search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.
    • இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லாதவர்களுக்கு இரட்டை அடி.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

    உத்தரபிரதேசத்தில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த பட்சத் தகுதியுள்ள பதவிகளுக்குக்கூட வரிசையில் நிற்கின்றனர்.

    முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.

    ஆட்சேர்ப்பு முடிந்தாலும் கூட கேள்விதாள் கசிந்து விடுகிறது. தேர்வுகள் நடந்தாலும் கூட அதன் முடிவு தெரியாது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு முடிவு வந்தாலும் பணியில் சேர்வதுதை உறுதி செய்வதற்காக அடிக்கடி கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்.

    ராணுவத்தில் இருந்து ரயில்வே மற்றும் கல்வியில் இருந்து காவல்துறை வரை ஆட்சேர்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் வயது முதிர்ந்தவர்களாக மாறியுள்ளனர். இந்த விரக்தியின் பிரமைக்குள் சிக்கிய மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி உடைந்து போகிறார். இவையனைத்தும் மன உளைச்சலுக்கு ஆளாகி, அவர் தனது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கும் போது, காவல்துறையினரிடம் இருந்து தடியடிகளைப் பெறுகிறார். ஒரு மாணவனுக்கு, வேலை என்பது வெறும் வருமான ஆதாரமாக இல்லாமல், அவனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும் கனவாகவும் இருக்கிறது, இந்தக் கனவு தகர்க்கப்படுவதால், ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையும் சிதறடிக்கப்படுகிறது.இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லா தவர்களுக்கு இரட்டை அடி.

    காங்கிரசின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளுக்கு நீதி வழங்கும். அவர்களின் தவத்தை வீண் போக விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.

    • உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது நாளாக யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று வாரணாசி பகுதியில் ஜீப்பில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மும்பை வரை 15 மாநிலங்களின் வழியாக சுமார் 6700 கிமீ தூரம் நடைபெறுகிறது.

    இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் மக்களை சந்தித்து பேசினார்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது நாளாக யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று வாரணாசி பகுதியில் ஜீப்பில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பிறகு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ராகுல் காந்தி சுவாமி தரிசனம் செய்தார்.

    சோனியா காந்தியின் தொகுதியாக இருந்த ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி யாத்திரை வரும் போது அதில் நான் பங்கேற்பேன் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மும்பை வரை 15 மாநிலங்களின் வழியாக சுமார் 6700 கிமீ தூரம் நடைபெறுகிறது.

    • ரப்பர் தோட்டா சுட்டதால் முகம் சிதைந்த ஒரு விவசாயியை நான் சந்தித்தேன்.
    • மத்திய அரசின் செயலாளர்களில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர்.

    அவுரங்காபாத்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நடத்தி வருகிறார். ஒருநாள் ஓய்வுக்கு பிறகு, நேற்று பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் அவரது யாத்திரை நடந்தது.

    அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    விவசாயிகள் தங்கள் விளைபொருட்களின் குறைந்தபட்ச விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் கேட்டு டெல்லி நோக்கி செல்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக போராட்டத்தை மோடி அரசு நசுக்கி வருகிறது.

    போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. கண்ணீர்புகை குண்டுகளை வீசுகிறார்கள். ரப்பர் தோட்டாக்களால் சுடுகிறார்கள். ரப்பர் தோட்டா சுட்டதால் முகம் சிதைந்த ஒரு விவசாயியை நான் சந்தித்தேன்.

    ''நாட்டை காக்க எல்லையில் போரிடும் ராணுவ வீரர்களை போல், நீங்களும் எல்லையில் போராடுகிறீர்கள்'' என்று அவரிடம் சொன்னேன்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவோம்.

    அதுபோல், சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக எக்ஸ்ரே போன்றது. நாட்டின் சமூக, பொருளாதார நிலையை படம்பிடித்து காட்டும். நாட்டில் 70 சதவீதம்பேர், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

    ஆனால், மத்திய அரசின் செயலாளர்களில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர். 650 ஐகோர்ட்டு நீதிபதிகளில் 100 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகத்திலும் பிற்படுத்தப்பட்டோருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை.

    ஆகவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்.

