search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 130486"

    • எங்கள் பகுதியில் காளை வளர்ப்போரின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.
    • மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக அலகுமலை ஜல்லிக்கட்டு திடலில் பணிகள் நடைபெறாமல் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏறு தழுவுதல் ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் மாடுபிடி வீரர்கள் இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    அலகுமலை ஜல்லிக்கட்டு விழா கடந்த 4 ஆண்டுகளாக வெகு சிறப்பாக நடைபெற்றது. அதேபோல இந்த ஆண்டு ஜல்லிகட்டு விழா நடைபெற மாவட்ட நிர்வாகம் அதற்காக ஏற்பாடு செய்து தறுமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்கள் பகுதியில் காளை வளர்ப்போரின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.

    காங்கயம் காளைகளின் இனப்பெருக்கம் அதிகமாகி உள்ளது. நாட்டுமாடு வளர்ப்போரின் நலன் கருதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்து கால்கோல் விழா நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக அலகுமலை ஜல்லிக்கட்டு திடலில் பணிகள் நடைபெறாமல் உள்ளது.

    எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு என்ற பெருமை பெற்றது.
    • இதில் தஞ்சையைச் சேர்ந்த ராஜ்குமார் காளைக்கு முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

    பாதுகாப்பு காரணங்களால் 2-ம் தேதி நடத்தப்பட்ட இந்த போட்டி கடந்த ஆண்டு கொரோனா காரணமாக 13-ம் தேதி நடைபெற்றது.

    இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தயாராக இருந்த நிலையில், பாதுகாப்பு நலன் கருதி ஜல்லிக்கட்டு போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக கலெக்டர் கவிதாராமு அறிவித்தார்.

    பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறையாக மேற்கொள்ளவில்லை, மாடுகள் வெளியே வரக்கூடிய கலெக்ஷன் பாயிண்ட் முறையாக அமைக்கவில்லை, மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ஆன்லைன் முறையில் முறையாக டோக்கன் வழங்கப்படவில்லை, வீரர்களுக்கான கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. பணிகள் அனைத்தும் முடித்த பிறகு ஜல்லிக்கட்டு குழுவினர் எந்த தேதியில் அனுமதி கேட்கிறார்களோ அந்த தேதியில் அனுமதி வழங்கப்படும் என்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த தச்சங்குறிச்சி கிராம மக்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர் அதிகாரிகளின் வாகனங்கள் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதையடுத்து இன்று (8-ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் அடிப்படையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக 500 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

    அதேபோல் 300 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். அவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. பலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.

    முன்னதாக புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க நேரம் கருதி காலை 6.30 மணிக்கு கோவில் 15 கோவில் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப் பட்டன.

    இதையடுத்து காலை 8.30 மணிக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கலெக்டர் கவிதா ராமு, எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, டாக்டர் முத்துராஜா, வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக, மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பேன், காளைகளை துன்புறுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் களத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் வாடிவாசலில் இருந்து திமிறியும், சீறிப்பாய்ந்தும் துள்ளிக்குதித்து வந்த காளைகளை திமிலை பிடித்து அடக்கினர். இதில் பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி களத்தில் நின்று விளையாடியது.

    அந்த காளைகளுக்கும், அதேபோல் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், கட்டில், பீரோ, சேர், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் தஞ்சையைச் சேர்ந்த ராஜ்குமார் காளைக்கும், திருநல்லூரை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற வீரருக்கும் முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு என்ற பெருமை பெற்றதையடுத்து போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் திரண்டனர். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் அருகே தயார் நிலையில் ஆம்புலன்சு, தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் துரத்தியதிலும், தூக்கி வீசியதிலும் பெண் காவலர் உள்பட 70 பேர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 4 பேர் உடனடியாக ஆம்புலன்சு மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

    • பண்டிகை நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க பொதுச் செயலாளர் ராஜமருது, மதுரை கலெக்டரிடம் கொடுத்தார்.
    • தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

    மதுரை

    அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க பொதுச் செயலாளர் ராஜமருது, மதுரை கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் வீடுகள் முன்பு பொங்கல் வைத்து குலதெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம்.

    தைமாதம் 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் ஆகும். அவனியாபுரத்தில் தை மாதம் முதல் நாள் (15-ந் தேதி) பொங்கல் அன்றும், 2-ம் நாள் (16-ந் தேதி) மாட்டுப்பொங்கல் அன்று பாலமேட்டிலும், தை மாதம் 3-ந் தேதி அலங்கா நல்லூரிலும் ஜல்லிகட்டு நடத்தப்படுகிறது.

    பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்குவது, தமிழக மக்களின் கலாச்சாரம்- பண்பாடுகளை சீர்கு லைக்கும் செயல் ஆகும். அப்படி செய்வதால்தை மாதம் பொங்கல் வைத்து குல தெய்வ வழிபாடுகள், முறையாக நடத்தப்படுவதில்லை.

    ஐல்லிக்கட்டுக்கு முதல் நாளே அனைத்து கிராமங்களிலும் ஜல்லி கட்டு காளைகளின் உரிமையாளர்கள், உறவினர்கள், மாடுபிடி வீரர்கள் பொங்கல் நிகழ்ச்சிகளை அடியோடு புறக்கணித்து விடுகின்றனர். இதனால் புதிய கலாச்சார சீரழிவு உருவாக்கப்பட்டு வருகிறது.

    தமிழக மக்களின் இனம் மொழி கலாச்சாரம், பாராம் பரியம், பண்பாடுகளை பாதுகாக்கும் வகையில் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் தமிழகம் முழு வதும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜல்லிக்கட்டில் 425 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • வெற்றி பெறும் காளை, வீரர்களுக்கு குக்கர், கட்டில், பைக் என விதவிதமான பரிசுகள் வழங்கப்படுகிறது.

    தச்சங்குறிச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது.

    ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் வாடிசாலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

    ஜல்லிக்கட்டில் 425 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறும் காளை, வீரர்களுக்கு குக்கர், கட்டில், பைக் என விதவிதமான பரிசுகள் வழங்கப்படுகிறது.

    ஏற்கனவே இருமுறை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • கரூரில் நடத்தபடும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரபடுத்பட்டு வருகின்றன
    • ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் ஆய்வு செய்தாா்

    கரூா்:

    கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆா்.டி.மலையில் உள்ள விராச்சிலேஸ்வரா் மற்றும் பிடாரி அம்மன் கோயில் அருகே வரும் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் ஆய்வு செய்தாா். வாடிவாசல், காளைகள் வரும் பாதை, மாடுபிடி வீரா்களுக்கான இடம், பாா்வையாளா்களுக்கான இடம், தடுப்பு வேலிகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். பின்னா் விழா குழுவினரிடம், கடந்தாண்டைப் போல அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றாா் அவா்.


    • ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரபடுத்தபட்டு வருகின்றன
    • ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தினை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் கவிதாராமு தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய வழிகாட்டல் கடைப்பிடிக்கவில்லை எனவும், இதனை முழுமையாக செய்த பின் ஜல்லிக்கட்டு முறையாக நடத்த விழாக்குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும் என்றனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு நாளை (8-ந் தேதி) ஜல்லிக் கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிப்பு ெவளியானது. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தினை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை தீவிரப்படுத்தினர். இதனை முன்னிட்டு விழா குழுவினர் மற்றும் ஜல்லிக்கட்டு காளையர்கள், ஜல்லிக்கட்டு உரிமையாளர்கள் உற்சாகம் அடைந்தனர்


    • கலெக்டர் அலுவலக போர்டிக்கோவில் 3 பேர் தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
    • மதுரை கலெக்டர் அலுவலக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். உலக பிரசித்தி பெற்ற இந்த போட்டிகளை இந்த ஆண்டு சிறப்பாக நடத்துவதற்கு மும்முரமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    பொங்கல் பண்டிகை அன்று (15-ந்தேதி) அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

    அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்துவது தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், அவனியாபுரம் கிராம கமிட்டியினர் மாவட்ட கலெக்டரிடம் மனுஅளித்து வந்தனர்.

    இங்கு பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டியை அவனியாபுரத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் நடத்துவதாகவும், அதில் தற்போது அனைத்து சமுதாய மக்களையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    இதுதொடர்பாக இருதரப்பினரிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. நீதிமன்றம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து போட்டியை நடத்துமாறு அறிவுறுத்தியது. ஆனால் இதை ஏற்க மறுத்த ஒரு தரப்பினர் மேல்முறையீட்டு மனு செய்தனர்.

    அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மாவட்ட நிர்வாகம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை தாங்கள் தான் நடத்துவோம் என 2 தரப்பினரும் கூறிவருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    நேற்று மீண்டும் இருதரப்பினரையும் அழைத்து கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

    பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது கலெக்டர் அலுவலக போர்டிக்கோவில் 3 பேர் தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தென்கால் விவசாய சங்கம், அவனியாபுரம் கிராம கமிட்டி சார்பில் இன்று தனித்தனியே போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதையடுத்து அவனியாபுரம், மதுரை கலெக்டர் அலுவலக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையில் கோரிக்கையை வலியுறுத்தி தென்கால் பாசன விவசாய சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் ஜல்லிக்கட்டு மாடுகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • காளைகளை தயார் படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
    • ஐல்லிக்கட்டு எந்த ஊரில் நடந்தாலும் அங்கு செல்லும் இளைஞர்களுடன் இவரும் சென்று கேலரியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சமயங்களில் மதுரை மாவட்டத்தை போலவே திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

    இதற்காக காளைகளை தயார் படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்தவர்கள் ஜெயராஜ், வேளாங்கண்ணி தம்பதியர். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3-வது மகள் ஜெயமணி அதே ஊரில் பள்ளி படிப்பை முடித்து கணினியில் டிப்ளமோ பயிற்சி முடித்த இவர் சிறுவயதிலிருந்தே ஜல்லிக்கட்டில் ஆர்வம் மிக்கவராக இருந்து வந்தார். ஐல்லிக்கட்டு எந்த ஊரில் நடந்தாலும் அங்கு செல்லும் இளைஞர்களுடன் இவரும் சென்று கேலரியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    ஒரு கட்டத்தில் தானும் ஜல்லிக்கட்டு காளைகள் வாங்கி வளர்த்து போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதையே தனது லட்சியமாகவும் கொண்டு செயல்பட தொடங்கினார். மாடுகளை வாங்குவதற்கு பணம் தேவை என்பதால் அதற்காக பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்தார். அதில் தனக்கு கிடைத்த சம்பளத்தை சேமித்துவைத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஜல்லிக்கட்டு கன்றுகளை சந்தையில் வாங்கி முறையாக வளர்த்து கண்ணும் கருத்துமாக அவற்றை பராமரிக்க தொடங்கினார்.

    ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காரி வெள்ளை, காரி கருப்பு என பெயரிட்டு பாசத்துடன் அவற்றை அழைத்து அகமகிழ்ந்தார். அவற்றை அழைத்துச் சென்று வாடிவாசலில் நிறுத்தி அவிழ்த்து விட்டார்.

    களத்தில் களமிறங்கும் இப்பெண்ணின் 2 காளைகளும் எந்த ஒரு காளையர்களின் பிடியிலும் சிக்காதவாறு களத்திலேயே நின்று தமது காளைகளுக்கு கண் அசைவிலும் விரல் அசைவிலும் சைகையை காட்டி அவற்றை துள்ளி விளையாடச் செய்தார்.

    களத்தில் எவரது பிடியிலும் சிக்காமல் நீண்ட நேரம் நின்று விளையாடி ரசிகர்களின் ஆதரவையும், விழாக் குழுவினர்களின் பரிசுகளையும் அள்ளிவந்தன.

    எவரது பிடியிலும் சிக்காமல் சீறிப் பாய்ந்து வெற்றியுடன் வெளியே வந்ததால் கட்டில், பீரோ, டிவி, சைக்கிள், தங்க காசு, வெள்ளி காசு, உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வென்று வருவதையே ஜெயமணியின் 2 கண்களுக்கு சமமான இரு ஜல்லிக்கட்டு காளைகளும் வாடிக்கையாக வைத்துள்ளன.

    தற்போது வரக்கூடிய பொங்கல் பண்டிகையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எதிர்நோக்கி தானும் தன்னுடைய காரி வெள்ளையனும், காரி கருப்பனும் வாடிவாசல் நோக்கி காத்திருப்பதாக பெருமிதத்துடன் அவர் தெரிவித்தார்.

    ஜெயமணி தனது காளைகளை ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்யும் விதமாக தினமும் நீச்சல் பயிற்சி, நடைபயிற்சி, மண் குத்தும் பயிற்சி, சைகை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கொடுத்து வருகிறார்.

    மேலும் இந்த காளைகளுக்கு தினமும் ரூ.300 வீதம் மாதம் ரூ.9000 வரை செலவு செய்து வருவதாகவும் தெரிவித்தார். தனது மாடுகளுக்காகவே தான் பணிக்கு செல்வதாகவும் அதன் மூலம் வரும் வருமானத்தை தனது காளைகளுக்கு மட்டுமே செலவிடுவதாக தெரிவித்தார்.

    • கால்நடை ஆம்புலன்ஸ் அங்கு நிறுத்தப்பட வேண்டும்.
    • பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை 300 ஆக இருக்க வேண்டும்.

    சென்னை :

    ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக உள்ளது.

    அதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னையில் இளைஞர்கள், மாணவர்கள் இரவு பகலாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சாதகமான உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்தது. பின்னர் மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.

