என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காய்ச்சல்"
- மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து விரைவில் குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
- டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொ ண்டு வருகின்றன. இருந்த போதிலும் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ள நிலையில் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிட த்தக்கதாகும். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையினர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம், வீடுகளுக்கு நேரில் சென்று வேறு யாரும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உள்ளனரா? புகை கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளையும் மே ற்கொண்டு வருகின்றனர். இன்று காலை கடலூர் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தனி வார்டை கலெக்டர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு என்னெ ன்ன சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது? அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் தனிவார்டில் கொசுவலை, சுகாதாரமாக உள்ளதா? உரிய நேரத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கிறார்களா? மருந்து, மாத்திரை சரியா ன முறையில் வழங்க ப்படுகிற தா? என்பதனை கேட்டு அறிந்து ஆய்வு செய்தார். மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து விரைவில் குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். பின்னர் கலெக்டர் அருண் தம்புராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டு தற்போது 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் தடுக்கும் களப்ப ணியாளர்கள் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று அரசு நிபந்தனைக்கு உட்பட்டு பராமரிக்கப்படுகிறதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் தனி வார்டு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகை யால் பொதுமக்களுக்கு 5 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் உடனடி யாக அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று டெங்கு காய்ச்சல் உள்ளதா? என்பத னை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தற்போது மாவட்டத்தில் ஒரே பகுதியில் 3 ேபர்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களிடமும் பரிசோதனை மேற்கொ ண்டதில் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் 56 பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க படுகின்றது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களில் அதிகரிப்புக்கு காரணம் என்னவென்றால் மாவட்டம் நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையினர் அதிகளவில் பரிசோதனை மேற்கொள்வதால், தற்போது 56 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின்பால், மருத்து வமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- பரவி வரும் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
- சுகாதார குழுவினரை முடுக்கிவிட்டு நோய் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மதுரை மாவட்ட கலெக்டருக்கு இன்று அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டி பகுதியில் ஏழை,எளிய மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகள் காரணமாக தற்போது காய்ச்சல் பரவி வருகிறது.
தலைவலி, உடல் வலி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் பொதுமக்கள் சிகிச்சைக்காக சென்று வருகிறார்கள். டெங்கு பீதியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எனவே அந்த பகுதியில் சுகாதார குழுவினரை முடுக்கிவிட்டு நோய் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெயில் உள்ளிட்ட காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள சுகாதார நிலையை கண்டறிந்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.
மேலும் மழைநீர் தேங்கா மலும், தேங்கி உள்ள தண்ணீரை உடனடியாக அகற்றுவதுடன், கொசு உற்பத்தியை தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும்.
- யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும்.
யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும். இந்த யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
* உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் ஹைப்பர்யூரிசிமியா என்ற நிலை ஏற்படும்.
* யூரிக் அமிலம் அதிகரிப்பதன் பொதுவான அறிகுறிகளில் கீல்வாதம் முக்கியமான ஒன்று.
* இது மூட்டுகளில் வலி, சிவந்து போவது மற்றும் விறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு மூட்டுவலி.
* யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.
* மேலும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், காய்ச்சல் போன்றவையும் யூரிக் அமில அதிகரிப்பின் விளைவுகளாக இருக்கலாம். மருத்துவர்கள் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை கணக்கிட சில சோதனைகளை செய்கின்றனர்.
* யூரிக் அமில அளவின் அடிப்படையில் மருந்துகள், உணவு முறை, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்
* யூரிக் அமில அதிகரிப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைக்கு மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது.
- தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது
- அடிக்கடி கபசுர குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டும்
தாராபுரம்
தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், அதே போல தாங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை கூழங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலி பாட்டில்கள், தேங்காய் தொட்டிகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.
இதனால் வீட்டில் கொசு தொல்லையை ஒழிக்க முடியும், பாதுகாப்பான முறைகளை கடைபிடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுக்களை பாதிக்காமல் ஒவ்வொருவரும் தங்களை காத்து கொள்ள வேண்டும்.
கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கபசுர குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவுகள் அதிகமாக இருக்குமேயானால் உடனடியாக தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இதனால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- உடல் பலவீனமாக இருக்கும்போது, உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது.
- உடல் சற்று சீரடைந்த பின்னரே உடற்பயிற்சி செய்வது பயனளிக்கும்.
உங்கள் உடல் கட்டுமஸ்தானதாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க, தினமும் உடற்பயிற்சி அவசியம்.