    மோடி அரசு பெரும் பணக்காரர்களின் ரூ.14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. ஆனால், கிராமப்புற ஏழைகளுக்கான 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். சாமானியர்களை பார்க்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் கார்கே கட்சியின் பூத் ஏஜெண்டுகளை நாய்களுடன் ஒப்பிட்டார்.
    • தட்டில் வைத்த அந்த பிஸ்கட்டை ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு கொடுத்தார்.

    ராஞ்சி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2-வது கட்ட நடை பயணத்தை கடந்த 14-ந் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கினார். அவர் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் 'பாரத ஒற்றுமை நீதி' யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    ஜார்க்கண்ட் பாத யாத்திரையின் போது ராகுல்காந்தி சர்ச்சையில் சிக்கி உள்ளார். நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை அவர் காங்கிரஸ் தொண்டருக்கு கொடுக்கும் வீடியோவை பா.ஜனதா வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.

    ராகுல்காந்தி திறந்த வாகனத்தில் சென்றார். அப்போது தன்னுடன் இருந்த நாய்க்கு பிஸ்கட்டை ஊட்டினார். அதை சாப்பிட மறுத்ததால் அவர் தட்டில் வைத்தார். தட்டில் வைத்த அந்த பிஸ்கட்டை ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு கொடுத்தார். வீடியோ பதிவில் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    பா.ஜனதா தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் கார்கே கட்சியின் பூத் ஏஜெண்டுகளை நாய்களுடன் ஒப்பிட்டார். தற்போது ராகுல் காந்தி நாய் சாப்பிடாத பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு கொடுத்துள்ளார்.

    ஒரு கட்சியின் தலைவரும், பட்டத்து இளவரசரும் கட்சி தொண்டர்களை நாய்களை போல் நடத்தினால் அத்தகைய கட்சி காணாமல் போவது இயற்கையானது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மற்றொரு பா.ஜனதா தலைவர் சி.டி. பல்லவி கூறும்போது, "தற்போது அசாம் முதல்-மந்திரியாக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை ராகுல்காந்தி அவமரியாதை செய்து தனது நாய் சாப்பிடும் அதே தட்டில் பிஸ்கட் சாப்பிட வற்புறுத்தினார்" என்றார்.

    அசாம் பா.ஜனதா முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா இதற்கு பதில் அளித்து தனது எக்ஸ் வலைதள பதிவில் பதில் கூறி இருப்பதாவது:-

    ராகுல்காந்தி மட்டுமல்ல ஒட்டு மொத்த குடும்பத்தாராலும் அந்த பிஸ்கட்டை என்னை சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஒரு பெருமைமிக்க அசாமியன் மற்றும் இந்தியன் ஆவேன். நான் சாப்பிட மறுத்தேன். காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தேன்.

    கட்சி தொண்டருக்கு நாயால் நிராகரிக்கப்பட்ட பிஸ்கட் கொடுத்த ராகுல் காந்தியின் இது போன்ற சம்பவம் தான் காங்கிரசை விட்டு வெளியேற செய்தது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பா.ஜனதா வெளியிட்ட இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

    • எந்தெந்த தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது? என்று பிரதான கட்சிகள், தங்களின் கூட்டணி கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன.
    • கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் தேதியை அனைத்து கட்சிகளுமே மிகவும் ஆவலாக எதிர் பார்த்து காத்திருக்கின்றன. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்ற நிலையில், அனைத்து கட்சிகளுமே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    எந்தெந்த தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது? என்று பிரதான கட்சிகள், தங்களின் கூட்டணி கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன. அதே நேரத்தில் எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று அனைத்து கட்சிகளும் ஆலோசித்து வருகிறது.

    கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ளார். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த முறையும் அவரே போட்டியிட உள்ளார். அவர் கடந்த தேர்தலில் வயநாடு மட்டுமின்றி உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.

    அங்கு தோற்றுவிட்ட நிலையில், வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். இந்த முறை ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் மட்டுமே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • 2022-2023-ம் ஆண்டுக்கான நிர்வாக மற்றும் பொது செலவுகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் வருடாந்திர அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
    • 2021-2022-ம் ஆண்டில் காங்கிரசில் மொத்த வரவுகள் ரூ.541 கோடியாக இருந்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாரத ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார்.

