக்க முடிந்தது. காரணம் இந்த வாழைப்பழத்தை அதிக அளவில் விளைவிக்க முடியவில்லை. இதன் உற்பத்தி மிகவும் சவாலாக இருக்கிறது. ஒரு வாரத்திற்கு டி-டி என்ற பண்ணை 10 வாழைப்பழங்களை மட்டுமே விளைவிக்கிறது. ஒரு பழத்தின் விலை சுமார் 362 ரூபாய்.
`மற்ற வாழைப்பழங்களை விட மோங்கீ மிகவும் சுவையானது. அன்னாசிப் பழத்தின் சுவையை நினைவூட்டுகிறது. மோங்கீ வாழைப்பழத்தின் தோல் பகுதி மெல்லியதாக இருப்பதால் பழத்துடன் சேர்த்து எளிதாக மென்று விழுங்கிவிட முடிகிறது. தோலின் சுவை கூட நன்றாக இருக்கிறது.
வைட்டமின் பி-6, மக்னீசியம் போன்ற சத்துகள் இருக்கின்றன. மிக முக்கியமாக செரடோனின் இருக்கிறது. இது உடல் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தோன்றும் உணர்வுகளுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. அதனால் ஆரோக்கியம் கருதி, தோலை அவசியம் சாப்பிட்டு விடலாம்'' என்கிறது பண்ணை நிர்வாகம்.
ஜப்பானின் மிகக் குளிர்ந்த பிரதேசத்தில் மோங்கீ வாழை விளைவிக்கப்படுவதால், இவற்றுக்கு இயற்கையான எதிரிகள் கிடையாது. அதனால் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.
- நிலநடுக்கத்தால் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
- இதுவரை சுனாமி எச்சரிக்கையோ, பொருட் சேதம் குறித்த அறிக்கை இல்லை.
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் நேற்று இரவு 6.3 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் மேற்கே கியூஷூ மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இதுவரை சுனாமி எச்சரிக்கையோ, பொருட் சேதம் குறித்த அறிக்கையோ வெளியாகவில்லை.
யுவாஜிமாவிற்கு மேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்