தினசரி உடற்பயிற்சி என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஏரோபிக் பயிற்சிகளை தினசரி 45 நிமிடங்கள் செய்தால் தொற்றுநோய் பிரச்சினை குறையும் என்பது ஆய்வு ரீதியாக கண்டறியப்பட்ட உண்மை. ஆனால், உடல் பலவீனமாக இருக்கும்போது, உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள், மருத்துவர்கள்.
"ஒருவரின் உடல் காய்ச்சல் அல்லது சளியினால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்திருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்வது, உடல் நோயில் இருந்து மீண்டு வருவதை தாமதமாக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, தொற்றுநோய் கிருமிகளை எதிர்த்து தாக்கிக் கொண்டிருக்கும்போது உடலை வருத்தும் உடற்பயிற்சிகள், உடல் நிலையை இன்னும் மோசமாக்கும். எனவே உடல் சற்று சீரடைந்த பின்னரே உடற்பயிற்சி செய்வது பயனளிக்கும். இல்லையேல், லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம்'' என்கிறார்கள், மருத்துவர்கள்.
- காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
- தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.
நாகர்கோவில்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்திலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கேரளாவை யொட்டியுள்ள 5 சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளா பதிவு எண் கொண்டு வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 3 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ஏராளமான கட்டுமான தொழிலாளர்களும், மீனவர்களும் சேர்ந்து வருகிறார்கள். எனவே அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்தும் கண்காணித்து வருகிறார்கள்.
ஆசாரிப்பள்ளம், பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டு திறக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள 9 அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு திறக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டதை தொடர்ந்து அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு தனிவார்டு திறக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.
குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 2 முதல் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 1 வாரத்தில் மட்டும் 21 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
- எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.
பெங்களூரு:
கேரளாவில் 'நிபா' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேருக்கு 'நிபா' வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நிபா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பீதி ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்திலும் நிபா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் கேரள எல்லையில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கேரள மாநில எல்லையில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்திலும் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தட்சிண கன்னடா மற்றும் அண்டை மாநில எல்லையோர மாவட்ட அதிகாரிகளுக்கு காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கோழிக்கோடு வழியாக கர்நாடக வருபவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தகுந்த மருந்து, மாத்திரைகள் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் கேரள எல்லையில் இருக்கும் குடகு, தட்சிண கன்னடா பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என்றனர்.
- வாகன ஓட்டிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் நிபா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
- பரிசோதனை செய்த 526 பயணிகளில் யாருக்கும் காய்ச்சல் கண்டறியப்படவில்லை.
உடுமலை:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உயிர்கொல்லி நோயான நிபா வைரசுக்கு இரண்டு பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினரால் தமிழக கேரளா எல்லையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான ஒன்பதாறு சோதனைச் சாவடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் கண்காணிப்பு பணியை தொடங்குமாறு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் ஒன்பதாறு சோதனை சாவடியில் பரிசோதனை மேற்கொள்வதற்கு மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்,செவிலியர் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.அந்த குழுவினர் 24 நேரமும் கேரளாவில் இருந்து கேரளாவில் தமிழகத்திற்குள் வருகின்ற வாகன ஓட்டிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் நிபா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அப்போது காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடுமலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் அமராவதி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிந்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.நேற்று நடைபெற்ற முகாமில் 111 வாகனங்களில் தமிழகத்திற்கு வருகை தந்த 526 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்போது யாருக்கும் காய்ச்சல் கண்டறியப்படவில்லை. இந்த பணியில் சுகாதாரத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- நிலவேம்பு கசாயமும் பொதுமக்களுக்கு விநியோகம்
- அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடத்தில் தனி வார்டு ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது
நாகர்கோவில் :
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டுள்ளார்.
சோதனை சாவடிகளில் கண்காணிப்பு
இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள 5 சோதனை சாவடிகளிலும் போலீசாருடன் இணைந்து சுகாதார பணியாளர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையானது இன்று 2-வது நாளாகவும் நீடித்தது. இன்று காலை வரை 900 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் காய்ச்சல் அறிகுறி தென்படவில்லை. தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
கேரளாவில் இருந்து ரெயில்கள் மூலமாகவும் கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள் என ஏராளமானோர் வரக்கூடும் என்பதால் மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் வாரியாகவும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு அறிகுறியுடன் சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை, டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்றும் கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடத்தில் தனி வார்டு ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது. தனி வார்டில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை சிகிச்சைக்காக சேர்த்து வருகிறார்கள். ஏற்கனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களையும் அந்த வார்டுக்கு மாற்றி டாக்டர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.
- இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
- திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
சிறுமிகள் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது. மேலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தினர்.
திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணி மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
- பருவ காலத்தில் காய்ச்சல் உச்சம் தொடுவதற்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
- காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அனைவருக்கும் இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்காது.
சென்னை:
பருவகால மாற்றம் தொற்று நோய்கள் பரவுவதற்கு ஏற்றகாலம். சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்வதால் மழைக் காலத்தில் பரவும் காய்ச்சல், வயிற்றுபோக்கு போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
வைரஸ் காய்ச்சல் மட்டு மில்லாமல் விஷக்காய்ச்சலும் பரவுவதால் காய்ச்சல் தானே, வரும் போகும் என்று சாதாரணமாக இருப்பதும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். விஷகாய்ச்சலாக இருந்தால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் ஆகியோரை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கி விடும். ரத்த நாளங்கள் உள்பட உடலில் பல பாகங்களில் வீக்கத்தை உருவாக்கும். இதனால் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
எனவே காய்ச்சல் கண்டவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது. காய்ச்சல் கண்டவர்கள் இருமல், சளி, உடல் வலி ஆகியவற்றால் ஒருவாரத்துக்கும் மேலாக அவதிப்படுகிறார்கள்.
இந்த மாதிரி காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் வந்தால் சுகாதாரத் துறை கண்காணிக்க வேண்டும். உடனடியாக சம்பந்தப்பட்ட வரை பரிசோதித்து வைரஸ் தாக்குதலா? பாக்டீரியாவா? என்ன வகை காய்ச்சல்? தண்ணீர் மூலம் பரவி உள்ளதா? உணவு மூலம் வந்துள்ளதா? என்பதை கண்டறிந்து உடனடியாக அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதை போல் பருவகால காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ள ஆண்டுதோறும் பருவகாலம் தொடங்குவதற்கு முன்பே நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்.
இது ரூ.700 முதல் ரூ.1000 வரை விலை உடையது. அதிலும் வயதானவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சர்க்கரை நோயாளிகள் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது என்கிறார்கள்.
இந்த மாதிரி தடுப்பூசி போட்டுக் கொள்வதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என்கிறார்கள்.
இந்த மாதிரி தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 70 சதவீதம் பேர் உயிர் ஆபத்துக்களில் இருந்து தப்புகிறார்கள்.
இந்த தடுப்பூசி போடுபவர்கள் கடந்த பருவகாலத்தில்தானே போட்டோம் என்று விட்டு விடுவதால் எந்த பலனும் இல்லை. பருவ காலத்தில் காய்ச்சல் உச்சம் தொடுவதற்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
ஆண்டுதோறும் இந்த மாதிரி விஷ காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி ஏராளமானவர்களை தாக்குகிறது. இதில் பலர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.
இதன் அறிகுறி கடுமையான காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தலைவலி, இருமல், உடல் மற்றும் மூட்டுவலி, வாசனை இழப்பு போன்றவையாகும்.
காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அனைவருக்கும் இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்காது. பொதுவாக வைரஸ் காய்ச்சல் மூச்சு காற்று மூலம் பரவுகிறது. எனவே காய்ச்சல் வராமல் தடுக்கவும், பரவுவதை தவிர்க்கவும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி டாக்டர்கள் கூறியதாவது:-
* கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்க வேண்டும்.
* குடிநீர் பாதுகாப்பானதாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* தெருவோரங்களில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* முக கவசம் அணிதல், கூட்டங்களை தவிர்த்தல் நல்லது.
* வீடுகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
* ஆண்டுதோறும் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
* வயதானவர்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
- நம்முடைய முன்னோர்கள் சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள்.
- மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர்.
தலைவலி, கை, கால் வலி, சளி, காய்ச்சல், இருமல், தும்மல் எது வந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆங்கில மருந்தை நாடுகின்றோம். உடல் நிலை சரியில்லாமல் போனால் மருத்துவரை பார்ப்பது தவறு ஒன்றும் கிடையாது. இருப்பினும், சாதாரண உடல் உபாதைகளுக்கு கூட செயற்கையான முறையில் மருந்தை உட்கொண்டிருந்தால் அதன் மூலம் பக்கவிளைவுகள் கட்டாயம் அதிகமாகும். நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து, அடிக்கடி வரக்கூடிய சில உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள். அந்த வரிசையில் சின்ன சின்ன கை வைத்தியத்தை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
நம் முன்னோர்களான பெரியவர்கள் நமது வீட்டிலேயே அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களையே நோய் குணப்படுத்தும் மருந்துகளாக பயன்படுத்தி உள்ளனர். உண்மையில் இந்த பொருட்கள் எல்லாம் நோயை குணப்படுத்தும் மருந்துகள் என்று தெரிந்தே அவற்றை சமையலில் பயன்படுத்தி வந்துள்ளனர். மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர். இதனாலேயே நம் பாட்டி, தாத்தாக்கள் பல ஆண்டுகாலம் நலமுடன் வாழ்ந்தனர்.