    அங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த அவர் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் தனது முதல் கட்ட யாத்திரையை காஷ்மீரில் நிறைவு செய்தார்.

    இந்த யாத்திரையின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து பேசினார். அவருடன் முக்கிய பிரபலங்களும் பயணித்தனர். யாத்திரையின் போது வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவர் பேசியது மக்களிடம் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் முதல்கட்ட யாத்திரைக்காக காங்கிரஸ் கட்சி ரூ.71.8 கோடி செலவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது காங்கிரசின் மொத்த ஆண்டு செலவின் 15.3 சதவீதமாகும். 2022-2023-ம் ஆண்டுக்கான நிர்வாக மற்றும் பொது செலவுகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் வருடாந்திர அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

    அதில், 2021-2022-ம் ஆண்டில் காங்கிரசில் மொத்த வரவுகள் ரூ.541 கோடியாக இருந்தது. இந்நிலையில் இது கடந்த 2022-2023-ம் ஆண்டில் ரூ.452 கோடியாக குறைந்து உள்ளது. அதே நேரத்தில் அதன் செலவினம் ரூ.400 கோடியில் இருந்து 467 கோடியாக உயர்ந்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அஸ்ஸாமில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்ட போது, பல தடைகளும், பிரச்னைகளும் உருவானது.
    • ஜாதி மத பிரிவினைகளை தளர்த்தி மக்களை ஒன்றாக்குவதே இந்த நடைப்பயணத்தின் குறிக்கோள்.

    இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் என்ற பெயரில் மணிப்பூரில் இரண்டாவது யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி, தற்போது மேற்குவங்கத்தை அடைந்துள்ளார். அஸ்ஸாமில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்ட போது, பல தடைகளும், பிரச்னைகளும் உருவானது. அதனைத்தொடர்ந்து

    மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள இந்த நடைப்பயணத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்க வேண்டி முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் ஒன்றே எழுதியுள்ளார்.

    அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "அஸ்ஸாம் மாநில நடைப்பயணத்தின் போது பல பிரச்னைகளை சந்தித்த நிலையில், சில தவறான ஆட்களால் நடைப்பயணத்தில் தீங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நடைப்பயணம் பாதுகாப்பான முறையில் நடப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறேன்" என கூறியிருந்தார்.

    பாஜக உருவாக்கியுள்ள ஜாதி மத பிரிவினைகளை தளர்த்தி மக்களை ஒன்றாக்குவதே இந்த நடைப்பயணத்தின் குறிக்கோள் என குறிப்பிட்ட, கார்கே நாட்டில் பலவீனமாக இருப்பவர்களுக்கும் சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதிகளை பெற்று தருவதே இதன் நோக்கம் என்றும் இந்த அரசியலற்ற முயற்சி பலகோடி இந்திய மக்களை ஈர்த்துள்ளது எனவும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார். 

    • இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைப்பயணம் மணிப்பூரில் தொடங்கியது.
    • அசாம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் தலைமையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைபயணம் 'பாரத் நீதி யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூரில் தொடங்கியது. மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு பல்வேறு இடையூறுகளை கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து கவுகாத்திக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது போலீசார் தடுப்புகள் அமைத்து அவரை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கவ்ஹாத்தியில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த ராகுல் காந்தி தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக அரசைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • வயநாடு மக்கள் அனைவரையும் எனது குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுகிறேன்.
    • தொகுதியின் வளர்ச்சிக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கேரள மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குறிப்பாக தனது தொகுதியான வயநாட்டில் மக்களை சந்தித்தும் வருகிறார். திருவாலியில் வலி மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி அவர் பேசியதாவது:-