    2017-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த கட்டுப்பாடுகளுடன் ஆண்டுதோறும் அரசாணை வெளியிடப்பட்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் அலங்காநல்லூர் உள்ளிட்ட சில இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் ஏ.கார்த்திக், உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளாார். அதில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்தப்படுகின்றன. கால்நடை வதைத் தடுப்பு விதிகள் 2017-ன் அடிப்படையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    காளைகளுக்கு எந்தவொரு துன்புறுத்தலும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும். அதன் பின்னர் அனுமதி அளிக்க வேண்டும்.

    மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து முன்அனுமதி பெறாத ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது. கால்நடை வதைத் தடுப்பு விதிகளை பின்பற்றி போட்டிகளை நடத்துகிறவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும்.

    காளைகளுக்கு தேவையற்ற வலிகளை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில், அவற்றின் பாதுகாப்பை சுட்டிக்காட்டும் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். போட்டிகளை நடத்துவதற்கு முன்பதாக ஜல்லிக்கட்டு குழு அமைக்கப்பட வேண்டும். காளைகளை வளர்க்கிறவர்களுடன் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த வேண்டும்.

    ஜல்லிக்கட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்களிடம், விதிகளை முறையாக பின்பற்றுவதற்கான உத்தரவாதத்தை பெற வேண்டும். அனுமதிக்கான விண்ணப்பத்துடன் காப்பீடு நகல் இணைக்கப்பட வேண்டும்.

    விதிகளின் அடிப்படையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட வேண்டும். விளையாட்டுக்காக காளை வருவதில் இருந்து விளையாட்டு முடிந்து அது செல்லும் வரை வீடியோ படம் எடுக்கப்பட வேண்டும். அரசு பட்டியலிட்ட இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அதை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவிக்கிறது. அதன்படி, மாநில அளவிலான ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும். போட்டிகள் நடக்கும் இடத்திற்கு கண்காணிப்புக்காக அரசு அதிகாரி அனுப்பப்பட வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் தலைமையில் வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, விதிகளின்படி விளையாட்டு நடப்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

    போட்டிகளை நடத்தும்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். போட்டியில் பங்கேற்கும் காளையின் உரிமையாளர், ஒரு உதவியாளருடன் வரலாம். போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்பு காளை மற்றும் அவர்கள் 2 பேரின் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.

    அவர் காளையின் அருகிலேயே நின்று கொண்டிருக்க வேண்டும். அவர்கள் 2 பேருமே 2 கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி இருக்க வேண்டும். போட்டி நடக்க இருப்பதற்கு முன்பு 2 நாட்களுக்குள் கொரோனாவுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனையை எடுத்து அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் 2 பேருக்கும் மாவட்ட நிர்வாகம், அடையாள அட்டையை வழங்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை 300 ஆக இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் மஞ்சு விரட்டு, வடமாடு விளையாட்டுகளுக்கும் இந்த எண்ணிக்கைதான் பொருந்தும். எருது விடும் விழாவுக்கு 150 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    3 நாட்களுக்கு முன்பே அவர்கள் பெயர் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும். அவர்களும் தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும். கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

    அதுபோல கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பார்வையாளர்கள் பகுதியில் உள்ள இருக்கையின் எண்ணிக்கைக்கு பாதி எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அல்லது 150 பேரை மட்டும் அனுமதிக்கலாம். அவர்களும் தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும். கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

    போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை அதிகாரிகள் பட்டியலிட வேண்டும். முன்பு நடந்த அசம்பாவித சம்பவங்களையும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவலையும் சரிபார்க்க வேண்டும். விதிகளை பின்பற்றாத ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    காளைகளை பிடித்து நிறுத்தி வைக்கும் இடத்தில் மறைவுப்பகுதி அமைத்தல், வாடி வாசல், காளைகள் ஓடும் பகுதி ஆகியவற்றில் உறுதியான தடுப்புகள் அமைத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். காளைகள் ஓடும் பகுதியில் இருந்து அவற்றை உரிமையாளர் பெற்றுக்கொள்ளும் இடம் வரை 8 அடி உயர தடுப்புகள் அமைக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் அந்த இடத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் உள்ள அனைத்து கிணறுகளும் மூடப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நடக்கும்போது கால்நடை மருத்துவ குழு, வாடிவாசல் மேலாண்மை குழு, காளை ஓடும் பகுதி மேலாண்மை குழு, மருத்துவ குழு, அவசர கால குழு ஆகியவை பணியில் இருக்க வேண்டும். கால்நடை ஆம்புலன்ஸ் அங்கு நிறுத்தப்பட வேண்டும்.