வயிற்று வலி குணமாக சிறிதளவு வெந்தயத்தை எடுத்து கொஞ்சம் நெய்யில் வறுத்து பொடி செய்து அதனை புதிதாக செய்த மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி முற்றிலுமாக நீங்கும்.
தலைவலி நீங்க ஐந்து துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கும், 2 லவங்கமும் சேர்த்து நன்கு அரைத்து பற்று போடும் பதத்தில் வைத்துக்கொண்டு நெற்றியில் பற்று போட்டால் தலைவலி சில மணி நேரங்களில் குணமாகும்.
நாட்டு மருந்து கடையில் இருந்து கொஞ்சம் வேப்பங்கொட்டையை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக இழைத்து தலையில் பத்து போட்டுக்கொண்டால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் சீக்கிரம் குணமடைந்து விடும்.
குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ நெஞ்சில் சளி சேர்ந்துகொண்டு இருமல் அதிகமாகிவிடும். இந்த நெஞ்சு சளி கரைய சிறிதளவு தேங்காய் எண்ணையில் பச்சைக் கற்பூரம் கொஞ்சம் சேர்த்து நன்கு சுடவைத்து இளம் சூட்டில் நெஞ்சில் தடவி வர நெஞ்சில் உறைந்துள்ள சளி கரையத்தொடங்கும்.
பசி எடுக்க புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சை பழம் சாறு 3 பங்கு சேர்த்து கலந்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உடனடியாக பசி ஏற்படும்.
வண்டுக்கடியால் ஏற்படு தடிப்புகள் மறைய வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சேர்த்து அரைத்த விழுது ஒரு கைப்பிடி எடுத்து ½ லிட்டர் பசும்பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிட கரப்பான், வண்டுக்கடியால் ஏற்பட்ட விஷம், வடு நீங்கும்.
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெய்யில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும். அஜீரண கோளாறு இருக்கும் சமயங்களில் மிளகை வறுத்து பொடி செய்து தேனில் உட்கொண்டு வந்தால் அஜீரண கோளாறால் ஏற்படும் சீதபேதி குணமாகும்.
உடல் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குணமாக இரவில் தூங்குவதற்கு முன்னர் ஒரு ஸ்பூன் தேன், சிறிதளவு சுண்ணாம்பு இவற்றை உள்ளங்கையில் நன்றாக குழைத்தால் சூடாக இருக்கும். இந்த கலவையை அந்த சூட்டிலேயே தொண்டை பகுதியில் தடவி மறுநாள் காலையில் ஈரத்துணிகொண்டு துடைத்து எடுத்தால் உடல் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குணமாகும்.
அதிமதுரத்தை பொடியாக்கி அதை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக கலந்து இரவு முழுவதும் வைத்து, மறுநாள் அரிசி கஞ்சியுடன் சேர்த்து, இந்த நீரை குடித்து வர வயிற்று புண் (அல்சர்) குணமாகும். இதனையே கஷாயமாக செய்து குடிக்க மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.
சிறு குழந்தைகள் சில சமயம் விடாமல் அழும். நமக்கு காரணம் புரியாது. அதற்கு இரண்டு வெற்றிலைகளை எடுத்து, விளக்கெண்ணெய்யை ஒரு பக்கம் தடவி, விளக்கில் லேசாக சூடு செய்து இளம்சூட்டில் குழந்தையின் வயிற்றின் மேல் போட சில நொடிகளில் அழுகை நின்று குழந்தை சிரிக்க ஆரம்பித்து விடும்.
சிறு குழந்தைகளுக்கு வசம்பை ஒரு துண்டு எடுத்து நல்லெண்ணெயில் ஊற்றி விளக்கில் காட்டி நன்கு கருக்கி அதன் பொடியை சிறிது நாக்கில் தேய்த்துவிட வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், பேதி போன்றவை குணமாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்