    கேரளாவின் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு துறை நாட்டிலேயே மிகச்சிறந்த துறைகளில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் நோய் தடுப்பு சிகிச்சையில் கேரளா ஒரு முன்னோடியாக உள்ளது. தன்னால் இயன்ற உதவிகளை செய்யத்தயாராக இருப்பதாகவும், ஆனால் எம்.பி.யாக இருந்து தனக்கு கிடைத்த நிதி மட்டுப்படுத்தப்பட்டதாகவும், கவனமாக பகிர்ந்தளிக்க வேண்டியதாகவும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மறைந்த முஸ்லீம் லீக் தலைவர் சீத்தி ஹாஜி பற்றிய புத்தக வெளியீட்டு விழாவிலும் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வயநாடும், கேரளாவும் தனக்கு 2-வது வீடு போன்றது என்றார். கேரளா மற்றும் வயநாட்டுக்கு நான் எவ்வளவு அதிகமாக வருகிறேனோ, அவ்வளவு அதிகமாக இது எனது வீடு என்று உணர்கிறேன். வயநாடு மக்கள் அனைவரையும் எனது குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுகிறேன். மேலும் அடுத்த திட்டமாக எனது தாய் சோனியா காந்தியை இங்கு அழைத்துவர உள்ளேன். நான் இங்கு வரும்போது புதிதாக ஒன்றை கற்றுக்கொள்கிறேன். தொகுதியின் வளர்ச்சிக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றார்.

    • இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
    • வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் முடிவெடுக்கும்.

    திருவனந்தபுரம்:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது ராகுல்காந்தியை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் ராகுல்காந்தி வயநாடு தொகுதிக்கு தனி கவனம் செலுத்தி வந்தார்.

    அதே போல வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் ராகுல்காந்தி இந்த தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த சூழ்நிலையில் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்த முறை வயநாடு தொகுதியை காங்கிரஸ் தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி விரும்புகிறது. இதனால் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்ள திட்டமிட்டு உள்ளது. மேலும் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பா.ஜ.க.வை எதிர்த்து களம் இறங்கவேண்டும் என விரும்புவதாக கம்யூனிஸ்டு கட்சிகள் தெரிவித்து உள்ளன.

    டெல்லியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள பிரிவு அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கும்.

    எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கருதுகிறது. இந்தியக் கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்டுக்கு எதிராகப் போட்டியிடுவது எதிர்மறையாகக் கருதப்படலாம் என்று அந்த கட்சி கூறுகிறது.

    இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "எங்கள் வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்து கட்சியின் மத்திய தேர்தல் குழுதான் இறுதி முடிவு எடுக்கும். குழு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை,'' என்றார்.

    கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறுகையில், வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் முடிவெடுக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து கூற உரிமை உண்டு. வயநாட்டில் ராகுல் காந்தியை மீண்டும் களமிறக்குமாறு நாங்கள் ஏற்கனவே காங்கிரஸ் மேலிடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

    • இன்று மாலை நடக்கிறது
    • ராகுல்காந்தி நடைபயண ஓராண்டு நிறைவு

    கன்னியாகுமரி :

    ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு "ஜோடா யாத்திரை" என்ற தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டார். ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி அதனை நினைவு கூறும் வகையில் கொட்டாரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இன்று மாலை காங்கிரசாரின் நடைபயணம் நடக்கிறது.

    கொட்டாரம் சந்திப்பில் உள்ள காமராஜரின் சிலை முன்பு இருந்து இந்த நடைபயணம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இந்த நடை பயணத்துக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் தலைமை தாங்குகிறார். இந்த நடைபயணத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    கொட்டாரத்தில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம் பெருமாள்புரம், மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம் சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு வழியாக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் சென்று நிறைவடைகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் சென்று ஐரோப்பிய எம்.பி.க்களுடன் ராகுல்காந்தி உரையாடுகிறார்.
    • 9-ந் தேதி பாரீசில் நடை பெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    புதுடெல்லி:

    ஜி 20 உச்சி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ந் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. வெளிநாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு நடைபெறும் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி 5 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், நார்வேக்கு செல்கிறார்.

    செப்டம்பர் 7-ந் தேதி அவர் பாரீஸ் செல்கிறார். அங்கிருந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் சென்று ஐரோப்பிய எம்.பி.க்களுடன் ராகுல்காந்தி உரையாடுகிறார்.

    செப்டம்பர் 8-ந் தேதி அவர் பாரீஸ் நகரில் மாணவர்கள் மத்தியில் பேசுகிறார். 9-ந் தேதி பாரீசில் நடை பெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 10-ந் தேதி ராகுல்காந்தி நார்வே செல்கிறார். அங்கு இந்திய வம்சாவளியினரை சந்திக்கிறார். அதோடு நிருபர்களையும் சந்திக்கிறார்.

    ×