    காளைகளுக்கு மருத்துவ பொது பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அமைதியின்மை, நீர்சத்து குறைவு, சோர்வான காளைகள் புறக்கணிக்கப்படும். காளைகளின் உடல் நலனுக்கான சான்று அளிக்கப்பட வேண்டும். காளைக்கு மது, ஊக்க மருந்து அளிக்கப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து சோதிக்கப்பட வேண்டும்.

    விளையாட்டு முடிந்ததும் ஓய்வுக்காக காளை உடனே வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். காளைக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று காலை நடைபெற்றது.

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், வெங்கடேசன் எம்.எல்.ஏ., மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட சூப்பிரண்டு சிவபிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டது. காளைகளுக்கான தகுதி சான்றிதழை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

    • ஜல்லிக்கட்டின் போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
    • மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி இல்லை.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். ஜல்லிக்கட்டின்போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காளைகளுக்கு தேவையற்ற வலியை உருவாக்கும் எந்த செயலும் அனுமதிக்கப்படாது.

    காளைகளுடன் அனுமதிக்கப்படும் இருவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். காளையர்கள் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ், போட்டிக்கு 2 நாளுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து, கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

    காளைகள் அவிழ்த்து விடப்படும் நேரத்தில் இருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக்கூடாது. மாநில அரசின் உத்தரவுகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி இல்லை. அரங்கில் 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதி அளவு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
    • நாம் இந்த மத அரசியலை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில் ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் டெல்லியில் நடந்த போது அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த நடை பயணத்தின் போது பொதுக்கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் பேசினார். இதில் தமிழகத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்களை கவுரவப்படுத்த கமல்ஹாசன் முடிவு செய்திருந்தார்.

    இதன்படி டெல்லி சென்ற மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சுமார் 300 பேர் கட்சி அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய கமல்ஹாசன் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

    டெல்லியில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் என்னோடு கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் பாராடுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மத அரசியலை செய்து கொண்டிருக்கிறது.

    மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    நாம் இந்த மத அரசியலை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில் ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும். இதனை நிலை நாட்டும் வகையில் தான் ராகுலின் யாத்திரை அமைந்துள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா நடத்தும் மத அரசியல் எடுபடாது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன். தலைமை பொறுப்பில் உள்ள நான் ஏ சொன்னால் நீங்களும் ஏ சொல்ல வேண்டும் என்பதை அனைவரும் என்னை பின்பற்றுங்கள்.

    தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பதிலும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.

    அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கேட்டுள்ளோம். இந்த அனுமதி கிடைத்தால் ஜல்லிக்கட்டை நடத்த தயாராக உள்ளோம். மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, நிர்வாக குழு உறுப்பினர்கள் அருணாசலம், செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, நாகராஜ், அர்ஜுன் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • போட்டிகள் வழக்கமான நிபந்தனைகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் காளைகள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 2 கார்கள் வழங்கப்படுகின்றன.

    மதுரை:

    தமிழர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும் நிலைநாட்டும் வகையில் தைத்திருநாளில் மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்து மக்களாலும் வரவேற்கப்படும் சிறந்த விளையாட்டாகும்.

    அதில் முக்கியமாக உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகைக்கு 2 நாள் கழித்து நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை (15-ந்தேதி) தினத்தில் அவனியாபுரத்திலும், மறுநாள் (16-ந்தேதி) பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

    இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. ஜல்லிக்கட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக இன்னும் சில நாட்களில் ஆன்லைன் மூலம் இதற்கான பதிவுகள் தொடங்கப்பட உள்ளன.

    ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தேவையான வாடிவாசல் மற்றும் பார்வையாளர்களுக்கான கேலரி, தடுப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை அலங்காநல்லூரில் நடைபெற்றது.

    இதில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கூடுதல் கலெக்டர்கள் சரவணன், திவ்யான்ஜி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

    உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 17-ந்தேதி அரசின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெறுகிறது. போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து, அதன்படி உரியவர்களுக்கு எவ்வித பாகுபாடின்றி டோக்கன்கள் வழங்கப்படும்.

    போட்டிகள் வழக்கமான நிபந்தனைகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் காளைகள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 2 கார்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளைக்கும் கார் பரிசளிக்கப்படுகிறது.

    இது தவிர காளைகளை அடக்குபவர்களுக்கு தங்க காசுகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படுகின்றன. சிறந்த காளைகளுக்கு தங்க காசுகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசுகள் கொடுக்கப்படும்.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். சிறந்த வீரர் மற்றும் காளைகளுக்கு அவர் பரிசு வழங்குகிறார்.

    அலங்காநல்லூரை போல பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் கிராம கமிட்டிகளுடன் இணைந்து அரசு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.

    மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×